ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் கற்பனைக்கு எட்டாத அவலத்தில் காஸா

0 69

பிரேம் குமார் எஸ்.கே.

ஏவு­கணை சத்­தத்­தையும், கண்­ணீ­ரையும், ரத்தம் வழியும் காயங்­க­ளையும், பிணங்­க­ளையும் தினம் தினம் பார்த்­து­வரும் காஸா மக்கள் உள­வியல் ரீதி­யாக அடைந்­துள்ள பாதிப்பு நம் கற்­ப­னைக்கு எட்­டா­தது. இன்னும் எத்­தனை தலை­மு­றை­க­ளுக்கு இந்த அவ­லத்தின் சுமையைத் தாங்க வேண்­டி­யி­ருக்கும்… தெரி­யாது.

இடிந்த கட்­ட­டங்கள், சிதைந்த மனித உடல்கள், இருண்ட மனித முகங்கள் என எங்கும் அவலம் பீறிடும் நிலைக்கு வந்­தி­ருக்­கி­றது காஸா. பலஸ்­தீன மக்கள் வீடு­களை இழந்து, குடும்­பத்­தி­னரை இழந்து, உண­வுக்கும் தண்­ணீ­ருக்கும் அலைக்­க­ழிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

மனித உயிர்­களைக் குடித்துக் கொழுத்த பூதத்தைப் போல இந்தப் போர் லெபனான், யெமன், ஈரான் எனப் பெருத்­துக்­கொண்டே போகி­றது. இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்­கு­மான சண்­டை­யாகத் தொடங்­கிய இந்­தப்போர் மூன்றாம் உலகப் போரா? அணு ஆயு­தப்­போரா என அச்­சப்­பட வைக்கும் ஒன்­றாக மாறிய இந்த ஒரு வருட காலத்தில் நடந்த முக்­கிய சம்­ப­வங்கள் என்­ன­வெனக் காணலாம்.

ஒக்­டோபர் 7, 2023
காஸா­வி­லி­ருந்து ஹமாஸ் அமைப்பு திடீ­ரென இஸ்ரேல் மீது தாக்­குதல் நடத்­தி­யது. இந்தத் தாக்­கு­தலில் 1200 பேர் கொல்­லப்­பட்­டப்­பட்­டனர் என்றும் 250க்கும் மேற்­பட்ட இஸ்­ரே­லி­யர்கள் பணயக் கைதி­யாக பிடித்துச் செல்­லப்­பட்­டனர் என்றும் கூறி­யது இஸ்ரேல். ஹமாஸ் அமைப்­புக்கு அமெ­ரிக்கா முத­லான உலக நாடுகள் கடு­மை­யான கண்­ட­னங்­களை முன்­வைத்­தன. அப்­பாவி மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தாக ஹமாஸ் அமைப்பு மீது குற்­றம்­சாட்­டி­யது இஸ்ரேல். இந்த தாக்­கு­த­லுக்கு தக்க பதி­லடி வழங்­கப்­படும் என்றும் சூளு­ரைத்­தது.

ஹமாஸ் தாக்­கி­யது ஏன்?
இஸ்ரேல் இரா­ணுவம் பெரும் சக்தி வாய்ந்­தது என்றும், அர­சியல் பின்­புலம் உள்­ளது என்றும் இஸ்­ரேலைச் சுற்­றி­யி­ருக்கும் சிறிய, ஏழ்­மை­யான இஸ்­லா­மிய நாடு­க­ளுக்கு நன்­றா­கவேத் தெரியும்.

இஸ்­ரே­லுக்கு எதி­ராக தன்னைத் தற்­காத்­துக்­கொள்ள நீண்­ட­காலம் போராடி வரும் பலஸ்­தீன அமைப்­பான ஹமாஸ், இஸ்ரேல் மற்றும் அதன் வலி­மை­யான கூட்­டா­ளி­க­ளி­டையே கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் திடீர் தாக்­குதல் நடத்­த­வேண்­டிய அவ­சியம் எங்­கி­ருந்து வந்­தது என ஆராய வேண்­டி­யது அவ­சியம்.

இது உட­னடி தாக்­குதல் என்­றாலும் அதற்கு முந்தைய 30 ஆண்­டு­களில் பலஸ்­தீ­னத்தில் இஸ்ரேல் பல தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டி­ருக்­கி­றது. பலஸ்­தீ­னத்­துக்கு அடுத்­த­டுத்த காயங்­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்டே இருந்­தது இஸ்ரேல். அதே­வே­ளையில் பிற அரே­பிய நாடு­க­ளி­டையே அமைதிப் பேச்­சு­வார்த்­தையை மேற்­கொண்­டது.

