கிழக்கு ஆளுநரின் புதிய நியமனங்களின் பின்னால் உள்ள சர்ச்சை!

0 21

றிப்தி அலி

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் பேரா­சியர் ஜயந்த லால் ரத்­ன­சே­க­ர­வினால் கடந்த வாரம் மேற்­கொள்­ளப்­பட்ட சில நிய­மங்கள் சர்ச்­சை­களை தோற்­று­வித்­தி­ருந்­தன. இந்­நி­ய­ம­னங்­களில் அம்­மா­கா­ணத்தில் வாழும் முஸ்லிம் சமூக புறக்­க­ணிப்­பட்­டுள்­ளதா என்ற கேள்­வியை தேர்தல் மேடை­களில் கேட்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்­டமான் போன்று தேசிய மக்கள் சக்­தியின் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட ஆளு­நரும் முஸ்லிம் சமூ­கத்­தினை புறக்­க­ணித்து செயற்­பட முயற்­சிக்­கின்­றாரா என்ற சந்­தேகப் பார்­வையும் ஏற்­படத் தொடங்­கி­யுள்­ளது.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் கந்­தளாய் பிர­தே­சத்­தினைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஜயந்த லால் ரத்­ன­சே­கர, ரஜ­ரட்டை பல்­க­லைக்­க­ழ­கத்தின் இர­சா­ய­ன­வியல் பேரா­சி­ரி­ய­ராவர்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஊவா வெல்ஸ்ஸ பல்­க­லைக்­க­ழ­கத்தின் உபவேந்­த­ராக செயற்­பட்டார். பின்னர் புனா­னை­யி­லுள்ள முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்­வி­னு­டைய பல்­லைக்­க­ழ­கத்தின் உப வேந்­த­ரா­கவும் இவர் நிய­மிக்­கப்­பட்டார்.

தமிழ் பேசக்­கூ­டிய இவர், கிழக்கு மாகாண ஆளு­ந­ராக ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டமை இந்த மாகா­ணத்­தி­லுள்ள அனைத்து மக்­க­ளி­னாலும் வர­வேற்­கப்­பட்­டது.

முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்­ட­மா­னினால் கிழக்கு முஸ்­லிம்கள் கடு­மை­யாக புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்த நிலையில் இவரின் நிய­மனம் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் நல்­லெண்­ண­மொன்றை உரு­வாக்­கி­யது.

எனினும், தற்­போ­தைய நிய­மன விவ­காரம் ஆளு­ந­ருக்கு நெருக்­க­டியை தோற்­று­வித்­துள்­ளது. இதற்கு பிர­தான காரணம் ஆளுநர் ஜயந்­தலால் ரத்­ன­சே­க­ர­வினால் கடந்த வாரம் மேற்­கொள்­ளப்­பட்ட சில நிய­ம­னங்­க­ளாகும்.

மாகாண சபைகள் தற்­போது நாட்டில் செயற்­ப­டா­மை­யினால் அதன் அதி­கா­ரங்கள் அனைத்தும் ஆளு­நரின் கீழுள்­ளது. இதற்­க­மைய, கிழக்கு மாகாண ஆளு­நரின் கீழ் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்­குழு, மாகாண வீட­மைப்பு அதி­கார சபை, மாகாண வீதிப் பய­ணிகள் போக்­கு­வ­ரத்து அதி­கார சபை, மாகாண சுற்­றுல்லா பணி­யகம், மாகாண முன்-­பள்ளி கல்விப் பேரவை மற்றும் மாகாண கூட்­டு­றவு உத்­தி­யோ­கத்­தர்கள் ஆணைக்­குழு ஆகி­யன காணப்­ப­டுன்­றன.

குறித்த நிறு­வ­னங்­க­ளுக்­கான தலை­வர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் கடந்த வாரம் ஆளுநர் ஜயந்த லால் ரத்­ன­சே­க­ர­வினால் நிய­மிக்­கப்­பட்­டனர்.

இதற்­க­மைய, மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக பீ.எச்.என். ஜய­விக்­ர­மவும் மாகாண வீட­மைப்பு அதி­கார சபையின் தலை­வ­ராக பொறி­யி­ய­லா­ள­ராக ஜீ. சுகு­மா­ரனும் மாகாண வீதிப் பய­ணிகள் போக்­கு­வ­ரத்து அதி­கார சபையின் தலை­வ­ராக கித்­சிரி நவ­ரத்­னவும் மாகாண சுற்­றுல்லா பணி­ய­கத்தின் தலை­வ­ராக பிரி­யந்த மல்­ல­வ­னவும் மாகாண முன்-­பள்ளி கல்விப் பேர­வையின் தலை­வ­ராக ஏ. விஜ­யா­னந்த மூர்த்­தியும், மாகாண கூட்­டு­றவு உத்­தி­யோ­கத்­தர்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக ரஜினி கணே­ச­பிள்­ளையும் நிய­மிக்­கப்­பட்­டனர்.

