பன்முக ஆளுமை புத்தளம் ஜவாத் மரைக்கார்

0 105

இஸட்.ஏ.ஸன்ஹிர்
முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்
புத்தளம்

புத்­தளம் பிர­தே­சத்தின் புகழ்­பூத்த கல்­விமான் ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்­கி­ய­வாதி மட்­டு­மல்ல. எழுத்­தாளர், பேச்­சாளர், ஓவியர் என பல கலை­க­ளுக்கு சொந்­தக்­காரர். அவர் புத்­தாக்க சிந்­த­னை­யா­ளரும் சிறந்த விமர்­ச­கரும் பாட­கரும் கூட. இலக்­கி­ய­வாதி ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்­கியத் தகவல் களஞ்­சியம் என்­பதும் மிகை­யல்ல. புத்­தளம், நுரைச்­சோலைக் கிரா­மத்தில் அபூ­பக்கர் மரைக்கார், அப்துல் ஹமீது நாச்­சியா தம்­ப­தி­க்குப் பிறந்த ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது ஆரம்பக் கல்­வியை நுரைச்­சோ­லை­யிலும் பின்னர் கல்­பிட்டி அல் அக்ஸா மகா வித்­தி­யா­ல­யத்­திலும் பயின்று, உயர்­தரக் கல்­வியை யாழ்ப்­பாணம், வல்­வெட்­டித்­துறை சிதம்­பராக் கல்­லூ­ரியில் பெற்றார். பலாலி ஆசி­ரியர் பயிற்சிக் கலா­சா­லையில் விஞ்­ஞானத் துறையில் பயிற்­சி­பெற்ற இவர் விஞ்­ஞா­ன­மானி கல்­வி­மானிப் பட்­ட­தாரி ஆவார்.

ஆசி­ரி­ய­ராக 1971 இல் அரச நிய­மனம் பெற்ற ஜவாத் மரைக்கார் அவர்கள் பள்­ளி­வா­சல்­துறை முஸ்லிம் வித்­தி­யா­லயம், குரு­நாகல், பற­க­ஹ­தெ­னிய முஸ்லிம் மகா வித்­தி­யா­லயம், கல்­பிட்டி அல் அக்ஸா மகா வித்­தி­யா­லயம், புத்­தளம் ஸாஹிறாக் கல்­லூரி ஆகி­ய­வற்றில் ஆசி­ரியப் பணி புரிந்து, 1980 இல் விஞ்­ஞான ஆசி­ரிய ஆலோ­ச­க­ராகப் பத­வி­யேற்றார். அக்­கா­லத்தில் இலங்­கையில் இருந்த ஒரு சில ஆசி­ரிய ஆலோ­ச­கர்­களுள் அவரும் ஒருவர். பிர­யோ­கத்­துடன் கூடிய சேவைக்­காலப் பயிற்­சி­வ­குப்­புக்­களைப் புத்­தளம் பிர­தே­சத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யவர் ஜவாத் மரைக்கார் அவர்­களே.

கல்­வி­ய­மைச்சின் பாட­வி­தான அபி­வி­ருத்தி நிலை­யத்­திலும் (Curriculum Development Centre) மஹர­கம தேசியக் கல்வி நிறு­வ­கத்­திலும் (NIE) வள­வா­ள­ராகப் பணி­யாற்­றிய இவர், அக்­காலப் பகு­தியில் விஞ்­ஞானம், ஆரம்­பக்­கல்வி, இஸ்லாம், தமிழ்­மொழி ஆகிய துறை­களில் பாட­வ­ழி­காட்டி நூல்­களை ஆக்­கு­வ­திலும் தேசி­ய­மட்­டத்தில் ஆசி­ரிய ஆலோ­ச­கர்­களைப் பயிற்­று­விப்­ப­திலும் ஈடு­பட்டார். 1980 களில் கற்­பிக்­கப்­பட்ட இஸ்லாம் பாட­நூ­லாக்கக் குழுவில் அவரும் ஒருவர். தொலைக் கல்விப் போத­னா­சி­ரி­ய­ரா­கவும், சிரேஷ்ட போத­னா­சி­ரி­ய­ரா­கவும் அதன் பொறுப்­பா­ள­ரா­கவும் இருந்து ஆசி­ரி­யர்கள் மத்­தியில் நன்­ம­திப்பைப் பெற்­றுள்ளார். போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிரு­வாக சேவைக்கு 1999 இல் உள்­ளீர்க்­கப்­பட்டு, புத்­தளம் கல்வி வல­யத்தில் உதவிக் கல்விப் பணிப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட அவர், 21.02.2006 இல் இங்கு, தமிழ்ப் பிரி­வொன்று ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது அதன் முத­லா­வது பிரதிக் கல்விப் பணிப்­பா­ள­ராகக் கட­மை­யேற்றார்.