இஸ்ரேல் என்ற நாடு அறி­விக்­கப்­பட்­டது முதலே சுற்­றி­யி­ருந்த அரே­பிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்து வந்­தன. அரை நூற்­றாண்­டுக்கும் மேலாக போர்கள் நடந்­தாலும் ஒரு கட்­டத்தில் அமெ­ரிக்­காவின் தொடர் வலி­யு­றுத்­தலால் அமைதிப் பேச்­சு­வார்த்­தைகள் நடந்­தன. எகிப்­துடன் இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஏற்­பட்­டன. சவுதி அரே­பியா, ஜோர்தான் நாடுகள் இஸ்­ரே­லுடன் உடன்­ப­டிக்கை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டன.

இஸ்ரேல் இந்த ஒப்­பந்­தங்­களில் அரே­பிய நாடுகள் முன்­வைக்கும் பல அம்­சங்­களை ஏற்­றுக்­கொண்­டாலும், பலஸ்­தீனம், ஜெரு­சலேம் குறித்த கோரிக்­கை­களை மறுத்து வந்­தது. ஐக்­கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான், மொரோக்கோ என அடுத்­த­டுத்த இஸ்­லா­மிய நாடு­க­ளுடன் சமா­தா­ன­மா­னது இஸ்ரேல். எனினும் பலஸ்­தீனம், லெபனான், சிரியா போன்ற நாடு­க­ளுடன் தக­ராறு தொடர்ந்­தது. இதற்­கி­டையில் பலஸ்­தீ­னத்தில் உள்­நாட்டு பிரச்­சி­னைகள் எழுந்து காஸா தனித்­தீ­வா­னது. காஸாவின் ஆட்­சிப்­பொ­றுப்பு ஹமாஸ் அமைப்­பிடம் இருக்­கி­றது.

கால ஓட்­டத்தில் வலி­மை­யான நாடாக வளர்ந்­து­விட்ட இஸ்ரேல் பலஸ்­தீ­னத்தின் பாது­காப்­புக்கு உறு­தி­யான ஒப்­பந்­தங்கள் எதுவும் கையெ­ழுத்­தி­டாமல் தொடர் அச்­சு­றுத்­த­லாக இருந்­து­வந்­ததே ஹமாஸின் தாக்­கு­த­லுக்கு காரணம்.

அமெ­ரிக்கா நிதி­யு­தவி
இஸ்­ரே­லுக்கு உலக அரங்கில் இருக்கும் ஆத­ர­வா­ளர்­களில் மிக முக்­கிய நாடு அமெ­ரிக்கா. ஒக்­டோபர் 7, 2023 இல் போர் தொடங்­கி­யது முதல் கடந்த மே மாதம் வரை 12.5 பில்­லியன் டொலர்கள் நிதி பெற்­றுள்­ளது இஸ்ரேல்.
இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்­களை கண்­டித்­தாலும், “இஸ்­ரே­லுக்கு தன்னைக் காப்­பாற்­றிக்­கொள்ள முழு உரிமை இருக்­கி­றது” என்ற கருத்தை முன்­னி­றுத்தித் தொடர்ந்து போருக்கு நிதி­யு­தவி செய்து வரு­கி­றது அமெ­ரிக்கா.

காஸாவில் இஸ்­ரேலால் வீடு­களை இழந்து உள்­நாட்டு அக­தி­களாய் பசியை சுமந்­து­கொண்டு திரியும் மக்­க­ளுக்கு மனி­த­நேய அடிப்­ப­டை­யி­லான உணவு, மருந்­துகள் போன்ற உத­வி­க­ளையும் செய்­துள்­ளது அமெ­ரிக்கா.
அமெ­ரிக்கா மட்­டு­மல்­லாமல் பிரான்ஸ் உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­களும் இஸ்­ரே­லுக்கு தொடர்ச்­சி­யாக இரா­ணுவ, நிதி உத­வி­களைச் செய்­து­வ­ரு­கின்­றன.

காஸா சந்­தித்த இழப்­புகள்
ஒக்­டோபர் 13, 2023 இஸ்ரேல் ஹமாஸ் மீது தாக்­குதல் நடத்­து­வ­தனால் வடக்கு காஸாவில் இருக்கும் மக்கள் தெற்கு நோக்கி நக­ரு­மாறு அறி­வு­றுத்­தி­யது இஸ்ரேல்.

