முஸ்லிம் தனித்துவ அரசியல் மீது நம்பிக்கையிழந்துள்ள சமூகம்

0 247

பேராசிரியர் எம்.வை.எம்.சித்தீக்

System Change என்றால் என்ன?
எதிர்வரும் பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் முஸ்லிம் கட்­சி­களின் வேட்­பா­ளர்­கட்கு வாக்­க­ளிக்­கா­விட்டால் முஸ்­லிம்­களின் பாரா­ளு­மன்­றப்­பி­ர­நி­தித்­துவம் அவர்­க­ளது சனத்­தொகை விகி­தா­சா­ரத்­தை­விட மிகவும் குறை­வ­டை­யக்­கூ­டிய பெரும் ஆபத்து பற்­றிய கருத்­துக்­களை சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளிலும் வேறு தேர்தல் பிரச்­சா­ரக்­கூட்­டங்­க­ளிலும் காணக்­கூ­டி­ய­தாக/கேட்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. அது சம்­பந்­த­மா­னதே இக்­கு­றிப்­பாகும்.

இன அடை­யா­ள­மற்று பேரி­ன­வா­தக்­கட்­சிகள் என்று பல­ராலும் வர்­ணிக்­கப்­ப­டு­கின்றவற்­றிற்கு அடி­மை­யாக புதைந்து கிடந்த முஸ்லிம் சமூ­கத்தை மேலெ­ழுப்பி ஒர் இன அடை­யா­ளத்தை நிலை நிறுத்த எடுக்­கப்­பட்ட ஒரு முற்­சி­யாக SLMC யின் 1986ம் ஆண்­டைய, அர­சி­யற்­கட்­சிப்­பி­ர­க­ட­னத்­தைக்­ கு­றிப்­பி­டலாம். முஸ்­லிம்கள் பற்றிப் பேசு­வ­தானால் SLMC யுடன்தான் பேச வேண்டும் என்ற நிலை­யினை அது பின்­னொரு காலத்தில் உரு­வாக்­கி­யது. ஒரு தனி­ம­னி­த­னைப்­பற்­றிப் ­பே­சும்­போது அவரின் முகம் எம்முன் எவ்­வாறு தோற்­ற­ம­ளிக்­கின்­றதோ, அதே போல முஸ்­லிம்­க­ளைப்­பற்றி மொத்­த­மாக அவர்­களின் அர­சியல், பொரு­ளா­தார, சமய கலாச்­சார விட­யங்­களைப்­பற்­றிப்­பேச நினைக்கும் போதெல்லாம் மற்­றைய தரப்­பி­ன­ருக்கு சிறி­லங்கா முஸ்லிம் ­காங்­கி­ரஸ்தான் நினை­வுக்கு வந்­தது.

1994ல் நடை­பெற்ற பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் SLMC யில் போட்­டி­யிட்ட மாவட்­டங்­களில் ஏழு ஆச­னங்­களை வென்று முஸ்­லிம்­களின் தனித்­து­வத்தை அது உறு­திப்­ப­டுத்­தி­யது. 1989ம் ஆண்­டைய பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் நான்கு ஆச­னங்­களை மட்­டுமே இக்­கட்சி வென்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதன் பின் நடை­பெற்ற பாரா­ளு­மன்­றத்­தேர்­தல்­களில் தனித்­துப்­போட்­டி­யிட்டு ஏழு ஆச­னங்­களை வெல்­லக்­கூ­டிய பலத்தை அது இழந்­தது என்று கூறலாம்.

