அமைதியை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது

0 19

மீண்டும் நாட்டில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக வெளி­வந்­துள்ள செய்­திகள் மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும் பர­ப­ரப்­பையும் தோற்­று­வித்­துள்­ளன. இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் இஸ்­ரே­லி­யர்­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டலாம் என்ற உள­வுத்­த­கவல் கிடைத்­த­ததைத் தொடர்ந்தே இந்த பதற்ற நிலை நேற்­றைய தினம் தோற்றம் பெற்­றது.

மறு அறி­வித்தல் வரை அறு­கம்பே பகு­திக்கு செல்­வதை தவிர்க்­கு­மாறும், அப்­ப­கு­தியில் உள்ள பிர­பல சுற்­றுலா தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம் என நம்­ப­க­மான தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ரகம் அமெ­ரிக்க பிர­ஜை­க­ளுக்கு நேற்று எச்­ச­ரிக்கை விடுத்­தது.

இது தொடர்பில் பயண ஆலோ­சனை ஒன்­றையும் அமெ­ரிக்க தூத­ரகம் வெளி­யிட்­டுள்­ளது. அதனைத் தொடர்ந்து பிரித்­தா­னி­யாவும் பயண ஆலோ­ச­னையை வெளி­யிட்­டுள்­ளது.

இதே­வேளை இலங்­கையில் உள்ள இஸ்­ரே­லி­யர்­களை கரை­யோரப் பகு­தி­க­ளி­லி­ருந்து வெளி­யேறி கொழும்பு போன்ற பாது­காப்­பான இடங்­க­ளுக்கு நக­ரு­மாறு இஸ்­ரேலின் தேசிய பாது­காப்புச் சபை நேற்று விசேட அறி­விப்பு ஒன்றை விடுத்­துள்­ளது.

இலங்­கையில் தீவி­ர­வாத தாக்­குதல் இடம்­பெற வாய்ப்புள்­ளதன் கார­ண­மாக, சில சுற்­றுலாத் தளங்கள் அமைந்­துள்ள பிர­தே­சங்­களில் இருந்து உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு இஸ்­ரேலின் தேசிய பாது­காப்புச் சபையை மேற்­கோள்­காட்டி சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

அண்­மைய தக­வல்­க­ளின்­படி, சுற்­றுலாப் பகு­திகள் மற்றும் கட­லோரப் பகு­தி­களில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இஸ்­ரே­லிய தேசிய பாது­காப்பு சபை குறிப்­பாக இதில் உள்ள ஆபத்தின் தன்­மையை குறிப்­பி­ட­வில்லை. ஆனால் இலங்­கையின் பிற பகு­தி­களில் உள்ள இஸ்­ரே­லி­யர்கள் எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்­கு­மாறும் பொது இடங்­களில் ஒன்­று­கூ­டு­வதைத் தவிர்க்­கு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

நாட்டில் ஜனா­தி­பதித் தேர்தல் நடந்து முடிந்து அமை­தி­யான முறையில் நாடு நகர்ந்து கொண்­டி­ருக்கும் நேரத்தில் அதுவும் பொதுத் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் சூடு­பி­டித்த வேளையில் இவ்­வா­றா­ன­தொரு அறி­விப்பு வெளி­யா­னமை மக்­களை குழப்­பத்தில் ஆழத்­தி­யுள்­ளது.

இதனைத் தொடர்ந்து அறு­கம்பே பிர­தே­சத்தில் பாது­காப்பை பலப்­ப­டுத்தப்­பட்­டுள்­ளது. சுமார் 500 பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை அதி­கா­ரிகள் அங்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­துடன் பிர­தே­சத்தில் பாது­காப்பும் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மத்­திய கிழக்கில் இஸ்ரேல் காஸா மீதும் பலஸ்­தீன போராளிக் குழுக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் நாடுகள் மற்றும் அமைப்­புகள் மீதும் கடும் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது. இதனால் இஸ்­ரே­லி­யர்கள் மீது உல­க­ளா­விய ரீதியில் எதிர்ப்­பலை தோன்­றி­யுள்­ளது. இந்­நி­லையில் சில சக்­திகள் இலங்கை போன்ற நாடு­க­ளுக்கு சுற்­றுலாப் பய­ணி­க­ளாக வரு­கை­தரும் இஸ்­ரே­லி­யர்­களை இலக்கு வைப்­ப­தற்கு எத்­த­னிக்­கலாம். அவ்­வாறு நடக்கும் பட்­சத்தில் அது இலங்­கையின் இயல்­பு­நி­லையை பாதிப்­ப­துடன் சுற்­று­லாத்­து­றை­யையும் கடு­மை­யாகப் பின்­ன­டையச் செய்யும். இதனால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரமும் கடும் பாதிப்பை எதிர்­கொள்ள நேரிடும்.

என­வேதான் அவ்­வா­றா­ன­தொரு அச்­சு­றுத்தல் இலங்­கையில் ஏற்­பட அனு­ம­திக்க முடி­யாது. அர­சாங்கம் உட­ன­டி­யாக இஸ்­ரே­லி­யர்கள் உள்­ளிட்ட சுற்­றுலாப் பய­ணி­களின் பாது­காப்பை உறுதி செய்ய வேண்டும்.

இதே­வேளை சுற்­றுலா விசாவில் வருகை தரும் இஸ்­ரே­லி­யர்கள் இலங்­கையில் தமது விசா வரை­ய­றை­களை மீறி நடந்து கொள்­வ­தாக சில குற்­றச்­சாட்­டுக்­களும் உள்­ளன. அது தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சு கவனம் செலுத்­தவும் வேண்டும். அவ்­வாறு விதி­மு­றை­களை மீறு­வோரை நாட்­டை­விட்டு வெளி­யேற்­றலாம். மாறாக சுற்­றுலாப் பய­ணி­க­ளாக வருகை தரு­வோரின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும்.

இலங்­கையில் அமை­தியை விரும்பாத சில சக்திகள் மீண்டும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முனையக் கூடும். அதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏற்படுத்திய வடுக்களில் இருந்து இன்னும் நாடு முழுமையாக மீளாத நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு சிறு அசம்பாவிதமேனும் நடக்க இடமளிக்கக் கூடாது. இதுவிடயத்தில் பாதுகாப்புத் தரப்பு மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.