பத்தாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது அமர்வு இன்று ஆரம்பம்

அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி அநுர முன்வைப்பார்

0 69

இலங்கை சோச­லிசக் குடி­ய­ரசின் பத்­தா­வது பாரா­ளு­மன்ற முத­லா­வது கூட்­டத்­தொ­டரை இன்­றைய தினம் வைப­வ­ரீ­தி­யாக ஆரம்­பித்து வைப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­களும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளது.

இன்று மு.ப 9.55 மணிக்கு வாக்­க­ழைப்பு மணி ஒலிக்­கப்­பட்டு மு.ப 10.00 மணிக்கு பாரா­ளு­மன்ற அமர்வு ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­துடன், செங்கோல் சபா மண்­ட­பத்தில் வைக்­கப்­பட்­டதும், பாரா­ளு­மன்­றத்தைக் கூட்டும் ஜனா­தி­ப­தியின் பிர­க­ட­னத்தை பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் சபையில் வாசிக்­க­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற ஊடகப் பிரிவு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அத்­துடன், முத­லா­வ­தாக சபா­நா­ய­கரின் தெரிவு இடம்­பெ­ற­வி­ருப்­ப­துடன், சபா­நா­ய­கரின் பத­விச்­சத்­தியம் அல்­லது உறு­தி­யுரை, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பத­விச்­சத்­தியம் அல்­லது உறு­தி­யுரை, பிரதிச் சபா­நா­யகர் மற்றும் குழுக்­களின் பிரதித் தவி­சாளர் வாக்­க­ளிப்­பினால் தெரி­வு­செய்தல் என்­பன இடம்­பெ­ற­வுள்­ளது. முத­லா­வது நாளில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஆசன ஒதுக்­கீடு மேற்­கொள்­ளப்­ப­டாது என்­பதால் தமக்கு விரும்­பிய ஆச­னங்­களில் அமர முடியும் என்­பது விசே­ட­மா­ன­தாகும்.
இந்தச் செயற்­பா­டுகள் முடி­வ­டைந்­ததும் பாரா­ளு­மன்றம் தற்­கா­லி­க­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்டு மு.ப 11.30 மணிக்கு ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க அக்­கி­ரா­ச­னத்தில் அமர்ந்து அர­சாங்­கத்தின் கொள்கைப் பிர­க­டன உரையை பாரா­ளு­மன்­றத்­திற்கு முன்­வைக்­க­வுள்ளார்.

பத்­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது கூட்­டத்­தொ­டரின் ஆரம்ப நிகழ்வை எளி­மை­யான முறையில் நடத்­து­மாறு ஜனா­தி­பதி வழங்­கிய பணிப்­பு­ரைக்கு அமைய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், இதற்கு அமைய ஜய­மங்­கள கீதம், முப்­ப­டை­யி­னரின் அணி­வ­குப்பு, மரி­யாதை வேட்­டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனப் பவனி என்­பன இடம்­பெ­றாது என படைக்­கல சேவிதர் குஷான் ஜய­ரத்ன தெரி­வித்தார்.

இதற்கு அமைய மு.ப 11.00 மணிக்கு சகல விருந்­தி­னர்­களும் தமது இருக்­கை­களில் அம­ர­வைக்­கப்­ப­ட­வுள்­ளனர். மு.ப 11.10 மணிக்கு பாரா­ளு­மன்ற கட்­ட­டத்தின் பிர­தான நுழை­வா­யிலின் படிக்­கட்­டுக்கு அருகில் சபா­நா­யகர் வர­வேற்­கப்­ப­ட­வுள்ளார். அதனைத் தொடர்ந்து மு.ப 11.15 மணிக்கு பிர­தமர் வர­வேற்­கப்­ப­ட­வி­ருப்­ப­துடன், இதன் பின்னர் ஜனா­தி­ப­தியின் வருகை இடம்­பெறும்.

அதன்­படி மு.ப 11.20 மணி­ய­ளவில் சபா­நா­யகர், பாரா­ளு­மன்றச் செய­லா­ளர் ­நா­யகம் குஷானி ரோஹ­ண­தீர உள்­ளிட்டோர் ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்தின் பிர­தான படிக்­கட்­டு­க­ளுக்கு அருகில் வர­வேற்­க­வுள்­ளனர்.
இதனைத் தொடர்ந்து படைக்­க­ல­சே­விதர், பிரதி படைக்­கல சேவிதர் மற்றும் உதவி படைக்­கல சேவிதர் ஆகியோர் முன்­செல்ல சபா­நா­யகர், பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் ஆகி­யோ­ரினால் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­துக்குள் அழைத்துச் செல்­லப்­ப­டுவார்.

இதன் பின்னர் உடை­யணி அறைக்கு அழைத்துச் செல்­லப்­ப­ட­வுள்ள ஜனா­தி­பதி மு.ப 11.25 மணி­வரை அங்­கி­ருப்­ப­துடன், அதனைத் தொடர்ந்து பாரம்­ப­ரி­யத்­துக்கு அமையப் பிரதிப் படைக்­கல சேவிதர், செங்­கோலைக் கையில் தாங்­கி­ய­வாறு படைக்­கல சேவிதர், ஜனா­தி­பதி, சபா­நா­யகர், செய­லாளர் குழு மற்றும் உதவிப் படைக்­கல சேவிதர் என்ற வரி­சைப்­படி அணி­வ­குத்து சபா மண்­ட­பத்­துக்குள் செல்வர்.

சபைக்குள் நுழை­யும்­போது உதவி படைக்­கல சேவிதர் ‘கௌரவ ஜனா­தி­பதி’ எனத் தெரி­வித்­ததும் ஆளும் கட்சி எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் தமது ஆச­னங்­க­ளி­லி­ருந்து எழுந்து நிற்­பது பாரம்­ப­ரி­ய­மாக இடம்­பெறும்.

சபா மண்­ட­பத்­துக்கு அழைத்­து­வ­ரப்­படும் ஜனா­தி­பதி அக்­கி­ரா­ச­னத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்­குவார். இதன்­போது சபா­நா­யகர், பாரா­ளு­மன்ற குழு­நி­லை­யின்­போது அமரும் கீழ் பகு­தி­யி­லுள்ள ஆச­னத்தில் செய­லாளர் குழு­வுடன் அமர்ந்­தி­ருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனா­தி­ப­தி­யினால் அர­சாங்­கத்தின் கொள்கைப் பிர­கடன உரை நிகழ்த்­தப்­பட்டு, சபை ஒத்­தி­வைக்­கப்­படும்.

பத்­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது கூட்­டத்­தொ­டரின் ஆரம்ப நாள் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் பெர்னாந்து தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.