அக்குறணை வெள்ளத்திற்கு தீர்வு காண்பதற்கு சட்டவிரோத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை

மாவட்ட செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்டோருக்கு ஆலோசனை என்கிறார் அமைச்சர் லால் காந்த

0 42

(எம்.வை.எம்.சியாம்)
அக்­கு­றணை பிர­தேச வெள்ள அனர்த்­தத்­துக்கு தீர்வு காண கடந்த காலங்­களில் முழு­மை­யான எந்­த­வொரு செயற்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.முதற்­கட்­ட­மாக சட்­ட­வி­ரோ­த­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கட்­டி­டங்­களை அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். மாவட்ட செய­லாளர் ஊடாக சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருடன் இணைந்து முறை­யான வேலைத்­திட்­டத்தை முன்­வைக்க ஆலோ­சனை வழங்­கி­யுள்ளோம் என விவ­சாயம், கால்­நடை வளர்ப்பு, காணி மற்றும் விவ­சா­யத்­துறை அமைச்சர் லால் காந்த தெரி­வித்­தார்.

கண்டி மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தின் பின்னர் நேற்று (11) ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அங்கு கருத்து தெரி­வித்த அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில், மழை கா­லங்­களில் கண்டி அக்­கு­றணை நகரம் மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்கள் வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. அந்தப் பகுதி மக்கள் நீண்ட கால­மாக இந்த பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். அக்­கு­றணை பிர­தேச வெள்ள அனர்த்­தத்­திற்கு தீர்வு காண கடந்த காலங்­களில் முழு­மை­யான எந்­த­வொரு செயற்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. எனவே அதற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்­டி­யுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்­தி­யுள்ளோம். முதற்­கட்­ட­மாக சட்­ட­வி­ரோ­த­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கட்­டி­டங்­களை அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். அத்­துடன் வடி­கான்­களில் உள்ள கழி­வு­களை அகற்­று­வ­தற்­காக வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்க உள்ளோம்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் மாவட்ட செய­லாளர் ஊடாக சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருடன் இணைந்து முறை­யான வேலைத்­திட்­டத்தை முன்­வைக்க ஆலோ­சனை வழங்­கி­யுள்ளோம்.

அத்­துடன் அந்த திட்டத்தை அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதன் ஊடாக எமக்கு இந்த விடயத்தில் தலையீடு செய்து தீர்வு காண முடியும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.