புத்தர் சிலை சேதம் விளை­விப்பு: கலா­சார அமைச்சு புறம்­பாக விசா­ரணை

அமைச்சர் சஜித் தெரி­விப்பு

0 921

மாவ­னெல்லை மற்றும் கடு­கண்­ணாவை பிர­தே­சங்­களில் நான்கு இடங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக கலா­சார அமைச்சு புறம்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மென வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், சேத­மாக்­கப்­பட்­டமை தொடர்பில் விரி­வான விசா­ர­ணையை மேற்­கொள்ள கலா­சாரத் திணைக்­களம், தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­களை ஈடு­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்டுள்­ளது.

சம்­பந்­தப்­பட்ட விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கேகாலை தொல்­பொருள் உதவிப் பணிப்­பாளர் எச்.பி.ஏ.கே.நில்­மல்­கொ­டவின் கண்­கா­ணிப்பின் கீழ் அதி­கா­ரிகள் சிலர் பங்­கு­பற்­றி­யுள்­ளனர். இந்த புத்­த­பெ­ரு­மானின் சிலைகள் தொல்­பொருள் பெறு­ம­தியைக் கொண்­ட­தல்ல என்­பது ஆரம்ப விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இருப்­பினும், பொது­மக்கள் மத்­தியில் முக்­கிய இடம்­பி­டித்­துள்ள இந்த சிலை­களை புன­ர­மைப்­பதன் முக்­கி­யத்­து­வத்தின் தேவையும் எந்த வகை­யிலும் கைவி­டப்­பட மாட்­டாது என்றும் அமைச்சர் கூறினார்.

இவற்றை மீண்டும் கட்டியெழுப்புதவற்கான செலவுகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.