தனியார் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை

அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவிப்பு

0 98

(எம்.வை.எம்.சியாம்)
முஸ்லிம் விவா­க­ரத்து சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­ளப்­போ­வ­தில்லை.அது தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­த­வு­மில்லை. எனினும் நடை­மு­றையில் உள்ள சமயம் சார்ந்த சட்ட மூலங்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மானால் சம்­பந்­தப்­பட்ட மதத்­த­லை­வர்கள், மார்க்க அறி­ஞர்கள் மற்றும் விட­யத்­துக்கு பொறுப்­பான தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்­னரே அது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­படும் என புத்த சாசன சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்­பிட்டார்.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து முஸ்லிம் விவா­க­ரத்து சட்ட மூலம் தொடர்பில் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், முஸ்லிம் விவா­க­ரத்து சட்­ட­மூலம் தொடர்பில் பல்­வேறு அமைப்­புகள் வெவ்­வேறு வகை­யான கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். அதனை கூறு­வ­தற்கு அவர்­க­ளுக்கு உரிமை உள்­ளது. அந்த கருத்­து­க­ளுக்கு நாம் மதிப்­ப­ளிக்­கிறோம். எனினும் அர­சாங்கம் என்ற வகையில் நாம் முஸ்லிம் விவா­க­ரத்து சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்பில் இது­வ­ரையில் எந்த தீர்­மா­னத்­தையும் எடுக்­க­வில்லை. எடுக்கப் போவ­து­மில்லை.

அதே­போன்று தற்­போது நடை­மு­றையில் உள்ள சட்ட மூலங்­களில் மாற்­றங்­களை கொண்டு வர வேண்­டு­மானால் சம்­பந்­தப்­பட்ட மதத்­த­லை­வர்கள், மார்க்க அறி­ஞர்கள் மற்றும் விட­யத்­துக்கு பொறுப்­பான தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்­னரே அது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­படும்.
பௌத்தம் உள்­ளிட்ட ஏனைய மதங்கள் தொடர்­பான திருத்­தங்­களும் அவ்­வாறே மேற்­கொள்­ளப்­படும். விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் இதனை நான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். தற்போது உள்ள முஸ்லிம் விவாகரத்து சட்டமூலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திருத்தங்களை கொண்டு வராது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.