அநுர குமார திஸா­நா­யக்­கவை மக்கள் தெரிவு செய்­தது ஏன்?

0 119

லத்தீப் பாரூக்

1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெற்­ற­தி­லி­ருந்து நாட்­டிற்கு ஏற்­பட்ட ஒட்­டு­மொத்த சேதத்தை உண­ராமல் அதி­கா­ரத்தைப் பெறு­வ­தையோ அல்­லது தக்­க­வைத்துக் கொள்­வ­தையோ நோக்­க­மாகக் கொண்ட குறு­கிய நோக்கு மற்றும் அழி­வு­க­ர­மான இன­வெறி அர­சியல் என்­ப­ன­வற்றால் வெறுப்­ப­டைந்த இந்த நாட்டு மக்கள் 2024 செப்­டம்பர் 21 சனிக்­கி­ழ­மை­யன்று நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மார்க்சிஸ்ட் தேசிய மக்கள் கட்­சியின் (என். பி. பி) தலைவர் அனுர குமார திசா­நா­யக்­கவை ஆட்­சிக்குக் கொண்டு வந்­துள்­ளனர்.

மக்கள் வழங்­கி­யுள்ள செய்தி மிகத் தெளி­வா­னது. அர­சி­யலைச் சுத்­தப்­ப­டுத்­துங்கள், நாட்டைக் கொள்­ளை­ய­டித்­த­வர்­களை சட்­டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்­துங்கள், பிள­வு­பட்ட சமூ­கங்­களை ஒன்­றி­ணைத்து, அனை­வ­ருக்கும் சிறந்த எதிர்­கா­லத்தை நோக்கி முன்­னே­றுங்கள். இது தான் மக்கள் வழங்­கி­யுள்ள மிகத் தெளி­வான செய்தி.

பிரிட்டிஷ் ஆட்­சி­யி­லி­ருந்து 1948 இல் சுதந்­திரம் பெற்­ற­தி­லி­ருந்து இந்த பிரச்­சினை தொடங்­கி­யது. அனை­வ­ருக்கும் சிறந்த எதிர்­கா­லத்தை உறுதி செய்­வ­தற்­காக முன்­னேற தேவை­யான அனைத்து வளங்­க­ளாலும் இந்த நாடு ஆசீர்­வ­திக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தத் தீவு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ரீதி­யான ஸ்திரத்­தன்­மயை கொண்­டி­ருந்­தது. கல்­வி­ய­றிவு பெற்ற மக்கள் இருந்­தனர். சகல மட்­டங்­க­ளிலும் நேர்மை மற்றும் ஒரு­மைப்­பாடு காணப்­பட்­டது. இவை எல்­லா­வற்­றுக்கும் மேலாக எல்லா பிரி­வு­க­ளையும் சேர்ந்­த­வர்கள் நல்­லி­ணக்­கத்தை கொண்­டி­ருந்­தனர். அப்­போது தேவைப்­பட்­டது என்­ன­வென்றால், சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் மட்­டுமே. அவர் சகல சமூ­கங்­க­ளையும் ஒன்­றி­ணைத்து, நாட்டில் உள்ள எல்லா சமூ­கங்­க­ளி­னதும் முன்­னேற்­றத்­துக்­காக ஒட்­டு­மொத்த வளர்ச்­சியை நோக்கி இலங்கை மக்ளை கூட்­டாக முன்­னேற்றப் பாதையில் வழி நடத்தக் கூடி­ய­வ­ராக இருக்­க­வேண்டும் என்ற தேவை மட்­டுமே இருந்தது.

துர­திஷ்­ட­வ­ச­மாக இன­வெறி மன­நிலை அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்­கி­யது. புதிய இலங்கை அர­சாங்கம் செய்த முதல் தவ­று­களில் ஒன்று, ஒரு புதிய குடி­யு­ரிமைச் சட்­டத்தின் கீழ், இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்­த­வர்­களின் குடி­யு­ரி­மையை இரத்துச் செய்­த­தாகும். இந்தப் பிராந்­தி­யத்தில் உள்ள வணிக சமூ­கங்­க­ளுடன் நெருங்­கிய உற­வு­களை கொண்­டி­ருந்த, நாட்­டுக்கு அதிக வரு­வாயைக் கொண்டு வந்த இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த வர்த்­தக சமூகம் தீவை விட்டு வெளி­யேறி மற்ற நாடு­களில் தங்கள் வர்த்­த­கங்­களை நிறு­வினர். அதே நேரத்தில் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த தோட்டத் தொழி­லா­ளர்கள் தங்கள் குடி­யு­ரிமை உரி­மைகள் எதுவும் இல்­லாமல் தோட்­டங்­க­ளுக்குள் முடக்­கப்­பட்­டனர்.