முஸ்­லிம்­களின் அர­சியல், மற்றும் உரி­மைகள் பற்­றிப்­பே­சு­வ­தென்றால் SLMC யுடன்தான் பேச வேண்டும் என்ற நிலை­யினை அது இன்று இழந்து காணப்­ப­டு­கின்­றது. இன்று SLMC துண்டு துண்­டா­கப்­பிளவுபட்டு முஸ்லிம் என்ற நாமம் கொண்ட பல கட்­சிகள் உரு­வா­கி­யுள்­ளன. இக்­கட்­சி­களில் இருந்து பாரா­ளு­மன்றம் சென்ற பல உறுப்­பி­னர்கள் குறிப்­பிட்­டுச்­சொல்­லக்­கூ­டிய அள­விற்கு எதையும் இது­வரை முஸ்லிம் சமூ­கத்­திற்­காகச் சாதித்­தது கிடை­யாது. மாறாக அவர்­களின் சில செயற்­பா­டுகள் முஸ்­லிம்­கட்கு மிகவும் பாத­க­மா­கவே அமைந்­துள்­ளன. இவர்கள் ஆத­ரவு வழங்­கிய சில இன­வா­தச்­சக்­திகள் முஸ்­லிம்­களுக்கு பல பாத­க­மான செயல்­களில் வெளிப்­ப­டை­யா­கவே ஈடுபட்­டி­ருந்­த­போதும் இவர்­களால் அவற்­றைத்­த­டுக்க முடி­ய­வில்லை. அவர்­களின் குறிகள் எல்லாம் தமக்கு தனிப்­பட்ட இலாபம் தரக்­கூ­டிய பக்கம் சேர்ந்து நிற்­ப­தா­கவே தென்­பட்­டது. இவர்­களின் இய­லா­மை­யி­னைச்­சுட்­டிக்­காட்ட ஒரு சிறு உதா­ரணம் சாய்ந்­த­ம­ருது பிர­தேச சபை பற்­றிய அவ்வூர் மக்­களின் போராட்­ட­மாகும். அப்­போ­தய பிர­தம மந்­திரி உட்­பட தற்­போது முஸ்லிம் பெயர் கொண்ட எல்­லாக்­கட்­சித்­த­லை­வர்­க­ளாலும் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்ட விடயம் இது­வாகும். இவ்­வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டதன் பின் பிர­தேச சபை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான அதி­கா­ரத்­து­ட­னான விடய அமைச்­சர்­க­ளாக இரண்டு முஸ்­லிம்கள் கட­மை­யாற்­றி­யி­ருந்தும் அவர்­களால் அத­னைப்­பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை. இவர்­களின் கையா­லா­காத்­தன்­மைக்கு மிகச்­சி­றந்த உதா­ர­ண­மாகும். இவர்­க­ளுக்கு எத்­தனை அமைச்சர் பத­விகள் கிடைத்­தாலும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு அதனால் எதிர் பார்த்த அள­வுக்கு பிர­யோ­சனம் இல்லை என்­பதை இது உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. மேற்­கு­றிப்­பிட்ட அமைச்­சர்­களில் ஒருவர் இந்த சாய்ந்­த­ம­ருது அமைந்­துள்ள திகா­ம­டுல்ல தேர்தல் தொகு­தி­யி­லேயே வாழ்­கின்றார். இவர் எதிர்­வரும் பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் இன்னும் பல நிறை­வேற்ற முடி­யாத வாக்­கு­று­தி­க­ளுடன் இந்த சாய்ந்­த­ம­ருது மக்­களின் வாக்கு வேட்­டையில் இன்று ஈடு­பட்­டுள்ளார்.

இன்னும் ஓர் உதா­ரணம் உயிர்த்த ஞாயிறு தொடர்­பாக முஸ்­லிம்­கட்­சித்­த­லை­வர்­களில் ஒரு சிலர் பாரா­ளு­மன்­றத்தில் பேசி­யி­ருந்தும், பத்­தி­ரி­கை­யாளர் மாநா­டுகள் சில­வற்றை நடாத்­தி­யி­ருந்தும் அதன் பின்­னணி இன்னும் மர்­ம­மா­கவே கடந்த சுமார் ஐந்து வருட காலங்­க­ளாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றன.
இருந்தும் முஸ்­லிம்­களின் சனத்­தொகை விகி­தா­சா­ரத்­திற்­கேற்ப பாரா­ளு­மன்ற பிரதிநிதித்­துவம் பற்­றிய, முஸ்லிம் உரி­மைகள் பற்­றிய, முஸ்லிம் கட்­சிகள் அழிந்து போகக்­கூ­டிய ஆபத்து பற்­றிய கோசங்கள் மட்டும் பிளவுபட்ட முஸ்லிம் பெயர் கொண்ட கட்சித் ‘தொண்­டர்­க­ளிடம்’ இருந்து இந்த தேர்தல் பிரச்­சார காலத்தில் அணல் விட்­டுப்­ப­றந்து கொண்­டி­ருக்­கின்­றன. இது­வரை குறிப்­பிட்­டுச்­சொல்­லு­ம­ள­விற்கு எதையும் சாதிக்­காத இவர்கள் எதிர்­கா­லத்­திலும் எதையும் சாதிக்­கப்­போ­வ­தில்லை. எனவே இவர்­களுக்கு எதிர்வரும் காலங்­களில் அளிக்­கப்­படும் வாக்­குகள் பய­னற்ற வாக்­கு­க­ளா­கக்­கூடும் என ஆயி­ரக்­க­ணக்­கான ஆரம்ப கால SLMC தொண்­டர்கள் இன்று நினைக்­கின்­றனர்.