காஸா மக்­களை ஹமாஸ் கேட­ய­மாகப் பயன்­ப­டுத்­து­கி­றது என குற்­றம்­சாட்­டிய இஸ்­ரேலின் ஏவு­க­ணைகள் பள்­ளிகள், பல்­க­லைக்­க­ழ­கங்கள், மருத்­து­வ­ம­னைகள் என அனைத்­தையும் தரை மட்­ட­மாக்­கி­யது.

ஹமாஸ் அமைப்பு முழு­மை­யாக அழியும் வரை தாக்­குதல் தொடரும் என்­கி­றது இஸ்ரேல் அரசு. இஸ்ரேல் காஸாவை முழு­மை­யாக கைப்­பற்ற நினைக்­கி­றதா என்ற சந்­தேகம் உலக அர­சியல் நிபு­ணர்­க­ளுக்கு எழாமல் இல்லை.
அதி­ர­வைக்கும் போரின் ஏவு­கணை சத்­தத்­தையும், கண்­ணீ­ரையும், ரத்தம் வழியும் காயங்­க­ளையும், பிணங்­க­ளையும் தினம் தினம் பார்த்­து­வரும் காஸா மக்கள் உள­வியல் ரீதி­யாக அடைந்­துள்ள பாதிப்பு நம் கற்­ப­னைக்கு எட்­டா­தது. இன்னும் எத்­தனை தலை­மு­றை­க­ளுக்கு இந்த அவ­லத்தின் சுமையைத் தாங்க வேண்­டி­யி­ருக்கும் என்­பதும் தெரி­யாது.

போரின் உடைமை, உறவு இழப்­பு­களைக் கடந்து வாட்டி வதைக்கும் பசியும் தாகமும் காஸா மக்­களை துரத்தி வரு­கின்­றன. சுகா­தார வச­திகள் பெய­ர­ள­வுக்குக் கூட இல்­லா­த­நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இஸ்­ரேலின் தாக்­கு­த­லுக்கு அஞ்சி, கூடா­ரங்­க­ளுடன் தெற்கு நோக்கி நகர்ந்த காஸா மக்கள் தென்­கோ­டி­யான ரபா பகு­தியில் குவிந்­தனர். கடந்த மே மாதம் சர்­வ­தேச நாடு­களின் எதிர்ப்­பையும் மீறி ரபாவில் தாக்­குதல் நடத்­தி­யது இஸ்ரேல்.

இஸ்­ரேலின் தாக்­கு­தலில் 41,000 பலஸ்­தீ­னர்கள் இது­வரை இறந்­தி­ருக்­கி­றார்கள். அதில் 11,000 குழந்­தைகள் அடக்கம். 20 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் புலம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

விரி­வ­டையும் போர்
காஸா­வுக்கு எகிப்து வழி­யா­கவும் வான் வழி­யா­கவும் பல நாடுகள் நிவா­ரண பொருட்­களை வழங்­கி­யி­ருக்­கின்­றன. மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் உதவி செய்த நாடு­களின் பட்­டி­யலில் அமெ­ரிக்­காவும், இந்­தி­யாவும் கூட இருக்­கின்­றன. இரா­ணுவ ரீதியில் ஹமா­ஸுக்கு முதலில் உதவ முன்­வந்­தது ஈரான் பின்­புலம் கொண்டு லெப­னானில் இயங்கும் ஹிஸ்­புல்லா அமைப்பு.

லெபனான் இஸ்­ரேலின் வடக்கு எல்­லையில் உள்ள நாடு. அங்கு ஹிஸ்­புல்லா – இஸ்ரேல் இரா­ணுவம் இடையே அடிக்­கடி துப்­பாக்கிச் சூடு நடை­பெ­று­வது வழக்கம். காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, ஒக்­டோபர் 8 ஆம் திக­தியே இந்த மோதல்கள் அதி­க­ரித்­தன.

மேலும் ஹமாஸ் அமைப்பு லெபா­னானில் இருந்து தாக்­குதல் நடத்த அனு­ம­தித்­தது ஹிஸ்­புல்லா.

ஹிஸ்­புல்­லா­வுக்கு ஆயு­தங்கள், நிதி வழங்கி ஆத­ர­வ­ளிப்­ப­தா­லேயே ஈரான் இஸ்­ரேலின் எதி­ரிகள் பட்­டி­யலில் இடம்­பி­டித்­தது. கடந்த ஏப்ரல் மாதம் சிரி­யாவில் இருந்த ஈரான் தூத­ர­கத்தைத் தாக்­கி­யது இஸ்ரேல், இதில் 13 பேர் மர­ண­ம­டைந்­தனர்.

