உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : ஒப்புதல் வாக்கு மூலங்கள் பலாத்காரமாக பெறப்பட்டதா? மனித உரிமை ஆணைக் குழுவின் அறிக்கை நீதிமன்றில்

0 162

(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் 24 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­துள்ள வழக்கின், 11 ஆவது பிர­தி­வா­தியின் ஒப்­புதல் வாக்குமூலம் தொடர்­பி­லான உண்மை விளம்பல் விசா­ர­ணைகள் எதிர்­வரும் நவம்பர் 5 ஆம் திக­தி­வரை ஒத்திவைக்­கப்­பட்­டது.

கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி நவ­ரத்ன மார­சிங்க தலை­மை­யி­லான மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் அமர்வு முன்­னி­லையில் இந்த வழக்கு நேற்று (30) மீள‌வும் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது பிர­தி­வா­திகள் 24 பேரும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலையில், அவர்­க­ளுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான ரத்­னவேல், கஸ்­ஸாலி ஹுசைன், ருஷ்தி ஹபீப், வஸீமுல் அக்ரம், ரிஸ்வான் உவைஸ் உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கினர்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதி­ப­ருக்­காக மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர தலை­மையில், சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன சில்வா, சிரேஷ்ட அரச சட்­ட­வாதி சஜித் பண்­டார உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

இதன் போது, 11 ஆவது பிர­தி­வா­தியின் குற்ற ஒப்­புதல் வாக்குமூலத்தின் உண்மை விளம்பல் விசா­ர­ணையின் மேல­திக சாட்சி விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

நேற்று முன் தினம் (29) நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய, கடந்த 2020 நவம்பர் 24 ஆம் திகதி இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவால், அப்­போ­தைய பதில் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த சி.டி. விக்­ர­ம­ரத்­ன­வுக்கு அனுப்­பப்பட்ட கடி­தத்­துடன், பொலிஸ் மா அதி­பரின் பிர­தி­நி­தி­யாக பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வு பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அசோக ஜயந்த குண­சே­கர ஆஜ­ராகி சாட்­சி­ய­ம­ளித்தார்.

பொலிஸ் ஆணைக் குழு­வுடன் மனித உரிமை ஆணைக் குழு முன்­னெ­டுத்த கலந்­து­ரை­யா­டலில், பல தடுப்புக் காவல் கைதிகள் ஒப்­புதல் வாக்கு மூலம் வழங்க நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வ­தாக முறை­யிட்­டுள்­ளதை மையப்­ப­டுத்தி அறிக்கை கோரப்­பட்­டுள்­ளதை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அசோக ஜயந்த குண­சே­கர சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபின் நெறிப்­ப­டுத்­தலில் சாட்­சியம் வழங்கி ஒப்­புக்­கொண்­ட­துடன் அந்த ஆவ­ணத்­தையும் மன்றில் சமர்ப்­பித்தார்.

அதில் ஒப்­புதல் வாக்கு மூலம் பெறப்­பட்ட 14 பேரின் பெயரும், எச்­ச­ரிக்­கப்­பட்ட 7 பேரின் பெயரும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­த­தன.

வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள பிர­தி­வா­திகள்:
1.அபூ செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்­லது நெளபர் மெள­லவி
2.அபூ ஹதீக் எனப்­படும் கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் பெயரால் அறி­யப்­படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபூ சிலா எனப்­படும் ஹயாத்து மொஹம்­மது மில்ஹான்
4. அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ்
5. அபூ பலா எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6.அபூ தாரிக் எனப்­படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
7. அபூ மிசான் எனப்­படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்­தெளஸ்
9. அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி
10. ஷாபி மெள­லவி அல்­லது அபூ புர்கான் எனப்­படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12.அபூ தவூத் எனப்­படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்­படும் மொஹம்மட் இப்­திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்­றாஹீம்
15.அபூ ஹினா எனப்­படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்
16.அபூ நன் ஜியார் எனப்­படும் மொஹம்மட் முஸ்­தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப் (சிறையில் மர­ண­ம­டைந்த்­து­விட்டார்)
18. ராசிக் ராசா ஹுசைன்
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.