புத்தளம் மாவட்ட தே.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் பைசலுக்கு ஒரு மடல்

0 106

அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம் பஸ்லுல் பாரிஸ் (நளீமி)

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தாங்கள் தெரிவானமைக்கு எனது இத­ய­பூர்­வ­மான வாழ்த்­துக்­க­ளை தெரி­விக்­கின்றேன். கடந்த காலங்கள் போலல்­லாது அறிவு ஜீவிகள் பலரும் துறைசார் நிபு­ணர்­களும் தெரி­வா­கி­யுள்ள பாரா­ளு­மன்­றத்­திற்கு நீங்கள் தெரி­வா­கி­யி­ருப்­ப­தை­யிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். அல்­ஹம்து லில்லாஹ்.
விகி­தா­சார தேர்தல் முறை­யொன்­றி­னூ­டாக பெரும்­பான்மை கட்­சி­யொன்றில் புத்­தளம் மாவட்­டத்தின் சிறு­பான்மை சமூ­கத்­தி­லி­ருந்து பாரா­ளு­மன்றம் செல்­கின்ற முத­லா­வது உறுப்­பினர் என்ற சாதனை சாதா­ர­ண­மா­ன­தல்ல; வர­லாற்று புகழ்­மிக்­கது. இதற்கு முன் பல அர­சியல் ஜாம்­ப­வான்­களால் கூட இவ்­வ­டைவை ஈட்ட முடி­யாமல் போனமை வரலாறு.

இங்­குதான் உங்­களைப் போன்ற ஒரு­வ­ரது பொறுப்பு மிகவும் கன­தி­யா­னது. “நான் பகலில் உறங்­கினால் மக்­க­ளுக்கு ஆற்ற வேண்­டிய கட­மை­களில் தவ­றி­ழைத்து விடுவேன்; இரவில் உறங்­கினால் அல்­லாஹ்­விற்கு நிறை­வேற்ற வேண்­டிய கட­மை­களில் தவ­றி­ழைத்து விடுவேன்” என்ற கலீபா உமர் ரழியல்­லாஹு அன்ஹு அவர்­க­ளது கருத்தை பரஸ்­பரம் நினை­வூட்டிக் கொள்­வது பொருத்­த­மா­ன­தாக இருக்கும். “சமூ­கத்தின் தலைவன் அச்­ச­மூ­கத்தின் தொண்டன், பணி­யாளன்” என்ற எங்கள் தலைவர் நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம் அவர்­க­ளது ஹதீஸ் பொறுப்பை சுமந்து வாழ்ந்த எமது கலீ­பாக்­க­ளது வழி­காட்டல் தத்­து­வ­மாக (Guiding Principal) இருந்­தி­ருப்­பதை வர­லாறு நினை­வூட்டிக் கொண்­டி­ருக்­கின்­றது.

பொறுப்­புக்­களை தூய உள்­ளத்­துடன் சுமந்­த­வர்கள் குறித்த பொறுப்பு சார்ந்த தகை­மை­களை வளர்த்துக் கொள்­வதில் கவனம் செலுத்தி வந்­துள்­ளனர். எனவே, பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வா­கி­ய­வர்கள் என்ற வகையில் அது தொடர்­பான அறிவை, திறனை, ஆளுமைப் பண்பை மேலும் வளர்த்துக் கொள்­­வதில் கூடிய கவனம் அவ­சி­யப்­படும். பாரா­ளு­மன்ற ஒழுங்­கு­களை, கட்­ட­மைப்பை, தேச, சமூக விவ­கா­ரங்­களை கையாள்­வ­தற்­கான பாரா­ளு­மன்ற ஏற்­பா­டு­களை இன்னும் ஆழ­மாக கற்றுக் கொள்­வதும் விளங்கிக் கொள்­வதும் முக்­கி­ய­மா­னது என்­பதில் இரு வேறு கருத்­துகள் இருக்­க­மாட்­டாது.

இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் தேசத்தின் நல­னிலும் தேச மக்­களின் நல் வாழ்­விலும் அக்­க­றை­யுள்­ள­வ­ரா­கவும் ஒடுக்­கப்­பட்ட, குர­லற்­ற­வர்­களின் குர­லா­கவும் தேசத்தின் மதிப்­பிற்­க­ரிய காடு­க­ளி­னதும் எண்­ணி­ல­டங்கா உயி­ரி­னங்­க­ளி­னதும் நீர் வளத்­தி­னதும் ஏனைய வளங்­க­ளி­னதும் காவ­லர்­களில் ஒரு­வ­ரா­கவும் செயற்­ப­டு­வதன் மூலம்தான் குடி­மக்­களின் விசு­வா­சத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். இது உங்­க­ளுக்கு நான் சொல்லித் தெரிய வேண்­டு­மென்­ப­தல்ல. இந்தத் தேர்தல் முடிவு கற்றுத் தந்த பாடங்கள் பல­வற்றுள் இதுவும் ஒன்று.

