நாம் வாக்களிக்கும் முஸ்லிம் அரசியல்வாதி என்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்?

0 33

அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி⁄மதனி)

இலங்கை அர­சியல் வர­லாறு ஆரம்­பித்த காலம் முதல் இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே தோன்­றிய ஆரம்ப கால அர­சி­யல்­வா­திகள் அனை­வரும் பெரும்­பான்மை கட்­சி­க­ளு­ட­னேயே ஒன்­றித்து செயல்­பட்­ட­துடன் அவர்­களால் வழங்­கப்­படும் சலு­கை­களில் பூரண திருப்­தி­ய­டைந்­த­துடன் தனது சமூ­கத்­தையும் ஏதோ ஒரு வகையில் திருப்­திப்­ப­டுத்த முயன்­றனர். அதில் வெற்­றியும் பெற்­றனர்.

கடந்த எழு­பது வருட சுய நிர்­ணய அர­சியல் வர­லாறு இவ்­வாறே தொடர்ந்­தது. இத்­த­கைய தரு­ணத்­தி­லேயே மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் இத்­தகு முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் போக்கை மாற்றி முஸ்­லிம்­க­ளுக்­கான தனித்­துவ அடை­யாள அர­சியல் கட்­சியை முஸ்லிம் காங்­கிரஸ் என்ற பெயரில் உரு­வாக்­கினார்.

இன்று அந்த முஸ்லிம் அடை­யாள அர­சியல் கட்சி வர­லாற்று நிலை­மா­று­கையில் பல காங்­கி­ரஸ்­களாக உரு­மாறி எங்கே வந்து நிற்­கி­றது என்­பதை நீங்கள் அறி­வீர்கள். இதற்கு எடுத்­துக்­காட்­டாக, கடந்த ஜனா­தி­பதி தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் போது கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் எம்.பி ஒருவர் தான் ஆத­ரவு தெரி­வித்த வேட்­பா­ள­ருக்­கான பிர­சார மேடையில் குறித்த வேட்­பா­ளரின் பெயரைச் சொல்லி ‘அவர் மாத்­திரம் வெற்றி பெறும் பட்­சத்தில் உங்கள் ஊருக்கு ஒரு புதிய அர­சியல் கட்சி உத­ய­மாகும் என்­பதை குறித்து வைத்துக் கொள்­ளுங்­கள்’ என்று முழங்­கினார். இதனைக் கேட்டுக் கொண்­டி­ருந்த ஆத­ர­வா­ளர்கள் ‘அல்­லாஹு அக்பர் நாரே தக்பீர்’ என்ற முழக்­கத்­துடன் பதில் குரல் எழுப்­பினர். இத்­த­னைக்கும் முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரின் பிறப்­பி­டத்­தி­லேயே அந்த சம்­பவம் நடந்­தது எனும் போதுதான் வேதனை இரட்­டிப்­பா­கி­யது.

இத்­த­கைய பின்­ன­ணியில் இலங்­கையில் ஜனா­தி­பதித் தேர்­தலின் சூடு ஆறு­வ­தற்கு இடையில் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­று­கி­றது. அதற்­கான தபால் மூல வாக்­குகள் நடை­பெற்று முடிந்­தி­ருக்­கின்­றன. தேசிய அர­சி­யலில் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒரு வர­லாற்று மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்கு உட­ன­டுத்­த­தாக நடக்­கின்ற பொதுத் தேர்­தலில் முஸ்லிம் சமூகம் தனது பிர­தி­நி­தித்­து­வத்தில், சமூ­கத்­திற்கு உத­வாத காலா­வா­தி­யான அர­சியல் ஒழுங்கில் ஒரு மாற்­றத்தைக் கொண்டு வரு­வதா என சிந்­திக்­க­வேண்­டிய கட்­டத்தில் உள்­ளது.

