அக்குற‌ணை ‘ பெயார்லைன்’ கட்டிடத்தை இடிப்பதற்கான உத்தரவு மேல் நீதிமன்ற மீளாய்வு மனுவால் இடைநிறுத்தம்

0 86
  • சட்ட மா அதிபரின் உதவியைபெற திட்டம்
  • மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு நாளை பரிசீலனைக்கு

(எப்.அய்னா)
கண்டி மாவட்­டத்தின் அக்­கு­றணை பிர­தே­சபை நிர்­வாக எல்­லைக்கு உட்­பட்ட அல­வத்­து­கொட பொலிஸ் பிரிவின் கண்டி ‍மாத்­தளை பிர­தான வீதியில் இலக்கம் 178/3 எனும் இலக்­கத்தில் அமைந்­துள்ள, பெயார்லைன் கட்­டிட‌ம் என பர­வ­லாக அறி­யப்­படும் கட்­டி­டத்தை இடிக்க, கண்டி மேல­திக நீதிவான் வழங்­கிய இடிப்பு கட்­ட­ளையை தற்­கா­லி­க­மாக செயற்­ப­டுத்­தாமல் இருக்க இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

குறித்த இடிப்பு கட்­ட­ளைக்கு எதி­ராக கண்டி மேல் நீதி­மன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அம்­மனு மீதான விசா­ர­ணையின் ஆரம்­பத்தில், விசா­ரணை நிறைவு பெற்று தீர்ப்­ப­ளிக்­கப்­படும் வரை, அக்­கட்­டி­டத்தை இடிப்­ப­தில்லை என நீதி­மன்­றுக்கு நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை உறு­தி­ய­ளித்­துள்­ளது.

30053/22 எனும் வழக்­கி­லக்­கத்தில் கண்டி மேல­திக நீதிவான் ஹர்­ஷன டி அல்விஸ் முன்­னி­லையில், குறித்த பெயார்லைன் கட்­டிடம் தொடர்பில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையால் வழக்குத் தொடுக்­கப்­பட்­டது. அதன்­படி கடந்த 2022ஜூன் 28ஆம் திகதி, 1982 ஆம் ஆண்டின் நான்காம் இலக்க சட்டம் ஊடாக திருத்­தப்­பட்­டுள்ள நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்­டத்தின் 8 ஆவது அத்­தி­யா­யத்தின் உப பிரி­வு­களின் விதி­வி­தா­னங்­களை மீறி, அவ்­வ­தி­கார சபையின் அனு­மதிப் பத்­திரம் இன்றி குறித்த கட்­டிடம் கட்­டப்­பட்­டுள்­ள­தாக கூறி, அக்­கட்­டி­டத்தை இடித்து தரை­மட்­ட­மாக்க கண்டி மேல­திக நீதிவான் ஹர்­ஷன டி அல்விஸ் உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

அதன்­படி குறித்த கட்­ட­ளையை ஆட்­சே­பித்து, கண்டி மேல் நீதி­மன்றில் 89/24 எனும் இலக்­கத்தின் கீழ் மீளாய்வு மனு, அக்­கட்­டி­டத்தின் உரி­மை­யா­ளரால் தாக்கல் செய்­யப்­பட்­டது. அதன்­படி குறித்த வழக்கில் கடந்த ஒக்­டோபர் 25 ஆம் திகதி கண்டி மேல் நீதி­மன்ற நீதி­பதி தர்­ஷிகா விடுத்த அறி­வித்­த­லுக்கு அமைய, கடந்த 8ஆம் திகதி இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது மீளாய்வு மனுவின் மனு­தாரர் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான‌ அயுக பெரேரா, சஹ்மி பரீட் ஆகி­யோ­ரோடு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைத்தார்.

மீளாய்வு மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை சார்பில் சட்­டத்­த­ரணி நுஷானி ஜய­ரத்ன ஆஜ­ரானார்.

இதன்­போது மன்றில், நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை சார்பில் சட்­டத்­த­ரணி நுஷானி ஜய­ரத்ன மேல் நீதி­மன்றில் உள்ள மீளாய்வு மனு மீதான விசா­ர­ணைகள் நிறை­வுற்று கட்­டளை ஒன்று ஆக்­கப்­ப‌டும் வரையில், நீதிவான் நீதி­மன்றால் பிறப்­பிக்­கப்­பட்ட இடிப்பு கட்­ட­ளையை செயற்­ப­டுத்­தாமல் இருக்க இணக்கம் தெரி­வித்தார். அத்­துடன் இந்த வழக்கில் சட்டமா அதி­பரின் உத­வி­யையும் பெற்­றுக்­கொள்ள எதிர்­பார்ப்­ப­தாக அவர் தெரி­வித்தார்.

அதன்­படி இம்­மனு தொடர்பில் ஆட்­சே­ப­னைகள் இருப்பின் அவற்றை பதிவு செய்ய, மீளாய்வு மனு மீதான விசா­ர­ணைகள் எதிர்­வரும் 2025 ஜன­வரி மாதம் 21 ஆம் திக­தி­வரை ஒத்தி வைக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, குறித்த கட்­டி­டத்தை இடிப்­ப­தற்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்­றிலும் எழுத்­தாணை (ரிட்) மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தற்­போது ஜப்­பானில் வசிக்கும் உரி­மை­யா­ளர் அளித்­துள்ள அட்­டோனி அதி­கார பத்­தி­ரத்­துக்கு அமைய நஜிபுதீன் மொஹம்மட் பாஹிம் மனுதாரராக பெயரிடப்பட்டு 680/2024 எனும் இலக்கத்தின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த எழுத்தாணை மனுவானது நாளை 12ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.