இரண்டு வாரங்கள் கழித்து ஏப்ரல் 13ஆம் திகதி 300 ஏவு­க­ணைகள் மூலம் தாக்­குதல் மேற்­கொண்­டது ஈரான். இந்த தாக்­கு­தலில் அமெ­ரிக்கா, பிரான்ஸ், இங்­கி­லாந்து, ஜோர்தான் நாடு­களின் உத­வி­யுடன் ஏவு­க­ணை­களை சுட்டு வீழ்த்­தி­யது இஸ்ரேல். இந்த தாக்­குதல் குறிப்­பி­டத்­தக்க பாதிப்பை ஏற்­ப­டுத்­த­வில்லை என்­றாலும் இஸ்ரேல் நிலப்­ப­ரப்பில் ஈரான் நேர­டி­யாக தாக்­குதல் மேற்­கொள்­வது இதுவே முதன்­முறை.

ஹிஸ்­புல்லா போலவே யெமனில் இருந்து செயல்­படும் ஹூதி கிளர்ச்­சி­யாளர் படையின் பின்­பு­லத்­திலும் ஈரான் செயல்­ப­டு­கி­றது. ஹூதி படைக்கு ஆயு­தங்கள் பரி­மா­றப்­படும் முக்­கிய துறை­மு­கங்­களைக் குறி­வைத்துத் தாக்­கி­யது இஸ்ரேல். ஜூலை 20 ஆம் திகதி யெமனில் முதல் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.
இஸ்­ரேலின் வடக்கு பகு­தி­யி­லி­ருந்தும், லெப­னானின் தெற்கு பகு­தியில் இருந்தும் பல இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்­துள்­ளனர். லெபனான், ஈரான், யெமன் என இந்த போரின் எல்­லைகள் விரி­வ­டைந்­து­கொண்டே செல்­கின்­றன. லெப­னானில் இஸ்ரேல் நடத்­தி­ய­தாகக் கூறப்­படும் பேஜர் தாக்­கு­தலும், இஸ்­ரேலில் ஈரான் நடத்­திய ஏவு­கணைத் தாக்­கு­தலும் இந்தப் போரை அமை­தி­யி­லி­ருந்து வெகு தொலை­வுக்கு எடுத்துச் சென்­றி­ருக்­கின்­றன.

தலை­வர்கள் கொலை
பேஜர் தாக்­கு­த­லுக்கு இஸ்ரேல் பொறுப்­பேற்­கா­விட்­டாலும், உலக நாடுகள் இதை இஸ்ரேல் தான் செய்­தி­ருக்க முடியும் என நம்­பு­வ­தற்கு காரணம் இஸ்­ரேலின் வலி­மை­யான உளவு அமைப்­பான மொசாட். பல நாடு­க­ளுக்குள் புகுந்து வெற்­றி­க­ர­மாக ஆப்­ப­ரே­ஷன்­களை முடிக்கும் திறன் கொண்ட மொசாட், போர் சம­யத்தில் இரா­ணு­வத்­துடன் இணைந்து எதிரி அமைப்­பு­களின் தலை­வர்கள், தள­ப­தி­களை வேட்­டை­யாடி வரு­கி­றது.

ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-­அ­ரௌரி (ஜன­வரி 2, 2024), அர­சியல் தலைவர் இஸ்­மாயில் ஹனியா (ஜூலை 31), ஹமாஸ் அமைப்பின் நிறு­வ­னர்­களில் ஒரு­வ­ரான முகம்­மது தைப் (ஜூலை 13) ஆகியோர் இஸ்­ரேலால் கொல்­லப்­பட்ட முக்­கிய தலை­வர்கள்.

ஹிஸ்­புல்லா முக்­கிய தள­பதி டெலெப் அப்­துல்லா, மூத்த தலைவர் முகம்­மது நசீர், கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர், கமாண்டர் இப்­ராஹில் அகில், ஹிஸ்­புல்லா தலைவர் ஹசன் நஸ்­ரல்லா ஆகி­யோரும் இஸ்­ரேலால் கொல்­லப்­பட்­டுள்­ளனர். ஈரான் மூத்த கமாண்டர் முக­மது ரேசா ஜாஹி­தியும் இஸ்­ரேலால் கொல்­லப்­பட்­டுள்ளார்.

இஸ்­ரேலின் குறிப்­பி­டத்­தக்க தலை­வர்கள் யாரும் கொல்­லப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

எந்­தெந்த நாடுகள் யார் பக்கம் நிற்­கின்­றன?
காஸா இஸ்ரேல் போரில் உலக நாடுகள் பல தரப்பு கருத்­துக்­களை முன் வைக்­கின்­றன. வர­லாற்றில் நீண்ட காலம் நடந்­து­வரும் மோதல் என்­றாலும், உலகம் முழு­வ­து­மி­ருந்து மக்கள் இந்தப் போருக்கு எதி­ராக குர­லெ­ழுப்பி வரு­கின்­றனர். அமெ­ரிக்கா, பிரான்ஸ் உள்­ளிட்ட நாடு­களில் அரசின் முடி­வையே எதிர்த்து மக்கள் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றனர்.