இந்த நிறு­வனத் தலை­வர்கள் நிய­ம­னத்தில் முஸ்லிம் சமூ­கத்­தினைச் சேர்ந்த எவரும் உள்­ள­டக்­கப்­ப­டாமை, கிழக்­கி­லுள்ள முஸ்லிம் மக்கள் மத்­தியில் பாரிய எதிர்ப்­ப­லை­யினைத் தோற்­று­வித்­தது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள முஸ்­லிம்கள் பாரி­ய­ளவில் அநுர குமார திசா­நா­யக்­க­விற்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இதனால் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கிழக்கு மாகா­ணத்தில் பல முஸ்லிம் வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் ஆளுநர் மேற்­கொண்ட இந்த நட­வ­டிக்கை முஸ்லிம் சமூ­கத்தில் பாரிய அச்­சத்­தினை ஏற்­ப­டுத்­தி­யது. அத்­துடன் எதிர்க்­கட்­சி­களின் பிரசார மேடை­களில் பேசு­பொ­ரு­ளா­கவும் இந்த விடயம் காணப்­பட்­டது.
முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்­டமான் கிழக்கு முஸ்­லிம்­களை புறக்­க­ணித்து செயற்­பட்­டி­ருந்­தாலும் நிறு­வனத் தலை­வர்கள் நிய­ம­னத்தில் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்­லிமை உள்­ள­டக்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அநுர குமார திசா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்ட பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட ஆளு­நர்கள் மற்றும் அமைச்சின் செய­லா­ளர்கள் நிய­ம­னத்தில் தலா இரண்டு சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே கிழக்கு ஆளுநர் முஸ்­லிம்­களை புறக்­க­ணித்து விட்டு நிறு­வனத் தலை­வர்கள் நிய­ம­னத்தை மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்த நிய­ம­னங்­களின் கார­ண­மாக தங்­களின் வாக்கு வங்­கியில் பாரிய சரி­வினை ஏற்­ப­டுத்தும் என கிழக்கு மாகா­ணத்தில் போட்­டி­யிடும் சில முஸ்லிம் வேட்­பா­ளர்கள் இக்­கட்­டு­ரை­யா­ள­ரிடம் அச்சம் வெளி­யிட்­டனர்.
கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்தின் தலை­வ­ராக திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தினைச் சேர்ந்த ஒரு முஸ்­லிமின் பெயர் அம்­மா­வட்­டத்­தி­லுள்ள மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­தர்­க­ளினால் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

எனினும், குறித்த சிபா­ரிசு ஆளு­ந­ரினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்ள விடயம் பின்னர் தெரி­ய­வந்­தது. அதே­போன்று கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள நிறு­வ­ன­மொன்றில் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரிய கட­மை­யாற்றி போது மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்த வேலை­களில் இடம்­பெற்ற மோசடி கார­ண­மாக நீண்ட காலம் எந்தப் பணி­க­ளு­மின்றி வைக்­கப்­பட்­டி­ருந்த பொறி­யி­ய­லாளர் ஒரு­வரும், புதிய ஆளு­நரின் நிறு­வனத் தலை­வர்­களின் நிய­ம­ன­மத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வா­றான விட­யங்கள் கார­ண­மாக புதிய ஆளு­நரின் நிய­ம­னங்கள் தொடர்பில் பாரிய விமர்­ச­னங்கள் சமூக ஊட­கங்­க­ளிலும் பிர­சார மேடை­க­ளிலும் முவைக்­கப்­பட்­டது. இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்­தியின் தேசி­யப்­பட்­டியல் வேட்­பாளர் அஷ்ஷெய்க் எம்.என். இக்­ராமின் கவ­னத்­திற்கும் இக்­கட்­டு­ரை­யா­ள­ரினால் கொண்டு செல்­லப்­பட்­டது.