ஓய்­வு­நி­லை­ய­டையும் வரை தமிழ் மொழி மூலப் பாட­சா­லை­க­ளுக்கு அவர் ஆற்­றிய அருஞ்­சே­வை­களை அதி­பர்­களும் ஆசி­ரி­யர்­களும் இன்றும் நன்­றி­யுடன் நினை­வு­கூ­ருவர். ஓர் இலக்­கி­ய­வா­தி­யாக ஜவாத் மரைக்கார், 1968 இல் தடம்­ப­தித்தார்.

அன்று வெளி­வந்த தின­பதிப் பத்­தி­ரி­கையில் கவிதா மண்­ட­லத்­துக்குள் நுழைந்து பின்னர் இலக்­கிய உல­குக்குள் ஒரு ஜாம்­ப­வா­னாக வலம்­வரத் தொடங்­கினார். ஆரம்­பத்தில் மரபுக் கவி­தை­களைப் படைத்த அவர், 1970 களின் தொடக்­கத்தில் புதுக் கவி­தை­க­ளையும் எழுதத் தொடங்­கினார்.

‘சோலைக்­கு­மரன்’ என்ற பெயரில் அவர் எழு­திய ஆக்­கங்­களை இலக்­கிய உலகு நன்­க­றியும். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ‘இலக்­கிய மஞ்­சரி’ என்ற வாராந்த சஞ்­சிகை நிகழ்ச்­சி­யினை 1982 – 1984 காலப்­ப­கு­தி­யிலும் பின்னர் 1995 – 2000 காலப்­ப­கு­தி­யிலும் நடத்தி நேயர்­களின் அபி­மா­னத்தைப் பெற்றார். இப்­ப­ணியைப் பாராட்டி தமி­ழ­கத்தை சேர்ந்த இறை­யருட் கவி­மணி, பேரா­சி­ரியர் கா. அப்துல் கபூர், திருச்சி ரஸூல் போன்றோர் முஸ்லிம் சேவைக் கட்­டுப்­பாட்­டா­ள­ருக்கு அன்று அனுப்­பிய கடி­தங்கள் கவிஞர் ஜவாத் மரைக்­கா­ருக்குக் கிடைத்த பெரும் கெள­ர­வங்­க­ளாகும்.

ஜவாத் மரைக்கார் அவர்கள் ஆற்­றிய தேசிய மட்டக் கல்விப் பங்­க­ளிப்­புக்கள் பல. தின­கரன் நாளி­தழில் புதன், வியாழன் தினங்­களில், மாண­வர்­க­ளுக்­காக “வித்­தி­யா­கரன்” என்ற புனைப் பெயரில் “கல்விக் கதிர்” என்ற பக்­கத்­தையும் ஆசி­ரி­யர்­க­ளுக்­காகத் தனது சொந்தப் பெயரில் “குரு­பீடம்” என்ற பக்­கத்­தையும் பெற்று, பல­வ­ரு­டங்­க­ளாக அவர் எழு­தி­வந்தார். அத்­துடன் வானொலி, தொலைக்­காட்சி கல்விச் சேவைகள் பல­வற்றில் அவர் கலந்­து­கொண்­டுள்ளார். ஒரு விமர்­ச­க­ராக, பத்­தி­ரி­கை­களில் அவர் எழு­திய விமர்­சனங்கள் பல­ரது அபி­மா­னத்­தையும் பாராட்­டையும் பெற்­றன. குறிப்­பாக கவி­ஞரும் ஜவாத் மரிக்­காரின் ஆத்ம நண்­ப­ரு­மான ‘வெள்­ளைப்­புறா’ புகழ் திக்­கு­வல்ல எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் வெளி­யிட்ட ‘அஷ்­ஷூரா’ மாதாந்த இதழில் “புத்­தீட்டி” என்ற புனைப்­பெ­யரில் அக்­கா­லப்­ப­கு­தியில் அவர் எழு­தி­வந்த விமர்­ச­னக்­கண்­ணோட்டம் சமூ­க­வி­ய­லா­ளர்­க­ளி­னதும் கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளி­னதும் கவ­னத்தை ஈர்த்­தன. ஜவாத் மரைக்கார் அவர்கள் கல்­பிட்டி அல் அக்ஸா மகா வித்­தி­யா­ல­யத்தில் கற்­பித்­த­போது, அக்­க­லா­பீடம் தனது வெள்­ளி­வி­ழாவைக் கொண்­டா­டி­யது.

