முத்துநகர், கப்பல்துறை மக்களின் விவசாய காணி அபகரிக்கப்படுமா?

0 126

களவிஜயம்
எஸ்.என்.எம்.சுஹைல்

‘‘எமக்கு இந்த காணியை மீட்­டுத்­தா­ருங்கள். பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்வு பெற்­றுத்­தா­ருங்கள். எமக்கு சரி­யான ஆவ­ணங்கள் இல்லை. அநா­தைகள் போல் வாழ்­கின்றோம். என்னை இங்­கி­ருந்து வேறு இடத்­துக்கு இட­மாற்றம் செய்ய முடி­யாது. நான் இங்­கி­ருந்து வெளி­யே­றப்­போ­வ­தில்லை. அப்­படி வெளி­யேற்­று­வார்­க­ளாயில் இங்கு எமது குடும்­பத்தில் மரணச் சடங்குதான் நடக்கும்.எங்­க­ளுக்கு வேறு இடத்­துக்குச் சென்று வாழ இட­மில்லை’’ என தன்­னு­டைய இன்­றைய அவல நிலையை விப­ரிக்­கிறார் திரு­கோ­ண­மலை, 6 ஆம் கட்டை கப்­பல்­துறை கிரா­மத்தைச் சேர்ந்த 50 வய­து­டைய மாயா­வதி.

திரு­கோ­ண­மலை மாவட்டம், பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்ட விவ­சாயக் கிரா­மங்­களே முத்து நகர் மற்றும் கப்பல் துறை என்­ப­ன­வாகும். 1970 ஐ அண்­மித்த காலங்­களில் இப்­ப­கு­தியில் மக்கள் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.

இவ்­விரு கிரா­மங்­களில் வசிக்கும் மக்கள் குடிப்­ப­ரம்பல் தொடர்­பான விப­ரங்­களை தகவல் அறியும் உரிமை சட்­டத்தின் ஊடாக திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­ல­கத்தின் ஊடாக பெற முடிந்­தது. எமது கோரிக்­கைக்கு திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­லாளர் மதி­வண்னன் பதி­ல­ளித்­தி­ருந்தார்.

அதற்­க­மைய, கப்­பல்­துறை கிராம சேவகர் பிரிவில் 609 குடும்­பங்­களைச் சேர்ந்த 1883 பேர் வசிக்­கின்­றனர். அதேபோல், அதனை அண்­டிய கிரா­மம்தான் முத்­து­நகர். இங்கு 171 குடும்­பங்­களைச் சேர்ந்த 533 பேர் வசித்து வரு­கின்­றனர். இவ்­விரு கிராம வாழ் மக்­களின் பிரதான வாழ்­வா­தாரம் விவ­சா­யத்தில் தங்­கி­யி­ருக்­கி­றது.

 

 

 

 

 

 

மேலும் முத்­து­நகர் கிராமம் 12 சதுர கிலோ மீற்றர் பரப்­ப­ளவை கொண்­டுள்­ளது. அங்கு குடி­யி­ருப்பு காணிகள் அண்ணள­வாக 69.5 ஏக்கர் எனவும் விவ­சாய பயிர் நிலங்கள் 903 ஏக்கர் எனவும் திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­லகம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் கப்­பல்­துறை கிராமம் 7.8 சதுர கிலோ மீற்றர் பரப்­ப­ளவை கொண்­டுள்­ளது. அங்கு குடி­யி­ருப்பு காணிகள் அண்ணள­வாக 320 ஏக்கர் எனவும் விவ­சாய பயிர் நிலங்கள் 120 ஏக்கர் எனவும் திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச செய­லகம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில் முத்­து­நகர் மற்றும் கப்­பல்­துறை கிரா­மங்­களைச் சேர்ந்த மக்கள் வாழ்­வா­தா­ரத்­திற்­காக விவ­சாயம் செய்யும் நிலங்கள் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­துக்கு சொந்­த­மான காணி என அறி­விக்­கப்­பட்டு, பல சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­து­வ­ரு­வ­தாக தெரி­விக்­கின்­றனர்.