அர­சியல், பொரு­ளா­தார, இரா­ணுவ பல­மிக்க இஸ்­ரே­லுக்கு உறு­து­ணை­யாக, அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்­மனி, அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட நாடுகள் இருக்­கின்­றன.

துருக்கி, ரஷ்யா, சீனா, லெபனான், யெமன் உள்­ளிட்ட நாடுகள் இஸ்­ரேலை எதிர்த்து வரு­கின்­றன. குவைத், ஈராக், பாகிஸ்தான், பிரேசில் உள்­ளிட்ட சில நாடுகள் இஸ்­ரேலை கண்­டித்­தி­ருக்­கின்­றனர்.

இனி என்ன?
இஸ்ரேல் ஈரா­னுக்கு பதி­லடி கொடுக்க உறு­தி­யேற்­றி­ருக்­கி­றது. ஈரானை எச்­ச­ரிக்கும் வித­மாக லெப­னானில் தீவிர தாக்­கு­தலை நடத்தி வரு­கி­றது. இஸ்ரேல் ஈரா­னுக்கு என்ன மாதி­ரி­யான பதி­ல­டியைக் கொடுக்கத் திட்­ட­மிட்­டுள்­ளது எனும் கேள்­விதான் நம்மை அச்­சு­றுத்­து­வ­தாக உள்­ளது.

மத்­திய கிழக்குப் பகு­தியில் அணு ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்டால் அதன் , தாக்கம் நிச்­ச­ய­மாக ஒன்­றுக்கு மேற்­பட்ட நாடு­களைப் பாதிக்கும். அணு ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தும் நாடு அதன் கூட்­டணி நாடு­களின் ஆத­ரவை இழக்க நேரிடும்… இது­போன்ற கார­ணங்­களால் அணு ஆயு­தங்கள் காட்­சிக்குள் வராது என்றே எதிர்­பார்க்­கலாம்.

ஈரானின் அதி­முக்­கி­ய­மான நட்பு நாடு என்றால் அது ரஷ்­யாதான். ஆனால் ரஷ்யா குறிப்­பி­டத்­தக்க வெற்­றியை அடை­யாத போரில் 2 ஆண்­டு­க­ளாக சண்­டை­யிட்டு வரு­கி­றது. ரஷ்­யாவோ, சீனாவோ தாமாக போரில் மூக்கை நுழைப்பதாற்கான சமிக்ஞைகள் எதுவுமில்லை. இஸ்ரேல்-ஈரான் இடையே முழுமையாக போர் தொடங்கினாலும் அது உலகப் போராக வெடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.
பல நாடுகள் தொடர்ந்து போர் நிறுத்தத்துக்காக இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. கடந்த முறை அமெரிக்காவில் நடைபெற்ற சமாதான உரையாடல் தோல்வியில் முடிந்ததால், மீண்டும் திருத்தப்பட்ட கோரிக்கைகளுடன் புதிய உடன்படிக்கை கையெழுத்தாகலாம்.

போரில் பின்­ன­டைவு ஏற்­பட்­டாலோ அல்­லது நட்பு நாடுகள் ஆத­ரவை நிறுத்­தி­னாலோ இஸ்ரேல் போர் நிறுத்­தத்­துக்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ளலாம்.
இஸ்­ரேலின் ஹமாஸ் இல்­லாத காஸா, ஹிஸ்­புல்லா இல்­லாத லெபனான், ஹூதி இல்­லாத யெமன் போன்ற இலக்­குகள் எட்­டப்­பட்டால் இஸ்ரேல் மிகப் பெரிய சக்­தி­யாக உரு­வெ­டுக்­கலாம். அதன் பிறகு சர்­வ­தேச அர­சியல் நிபு­ணர்கள் அச்­சப்­ப­டு­வதைப் போலவே இஸ்ரேல் அதன் எல்­லையை விரி­வு­ப­டுத்­தலாம்.

அமை­தியும் இயல்பு நிலையும் மத்­திய கிழக்­குக்கு எட்டாக் கனி­யா­கவே இருக்­கின்­றன. சமா­தா­னத்­துக்­காக பிரார்த்­த­னைகள் மட்டும் உலகெங்கும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.