ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்

டெல் அவிவ் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வீச்சு பதிலடி பலமாக இருக்கும் என இஸ்ரேல் எச்சரிக்கை

0 112

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யதைத் தொடர்ந்து பிராந்­தி­யத்தில் நிரந்­தர போர் மூளும் அபாயம் தோன்­றி­யுள்­ளது. செவ்­வாய்க்­கி­ழமை இரவு இஸ்­ரேலின் டெல் அவிவ் நகரை இலக்கு வைத்து ஈரான் நூற்றுக் கணக்­கான ஏவுகணைகளை ஏவி­யதில் இஸ்­ரே­லுக்கு பலத்த சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஹிஸ்­புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்­ரல்லா கொல்­லப்­பட்­ட­மைக்கு பதி­லடி கொடுக்கும் நோக்­கி­லேயே ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

‘ஒப­ரேஷன் ட்ரூ ப்ரொமிஸ் 2’ எனும் பெய­ரி­லான தமது தாக்­குதல் 90 வீதம் வெற்­றி­ய­ளித்­துள்­ள­தாக ஈரான் பாது­காப்பு அமைச்சர் பிரி­கே­டியர் ஜெனரல் நசீர்­சாதெஹ் தெரி­வித்­துள்ளார். ஈரானின் உயர் தொழில்­நுட்­பத்­துடன் கூடிய ஏவு­க­ணைகள் எதி­ரியின் ஏவு­கணை பாது­காப்பு திட்­டங்­க­ளையும் மீறிச் சென்று இரா­ணுவ இலக்­கு­களை அடைந்­தது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இஸ்­ரேலின் பொது மக்கள் இருப்­பி­டங்­களை தாம் தாக்­க­வில்லை எனக் குறிப்­பிட்­டுள்ள அவர் மூன்று இரா­ணுவ தளங்கள் ஒரு புல­னாய்வு தளம் ஆகி­வற்றின் மீதே தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இந்த ஆண்டில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் இரண்­டா­வது தாக்­குதல் இது­வாகும். ஏப்ரல் மாதத்­திலும் ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவு­க­ணைகள் மூலம் இஸ்­ரேலை தாக்­கி­யது.

ஈரானின் இந்த தாக்­குதல் தற்­போது நின்­றுள்­ள­தா­கவும், தற்­போ­தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் இஸ்ரேல் நேற்று மாலை தெரி­வித்­தது.
செவ்­வாய்­கி­ழமை இரவு ஈரான் 181 பாலிஸ்டிக் ஏவு­க­ணை­களை வீசி­ய­தாக இஸ்ரேல் தெரி­விக்­கி­றது. எனினும் சுமார் 400 க்கும் மேற்­பட்ட ஏவு­க­ணை­களை தாம் இஸ்­ரேலை நோக்கி ஏவி­ய­தாக ஈரான் தெரி­வித்­துள்­ளது.

ஏப்ரல் மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில் இது பெரிய தாக்­கு­த­லாகும். ஐந்து மாதங்­க­ளுக்கு முன்பு சுமார் 110 பாலிஸ்டிக் (மேலே நீண்ட உயரம் சென்று தாக்கும்) ஏவு­க­ணைகள் மற்றும் 30 க்ரூஸ் (தாழ்­வாக பறந்து தாக்கும்) ஏவு­க­ணைகள் மூலம் இஸ்­ரேலை ஈரான் தாக்­கி­யது.

செவ்­வாய்­கி­ழமை உள்ளூர் நேரப்­படி இரவு சுமார் 7:45 க்கு (இந்­திய நேரம் இரவு 10:15 மணி) டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் ஏவு­க­ணைகள் பறப்­பதை தொலைக்­காட்­சியில் காட்­டப்­பட்ட காட்­சி­களில் காண முடிந்­தது.
தாக்­கு­தலின் போது சில ஏவு­க­ணைகள் இலக்­கு­களை தாக்­கி­யதை இரா­ணுவ அதி­கா­ரிகள் உறுதி செய்­தனர். இஸ்­ரேலின் மத்­திய மற்றும் தெற்கு பகு­தி­களில் இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக இரா­ணுவ செய்தி தொடர்­பாளர் தெரி­வித்தார்.

