ஹஜ் கோட்டா பகிர்வுக்கு நேர்முகத் தேர்வு நடத்துக

2013 ஹஜ், உம்ரா வழிகாட்டியை பின்பற்றுமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு

0 63

(றிப்தி அலி)
ஹஜ் கோட்­டாக்­களை பங்­கீடு செய்­வ­தற்­கான நேர்­முகப் பரீட்­சை­யினை மீண்டும் நடத்­து­மாறு உயர் நீதி­மன்றம் நேற்று புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்­ளது.

அத்­துடன் 2013ஆம் ஆண்டு உயர் நீதின்­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்ட தீர்ப்பின் பிர­காரம் தயா­ரிக்­கப்­பட்ட ஹஜ் அல்­லது உம்ரா வழி­காட்­டி­­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இந்த நேர்­முகப் பரீட்­சை­யினை முன்­னெ­டுக்­கு­மாறும் நீதி­மன்­றத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­காக வேண்டி ஹஜ் முக­வர்­க­ளி­ட­மி­ருந்து புதி­தாக விண்­ணப்பம் கோரவும், ஜன­வ­ரியில் நேர்­முகப் பரீட்­சை­யினை நடாத்தவும் உயர் நீதி­மன்­றத்தில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

சவூதி அரே­பியா அர­சாங்­கத்­தினால் 2025ஆம் ஆண்­டுக்­காக வழங்­கப்­பட்ட 3,500 ஹஜ் கோட்­டாக்கள் 88 ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு கடந்த ஒக்­டோபர் 28ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டன.

இதில் ஆகக்­கூ­டிய 96 புள்­ளி­களைப் பெற்ற ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு 75 கோட்­டாக்­களும் ஆகக் குறைந்த 52 புள்­ளி­களைப் பெற்ற ஹஜ் முகவர் நிறு­வ­னத்­திற்கு 15 ஹஜ் கோட்­டாக்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் முதல் ஆறு அதி­கூ­டிய புள்­ளி­களைப் பெற்ற ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு 75 ஹஜ் கோட்­டாக்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டன. இந்த ஹஜ் கோட்டா பங்­கீட்­டுக்கு எதி­ராக 14 ஹஜ் முக­வர்கள் இணைந்து உயர் நீதி­மன்­றத்தில் மூன்று மனுக்­களை தாக்கல் செய்­தனர்.

இதற்கு மேல­தி­க­மாக நீதி­மன்­றத்­தினை அவ­ம­தித்­த­தாக தெரி­வித்து மேலும் இரண்டு மனுக்­களும் உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன. புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சர், புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சின் செய­லாளர் அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் நேர்­முகப் பரீட்சை நடத்­திய குழுவின் தலைவர் உள்­ளிட்டோர் இந்த மனுக்­களில் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த மனுக்கள் மீதான விசா­ர­ணை­களை உயர் நீதி­மன்றம் முன்­னெ­டுத்­தி­ருந்­தது. இவ்­வா­றான நிலை­யி­லேயே நேற்று இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் போது இரு தரப்பினர்களினாலும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்தே ஹஜ் கோட்டாக்களை பங்கீடு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.