SLMC இன்று துண்டு துண்­டாக அரி­யப்­பட்டு அசிங்­கப்­பட்டு பெரும் ஆத­ர­வற்று குற்­று­யி­ருடன் காணப்­ப­டு­கின்­றது. மிகப் ­ப­ல­ருக்கும் அன்று தேவைப்­பட்ட அந்த முகம் இன்று அந்­த­ள­விற்கு தேவை­யற்­ற­தா­கக்­ கா­ணப்­ப­டு­கின்­றது. காரணம் எல்­லோ­ருக்கும் வெளிப்­ப­டை­யா­னது. கட்­சிக்குள் ஏற்­பட்ட போட்டி, பொறாமை, சுய நலம், பதவி ஆசை, பிளவு ஆகி­யன முக்­கிய கார­ணங்­க­ளாகும். பழைய நிலைக்கு SLMC எதிர்­கா­லத்தில் மீண்­டெ­ழு­வது மிகச்­சாத்­தி­ய­மற்­ற­து­போ­லவே தோன்­று­கின்­றது!. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆரம்ப கால SLMC போரா­ளிகள் மட்­டு­மல்ல, பின்னர் அக்­கட்­சிக்­காக உழைத்த கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­னை­யு­டய இளை­ஞர்­களும் விரக்­தி­ய­டைந்து காணப்­ப­டு­கின்­றனர். முஸ்­லிம்­களின் தனித்­துவத்­தைக்­காக்­கப்­பு­றப்­பட்ட இக்­கட்சி ஏற்­க­னவே முஸ்­லிம்­கள்­மீது பேரின சமூ­கத்­த­வர்கள் வைத்­தி­ருந்த மதிப்­பைக்­கூட அழித்­துக்­கெண்­டி­ருப்­ப­தாக பலர் இன்று கரு­து­கின்­றனர். முஸ்லிம் பெயர் தாங்­கிய கட்­சி­களில் இருந்து பாரா­ளு­மன்­றத்­திற்­குச்­சென்ற பலர் கடந்த காலங்­களில் நேரத்­திற்கு நேரம் தாம் சார்ந்து நின்ற கட்சி நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொண்­டதும், இவர்­க­ளது செயற்­றி­ற­மை­யின்­மையும் இதற்­குக்­கா­ர­ணங்­க­ளா­கக்­கு­றிப்­பி­டப்­ப­டலாம்.