‘‘1974 ஆம் ஆண்டு முத்­து­நகர் கிரா­மத்தில் நான் குடி­யே­றினேன். அப்­போது எனக்கு 10 வயது. இங்கு குடி­ய­மர்ந்­தது முதல் 1990 ஆம் ஆண்­டு­வரை இங்கு நாம் விவ­சாயம் செய்­தி­ருக்­கிறோம். அப்­போது நாம் சிறு­வர்கள், எங்­க­ளு­டைய தந்தை உள்­ளிட்டோர் விவ­சா­யத்தை செய்­தனர்’’ என முத்­து­நகர் கிரா­மத்தைச் சேர்ந்த வயது 60 முஹம்­மது காதிர் முஹம்­மது இனா­ய­துல்லாஹ் கூறு­கின்றார்.

‘‘90 ஆம் ஆண்டு, இனப்­பி­ரச்­சினை கார­ண­மாக இந்த இடத்­தி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து சில வருடங் கலே­வல, ரங்­க­டி­யா­வல பாட­சாலை அக­தி­மு­காமில் இருந்தோம். மீண்டும் 2006 ஆம் ஆண்டு இங்கு நாம் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்டோம். அது காணி­யில்தான் நாம் இன்று விவ­சாயம் செய்­கிறோம். இது திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­துக்கு சொந்­த­மான காணி என கூறப்­ப­டு­வதே எங்­க­ளுக்கு பெரும் பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது, அடுத்து என்ன செய்­வது என்று எமக்கு தெரி­ய­வில்லை’’ என்று தனது கவ­லையை தெரி­விக்­கிறார்.

‘‘எமது விவ­சாயக் காணி­களை அப­க­ரித்து சூரி­ய­மின்­சக்தி தொழிற்­சா­லை­யொன்றை அமைக்­க­வி­ருப்­ப­தாக கேள்­விப்­ப­டு­கிறோம்’’ என்­கிறார் முத்­து­நகர் கிராம அபி­வி­ருத்திச் சங்கத் தலைவர் ஜெஸ்லி.

அத்­தோடு, ‘‘இந்த வயல் நிலங்­க­ளுக்கு யாரும் வரக் கூடாது என எங்­க­ளுக்கு நெருக்­கடி தரு­கின்­றனர். எங்­க­ளுக்கு விவ­சாயம் செய்­வ­தற்கோ, வேறு திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கோ தடங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். எங்­க­ளு­டைய காணி­களை சுத்­தி­க­ரிப்­ப­தற்கும் விடு­கி­றார்கள் இல்லை. தொடர்ந்தும் தொல்லைக் கொடுத்­துக்­கொண்டே இருக்­கின்­றனர்’’ எனும் குற்­றச்­சாட்­டையும் முன்­வைத்தார் முத்­து­நகர் கிராம அபி­வி­ருத்திச் சங்கத் தலைவர்.

‘‘எங்­க­ளது விவ­சாய காணி­களில் விவ­சாயம் செய்­வ­தற்கு தொடர்ந்து இடை­யூறு விளை­விக்­கப்­பட்டு வரு­கி­றது. வேலி அடைக்க முடி­யா­துள்­ளது, பயிர்ச்­செய்கை செய்ய முடி­யா­துள்­ளது, மால் கட்ட முடி­யாது அதை பற்­ற­வைக்­கின்­றனர், கம்­பி­களை வெட்­டி­வி­டு­கின்­றனர். இவை­யெல்லாம் துறை­மு­கத்தின் ஊடா­கவே செய்­யப்­ப­டு­கின்­றது. கடந்த 2 வரு­டத்­துக்­குள்தான் இந்த பிரச்­சி­னைகள் பூதா­க­ர­மா­கி­யி­ருக்­கி­றது’’ என்றார் முத்­து­நகர் விவ­சாய சங்கத் தலைவர் ஹலால்தீன் சத்தார்.