1956 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்க அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­கான முழக்­க­மாக தனிச் சிங்­கள சட்­டத்தை அமு­லாக்­கினார். அவர் காலம் கடந்து தனது தவறை உணர்ந்து, தமிழ் சமஷ்டி கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்­வ­நா­ய­கத்­துடன் ஒரு ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்டார். எவ்­வா­றா­யினும், இன­வெறி இந்த நாட்டின் அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்­கி­யது. சிறு­பான்­மை­யி­னரின் கோரிக்­கைகள், முறை­யீ­டுகள் மற்றும் நியா­ய­மான, சட்­ட­பூர்­வ­மான உரி­மைகள் செவி­ம­டுக்­கப்­ப­டாமல் தள்­ளு­படி செய்­யப்­பட்­டன. அப்­படி எது­வுமே இல்­லா­தது போன்ற ஒரு நிலை உரு­வாக்­கப்­பட்­டது.

1970 இல் பிர­தமர் திரு­மதி. சிறீ­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் ஐக்­கிய முன்­னணி அர­சாங்கம் பெளத்த மதத்தை பிர­தான மத­மாக பிர­க­டனம் செய்­தது. இதன் கார­ண­மாக தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தமிழ் ஐக்­கிய விடு­தலை முன்­னணி உரு­வாக்­கப்­பட்­டது. இது இரு­பெரும் முக்­கிய சமூ­கங்­க­ளான சிங்­கள மற்றும் தமி­ழர்­க­ளுக்கு இடை­யி­லான பிள­வு­க­ளுக்கும் வழி­ச­மைத்­தது.
எரியும் நெருப்­புக்கு மேலும் எரி­பொருள் சேர்ப்­பது போல் அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் தனது கைகளில் ஒருங்­கி­ணைத்து கொடூ­ர­மான நிற­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை ஜே.ஆர். ஜய­வர்­தன அறி­மு­கப்­ப­டுத்­தினார். 1983 ஜூலையில் தமிழ் பயங்­க­ர­வா­தி­களால் யாழ்ப்­பா­ணத்தில் சிங்­கள படை வீரர்கள் கொல்­லப்­பட்­ட­தற்கு பதி­ல­டி­யாக தெற்கின் சிங்­கள மக்கள், அர­சாங்க ஆத­ர­வு­டைய குண்­டர்­களின் துண­யோடு தமி­ழர்­களைக் கொல்­லவும் அவர்­களின் சொத்­துக்­களை எரிக்­கவும் தொடங்­கி­ய­போது ஜேஆரின் அர­சாங்கம் கண்­மூ­டித்­த­ன­மாக அதை அனு­ம­தித்­தது.

இதன் விளை­வாக நீடித்த தமிழ் போரா­ளி­களின் முப்­பது ஆண்டு கால ஆயுதப் போராட்டம், ஒரு காலத்தில் சொர்க்க புரி என்று அழைக்­கப்­பட்ட அமை­தி­யான நாட்டை ஒரு கொலைக் கள­மாக மாற்­றி­யது. இதனால் இந்­தியப் படைகள் மற்றும் ஆயுத விற்­ப­னை­யா­ளர்கள் இங்கு நிலை­கொண்­டனர். உலகம் முழு­வ­திலும் உள்ள மர­ணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வியா­பா­ரி­க­ளுக்கு இங்கு வர­வேற்­ப­ளிப்­பட்­டது. இது இந்த நாட்டின் விலை­ம­திப்­பற்ற வளங்­களை வடி­கட்­டி­யது. பொரு­ளா­தார வளர்ச்­சியை தாம­தப்­ப­டுத்­தி­யது. மரணம் மற்றும் அழிவை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளுக்கு பாதை அமைத்­தது.

எப்­ப­டியோ தமிழ் போரா­ளிகள் ஒரு­வாறு தோற்­க­டிக்­கப்­பட்­டனர். ஆனால் அதன் பிறகும், பின்னர் வந்த ஆட்­சி­யா­ளர்கள் கசப்­பான அந்த கடந்த காலத்­தி­லி­ருந்து எந்தப் பாடத்­தையும் கற்­றுக்­கொள்­ள­வில்லை. முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான மஹிந்த ராஜ­பக்ச மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் ஆட்­சியில் அரச ஆத­ர­வுடன் செயற்­பட்ட இன­வெறி கொண்ட கூறுகள் நாட்டின் பல­வேறு இடங்­க­ளிலும் சிதறி பர­வ­லாக மற்ற சமூ­கங்­க­ளுடன் இணக்­க­மாக வாழ்ந்த நாட்டின் இரண்­டா­வது பெரிய சிறு­பான்­மை­யான முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தங்கள் இன­வெ­றியை கக்கத் தொடங்­கினர்.

ஒழுங்­க­மைக்­கப்­பட்ட அர­சாங்க குண்­டர்கள் முஸ்­லிம்­களை எல்லா இடங்­க­ளிலும் இலக்கு வைத்து தாக்கத் தொடங்­கினர். அவர்­களின் வீடு­களை வணிக வளா­கங்­களை, தொழில்­துறை சொத்­துக்­களை மற்றும் பள்­ளி­களை தாக்­கினர். பல அப்­பாவி முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்ட இந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் அர­சாங்­கங்கள் இருந்­தி­ருக்­கலாம் என்று பர­வ­லாக சந்­தே­கிக்­கப்­பட்­டது. இதில் வேதனை என்­ன­வென்றால், பௌத்த பிக்­குகள் இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை தாங்கி செயற்­பட்­டமை தான்.