இதற்கு மேல், அடிமேல் அடி விழுந்­தது போல் ஏனைய ‘பேரி­ன­வா­தக்­கட்­சி­களில்’ இருந்து தெற்கு, மேற்கு மத்­திய மாகா­ணங்­களில் முஸ்­லிம்கள் கணி­ச­மான அளவு பாரா­ளு­மன்­றத்­திற்­குச்­செல்­வதும் எதிர்வரும் பாராளுமன்­றத்­தேர்­தலில் சாத்­தி­ய­மற்­றது போலவே தெரி­கின்­றது. இந்த சந்­தே­கத்­திற்கு காரணம் இம்­மா­கா­ணங்­களில் முஸ்­லிம்கள் கணி­ச­மாக வாழ்­கின்ற பல தேர்தல் தெகு­தி­களில் சிங்­கள மக்­களைப் பெரும்­பான்­மை­யா­கப்­ பி­ர­திநி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற SJB போன்ற கட்­சிகள் கடந்த ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் கணி­ச­மான முஸ்லிம் வாக்­கு­க­ளைப்­பெ­றா­மை­யாகும். உதா­ர­ண­மாக, SLMC தலைவர் போட்­டி­யி­டு­கின்ற கண்டி மாவட்­டத்தை எடுத்­துக்­கொண்டால், அம்­மா­வட்­டதில் உள்ள முஸ்­லிம்கள் கணி­ச­மாக வாழ்­கின்ற சில தேர்தல் தொகு­தி­களில், நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலில், SJB பெரும்­பான்மை வாக்­கு­க­ளைப்­பெ­ற­வில்லை. இத்­தொ­கு­தி­களுள் ஹரிஸ்­பத்­து­வவும் அடங்கும். இத்­தேர்தல் தொகுதி காலம் சென்ற ACS ஹமீதின் அசைக்க முடி­யாத செல்­வாக்­குள்ள தெகு­தி­யாக ஒரு காலத்தில் இருந்­தது என்­பது நோக்­கத்­தக்­கது. மேலும் கண்டி மாவட்­டத்தில் அதி­கப்­படியான வாக்­கு­களை அநு­ரவே பெற்றார். இதே போல் முஸ்­லிம்கள் கணி­ச­மாக வாழும் கொழும்பு மாவட்­டத்­திலும் அநுர பெற்­ற­வாக்­குகள் சஜித் பெற்­ற­தை­விட கிட்­டத்­தட்ட இரண்டு மடங்­காகும். சஜித் பெரும்­பான்மை வாக்­கு­க­ளைப்­பெற்­றது ஆக ஏழு தேர்தல் மாவட்­டங்­களில் மட்­டுமே. அவை யாவற்­றிலும் கணி­ச­மான தமிழ்­வாக்­க­ளர்கள் உள்­ளனர் என்­பது அவ­தா­னிக்­கத்­தக்­க­தாகும். இவர்­களின் நிலைப்­பாடு எதிர்வரும் பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் மாறக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் நிறை­யக்­கா­ணப்­ப­டு­கின்­றன. மேலும் கடந்த ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் சஜித் இற்கு வாக்­க­ளித்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான SLMC வாக்­கா­ளர்­களில் கணி­ச­மா­ன­வர்கள் (swing voters) பொதுத்­தே­ர்தலில் NPP இற்கு வாக்­க­ளிப்பர் என எதிர் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதற்­குக்­கா­ரணம், முன்னர் கூறி­யது போல், என்­று­மில்­லா­த­வாறு முஸ்­லிம்­களின் சனத்­தொகை விகி­தா­சா­ரத்­திற்கு மேல் முஸ்லிம் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்­றத்தில் இருந்தும் இவர்­களால் குறிப்­பிட்­டுச்­சொல்­லு­ம­ள­விற்கு எதையும் சாதிக்க முடி­ய­வில்லை என்­ப­தாகும். முஸ்­லிம்­கட்குப் பாத­க­மான பல சட்­டங்கள் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட போது முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவற்­றிற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றனர். முஸ்லிம் காங்­கிரஸ் ஆரம்­பிக்­கப்­பட்டு சுமார் நாற்­பது வரு­டங்­க­ளா­கியும் முஸ்­லிம்கள் எதிர்நோக்கும் மிகப்­பல அடிப்­படை பொரு­ளா­தார, அர­சியல், சமூக கலாச்­சா­ரப்­பி­ரச்­சி­னைகள் இன்னும் தீர்க்­கப்­ப­டாமல் இருப்­பது ஒரு பக்கம் இருக்க, அவற்றுள் சிலவற்­றிற்கு முஸ்லிம் காங்­கி­ரஸே கார­ண­மாக இருந்­தி­ருக்­குமோ என்று எண்ணத் தோன்­று­கின்­றது. என­வேதான், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் முஸ்­லிம்­கட்­கென தனிக்­­கட்­சிகள் தேவை­யில்லை என்ற நிலைப்­பாட்­டிற்கு இன்று வந்­துள்­ளனர். இது அண்­மையில் நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வு­களில் இருந்து மிகத் தெளி­வா­கத்­தெ­ரி­கின்­றது. இதை மேலும் உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருப்­பது இலங்­கையின் வர­லாற்றில் என்றும் இல்­லா­த­வாறு எதிர்வரும் பொதுத்­தேர்­தலில் மிகக்­க­ணி­ச­மான முஸ்லிம் இளை­ஞர்கள் அபேட்­ச­கர்­க­ளாக NPP யில் போட்­டி­யி­டு­வ­தாகும். ஊழ­லுக்கு எதி­ராக மிகவும் தைரி­யத்­துடன் பல தசாப்­தங்­க­ளாகப் போரா­டி­வரும், ஒப்­பீட்­ட­ளவில் பேரி­ன­வாத உணர்வு மிகக்­கு­றை­வான NPP யிற்கு ஒரு சந்­தர்ப்­பத்­தைக்­கொ­டுத்­துப்­பார்ப்போம் என்று இவர்கள் நினைத்து முன்­வந்­தி­ருக்­கின்­றனர். இவர்­களில் பலர் நாட்டின் பொரு­ளா­தார, அர­சியல் நலன் கருதி, இன ஐக்­கியம் கருதி முன் வந்­தி­ருப்­ப­து­போலும் தெரி­கின்­றது.