‘‘ஏற்­க­னவே, எமது பிர­தே­சத்தில் யானை மற்றும் ஏனைய விலங்­கு­களால் பயிர்ச்­செய்­கைக்கு பிரச்­சினை இருக்­கி­றது. இதையும் தாண்டி நாம் விவ­சாய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும்­போது, துறை­முக அதி­கார சபை­யினால் ஏற்­ப­டுத்­தப்­படும் அழுத்தம் எமக்கு இன்­னு­மொரு பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது என்று குற்றம் சுமத்தும் இளம் விவ­சாயி மல்ஹர் குத்தூஸ் முஹம்மத் கபீர், ‘‘நாங்கள் மேட்­டு­நிலப் பயிர் செய்கை மேற்­கொள்­ளும்­போது மாடு­களும் ஆடு­களும் எமது பயிர்­களை நாசம் செய்­யா­தி­ருக்க வேலி­ய­டைக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. நாம் வேலி அடைக்­கும்­போது துறை­மு­கத்தை சார்ந்தோர் அதனை பிடுங்கிச் செல்­கி­றனர்’’ என தனது பிரச்­சி­னைகள் தொடர்பில் விப­ரிக்­கிறார்.

 

விவ­சாயக் காணி­க­ளுக்கு அப்பால் மைய­வாடி காணிக்கும் துறை­முக அதி­கா­ரி­களால் பிரச்­சினை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக குறிப்­பி­டு­கின்றார், முத்­து­நகர் கிரா­மத்தின் மூத்த பிர­ஜை­களுள் ஒரு­வ­ரான முஹம்மத் காஷிம் முஹம்மத் நஸார். ‘‘எமது மைய­வா­டியை துப்­ப­ரவு செய்­வ­தற்கும் அதில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய ஏனைய கட­மை­க­ளையும் செய்­வ­தற்கும் முடி­யாமல் இருக்­கி­றது’’ என்றும் அவர் குறிப்­பிட்டார்.

‘‘1972 ஆம் ஆண்டு குடி­யேற்­றப்­பட்டு, 90 ஆம் ஆண்டு இடம்­பெற்ற வன்­செயல் கார­ண­மாக வேறு வேறு இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்து எங்­களை 2006 ஆம் ஆண்டு UNHCR நிறு­வனம் மீள்­கு­டி­ய­மர்த்­தி­யது என முத்­து­நகர் பள்­ளி­வாசல் செய­லாளர் எஸ்.எம்.ரஷீத் குறிப்­பி­டு­கின்றார்.

‘‘நாங்கள் இங்கு பரம்­ப­ரை­யாக வாழ்­கிறோம். எங்­க­ளுக்­கான காணி­க­ளுக்கு உரிய அரச ஆவ­ணங்கள் இது­வ­ரையில் தரப்­ப­ட­வில்லை. எமது விவ­சாயக் காணிகள் துறை­முக அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சொந்­த­மா­னது என கூறப்­பட்டு எமக்கு விவ­சாயம் செய்ய முடி­யாது என்றும் எங்­களை வெளி­யேற வேண்­டு­மென்றும் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. இது சம்­பந்­த­மான நட­வ­டிக்­கை­களை உரிய அரச அதி­கா­ரி­களும் அர­சி­யல்­வா­தி­களும் மேற்­கொண்டு எமக்­கான தீர்­வினை பெற்றுத் தரு­மாறு கேட்­டுக்­கொள்­கிறேன்’’ என்றார் பள்­ளி­வாசல் செய­லாளர்.

முத்து நகரை அண்­மித்த கிரா­மம்தான் கப்­பல்­துறை, இக்­கி­ராம மக்­களும் இதே பிரச்­சி­னை­களுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். இது குறித்து விப­ரிக்­கிறார், கப்­பல்­துறை இந்து ஆலய நிர்­வாக உறுப்­பினர் முத்­துக்­க­ருப்பன் விஸ்­வ­நாதன், ‘‘எனினும், 1967 ஆம் ஆண்டு இக்­கி­ராமம் உரு­வாக்­கப்­பட்­டது. பல­த­டவை நாம் இடம்­பெ­யர்ந்­தி­ருக்­கிறோம். விவ­சா­யத்தை நாம் வாழ்­வா­தா­ர­மாக மேற்­கொள்­கிறோம். 4 ஏக்கர் காணியில் கச்­சானும் நெல் அறு­வ­டையும் செய்­கிறோம். 2002 இலி­ருந்து தொடர்ச்­சி­யாக இங்­குதான் சேனை பயிர்ச்­செய்­கையை மேற்­கொண்டு வரு­கிறோம். 2017 இற்கு பிற­குதான் துறை­மு­கத்­தினால் எமக்கு பிரச்­சினை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்றார்.

