சதகத்துல்லா மௌலவி ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக நீண்டகாலம் உழைத்தார்

அனுதாபச் செய்தியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

0 772

சத­க­த்துல்லா மௌலவி ஜம்­இய்­யாவின் வளர்ச்­சிக்­காக நீண்­ட­காலம் உழைத்­துள்ளார் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது.
அன்­னாரின் மறை­வை­யொட்டி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

வபாத்­தான அஷ்ஷெய்க் ஏ.ஸி.எம். சத­கத்­துல்லாஹ் நத்வி அவர்­களின் வபாத் செய்தி கேட்டு கவ­லைப்­ப­டு­கிறோம். அன்னார் கண்டி மாந­கர ஜம்­இய்­யத்துல் உலமா கிளையின் உறுப்­பி­ன­ராக இருந்­த­தோடு அதன் உப தலை­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் இருந்து நீண்­ட­காலம் ஜம்­இய்­யாவின் வளர்ச்­சிக்­காக உழைத்­தார். சிங்­கள மொழியில் குத்பாப் பிர­சங்­கங்கள் செய்து வந்த அவர் ஒரு காதி நீதி­வா­னா­கவும் பணி புரிந்­தார். மேலும், கண்­டியில் உள்ள சர்வ சமய ஒன்­றி­யத்­திலும் ஒரு உறுப்­பி­ன­ராக இருந்து இனங்கள் மத்­தியில் ஐக்­கி­யத்­தையும் புரிந்­து­ணர்­வையும் வளர்க்க பாடு­பட்­டார்.

அன்னார் கண்டி வன்­செயல் காலத்தில் தாக்­கப்­பட்­டது மிகவும் வருத்­தத்தை தரு­கி­றது. அதனை சகித்து பொறுத்து அன்­னா­ருக்குத் தேவை­யான வைத்­திய தேவை­களை நிறை­வேற்றிக் கொண்­டி­ருந்த அன்­னா­ரது குடும்­பத்­தினர் அவ­ரது வபாத் கார­ண­மாக மிகவும் துக்­கத்­திலும் சஞ்­ச­லத்­திலும் இருக்கும் இந்­நே­ரத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அவர்­க­ளோடு பங்கு கொள்வதோடு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.