இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு தீர்ப்பு தேர்தலால் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

0 143

( எப்.அய்னா)
பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­த­தாக கூறி அவ­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்­தி­வைக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தாக நீதி­மன்ற தக­வல்கள் தெரி­வித்­தன. குறித்த தீர்ப்பை எதிர்­வரும் நவம்பர் 14ஆம் திகதி வழங்­கு­வ­தாக‌ கொழும்பு மேல­திக நீதவான் பசன் அம­ர­சேன கடந்த செப்­டம்பர் 26 ஆம் திகதி அறி­வித்தார்.

எனினும் எதிர்­வரும் 14 ஆம் திகதி தேர்தல் தினம் என்­பதால், அன்­றைய தினம் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே எதிர்­வரும் 14 ஆம் திக­திக்­கு­ரிய வழக்­கு­களை பிறி­தொரு தினத்­துக்கு மாற்றி உயர் மற்றும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றங்கள் அறி­வித்தல் அனுப்­பி­யுள்ள நிலையில், மேல் மற்றும் நீதிவான் நீதி­மன்­றங்­க­ளிலும் பெரும்­பாலும் அதே நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. எனினும் அது குறித்த உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு வெளி­வ­ர­வில்லை.

எனவே பெரும்­பாலும் எதிர்­வரும் 14 ஆம் திகதி பதில் கட­மை­களை முன்­னெ­டுக்க பதில் நீதிவான் ஒரு­வரே கட­மை­களில் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளதால், ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்கின் தீர்ப்பு இன்­னு­மொரு தினத்­துக்கு ஒத்தி வைக்­கப்­ப­டலாம் என தெரி­கின்­றது.

இஸ்லாம் ஒரு புற்றுநோய் என ஞான­சாரதேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் முன்­வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய, கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு, முறைப்­பாட்­டாளர் தரப்பின் சாட்­சி­யாளர் உள்­ளிட்ட சாட்­சி­யா­ளர்கள் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், குறித்த வழக்கை சுமு­க­மாக முடித்­துக்­கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதி­மன்றில் பகி­ரங்க மன்­னிப்பு கோர தயா­ராக இருப்­ப­தாக ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில் சாட்சி விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்த நிலையில், முறைப்­பாட்டில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டை நிரூ­பிப்­ப­தற்­கான ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில், குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வரை விடு­தலை செய்­யு­மாறு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி காமினி அல்விஸ் நீதி­மன்றில் கோரினார்.
இவ்­வா­றான நிலை­யி­லேயே குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்­வரும் நவம்பர் 14 ஆம் திகதி வழங்­கு­வ­தாக நீதிவான் அறி­வித்தார்.

கடந்த 2016 ஜூலை 8, அன்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போது, ​​இஸ்லாம் தொடர்­பான அறிக்கையின் போது, ​​இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.