தமக்கு பல்­வேறு வகை­யிலும் அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக மேலும் குறிப்­பிடும் விஸ்­வ­நாதன், ‘‘திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­தினால் அதி­கா­ரிகள் பல­த­டவை இங்கு வந்து காணி அள­வையில் ஈடு­பட்­டனர். பின்னர் இந்­திய நிறு­வ­ன­மொன்­றி­னாலும் எமது காணிகள் அளக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மண் பரி­சோ­தனையும் செய்­தனர். வந்­த­வர்­க­ளிடம் எமது பிரச்­சி­னையை சொன்னோம். இரண்டாம் தட­வை­யா­கவும் வந்­தனர். விவ­சாயம் எமக்கு பிரச்­ச­னை அல்ல, ஆனால் கொட்­டில்­களை உடைத்து நாம் எமது வேலையை பார்ப்போம் என்று சொல்லிச் சென்­றனர்’’ என்றார்.

கப்­பல்­துறை கிரா­மத்தில் வசிக்கும் 50 வயது ம­திக்­கத்­தக்க மாயா­வதி நீண்­ட­கா­ல­மாக இக்­கி­ரா­மத்தில் பயிர்ச்­செய்­கையை மேற்­கொண்டு வரு­பவர், பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­து­வ­ரு­வ­தாக அவர் கூறு­கிறார். ‘‘நான் 6 வயது முதல் இங்கு வசிக்­கிறேன். நாங்கள் இருந்த வீட்டில் எமது பிள்­ளைகள் இருக்­கின்­றனர். யுத்த காலத்தில் நாங்கள் 15 வரு­ட­மாக இடம்­பெ­யர்ந்து வேறு இடங்­களில் வசித்தோம். அந்த நேரம் எமது காணிகள் காடு­க­ளா­கவே இருந்­தன. 2001 ஆம் ஆண்டு நாங்கள் திரும்பி வந்து எமது இடங்­களில் பயிர்ச்­செய்கை மேற்­கொள்ள ஆரம்­பித்­துள்ளோம். இந்த காணி­க­ளுக்கு எமக்கு அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­ப­ட­வில்லை. அர­சி­யல்­வா­தி­களோ, அதி­கா­ரி­களோ யாருமே எமக்கு அனு­மதிப் பத்­திரம் எடுத்துத் தர­வில்லை. எல்லா கூட்­டங்­க­ளிலும் நாங்கள் அனு­மதிப் பத்­திரம் கேட்­கிறோம் அது கிடைக்­கப்­பெ­ற­வில்லை’’

‘‘நான் பப்­பாசி, தென்னை போன்­ற­வற்­றையும் பயி­ரிட்­டுள்ளேன். வேலி­களை வெட்­டினால் அதற்­கான பாது­காப்பு எங்கே? எங்­க­ளு­டைய வாழ்­வா­தாரம் எங்கே? நாம் ஏன் இந்த நாட்டில் வாழ்­கிறோம். எமக்கு என்ன உரிமை இருக்­கி­றது? ஏழைகள் நாங்­களே நசுக்­கப்­ப­டு­கிறோம்’’ என்று தனது ஆதங்­கத்தை கூறிய மாயா­வதி மேலும் தமக்கு ஏற்­படும் அநீ­திகள் பற்றி விப­ரிக்­கிறார். ‘‘என் கண­வ­ரினால் சுக­யீனம் கார­ண­மாக வேலை செய்ய முடி­யா­துள்­ளது. நான் தனி­யாக இருந்து கவ­னிக்­கின்றேன். நான் அந்த இடத்தை விட்டு வந்தால் எம் வாழ்­வா­தாரம் என்­னா­வது. வீட்டு வேலை­க­ளுக்கு கூட செல்­ல­மு­டி­யாது, ஏனென்றால் தற்­போதும் பொரு­ளா­தார நெருக்­கடி தொடர்­கி­றது. எமக்கு நீங்கள் செய்ய வேண்­டிய உதவி இந்த காணிக்கு ஒரு விடிவு பெற்­றுத்­தா­ருங்கள். வேலி போட்டு நாம் பயிர் செய்கை செய்ய வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுக்­கிறார்.

