பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்

0 35

அடுத்­து­வரும் இலங்­கையின் தேர்­தலில் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­துவம் பிள­வு­பட்டு பல­வீ­ன­மாகும் ஆபத்து இருப்­ப­தாக இப்­பு­திய ஆய்வின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றிய அனு­ச­ர­ணை­யுடன் நடாத்­தப்­பட்ட புதிய ஆய்வுக் கருத்­திட்­டத்தின் மூலம், எதிர்­வரும் தேர்­தல்­களில் இன­ரீ­தி­யான சிறு­பான்­மை­யி­னரும் மற்றும் சமயக் குழுக்­க­ளிலும் பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­துவம் பிள­வு­பட்டுப் பல­வீ­ன­ம­டையும் ஆபத்­துக்கு உள்­ளா­கி­யி­ருப்­பது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன், அர­சி­யலில் வினைத்­தி­ற­னுடன் பங்­கேற்­ப­தற்கும் மற்றும் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை ஊக்­கு­விப்­ப­தற்­கு­முள்ள இய­ல­ள­வுக்கும் பாதிப்பு ஏற்­ப­டு­மெனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

ஜன­நா­யகம் மற்றும் பன்­மைத்­து­வத்­திற்­கான சிறு­பான்­மை­யி­னரை வலு­வூட்டல் நிகழ்ச்­சித்­திட்­டத்தின் (Minority empowerment for democracy and pluralism ) ஒரு பகு­தி­யாக ஒக்ஸ்ஃபோர்ட் ப்றூக்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் மூலம் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஐக்­கிய தேசிய கட்சி(UNP), ஐக்­கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி (SLPP) போன்ற பிர­தான தேசிய கட்­சிகள் சிறு­பான்­மை­யினர் பங்­கேற்­ப­தற்கும் மற்றும் அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை எடுத்துக் கூறு­வ­தற்கும் கட்­சி­களில் உள்­ளக ரீதி­யாக வழங்­கப்­படும் வாய்ப்­புக்­களைப் படிப்­ப­டி­யாகக் குறைத்­துள்­ள­மையை அவ­தா­னிக்­கலாம். அத்­துடன், சிறு­பான்மைக் கட்­சிகள் பிள­வு­பட்டும், அவர்­க­ளு­டைய தேவை­க­ளையும் உரி­மை­க­ளையும் எடுத்­தி­யம்­பு­வ­தற்கு மாறாக, பெரும்­பான்­மை­யி­னரின் நிகழ்ச்சி நிர­லுக்­க­மை­வாக தமது பரப்­பு­ரை­களை வடி­வ­மைத்­துள்­ளனர்.

‘இலங்­கையில் பிர­தான தேசிய கட்­சி­களின் தலைமைப் பத­விகள் வகித்த சிறு­பான்மை சமூ­கங்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெயர் குறித்­து­ரைக்கும் வர­லாறு காணப்­பட்­டது. இக்­கட்­சி­க­ளி­லுள்ள சிறு­பான்மை அர­சி­யல்­வா­திகள் பெரும்­பாலும் தனி­யாக்­கப்­பட்டு இருக்­கின்­ற­மையை உணர்­வ­துடன், சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் தொடர்­பான பிரச்­சி­னை­களை எடுத்­தி­யம்­பு­வ­தற்­குள்ள வாய்ப்­புக்கள் குறை­வ­டைந்­துள்­ள­மையால், தற்­போ­தைய நிலைமை மாறி­யுள்­ள­மையை ஒக்ஸ்ஃபோர்ட் ப்றூக்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பிர­தம ஆய்­வாளர் கலா­நிதி. ஃபாரா மிஹ்லார் தெரி­வித்­துள்ளார்.

