20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தோரை நீக்கினால் ஹக்கீமுடன் இணைந்து பயணிக்க தயார் என்கிறார் ரிஷாத் பதியுதீன்
(எப்.அய்னா)
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து சமூகத்தை காட்டிக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காது அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு வந்தால், மு.கா. மற்றும் அதன் தலைவர் ஹக்கீமுடன் ஒன்றிணைந்து பயணிக்கத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அறிவித்துள்ளார்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குள் ஒற்றுமை இல்லை எனவும் அவர்கள் பிரிந்து இருப்பதாகவும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ள நிலையில், அது தொடர்பில் வினவிய போதே ரிஷாத் பதியுதீன் இதனை தெரிவித்தார்.
‘மு.கா. தலைவர் ஹகீமுடன் சேர்ந்து பயணிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் அவர் 20 ஆம் திருத்தத்துக்கு கையுயர்த்தியவர்களை நீக்கி விட்டு வரவேண்டும். அவ்வாறு வந்தால் அவர்களோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேர்ந்து பயணிக்கும். வேறு எந்த நிபந்தனையும் இல்லை.’ என தெரிவித்தார்.– Vidivelli