இந்த விடயம் தொடர்பில் துரித நட­வ­டிக்­கை­களை இக்ராம் முன்­னெ­டுத்­த­துடன் “விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்” என இக்­கட்டு­ரை­யா­ள­ரிடம் கடந்த வியா­ழக்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் கிழக்கு மாகாண மாகாண முன்-­பள்ளி கல்விப் பேர­வையின் தலை­வ­ராக எம்.ஏ. அமீர்தீன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கிழக்கு மாகாண ஆளு­ந­ரினால் நிய­மிக்­கப்­பட்டார். இதற்கு முன்­னரும் அமீர்தீன் இந்த பேர­வையின் தலை­வ­ராக செயற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
கிழக்கு ஆளுந­ரினால் புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­களின் விபரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

மேற்­படி நிய­ம­னங்­களில் கிழக்கு மாகாண மாகாண வீட­மைப்பு அதி­கார சபையின் உறுப்­பி­னர்­க­ளாக எந்­த­வொரு முஸ்­லிமும் புதிய ஆளு­ந­ரினால் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. முன்னர் இந்த அதி­கார சபையின் தலை­வ­ராக சம்­மாந்­துறை ரனுஸ் இஸ்­மாயில் செயற்­பட்டார்.

இதே­வேளை, கிழக்கு மாகாண வீதிப் பய­ணிகள் போக்­கு­வ­ரத்து அதி­கார சபையின் தலைவர் பதவி மாத்­தி­ரமே பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் உறுப்­பி­னர்கள் பத­விகள் வெற்­றி­ட­மாகக் காணப்­ப­டு­கின்­றன.
குறித்த அதி­கார சபையின் உறுப்­பி­னர்கள் நிய­ம­னத்தில் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள முஸ்லிம் சமூகம் புறக்­க­ணிக்­கப்­படக் கூடாது என ஆளு­ந­ரிடம் வேண்­டுகோள் விடுக்­கின்றோம்.

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்கள் மிகவும் ஒற்­று­மை­யாக பின்­னிப்­பி­ணைந்து வாழ்ந்து வரு­கின்­றனர். இதன் கார­ண­மாக இந்த மாகா­ணத்தின் நிர்­வாக பங்­கீ­டுகள் அனைத்தும் 2:2:2 என்ற அடிப்­ப­டையில் தொடர்ச்­சி­யாக பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு வருந்­துள்­ளது.
இது­வொரு எழு­தப்­ப­டாத விதி­யு­மாகும்.

எனினும், சிங்­கள கடும்­போக்­கு­டைய முன்னாள் ஆளுநர் அனு­ராதா யஹம்­பத்­தினால் இந்த எழு­தப்­ப­டாத விதி தகர்த்­தெ­றி­யப்­பட்­ட­மை­யினை இங்கு நினை­வூட்­டு­கின்றேன். அவரை தொடர்ந்து ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்ட செந்தில் தொண்­டா­மானும் இந்த எழு­தப்­ப­டாத விதி­யினை மீறியே செயற்­பட்டார்.
குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­தினைச் சேர்ந்த பல சிரேஷ்ட நிர்­வாக சேவை அதி­கா­ரி­களை முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்­டமான் ஒதுக்கி விட்டு கனிஷ்ட தரத்­தி­லுள்ள நிர்­வாக சேவை அதி­கா­ரி­க­ளுக்கு பதில் செய­லாளர் பதவிகளை வழங்கினார்.

இதே நிலைமை புதிய ஆளு­நரின் காலத்­திலும் தொட­ரக்­கூ­டாது என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

எனவே முன்னாள் ஆளு­ந­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பிழை­யான நட­வ­டிக்­கை­களை சீர்­செய்ய வேண்­டி­யது புதிய ஆளுநர் ஜயந்த லால் ரத்­ன­சே­க­ரவின் பிர­தான கட­மை­யா­க­வுள்­ளது.

முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்­ட­மா­னினால் மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்து நிய­ம­னங்­களும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் ரத்துச் செய்­யப்­பட்டு பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் தீர்வு கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் செய­லக உயர் அதி­கா­ரி­யொ­ருவர் எமக்குத் தெரி­வித்தார்.
எவ்­வா­றா­யினும், இன்னும் அதிக காலம் எடுக்­காமல் – கிழக்கு மாகா­ணத்தின் நிர்­வாக நட­வ­டிக்­கைகள் தொடர்பில் வினைத்­தி­ற­னான தீர்­மா­னங்­களை பேரா­சி­ரியர் ஜயந்த லால் ரத்­ன­சே­க­ர­வினால் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.
இதன் ஊடாக முன்னாள் ஆளு­நர்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட நிர்­வாக சேவை அதி­கா­ரி­க­ளுக்கு தீர்வு கிடைக்கும். அத்துடன் கிழக்கு மாகாணத்தின் நிர்வாகமும் வினைத்திறனாக கட்டியெழுப்பப்படும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.