கூட்­ட­ணிகள் மூலம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஏற்­படும் சவால்கள்
தற்­போது தேசிய கட்­சிகள் தமது சொந்த வேட்­பா­ளர்­களை போட்­டி­யிடச் செய்­வதை விடவும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுடன் கூட்­ட­ணி­களை அல்­லது ஒருங்­கி­ணை­வ­தற்கு விருப்பம் காட்­டு­கின்­றன. இக் கூட்­ட­ணியை அல்­லது ஒருங்­கி­ணைவை உரு­வாக்­கு­கின்ற போட்­டித்­தன்­மை­யான செயன்­மு­றையில் சிறு­பான்மைக் கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளுடன் பேரம் பேசு­வ­தற்கும், அவர்கள் பிர­தான தேசிய கட்­சி­க­ளுக்கு தொடர்ச்­சி­யான கட்சித் தாவல்கள் கார­ண­மாக அமைந்­துள்­ளது. இது அவர்கள் மீதுள்ள நம்­ப­கத்­தன்­மையை இழக்கச் செய்­வ­தற்­கான காரணம், அவர்கள் அமைச்சுப் பத­வி­களைப் பெற்றுக் கொள்ளும் வாக்­கு­று­தி­க­ளாலும் மற்றும் வேறு தனிப்­பட்ட நன்­மை­க­ளுக்­கா­கவும் மோச­டி­யான முறையில் நடந்து கொள்­வ­தா­லாகும்.

‘முஸ்­லிம்கள் மற்றும் மலை­யக சமூ­கத்தின் சிறு­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக மாறு­வ­தற்கு விருப்பம் காட்­டு­வது, அது தமது சமூ­கத்­திற்­காக ஏதே­னு­மொன்றை மேற்­கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்­க­ளாகக் கரு­து­கின்­றார்கள். “அதி­கா­ரத்­துடன் முன்­னோக்கிப் பய­ணிக்­கின்ற சமீ­பத்­திய விரக்­தி­யா­னது, அவர்­களின் நேர்­மை­யையும் நம்­ப­கத்­தன்­மை­யையும் மோச­மாகப் பாதித்­துள்­ள­மையால் சமூ­கத்­தி­லுள்ள வாக்­கா­ளர்கள் மத்­தியில் அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தென, கலா­நிதி மிஹ்லார் மேலும் தெரி­வித்தார்.

இத்­தேர்­தலில் கிழக்கு மாகா­ணத்தில் ‘இவை கரி­சினை கொள்ள வேண்­டிய விட­யங்­க­ளாக அமை­வ­துடன், புதிய சுயேச்சை வேட்­பா­ளர்கள் பலர் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­துடன், கட்சிப் பிள­வுகள் பல­வற்­றையும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இப்­போட்­டி­யா­னது கட்­சிகள் மற்றும் இனக்­கு­ழுக்­க­ளுக்­கி­டையே தேவை­யற்ற பதற்­றங்­களைத் தோற்­று­விப்­ப­துடன், அவை வன்­மு­றை­க­ளையும் அதி­க­ரிக்கச் செய்­யு­மென’, கிழக்கு மாகாண சமூக அபி­வி­ருத்தி மன்­றத்தின் புஹாரி முகமட் அவர்கள் தெரி­வித்தார்.

சிறு­பான்மைக் கட்சித் தலை­வர்கள் எதிர்­வரும் தேர்­தலில் வேட்­பு­மனுப் பத்­தி­ரங்­களைத் தயா­ரிக்கும் போது ஆட்சி அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்கு குறு­கி­ய­கால நன்­மை­களை விடவும் இன­ரீ­தி­யான அர­சியல் மற்றும் சிறு­பான்­மை­யி­னரிக் உரி­மை­க­ளுக்­கான நீண்­ட­கால நல்­வி­ளை­வு­க­ளை­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­படல் வேண்டும். சிறு­பான்மை அர­சியல் பிர­ப­ல­மற்ற தலை­வர்கள், ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் நலி­வுற்ற குழுக்­களின் உரி­மை­களை மேம்­ப­டுத்­து­வதில் தோல்­வி­ய­டைந்­த­மையால் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­மையை ஆய்வின் மூலம் தெரி­ய­வ­ரு­கின்­றது. பிர­தான கட்­சி­களால் கடைப்­பி­டிக்­கப்­படும் மூலோ­பா­யங்­களால் இந்­நி­லைமை தீவி­ர­ம­டை­வ­தற்கு ஒரு கார­ண­மா­கவும் அமைந்­துள்­ளது.