இலங்கை பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பி­ன­ரா­கவும் சிறு­பான்மை சமூ­கங்­களின் பிர­தி­நி­தி­யா­கவும் இருக்­கின்ற அங்­கத்­த­வ­ரது பொறுப்பு பார­மா­னது; சங்­க­டங்கள் பல­வற்றால் சூழப்­பட்­டது; சவால்கள் நிறைந்­தது. அத்­த­கைய ஒருவர் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னதும் சிறு­பான்மை சமூ­கங்­க­ளி­னதும் பிணைப்புப் பால­மாக இயங்க வேண்டும். இந்த தேசத்தில் சிறு­பான்மை சமூ­கங்கள் தங்­க­ளது உரி­மை­களை பெற்று நம்­பிக்­கை­யோடு வாழு­கின்ற நிலையை கட்டி எழுப்ப வேண்­டி­யி­ருக்­கி­றது. அவர்­களை தேசத்தின் பங்­கா­ளர்­க­ளாக மாற்­று­வ­தற்­கு­ரிய வியூ­கங்கள் வகுத்து செயற்­ப­டு­வது திறன்­மிக்­கது. நாடு எமக்குத் தர­வேண்­டிய உரி­மை­களை விட நாம் இந்­நாட்­டிற்கு ஆற்ற வேண்­டிய கட­மைகள் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தன என்ற மனோ­நி­லையை சிறு­பான்மை சமூ­கங்­களில் ஏற்­ப­டுத்த சிறு­பான்மை சமூ­கங்­களின் பிர­தி­நி­தி­க­ளோடு இணைந்து உழைப்­பது தலை­யாய பொறுப்­பாகும். எமது கட­மை­களை சரி­வர நிறை­வேற்­று­வதன் மூலம் உரி­மை­களை பெற முடியும் என்ற நம்­பிக்­கையை சிறு­பான்மை சமூ­கங்­களின் உள்­ளங்­களில் பதிக்க அசுர உழைப்பு அவ­சி­யப்­ப­டு­கி­றது .

மற்­று­மொரு பக்­கத்­தையும் சொல்ல வேண்டும் என விரும்­பு­கிறேன். கடந்து வந்த காலங்­களில் இலங்­கையின் அர­சி­யலில் ஜனா­தி­பதி முதற்­கொண்டு அனை­வரும் தத்­த­மது பிர­தே­சங்­க­ளிற்கு மாத்­தி­ரமே முன்­னு­ரிமை வழங்­கி­னார்கள் என்ற அவ­தானம் உள்­ளது. என்­ற­போதும் அந்த மனோ­பா­வத்­தி­லி­ருந்து விலகி புத்­தளம் மாவட்­டத்தின் பிர­தி­நிதி என்ற பார்வை மேலோங்கி இருக்க வேண்டும். புத்­தளம் மாவட்­டத்தில் வாழு­கின்ற அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் விவ­கா­ரங்­களில் கரி­ச­னை­யுள்­ள­வ­ராக; அவர்­க­ளது தேவை­களை இனம் கண்டு நிறை­வேற்­று­ப­வ­ராக; பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்றுத் தரு­ப­வ­ராக இந்த சமூகம் உங்­களை காண்­கி­றது.

புத்­தளம் மாவட்­டத்தின் கல்வி, சுகா­தாரம், பொரு­ளா­தாரம், கலா­சாரம் தொழில்­நுட்பம் போன்ற இன்­னோ­ரன்ன துறை­களில் நிலை­யான அபி­வி­ருத்­தி­யையும் மேம்­பாட்­டையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக வழி­காட்­டல்கள், உரிய ஆலோ­ச­னை­களை பெற்று வினைத்­தி­றனும் விளை­தி­றனும் ஏற்­ப­டுத்­து­ப­வ­ராக அறி­வு­லகம் என்றும் வர­வேற்கும்.

பாரா­ளு­மன்­றத்தின் காலம் ஐந்து ஆண்­டுகள் என்­பதால் புத்­தளம் மாவட்­டத்­திற்­கான தனித்­து­வ­மான ஐந்­தாண்­டுத்­திட்டம் ஒன்றை வகுத்து செயல்­ப­டு­வது மிகவும் பொருத்­த­மா­ன­தாக அமையும் என நீங்கள் சிந்­தித்­தி­ருப்­பீர்கள். புத்­தளம் மாவட்­டத்தில் வாழு­கின்ற சிங்­களம், தமிழ், முஸ்லிம் பல்­லின சமூ­கங்கள் அனைத்­தையும் அர­வ­ணைத்துச் செல்லும் தலை­மைத்­து­வ­மாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வதன் மூலம் வீரி­ய­மிக்­க­தொரு அர­சியல் பய­ணத்தை தொடரும் சாத்­தி­யக்­கூ­றுகள் நிறை­யவே இருக்­கின்­றன என்­பது துலாம்­பரம்.

மேலும், முஸ்லிம் சமூ­கத்தின் பாரா­ளு­மன்ற பிர­தி­நிதி ஒரு­போதும் மறந்து விட முடி­யாத கடப்­பா­டொன்றை நினை­வூட்­டிக்­கொள்­வது விரும்­பத்­தக்­கது. ஒரு முஸ்­லிமின் தனித்­து­வ­மான அடை­யா­ளங்­களை பாது­காப்­பதில் கவ­னமும் மறுமை ஈடேற்­றத்­திற்­கான வழி­களுள் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளும் ஒரு விசு­வா­சி­யாக செயற்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும். அவர் பெறுகின்ற நற்பெயர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கின்ற நற்பெயர்; அவர் தேடிக் கொள்கின்ற அவப்பெயர் முழு முஸ்லிம் சமூகத்தையும் தலை குனிய வைக்கும் என்பது தெளிவான உண்மையாகும்.
அறிஞர் எம்.சீ சித்தி லெப்பை, T.B ஜாயா, சேர் ராசிக் பரீத், எச்.எஸ் இஸ்மாயில், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் போன்ற இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றின் முன்னோடிகளை முன்னுதாரணப் புருஷர்களாக எடுத்துக் கொள்வதன் மூலம் வரலாற்றில் அழியா தடத்தை பதித்துக் கொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.