மக்­களின் இந்த பிரச்­சி­னைகள் குறித்து நாம் நேர­டி­யாக திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­துக்கு சென்று விப­ரங்­களை கேட்க முற்­பட்­ட­போது அதற்­கான உரிய அனு­மதி மறுக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், இது­வி­ட­ய­மாக கொழும்­பி­லுள்ள துறை­முக அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யிடம் வின­வினோம், இவ்­வி­டயம் தொடர்பில் நீதி­மன்ற வழக்கு இடம்­பெற்று வரு­வதால் தம்மால் எந்த கருத்­து­க­ளையும் ஊட­கங்­க­ளுக்கு கூற­மு­டி­யாது என குறிப்­பிட்டார்.

அத்­துடன், இது குறித்து துறை­முக அதி­கா­ர ­ச­பைக்கு மின்­னஞ்சல் ஊடாக விடுத்த கோரிக்­கைக்கும் அவர்கள் பதி­ல­ளித்­தி­ருந்­தனர். அதிலும் குறிப்­பிட்ட விட­யத்தில் தற்­போ­தைக்கு துறை­மு­கத்தால் எந்­த­வொரு விட­யத்­தையும் கூற முடி­யாது என திட்­ட­வட்­ட­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சாங்கம் என்­ற­வ­கையில் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி சுமுக தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­பேன் என திரு­கோ­ண­மலை மாவட்ட செய­லாளர் சமிந்த ஹெட்­டி­யா­ரச்சி குறிப்­பிட்டார்.

மேலும் ‘‘­முத்து நகர் மற்றும் கப்­பல்­துறை கிராம மக்­களின் பிரச்­சி­னைகள் எமது கவ­னத்­திற்கு ஏற்­க­னவே கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இந்த இடம் துறை­முக அதி­கார சபைக்கு சொந்­த­மா­னது என சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. என்­றாலும் சில­ரி­டம் அனு­ம­திப்­பத்­திரம் இருக்­கி­றது. அத்­துடன் சில­ரிடம் வேறு ஆவ­ணங்கள் உள்­ளன. மேலும், சில­ரிடம் எந்த ஆவ­ணங்­க­ளுமோ அனு­ம­திப்­பத்­தி­ரங்­களோ கிடை­யாது. இவர்கள் நீண்ட கால­மாக வாழ்ந்து வரு­கின்­றார்கள். இது தொடர்பில் நாம் துறை­முக அதி­கார சபையின் உயர்­மட்ட குழு­வுடன் கலந்­தா­லோ­ச­னை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்’’ என்றார்.

‘‘தொடர்­பான தற்­போ­தைய இணக்­கப்­பாட்டின் படி நாம் மக்­க­ளுக்கு எந்­த­வொரு சிர­மங்­க­ளையும் கொடுக்­க­வில்லை. அழுத்­தங்­க­ளையும் கொடுக்­க­வில்லை. என்­றாலும் இந்த இடம் துறை­முக அதி­கார சபைக்கு சொந்­த­மா­ன­தாக வர்த்­த­மா­ணியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­மையால், மக்­க­ளுக்கு எந்­த­வொரு அனு­ம­திப்­பத்­தி­ரத்­தையும் எழுத்தில் வழங்க முடி­யா­துள்­ளது என்றும் அர­சாங்க அதிபர் குறிப்­பிட்டார்.

மேலும், ‘‘துர­திஸ்­ட­வ­ச­மாக சில­வேளை துறை­முக அதி­கார சபை அபி­வி­ருத்தி வேலைகள் கார­ண­மாக வெளி­யேற்ற வேண்­டிய நிலமை ஏற்­பட்டால், அதற்­கான மாற்று வழி அமைத்­துக்­கொ­டுப்­ப­தோடு தொழில் வாய்ப்­புக்­களை இழந்­த­மைக்­கான இழப்­பீட்­டு­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அது இல்­லாமல் அவர்­களின் வாழ்வை பாதிக்கும் எந்­த­வொரு தீர்­மா­னத்­தையும் நாங்கள் மேற்­கொள்ளமாட்டோம்’’ எனவும் திரு­கோ­ண­மலை மாவட்ட செய­லாளர் தெரி­வித்தார்.