அவ்­வேளை மல­ரா­சி­ரி­ய­ராக இருந்து அவர் வெளி­யிட்ட ‘வெள்­ளி­விழா மலர்’ அவரின் எழுத்துத் துறை­யி­னதும் கற்­பனை வளத்­தி­னதும் ஆற்­ற­லுக்கு மற்­று­மொரு சான்­றாகும். அல் அக்ஸா வெள்­ளி­விழா மலர், அச்சு வச­திகள் நவீ­னத்­து­வ­மற்ற அக்­கா­லத்தில் புது­மை­களைப் புகுத்தி, நேர்த்­தி­யாக வெளி­வந்த படைப்­பாகும். பேரா­சி­ரியர் க. கைலா­ச­பதி பேரா­சி­ரியர் எம். ஏ. நுஃமான் போன்­றோரின் பாராட்­டுக்­களை அது அப்­போது பெற்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. பலாலி ஆசி­ரியர் கலா­சா­லையில் பயின்­ற­போது கல்­வி­யி­ய­லா­ளர்­களும், எழுத்­தா­ளர்­களும், இலக்­கிய ஆர்­வ­லர்­க­ளு­மான அன்பு ஜவ­ஹர்ஷா, ஹாபிஸ் இஸ்­ஸதீன், திக்­கு­வல்ல கமால், மூதூர் முஹைதீன், கலை­வாதி கலீல், ஓவியர் ரமணி, ரைத்­த­லா­வல அஸீஸ், எம். எஸ். அமா­னுல்லாஹ் போன்­றோரின் நட்பு கிடைத்­தது. அவர்­களின் சக­வாசம் தனது இலக்­கியத் துறை மேம்­பாட்­டுக்கு மேலும் உரமாய் அமைந்­தது.

அக்­கா­லத்தில் இயங்­கி­வந்த வானம்­பாடிக் கவி­ஞர்­க­ளுடன் அவ­ருக்கு நெருங்­கிய தொடர்பு இருந்­தது. வானம்­பாடி பிரக்ஞை, சதங்கை, தேன்­மழை, விவே­கச்­சித்தன், கணை­யாழி போன்ற சிற்­றே­டுகள் தமி­ழக நண்­பர்கள் மூலம் அவ­ருக்கு வந்து சேர்ந்­தன. ஜவாத் மரிக்கார் அவர்கள் தமிழ்­நாட்­டிலும் பல இலக்­கிய நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­டுள்ளார். தமிழ் நாட்டில் மட்­டு­மன்றி கேர­ளா­விலும் புகழ்­பூத்த இலக்­கி­ய­வா­தி­களின் தொடர்பு இன்றும் அவ­ருக்கு இருக்­கின்­றது. ஜவாத் மரைக்­காரின் வீட்டு நூலகம் பல்­து­றைசார் நூல்­களால் நிரம்­பி­யது. ஆயி­ரக்­க­ணக்­கான நூல்­களை அவர் சேக­ரித்து வைத்­துள்ளார்.

