வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சினால், வெளிநாட்டுத் தூதரகங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோண்டாற்றும் நோக்கில் அமைக்கப் பெற்றிருந்த (Charity Bazaar) பஸாரில் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகம் பங்கேற்றது.
இதில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் பங்கேற்றார். சவூதி தூதரகத்தின் கடைத் தொகுதி (Stall) சவூதி அரேபியவுக்கே உரித்தான பல தயாரிப்புப் பொருட்களை கொண்டு அமைக்கப் பட்டிருந்ததோடு, இவை பார்வையாளர்களின் கவனத்தை மிகுதியாக ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli