நகைக் கடை வர்த்தகரை சித்திரவதை செய்து பொய்யாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதா?

குளியாபிட்டிய‌ வர்த்தகரின் அடிப்படை உரிமை மீறல் மனுவை ஏற்றது நீதிமன்றம் 6 பொலிஸாருக்கு எதிராக குற்றவியல் விசாரணை என அறிவித்தார் சட்ட மா அதிபர்

0 30

(எப்.அம்னா)
நீர்­கொ­ழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறை­யா­டப்­பட்ட சம்­ப­வத்­தோடு, குளி­யா­பிட்­டிய நகரில் தங்க நகை வர்த்­த­கத்தில் ஈடு­படும் வர்த்­தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்­பு­ப­டுத்தி, கைது செய்து, சித்­தி­ர­வதை செய்­தமை தொடர்பில், அவ்­வர்த்­த­கரால் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனுவை உயர் நீதி­மன்ற‌ம் விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

அதன்­படி, இம்­ம­னுவை எதிர்­வரும் 2025 ஜூன் 13 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்த உயர் நீதி­மன்றம், அன்­றைய தினம் மன்றில் ஆஜ­ராக பிர­தி­வா­தி­க­ளுக்கு அறி­வித்தல் பிறப்­பித்­தது.

எஸ்.சி.எப்.ஆர். 11/24 எனும் குறித்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ப்ரீத்தி பத்மன் சூர­சேன தலை­மையில் நீதி­ய­ர­சர்­க­ளான ஜனக் டி சில்வா மற்றும் பிரி­யந்த பெர்­ணான்டோ ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் முன்­னி­லையில் பரி­சீ­லிக்­கப்­பட்­டது.

இம்­ம­னுவில் நீர்­கொ­ழும்பு வலய குற்­றத்­த­டுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட 15 பேர் பெய­ரி­டப்­பட்­டுள்­ள­துடன் அவர்­களில் முதல் 6 பிர­தி­வா­திகள் தவிர்ந்து ஏனையோர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்­க­ள‌த்தின் சட்­ட­வாதி ஒருவர் ஆஜ­ரானார்.

இதன்­போது மனு­தாரர் தரப்பின் சட்­டத்­த­ரணி அர­விந்து மன­துங்க ஆரச்­சியின் ஆலோ­ச­னைக்கு அமைய, சட்­டத்­த­ர­ணி­க­ளான ரிஸ்வான் உவைஸ், சுபுன் திஸா­நா­யக்க, அயுக பெரேரா ஆகி­யோ­ருடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரானார்.

கடந்த 2016 ஜூன் 13 ஆம் திகதி,மனு­தா­ரரின் வர்த்­தக நிலை­யத்தின் முகா­மை­யாளர் எனக் கூறப்­ப‌டும் நபரை அச்­சு­றுத்தி, பொலிஸ் பரி­சோ­தகர் மனோ­கர எனும் அதி­காரி தலை­மை­யி­லான குழு தன்னை இலக்கு வைத்­த­தாக மனு­தாரர் மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

இந் நிலையில் மனு­தா­ர­ரான சாஹுல் ஹமீட் ஷெய்க் எனும் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக் என்ற, பாத்­தி­மா­வத்த, மத­கொட்­ரா­முல்ல பகு­தியைச் சேர்ந்த மனு­தா­ரரை சட்ட விரோ­த­மாக கைது செய்து, பல நாட்கள் தடுத்து வைத்­தி­ருந்­த­தாக மனு­தா­ரரின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் நீதி­மன்­றுக்கு தெரி­வித்தார்.

சிவில் உடையில் வந்த, நீர்­கொ­ழும்பு வலய குற்றத் தடுப்பு அதி­கா­ரிகள் எனக் கூறிக்­கொண்ட குறித்த 6 பேர், மனு­தா­ரரின், இலக்கம் 2, பிர­தான வீதி, குளி­யா­பிட்­டிய எனும் முக­வ­ரியில் அமைந்­துள்ள நகைக் கடையில் இருந்த தங்க நகை­களை பொய்­யான குற்­ற‌ச்­சாட்­டுக்­களை முன் வைத்து கொள்­ளை­ய­டித்­த­தாக சட்­டத்­த­ரணி நீதி­ய­ர­சர்­க­ளுக்கு தெரி­யப்­ப‌­டுத்­தினார்.

அர­கல போராட்­டத்தை தொடர்ந்து நீர்­கொ­ழும்பு அவேந்ரா ஹோட்­டலில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட தங்­கமும், ஒரு தொகை டொல­ரையும், மனு­தாரர் கொள்­வ­னவு செய்­த­தாக பொலிஸார் அச்­சு­றுத்தி, நகைக் கடையில் இருந்த நகை­களை கொள்­ளை­யிட்­ட­தாக சட்­டத்­த­ரணி சுட்­டிக்­காட்டி, அதற்­கான ஆதா­ர­மாக கடையில் இருந்த சி.சி.ரி.வி. காட்­சி­களின் பிர­தி­க­ளையும் மனு­வோடு சேர்த்து இணைத்­துள்­ள­தாக மன்றின் கவ­னத்­துக்கு கொண்டு வந்தார்.

அவ்­வாறு கடை­யி­லி­ருந்து பொலிசார் கொள்­ளை­யிட்ட நகை­களின் ஒரு பகு­தியை, திரு­டப்­பட்ட தங்கம் எனக் கூறி நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப‌­டுத்­தி­யுள்­ள­துடன், அவை திரு­டப்­பட்­டவை அல்ல எனவும் அதற்­கான ரசீ­துகள் இருப்­ப­தையும், ஒரு தொகை தங்­கத்தை பொலிசார் நீதி­மன்றில் கூட முன்­னி­லை­பப்­டுத்­த­வில்லை எனவும் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மன்றில் விளக்­கினார்.

இத­னை­விட, சுமார் 48 மணி நேரம் பொலிசார் எந்த நீதி­மன்­றிலும் முன்­னி­லைப்­ப‌­டுத்­தாது மனு­தா­ரரை, நீர்­கொ­ழும்­புக்கு அழைத்துச் சென்று பொலிஸ் அத்­தி­யட்சர் அலு­வ­ல­கத்தில் தடுத்து வைத்து, அவரின் உடை­களை களைந்து, இரும்பு கம்பி கொண்டு தாக்கி சித்­தி­ர­வதை செய்து, குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள வற்­பு­றுத்­தி­ய­தா­கவும், அதற்­காக அவர், பிணை பெற்ற பின்னர் குளி­யா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்­தி­ய­சாலை அறிக்­கைகள் அதனை உறுதி செய்­வ­தா­கவும் மனு­தா­ரரின் சட்­டத்­த­ரணி மனு­வூ­டாக குறிப்­பிட்டார்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே, மனு­தா­ரரின் தந்தை, தனது மகன் எங்கே இருக்­கின்றார் என்­பதை அறிய மனித உரி­மைகள் ஆணைக் குழுவில் முறைப்­பா­ட­ளித்­த­தா­கவும் அதனைத் தொடர்ந்து, அவேந்ரா ஹோட்டல் மீதான தாக்­குதல் வழக்கில் மனு­தா­ரரை 114 ஆவது சந்­தேக நப­ராக பொலிசார் சேர்த்­த­தா­கவும் மனு­தாரர் சார்பில் மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து மன்றில் ஆஜ­ரான அரச சட்­ட­வாதி, மனு­தாரர் முன் வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய, மனுவின் முதல் 6 பிர­தி­வா­தி­க­ளான நீர்­கொ­ழும்பு வலய குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கிஹான் மனோ­ஹர, அப்­பி­ரிவின் சார்ஜன் சிந்­தக, பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளான அமல் சஞ்­ஜீவ, வி.ஜி. பண்­டார,டி.எம்.பி. திஸா­நா­யக்க,கே.ஆர்.டி. குல­துங்க ஆகி­யோ­ருக்கு எதி­ராக குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் ஊடாக குற்­ற­வியல் விசா­ர­ணைகள் நடப்­ப­தா­கவும், அவர்கள் மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள முன் பிணை கோரிக்கை மனுவால் அவர்­களை இது­வரை கைது செய்­ய­வில்லை எனவும் தெரி­வித்தார்.

எனினும் இந்த விளக்­கத்தை உயர் நீதி­மன்றம் கேள்­விக்கு உட்படுத்தி சி.ஐ.டி.யின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளிப்ப‌டுத்தியது.
இந் நிலையில் முதல் 6 பிரதிவாதிகளுக்கும் சட்ட மா அதிபர் ஆஜராக மாட்டார் என அரச சட்டவாதி நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இந்த‌ நிலையிலேயே மனுதாரரின் அரசியல் அமைப்பூடாக உறுதி செய்யப்பட்ட 11 , 12( அ) உறுப்புரைகளின் கீழான அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கருதக் கூடிய சான்றுகள் உள்ள‌தாக கூறி மனுவை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்ற‌ம் உத்தரவிட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.