சிறு­பான்மை பெண் வேட்­பா­ளர்கள்
சிறு­பான்மை சமூ­கங்­களில் பெண்­களை தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு பெயர் குறித்­து­ரைப்­பதில் அர­சியல் கட்­சிகள் புறக்­க­ணிப்­புக்­களைக் காட்­டு­வ­தாக ஆய்வின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. பெண்கள் வேட்­பு­மனுப் பத்­தி­ரத்தில் பெயர் குறித்­து­ரைக்­கப்­பட்­டி­ருப்­பினும், அவர்­க­ளு­டைய தனி­நபர் நிலையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான போதி­ய­ளவு நிதி, பாது­காப்பு அல்­லது வாய்ப்­புக்­களைப் பெண்­க­ளுக்கு வழங்­கு­வ­தில்லை. பெண்­களில் அதி­க­மா­ன­வர்கள் போட்­டி­யி­டு­வ­தற்கு இய­லுமை கிட்டும் வகையில் சிறு­பான்மைக் கட்­சி­களின் தமது கட்சி உள்­ளகக் கட்­ட­மைப்­புக்கள் மற்றும் கலாச்­சாரத் தடை­க­ளுக்கு சவால் விடுப்­பதில் தோல்­வி­ய­டைந்­துள்­ளமை ஆய்வின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

‘சிறு­பான்மை கட்­சிகள் சிறு­பான்மை சமூ­கங்­க­ளி­லுள்ள பெண்­களை பெயர் குறித்­து­ரைக்க வேண்­டி­ய­துடன், அவர்­க­ளுக்குத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்குத் தேவை­யான நிதி மற்றும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும். தாம் வாழ்­கின்ற சமூ­கங்­க­ளி­லுள்ள அதி­க­மான துணிச்­ச­லான பெண் தலை­வி­யர்­க­ளுடன் இணைந்து செய­லாற்­று­வ­தா­கவும், ஆனாலும் அவர்கள் கட்­சியின் பிர­தான பரப்­புரை மேடை­களில் கலந்து கொள்­வ­தில்­லை­யெ­னவும்’, மனித அபி­வி­ருத்தி நிறு­வ­னத்தில் (HDO), கருத்­திட்டப் பங்­கா­ள­ரான பொன்­னையா லோகேஸ்­வரி அவர்கள் தெரி­வித்தார்.

தேசிய மக்கள் சக்தி (NPP)
புதி­தாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஜனா­தி­பதி அவர்­களின் கட்­சி­யான தேசிய மக்கள் சக்தி (NPP) சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­துவம் மற்றும் உரி­மை­களை ஊக்­கு­விப்­ப­தற்­காக முக்­கிய பணி­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. கடந்த தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட மொத்தம் 15 வேட்­பா­ளர்­களில் ஒருவர் மாத்­தி­ரமே சிறு­பான்மை வேட்­பா­ளரை நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர்கள் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் மற்றும் நல்­லி­ணக்கம் பற்­றிய முக்­கிய விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யமை மிகக் குறை­வா­கவே இருக்­கின்­றது. அத்­துடன், குறிப்­பாக தமிழ் பேசு­கின்ற மக்­களை புறக்­க­ணித்து சிங்­கள மொழியில் மாத்­திரம் செயற்­பட்­டுள்­ளனர்.

தேசிய மக்கள் சக்தி தமது வேட்­பு­மனுப் பட்­டி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­துடன், குறித்த பெண் பிர­தி­நி­திகள் சிறு­பான்மை சமூ­கங்­க­ளிலும் தேர்ந்­தெ­டுக்­கப்­படல் வேண்டும்.

வடக்கு கிழக்கு மோதல்­களால்
ஏற்­பட்ட பாதிப்­புக்கள்
மோதல்­களால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளி­லுள்ள வாக்­கா­ளர்கள், இன­ரீ­தி­யா­கவும் அர­சியல் அடிப்­ப­டை­யிலும் பெரிதும் பிரிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லைமை சமா­தா­னத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் மற்றும் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கும் குறிப்­பி­டத்­தக்­க­ளவு தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. வடக்கு கிழக்கு வாக்­கு­களின் அடிப்­படை பிள­வு­பட்­டுள்­ள­மையை ஆய்வு சுட்­டிக்­காட்­டு­கின்­றது. அண்­ண­ள­வாக மூன்­றி­லொரு பங்கு மக்கள் தமது பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு முன்­னு­ரி­மை­ய­ளித்து அர­சுடன் இணைந்­து­கொள்­வ­தற்கு விரும்­பு­வ­துடன், மேலும் மூன்­றி­லொரு பங்­கினர் தேசிய அர­சி­ய­லி­லி­ருந்து முழு­மை­யாக வில­கு­வ­தற்கும் விரும்பம் காட்­டு­கின்­றனர். தமிழ் புலம்­பெ­யர்வாழ் சமூகம் குறித்த இரண்­டா­வது குழு­வுக்கு செல்­வாக்கு செலுத்­து­வ­தாகக் குற்­றஞ்­சு­மத்­தப்­ப­டு­வ­துடன், தேசிய கட்­சி­களால் முன்­னி­றுத்­தப்­பட்ட சில வேட்­பா­ளர்கள் முத­லா­வது குழு­வுக்கு செல்­வாக்க செலுத்­து­கி­றார்கள். ஆயினும், இவ் வேட்­பா­ளர்கள் பெரும்­பாலும் வன்­மு­றை­களைக் கொண்­ட­மைந்த வர­லாற்றைக் கொண்­டுள்­ள­துடன், அவர்கள் பிள­வு­பட்­டுள்­ள­மை­யையும் காணலாம்.