கடந்த காலங்­களில் இந்­நாடு ஆட்­சி­யா­ளர்­களின் படு­மோ­ச­மான நிர்­வாக முறை மற்றும் ஊழல் மோச­டிகள் போன்­ற­வற்­றி­னாலும், பொருத்­த­மற்­ற­வர்­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­தமை, தொடர்ச்­சி­யாக குறிப்­பிட்­ட­வர்­களை மூவின மக்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­தமை ஆகி­ய­வற்­றி­னாலும் தான் பொரு­ளா­தா­ர­ ரீ­தி­யாக அதல பாதா­ளத்தில் வீழ்ந்து கிடக்­கின்­றது. கடன்­ப­டு­கின்ற சத­வீ­தமும் அதி­க­ரித்­துக்­கொண்­டுதான் இருக்­கின்­றது என்­பதை அனை­வரும் உணர்ந்­துள்­ளனர். கடந்த காலத்தில் பொது­வாக நாட்டு மக்­களும் குறிப்­பாக முஸ்­லிம்­களும் வாக்­க­ளிக்கும் போது எடுத்த தவ­றான நிலைப்­பா­டு­களால் இழந்­த­வற்­றையும், பெறத்­த­வ­றி­ய­வற்­றையும் மனதில் வைத்­துக்­கொண்டே இத்­தேர்­தலை பொறுப்­பு­ணர்­வுடன் எதிர்­கொள்­ள வேண்­டி­யுள்­ளது. இதனால் பெரும்­பான்மை மக்­களும் பாரா­ளு­மன்­றத்­துக்கு புதி­ய­வர்­களை அனுப்­ப­வேண்டும் என்று சிந்­திக்­கின்­றனர்.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மற்றும் முன்னாள் எம்.பிக்­களின் கால் நூற்­றாண்டு கால உருப்­ப­டாத அர­சி­யலால் மனம் வெறுத்­துப்­போ­யுள்ள முஸ்லிம் மக்­க­ளுக்கு முன்­னாலும் தம்­மு­டைய எம்.பிக்­களை தெரிவு செய்யும் நடை­மு­றையை மறு­சீ­ர­மைக்க வேண்­டிய ஆன்­மிக, தார்­மிக பொறுப்பு ஏற்­பட்­டுள்­ளது.
கடந்த பாரா­ளு­மன்­றங்­களில் 20 வரை­யான முஸ்லிம் எம்.பிக்கள் பதவி வகித்­தனர். இது வெளிப்­ப­டை­யாக பெரும் பல­மாக பார்க்­கப்­பட்­டது. இருப்­பினும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரச இயந்­தி­ரத்தின் முழு அனுச­ர­ணை­யோடு பல அநி­யா­யங்கள், இன­வாத நெருக்­கு­வா­ரங்கள், கருத்­தி­யல்­ ரீ­தி­யான போர்கள் பேரின சக்­தி­களால் முன்­னெ­டுக்­க­பட்­ட­போது, இந்த மிகப்­பெ­ரிய பலம் சரி­யாக உப­யோ­கிக்­கப்­பட்­ட­தற்­கான வர­லாற்று ஆதா­ரங்கள் இல்லை. கடந்த காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுக்­காத, முஸ்­லிம்­க­ளுக்கு பாத­க­மான அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­ஙகள், கோவிட் ஜனாஸா எரிப்பு ஆகிய விவ­கா­ரங்­க­ளுக்கு முரட்­டுத்­த­ன­மாக முட்­டுக்­கொ­டுத்த, சமூகப் பிர­க்­ஞை­யோடு கரு­ம­மாற்­றாது தமது பத­வி­களில் மாத்­திரம் குறியாய் இருந்த அதன் மூல­மாக சுய இலா­பங்­களை தேடிக்­கொண்ட முன்னாள் முஸ்லிம் எம்.பிக்கள் மீண்டும் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யுள்­ளனர். முஸ்லிம் அர­சியல் அணிகள் சார்­பிலும், என்.பி.பி மற்றும் எஸ்.ஜே.பி உள்­ளிட்ட பெரும்­பான்மை கட்­சிகள் சார்­பிலும் பல புது முகங்கள் தேர்­த­லுக்காக வேண்டி கள­மி­றங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் பழைய முகங்­களும் முகப்­பூச்சி பூசிக்­கொண்டு களம் காண வந்­தி­ருக்­கின்­றன.