இந்த நாட்டில் இந்­தி­யாவின் பார­திய ஜனதா கட்சி அர­சாங்­கத்தின் ஆத­ர­வு­ட­னான இந்­துத்­துவா மற்றும் இஸ்­ரே­லிய சக்­தி­களின் பிர­சன்னம் அதி­க­ரித்த நிலையில் முஸ்­லிம்கள் மீதான இந்த தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றன. இந்த சக்­தி­களின் முஸ்­லிம்கள் மீதான விரோ­தமும் வன்­மு­றையும் பொது­வாக எல்­லோரும் அறிந்த ஒன்றே.

இந்த சூழ்­நி­லையில் தான் உயிர்த்த ஞாயி­றன்று கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மீதான தாக்­கு­தல்­களில் 250 க்கும் மேற்­பட்ட பக்­தர்கள் கொல்­லப்­பட்­டனர் மற்றும் நூற்­றுக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­தனர்.பொது­வாக முஸ்லிம் சமூ­கத்­துக்கும் இந்த தாக்­கு­தல்­க­ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்­றாலும், முஸ்லிம் சமூகம் மிகக் கடி­ன­மான அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு முகம் கொடுத்­தது. இஸ்லாம் மார்க்கம் சிதைக்­கப்­பட்­டது மற்றும் முஸ்­லிம்கள் எல்­லோரும் வன்­மு­றை­யா­ளர்­க­ளாக சித்­த­ரிக்­கப்­பட்­டனர். மற்றும் கண்­மூ­டித்­த­ன­மாக தாக்­கப்­பட்­டனர், ஆயி­ரக்­க­ணக்­கானோர் காவலில் வைக்­கப்­பட்­டனர், அவர்­களில் சிலர் இன்னும் காவலில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

முஸ்­லிம்கள் மீது கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டன மற்றும் அவர்கள் தமது சம­யத்தை கடைப்­பி­டிப்­பதில் இன்­னமும் சில கெடு­பி­டிகள் நடை­மு­றையில் உள்­ளன. இந்த முஸ்லிம் எதிர்ப்பு அலையின் கார­ண­மா­கவே கோட்­ட­பாய ராஜ­பக்ச 2019 ஆம் ஆண்டில் ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். ஆனால் அவர் பொரு­ளா­தா­ரத்தை மோச­மாக சீர் குலைத்தார். மக்கள் மீது மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளையும் கொண்டு வந்­ததால் ஏற்­பட்ட மக்கள் எழுச்­சியால் அவர் பத­வியில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டார்.

வெளி­யேற்­றப்­பட்ட ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்வை தொடர்ந்து, தமது மதிப்பை இழந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­களின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக ஏற்­கவே மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்ட அர­சி­யல்­வா­தி­யான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நாடா­ளு­மன்றம் ஊடாக தேர்ந்­தெ­டுத்­தனர். அவர் மக்­க­ளுக்கு பொரு­ளா­தார நிவா­ரணம் அளித்­த­தாகக் கூறி­னாலும் உணவு, மருந்­துகள், மற்றும் மின்­சாரம் போன்ற அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளி­னதும் சேவை­க­ளி­னதும் விலை­களும் கட்­ட­ணங்­களும் மிக அதி­க­மாவே காணப்­பட்­டன. சாதா­ரண பொது மக்­க­ளுக்கு தாங்க முடி­யாத கஷ்­டங்கள் ஏற்­பட்­டன.

நாட்டின் பொரு­ளா­தாரம் மிக மோச­மான நெருக்­கடி நிலைக்கு வந்து அது தொடர்ந்த போதும் கூட, அர­சி­யல்­வா­தி­களின் ஊழலும், இலஞ்­சமும் மோச­டியும் நாட்டை சுரண்டும் செயற்­பா­டு­களும் முடி­வுக்கு வர­வில்லை. ஒவ்­வொரு முனை­யிலும் அவை தொடர்ந்­தன. அர­சி­யலில் அவை ஒரு தீராத நோயாகப் பர­வின. மக்கள் இதனால் விரக்தி அடைந்­தனர். இன­வா­தமும் ஊழலும் தலை­வி­ரித்­தா­டிய அர­சி­யலால் மக்கள் விரக்தியின் விளிம்புக்கு வந்தனர்.பொருளாதார சுபீட்சத்துக்கான தலைமைத்துவத்தை அவர்கள் தேடத் தொடங்கினர்.

அந்த தேடலின் விளைவு தான் இருண்ட ஓர் சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் வாத தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஊழல்வாதிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தி, சிதைந்து போன நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் எல்லோரையும் ஒன்றணைத்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற அவரது அழைப்பு சிறுபான்மையினரின் காதுகளுக்கு ஓர் இனிமையான இசையாக அமைந்துள்ளது. அதனால் தான் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் ஜனாதிபதி அனுரகுமாரவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன என்று நினைக்கிறேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.