அவற்றுள் பல அரிய பழைய நூல்கள். பிர­சு­ரங்கள், பத்­தி­ரி­கைகள் உட்­பட பல அரிய ஆவ­ணங்­களும் அவ­ரிடம் உள்­ளன. அண்­மையில் https://noolaham.org மூலம் அவற்றில் பல நிகழ்­நிலை (Online) சேக­ரிப்­புக்­காகப் பெறப்­பட்­டன. விஞ்­ஞான ஆசி­ரி­ய­ராக, விஞ்­ஞான ஆசி­ரிய ஆலோ­ச­க­ராகப் பணி­யாற்­றிய அவரின் தமிழ் மொழிப் புல­மையும் இலக்­கிய ஆர்­வமும் பிர­மிக்­கத்­தக்­கவை. யாப்­பி­லக்­கண, மொழி இலக்­க­ணத்தில் தேர்ச்­சி­வாய்ந்த அவர் மர­புக்­க­வி­தை­க­ளுடன் புதுக்­க­வி­தை­க­ளையும் அதன் நுட்­பங்கள் அறிந்து எழு­தக்­கூ­டிய வல்­லமை படைத்­தவர். தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் கவி­ய­ரங்­கு­களில் பங்­கேற்­றுள்­ள­துடன் அவற்றைத் தலை­மை­தாங்­கியும் நடத்­தி­யுள்ளார். புத்­தளம் மண்ணில் இடம்­பெற்ற பல கவி­ய­ரங்­குகள் அவர் தலை­மையில் இடம்­பெற்­றுள்­ளன.

கலா­சார அமைச்சின் முஸ்லிம் நுண்­கலைக் குழு உறுப்­பி­ன­ரா­கவும் அகில இலங்கை முஸ்லிம் எழுத்­தாளர் சம்­மே­ள­னத்தின் உப செய­லா­ள­ரா­கவும் அகில இலங்கை ஊட­க­வி­ய­லாளர் சங்­கத்தின் உப தலை­வ­ரா­கவும் அமைதிப் பணி­யாற்­றிய ஜவாத் மரைக்கார் அவர்கள் பல விரு­து­க­ளுக்குச் சொந்­தக்­காரர். அவை அனைத்தும் அவரை நாடி­வந்­த­வையே தவிர, அவர் தாமாகக் கேட்டுப் பெற்­ற­வை­யல்ல.

அவற்றுள் சில:
1. கலா­பூ­சணம் – 1996 (விண்­ணப்பம், சிபா­ரி­சுகள் போன்­றன இல்­லாத காலம் அது)
2. அகில இலங்கை சமா­தான நீதவான் – 2000 (வர­லாற்றில் முதல் தடவை பொலீஸ் அறிக்கை, சிபா­ரி­சுகள் இல்­லாமல் கொடுக்­கப்­பட்ட காலம்)
3. இஸ்­லா­மியத் தமிழ் இலக்­கிய மாநாட்டில் பொன்­னாடை போர்த்திக் கெள­ரவம் – 2002
4. அகில இலங்கை சமா­தான நீதி­ப­திகள் ஏற்­பாட்டில் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோரால் வழங்­கப்­பட்ட தேச­கீர்த்தி விருது – 2005
5. ஸ்ரீ லங்கா விஸ்வ சமாதி பத­னம ஏற்­பாட்டில் தேச மான்ய, லங்கா திலக, சமாஜ சுப­சா­தன சூரி விரு­துகள்

மூத்த இலக்­கி­ய­வாதி கலா­பூ­ஷணம் ஜவாத் மரைக்கார் அவர்­களின் இலக்­கிய ஆற்­றல்­களை இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு அறி­மு­கப்­ப­டுத்தும் வகையில், ஜாமிஆ நளீ­மிய்யா பழைய மாணவர் அமைப்­பான ‘றாபி­ததுன் நளீ­மிய்யீன்’ புத்­தளம் கிளை­யினர் கடந்த 28.07.2023 அன்று நிகழ்நிலை (Online) மூலம் ஏற்பாடுசெய்த ‘இப்படியும் பாடினரே’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இலக்கிய அமர்வு பலரின் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கல்விமான் ஜவாத் மரைக்கார் அவர்கள் கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றத்தின் – Pillars (PILLARS) (Puttalam Intellectuals Lobby for Literacy Advancement and Reforms) ஆலோசகர்களின் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அவர் தனது எழுபதியைந்தாவது அகவையில் காலடி எடுத்துவைத்துள்ளார்.

பழுத்த அனுபவங்களைப் பறைசாற்றும் வகையில் அவர், நூல்களை வெளியிட வேண்டும். இதுவரை வெளிவராத ஒன்றாக, அவர் வெளிக்கொணர முயற்சிக்கும் ‘அகராதி’ விரைவில் வெளிவரவேண்டும். எல்லாம் வல்ல ஏக இறைவன் அவருக்கு நல்லாரோக்கியத்தை வழங்கவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.