கிழக்கு மாகா­ணத்தில் போட்­டி­யிடும் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் ஊருக்கு ஒரு எம்.பி என்ற கோஷத்தை முன்­வைத்தே தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். அண்­மையில் கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் வேட்­பாளர் ஒருவர் தனது சொந்த ஊரில் தேர்தல் பிர­சார மேடையில் பேசும்போது ‘இந்த ஊரின் பிர­தி­நி­தித்­து­வத்தை காப்­பாற்ற வேண்­டி­யது உங்கள் அனைவர் மீதும் உள்ள பொறுப்பு’ என்று கூச்­ச­லி­டு­கிறார். அதுவே பிறி­தொரு ஊரில் நடை­பெற்ற தேர்தல் பிர­சார கூட்­டத்­தொடர் ஒன்றில் உரை­யாற்­று­கையில் அவர் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்­சியின் பெயரைச் சொல்லி அந்தக் கட்­சியால் மாத்­தி­ரமே இந்த மாவட்­டத்தின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் காப்­பாற்­றப்­படும் எனக் கூக்­குரல் எழுப்­பு­கிறார். அதே போன்று ஒரு குறிப்­பிட்ட வேட்­பாளர் தமது ஊரின் வாக்­குகள் பிற ஊருக்கு அளிக்­கப்­ப­டு­வது ஹராம் என்­கிறார். ஆனால், அவரோ தனது வெற்றி வாய்ப்பை உறு­தி­செய்­வ­தற்­காக அரு­கி­லுள்ள ஊரில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் தனக்கு வாக்­க­ளிக்­கு­மாறு மக்­க­ளிடம் ஆணை கோரு­கிறார். முஸ்லிம் சமூ­கத்தில் அர­சியல் வியா­பாரம் புரியும் மொத்த வியா­பா­ரி­க­ளாக இவர்கள் மாறி­யி­ருப்­பது மாத்­திரம் வெளிச்­ச­மா­கி­றது.

இன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் விஷே­ட­மாக கிழக்கு அர­சி­யல்­வா­திகள் முஸ்­லிம்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை காப்­பாற்­றுங்கள் என்று கூறி மக்­க­ளிடம் மடிப் பிச்சை கேட்கும் நிலை வந்­துள்­ளது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் குறிப்­பாக பெரும்­பான்மை மக்கள் தூய அர­சியல் கோட்­பாட்­டிற்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்து நாட்டில் மாபெரும் ஆட்சி மாற்­றத்­திற்கு வழி­வ­குத்­துள்­ளார்கள்.

கடந்த ஏழு தசாப்­த­கால இலங்கை அர­சியல் வர­லாறு நிலை மாறுகைக்கு வித்­திட்ட இந்த தூய அர­சியல் சித்­தாந்தம் இம்­முறை பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் தொழிற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்தப் பின்­ன­ணியில் தமது அர­சியல் காலத்தில் தூய அர­சியல் செய்­த­தை மக்கள் முன் நிரூ­பிக்க முடி­யாத முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இம்­மு­றையும் மக்­களை அர­சியல் ஏமாற்று வித்­தை­களை பயன்­ப­டுத்தி முட்­டாள்­க­ளாக்க முனை­கின்­றனர். ஆனால், இம்­முறை அந்த வித்­தைகள் பலிக்­காது என்­பதை மான­சீ­க­ரீ­தி­யாக அவர்கள் உணர்ந்­துள்­ளனர்.

நாடு முழு­வதும் தூய அர­சியல் பாதையை தெரிவு செய்­தி­ருக்கும் இந்த தரு­ணத்தில் இலங்கை முஸ்­லிம்கள் தமது பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவ தெரிவின் போது யாரை எமது பிர­தி­நி­தி­யாக தெரிவு செய்­ய­வேண்டும் என்­பதை தீர்க்­க­மாக சிந்திக்க வேண்­டி­யுள்­ளது.

தாம் ஆத­ரவு வழங்கும் பாரம்­ப­ரிய அர­சியல் கட்­சியின் வேட்­பா­ள­ரா­யினும் அல்­லது இம்­முறை புதி­தாக களம் காணும் புது முக வேட்­பா­ள­ரா­யினும் தமது தனிப்­பட்ட, பிர­தேச, கட்­சி­ரீ­தி­யான குறு­கிய மனோ நிலை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு தமது வேட்­பா­ளர்­க­ளி­டத்தில் பின்­வரும் குணா­தி­ச­யங்கள் உள்­ள­னவா? என்­பது பற்றி மீள் வாசிப்பு செய்ய வேண்­டி­யுள்­ளது.