வன்னி மாவட்­டத்­திலும், கிழக்­கிலும் சிறு­பான்மைக் கட்­சிகள் மற்றும் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டி­களால் வாக்­கா­ளர்­களின் தீவிர இன­வாத மயப்­ப­டுத்தல் காணப்­ப­டு­கின்­றது. யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான சூழலில் இத்­த­கைய பதற்­றங்கள் மோத­லுக்கு வழி­வ­குக்கும், இதனை அனைத்து தரப்­பி­னரும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

அர­சியல் கட்­சிகள் இனப்­பி­ரச்­சி­னை­களை அர­சி­ய­லாக்க முயற்­சிக்­கின்­றன. அத்­துடன் உரி­மைகள் அல்­லது இன மோத­லுக்கு அர­சியல் தீர்வு குறித்த ஆக்­க­பூர்­வ­மான கொள்­கை­களை விடவும், எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்குப் பத­ல­ளிக்கும் வகை­யி­லான பரப்­பு­ரை­களை மேற்­கொள்­கின்­ற­மையை இவ் ஆய்வு சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

“35 வரு­டங்­க­ளுக்கு முன்னர் கொண்டு வரப்­பட்ட 13 ஆம் திருத்தச் சட்­டத்தில் பிர­தான கட்­சிகள் இன்­னுமே சிக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன, இதற்­கப்பால் சிறி­த­ளவு சலு­கை­களை மட்டும் வழங்­கு­கின்­றன, மேலும் சிறு­பான்மை இன­ரீ­தி­யான கட்­சிகள் தமது தேர்தல் தொகுதிகளில் முக்கியமான சிறுபான்மையினரின் உரிமைகளை முன்னிறுத்துவதற்கு தேர்தல் மேடைகளை சரியான வகையில் பயன்படுத்துவதில்லை. அவர்கள் தேசியக் கட்சிகளுக்கு எதிரெதிர் பதிலளிப்புக்களைக் காட்டுவதையே முக்கியமெனக் கருதுகின்றனர்” என கலாநிதி மிலார் அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைத்தல், பொதுமக்களின் காணிகளை மீளக் கையளித்தல், மற்றும் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்றவற்றை சகல அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்வாங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்காணிப்பும் தரவுகளும்
இனம், மதம் மற்றும் பால் என பிரிக்­கப்­பட்ட தர­வு­களில் காணப்­ப­டு­கின்ற பற்­றாக்­கு­றை­யையும் இவ் ஆய்வு சுட்­டிக்­காட்­டு­கின்­றது. தேசியக் கட்­சிகள் மற்றும் தேர்தல் ஆணை­யகம் போன்ற அரச நிறு­வ­னங்கள் தாங்கள் எதிர்­கொள்ளும் சவால்­களை நன்­றாகப் புரிந்­து­கொள்­வ­தற்கு சிறு­பான்மை அர­சியல் பங்­கேற்பு பற்­றிய தக­வல்­களைத் திரட்டல் வேண்டும்.

‘தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்கள் தர­வு­களை பிரிக்க வேண்டும், சிறு­பான்­மை­யினர் மீதான இலக்கு வைக்­கப்­பட்ட தாக்­கு­தல்கள் சுதந்­தி­ர­மான மற்றும் நியா­ய­மான தேர்­தலை எவ்­வாறு தடுக்­கின்­ற­ன­தெ­னவும் ஆராய்ந்து பகுப்­பாய்வு செய்­யப்­பட வேண்டும்’ என இலங்கை அபி­வி­ருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் அசாத் முஸ்தபா தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.