உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: பிள்ளையானிடம் சீ.ஐ.டி. ஐந்து மணி நேரம் விசாரணை

0 33

(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்பில், முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் பிள்­ளையான் எனும் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு­வி­னரால் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.

நேற்று (20) சி.ஐ.டி. யின் விஷேட விசா­ரணைப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்ட அவ­ரிடம் முற்­பகல் 9.30 மணி முதல் சுமார் 5 மணி நேரம் தீவிர விசா­ரணை நடாத்­தப்­பட்டு வாக்கு மூலம் ஒன்றும் பதிவு செய்­யப்­பட்­டது. இத­னை­ய­டுத்து குறித்த வாக்கு மூலத்தை ஆராய்ந்த பின்னர் மீள விசா­ர­ணைக்கு அழைப்­ப­தாக கூறி அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளுடன், முன்னாள் இரா­ணுவ உள­வுத்­துறை பிர­தானி துவான் சுரேஷ் சலே­வுக்கு தொடர்­பி­ருப்­ப­தாக, செனல் 4 தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் கோட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு கடந்த‌ 11 ஆம் திகதி அறிக்­கை­யிட்ட முதல் தகவல் அறிக்­கையை சமர்ப்­பித்த சி.ஐ.டி., 12 ஆம் திகதி அவ்­வி­சா­ர­ணை­க­ளுக்­காக முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் எனும் பிள்­ளை­யானை அழைத்­தது.

எனினும் தன்னால் அன்­றைய தினம் சி.ஐ.டி.யில் ஆஜ­ராக முடி­யாது என எழுத்து மூலம் அறி­வித்த பிள்­ளையான் நவம்பர் 18 முதல் 25 ஆம் திக­திக்குள் ஒரு திக­தியை பரிந்­து­ரைக்­கு­மாறும் அப்­போது அத்­தி­க­தியில் விசா­ர­ணை­க­ளுக்கு சமூ­க­ம­ளிப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்தே அவர் நேற்று ( 20) இவ்­வாறு விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளுடன், முன்னாள் இரா­ணுவ உள­வுத்­துறை பிர­தானி துவான் சுரேஷ் சலே­வுக்கு தொடர்­பி­ருப்­ப­தாக, செனல் 4 தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­மாறு சி.எஸ்.ஆர். நிறு­வ­னத்தின் நிறை­வேற்று பணிப்­பாளர் அருட் தந்தை ரொஹான் சில்வா முறைப்­பாட்டை முன் வைத்­தி­ருந்தார்.

அவ­ரிடம் வாக்கு மூலத்தை ஏற்­க­னவே பதிவு செய்த சி.ஐ.டி. சிறப்புக் குழு, நீதி­மன்­றுக்கு குறித்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­தாக நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது. அதே நேரம் செனல் 4 தொலைக்­காட்சி நிகழ்ச்சில் சலேயின் தொடர்பு குறித்து வெளிப்­ப­டுத்­திய அசாத் மெள­லானா, இலங்­கையில் இருந்த போது சிவ­னே­ச­துரை சந்த்­ர­காந்­தனின் தனிப்­பட்ட செய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்தார். அத்­துடன் அவ்­வெ­ளிப்­ப‌­டுத்­தலில் பிள்­ளையான் எனும் சிவ­னே­ச­துரை சந்தி­ர­காந்­தனின் பெயரும் வெளிப்­ப­டுத்­தப்பட்ட நிலை­யி­லேயே, அவரை விசா­ரிக்க சி.ஐ.டி. தீர்­மா­னித்­தது.

பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­ல­ருக்கு கிடைத்த முறைப்­பாடு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவரின் உத்தரவில் இது குறித்த விசாரணைகள், குற்றப் புலனாய்வுத் திணைக்ள‌த்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பியசேன அம்பாவிலவின் நேரடி கட்டுப்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.