எது எவ்­வா­றி­ருப்­பினும் முத்­து­நகர் மற்றும் கப்­பல்­துறை பகு­தி­களில் மக்கள் நீண்­ட­கா­ல­மாக வசித்து வரு­கின்­றனர். இவர்­களை திடீ­ரென வேறு இடங்­களில் குடி­ய­மர்த்­தினால் அம்­மக்கள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்ள நேரிடும். அவர்­க­ளுக்கு முழு­மை­யான அடிப்­படை வச­திகள் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட்ட பின்னர் வேறொரு இடத்­திற்கு குடி­ய­மர்த்த திட்­ட­மி­டலாம். என்­றாலும், அவர்கள் நீண்­ட­கா­ல­மாக வாழ்ந்த இடத்­தி­லேயே வாழ்­வா­தா­ரத்தை அமைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றனர். தொடர்ந்தும் அதே இடத்தில் வசிக்­கவும் விரும்­பு­கின்­றனர். அவர்­களை அங்­கி­ருந்து வேறு இடங்­க­ளுக்கு குடி­ய­மர்த்­து­வ­தா­னது மரத்தை வேரோடு பிடுங்கி வீசினால் ஏற்­படும் வலியை விட கன­தி­யான காயங்­களை ஏற்­ப­டுத்­தி­விடும்.

அத்­தோடு, திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தால் அம்­மக்­க­ளுக்கும் விவ­சாய நட­வ­டிக்­கைக்கும் தொடர்ந்தும் அச்­சு­றுத்தல் விடுக்கப்­பட்டு பல்­வேறு வகை­யிலும் இடை­யூறு விளை­விப்­பது மக்­களை மேலும் சிர­மங்­க­ளுக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது. இது விட­யத்தில் அர­சாங்கம் தலை­யிட்டு வெகு விரைவில் சுமுக தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும் என பல சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இது விட­ய­மாக பேசிய சமூக செயற்­பாட்­டாளர் ஷ்ரின் சரூர், மக்கள் வாழ்­வா­தா­ரத்­துக்­காக கஷ்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கையில் அவர்­க­ளது விவ­சாயக் காணி­களில் துறை­முக அதி­கார சபை அத்­து­மீறி செயற்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது. பயி­ரி­டப்­ப­டாத நிலங்­களை வெளி­நாட்டுக் கம்­பனிக­ளுக்கோ அல்­லது வேறு நிறு­வ­னங்­க­ளுக்கோ வழங்கி வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தலாம். ஆனால், விவசாயக் காணிகளில் மக்கள் பயிர்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். முன்னைய அரசாங்கங்கள் விட்ட தவறுகளை புதிய அரசாங்கமும் விடக் கூடாது. அவர்கள் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

‘துறைமுக அதிகார சபை விவசாய காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதை மக்கள் பலமாக எதிர்க்க வேண்டும்’ என தெரிவிக்கின்றார் சமூக செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, ‘மக்களுடன் இணைந்து சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவதற்கு நாங்களும் இருக்கிறோம். மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும். கடந்த அரசாங்கம் தனியார் துறைக்கு சாதகமாக செயற்பட்டதனால் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆகவே, இந்த அரசாங்கம் மக்களின் உணர்வை புரிந்து செயற்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமையளித்து, பயிரடப்படாத வேறு நிலங்களை ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் வசந்த தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதார பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கும்படியே சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர். அத்தோடு, மக்கள் சார்பாகவே அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் குறிப்பிடுகின்றார். இந்நிலையில், இதுவிடயமாக எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்துவதற்கு துறைமுக அதிகார சபையும் திருகோணமலை துறைமுக நிர்வாகமும் தயங்குகின்றது. எது எவ்வாறிருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான தீர்வே அவசியமாகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.