01. இலஞ்சம் ஊழலில் ஈடு­ப­டாத, அது தொடர்பில் எந்­த­வித குற்­றச்­சாட்­டு­களும் எதிர்­கொள்­ளாத சமூக அங்­கீ­காரம் பெற்ற நன்­ன­டைத்தை உடை­ய­வ­ராக இருத்தல் வேண்டும்.

02. சந்­தர்ப்பம் பார்த்து குரங்கு மரம் விட்டு மரம் தாவு­வதைப் போல அடிக்­கடி கட்சி தாவாத, மாறாத ஒரு­வ­ராக இருத்தல் வேண்டும்.

03. தமது அர­சியல் வாழ்வில் குற்­ற­வியல் சார்ந்த தவ­றொன்­றுக்கு சிறைத்­தண்­டனை அனு­ப­விக்­கா­த­வ­ராக, அது தொடர்பில் நீதி­மன்ற விசா­ர­ணைக்கு உள்­ளா­கா­த­வ­ராக இருத்தல் வேண்டும்.

04. நாட்டின் அபி­வி­ருத்­திக்கும், மக்­களின் நல் வாழ்­விற்கும் தடை­யாக அமையும் கடத்தல் (போதைப் பொருள்⁄­தங்­கம்⁄­மண்⁄­மரம்) உள்­ளிட்ட விவ­கா­ரங்­களில் ஈடு­ப­டா­த­வ­ரா­கவும், தமது பினா­மி­க­ளுக்கு அதற்கு உடந்­தை­யாக இல்­லா­த­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும்.

05. இதற்கு முன்னர் மக்­களின் வாக்­கு­களை பெறு­வ­தற்­காக வேண்டி அரிசி பேக்­கு­களோ, பண சுருக்குப் பைகளோ வழங்­கா­த­வ­ராக இருத்தல் வேண்டும்.

06. பொது­வாக இலங்கை நாட்­டுக்­கெ­தி­ரா­கவும் குறிப்­பாக இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்­கா­த­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும்.

07. தனது அர­சியல் தவ­று­களை மறைப்­ப­தற்­காக வேண்டி மார்க்­கத்­தையும், முஸ்லிம் சமூ­கத்­தையும் பக­டைக்­காய்­க­ளாக பயன்­ப­டுத்­தாத அவற்றை அற்ப கிர­யங்­க­ளுக்­காக விற்று பிழைப்பு நடத்­தாத ஒரு­வ­ராக இருத்தல் வேண்டும்.

08. பாரா­ளு­மன்ற சட்­டங்கள் தொடர்­பா­கவும், நாட்டின் சட்ட திட்­டங்கள் தொடர்­பா­கவும் அறிவு கொண்­ட­வ­ரா­கவும், தெளிவு உடை­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். மேல­தி­க­மாக, கல்வித் தகுதி உடை­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும்.

09.தேர்தல் காலங்களில் மாத்திரம் தமது பிரதேசத்திற்கு வருகை தருபவராகவும், மக்களுடன் கூடிக் கொஞ்சிக் குலாவுபவராகவும் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஏனைய காலங்களில் தலைநகரில் இருந்துகொண்டு சுகபோகம் அனுபவிக்காதவராகவும் இருத்தல் வேண்டும்.

10.எக்காரணத்தைக் கொண்டும் மக்களால் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை தனிப்பட்ட நலன்களுக்காக துஷ்பிரயோகம் செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

மேற்படி குணாதிசயங்கள்; இருப்பர்கள் மாத்திரமே தமது பிரதிநதிகளாக இருக்க தகுதியானவர்கள் என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும். முஸ்லிம் பிரதிநிதிகள் என்போர் இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் முன்வைத்து தமது சுய அரசியல் இலாபங்களை அடைந்து கொள்;ள முயலும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை குறிக்கவில்லை என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, மேற்கண்ட தகுதிகளைக் கொண்ட தூய அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் புரியும் கனவான்களையே அது குறிக்கிறது என்பதை மனங்கொள்ள வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.