முஸ்லிம் பாரா­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை முக்­கியம் அல்ல; அவர்­களின் பிரச்­சி­னை­க­ளைத்­தீர்க்­கக்­கூ­டிய ஒரு சில பார­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளைப்­பி­ர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தப்­போ­து­மா­னது என இவர்கள் நினைக்­கின்­றனர். இந்த முடி­வுக்­கான பின்­னணி, கடந்த பாரா­ளு­மன்­றத்தில் இருந்த சுமார் இரு­பத்­தி­ரண்டு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் எவரும் இந்த முஸ்லிம் இளை­ஞர்கள் எதிர்பார்த்த அளவு எதையும் சாதிக்­கா­மைதான்.
காலம் சென்ற SLMC தலைவர் அக் கட்­சி­யினை ஆரம்­பிக்கும் போது மேடை­களில் முழங்கி வந்­தது என்­ன­வென்றால் பேரி­ன­வா­தக்­கட்­சி­க­ளுக்கு அடி­மை­க­ளாக வேலை செய்­கின்ற, தமது பத­வி­களைப் பெரி­தாக மதிக்­கின்ற ‘டசின்’ கணக்­கான முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருப்­ப­தை­விட, முஸ்­லிம்கள் எதிர் நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­களை துணிந்து போராடி தீர்க்­கக்­கூ­டிய ஒரு பிர­தி­நி­தி­யேனும் போது­மா­னது என்­ப­தாகும்; அவர்கள் பிரச்­சி­னைகள் உல­க­றி­யச்­செய்­யப்­பட வேண்டும்; ஏனைய சிறு­பான்மை தமிழ் இனத்தைப் போல் தனித்­து­வ­மான முறையில் (as a separate entity) தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான பேச்­சு­வார்த்­தை­களில் கலந்து சம உரி­மைக்­காக வாதாட வேண்டும் என்­பதே! அன்­னாரின் மறை­விற்­குப்­பின்னர் இந்த நிலை என்றும் ஏற்­பட்­ட­தில்லை. என­வேதான் முஸ்­லிம்கள் என்ற பெயரில் கட்­சிகள் தொடர்ந்து அர­சியல் வியா­பாரம் செய்­யத்­தே­வை­யில்லை என்று இந்த இளை­ஞர்கள் அவற்­றைப்­பு­றக்­க­ணிக்­கின்­றனர். “போரா­ளி­களே புறப்­ப­டுங்கள்” என்று அன்று தொடங்கியவர்கள் இன்று “போராளிகளே புறக்கணியுங்கள்” (முஸ்லிம் கட்சிகளை) என்று புறப்பட்டுள்ளனர். இருபத்திரண்டு என்பது ஒரு வெறும் இலக்கம் மட்டுமே என்று இவர்கள் நினைக்கின்றனர்.

கடைசியாக ஒரு குறிப்பு. இதுவரை பணத்திற்காகவும், பதவிக்காகவும், சாராயப்போத்தல்கட்காகவும் விலைபோன பல வாக்காளர்கள் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப ஆட்சிக்கு எதிராகவும், இனவாதத்திற்கெதிராகவும், செயற்றிறமையீனத்திற்கு எதிராகவும் மட்டுமே பெருமளவு ஒன்றுபட்டனர்; புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை நிறுவுவதற்காக இவர்கள் ஒன்றுபட்டனர் என்று கூறினால் அது மிகையாகாது. இதே மனோ நிலைதான் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் கணிசமான வாக்காளர்கள் மத்தியில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களின் சுயநலமற்ற எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய பெரும் கடப்பாடு புதிதாக அமையப்போகும் அரசுக்கு இருக்கின்றது!

மாற்றம் ஒன்றை நாடி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் NPP க்கு வாக்களிக்க இலட்சக்கணக்கில் ஒன்று திரண்டுள்ள வாக்காளர்கள் புதிய அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது வெறும் ஆளும் கட்சி மாற்றம் மட்டுமல்ல; அது முழு முறைமை மாற்றமாகும். இன்னும் அழுத்திக்கூறுவதானால் அது அடிப்படை மாற்றமாகும். அதாவது கொள்கைகள், செய்முறைகள், இனங்களிடையேயான தொடர்புகள், அதிகாரக்கட்டமைப்பு என்பனவற்றில் அடிப்படை மாற்றமாகும்; மக்கள் மத்தியில் ஆழ்ந்து உறைந்து போய்க்கிடக்கின்ற பிழையான விழுமியங்கள், அரசியல், பொருளாதாரம், கொடுக்கல் வாங்கல்கள், மனித உறவு பற்றிய நம்பிக்கை என்பவற்றிலான முழு மாற்றமாகும். நாளாந்தம் நாட்டு மக்கள் அரசிடம் இருந்தும், அதனுடன் சார்ந்த நிறுவனங்களிடம் இருந்தும் சேவைகளைப்பெற்றுக்கொள்ளும் முறைமையில் ஏற்பட எதிர் பார்க்கப்படும் மாற்றமாகும். இன்னும் கூறப்போனால் மக்களுக்கும், அரச அதிகாரிகட்குமிடையிலான உறவு முறையில் எதிர் பார்க்கப்படும் மாற்றத்தையும் இது உள்ளடக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.