அதே நேரத்தில் தனது இரா­ணுவம் முதல் முறை­யாக ஹைப்­பர்­சோனிக் ஏவு­க­ணை­களைப் பயன்­ப­டுத்­தி­யது என்றும் 90 சத­வி­கித எறி­க­ணைகள் இலக்கை துல்­லி­ய­மாக தாக்­கின என்றும் ஈரானின் இஸ்­லா­மிய புரட்சி பாது­காப்பு படை (ஐஆர்­ஜிசி) கூறு­கி­றது.

மூன்று இஸ்­ரே­லிய இரா­ணுவ தளங்கள் தாக்­கு­தலின் இலக்­குகள் என்று ஐஆர்­ஜிசி வட்­டா­ரங்கள் ஈரா­னிய அரசு ஊட­கத்­திடம் தெரி­வித்­தன. ஆனால், ஈரானால் ஏவப்­பட்ட ஏவு­க­ணை­களில், ‘பெரும்­பா­லா­னவை’ அழிக்­கப்­பட்­ட­தாக இஸ்­ரே­லிய இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

தங்கள் அமைப்பின் உயர் தள­பதி மற்றும் ஈரான் ஆத­ரவு ஆயுதக் குழுக்­களின் தலை­வர்கள் கொல்­லப்­பட்­ட­தற்கு பதி­ல­டியே இது என்று ஈரானின் இஸ்­லா­மிய புரட்சி பாது­காப்பு படை ஒரு அறிக்­கையில் தெரி­வித்­தது.

ஹிஸ்­புல்லா தலைவர் ஹசன் நஸ்­ரல்லா மற்றும் ஐஆர்­ஜிசி தள­பதி அப்பாஸ் நில்ஃ­போ­ரோஷன் தெஹ்­ரானில் ஹமாஸின் அர­சியல் பிரிவின் தலைவர் இஸ்­மாயில் ஹனியா ஆகியோர் கொல்­லப்­பட்­டமை ஆகி­ய­வற்­றுக்கு பதி­ல­டி­யா­கவே இத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக ஈரான் கூறு­கி­றது.

ஹனி­யாவின் மர­ணத்­திற்கு இஸ்ரேல் பொறுப்­பேற்­க­வில்லை என்­றாலும் இதற்குப் பின்னால் இஸ்ரேல் இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

நாட்டின் அதி­உயர் தலை­வ­ரான ஆயத்­துல்லா அலி காமைனி தனிப்­பட்ட முறையில் இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு உத்­த­ர­விட்டார் என்று மூத்த ஈரா­னிய அதி­காரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­திடம் கூறினார்.

இத­னி­டையே இந்த தாக்­கு­த­லுக்கு கடு­மை­யான விளை­வு­களை சந்­திக்க நேரிடும் என்று ஈரா­னுக்கு இஸ்ரேல் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.
“ஈரான் மிகப்­பெ­ரிய தவறை செய்­துள்­ளது, அதற்கு அந்த நாடு பதில் சொல்ல வேண்­டி­யி­ருக்கும்” என்று இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு கூறி­யுள்ளார். கடு­மை­யான விளை­வு­களை சந்­திக்க நேரிடும் என இஸ்ரேல் இரா­ணு­வமும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

தாக்­கு­தல்கள் தீவி­ர­மா­னவை என்றும், நாடு மிகுந்த எச்­ச­ரிக்­கை­யுடன் இருந்­த­தா­கவும் இஸ்­ரே­லிய இரா­ணுவ செய்தித் தொடர்­பாளர் டேனியல் ஹகாரி கூறினார். ”இந்த தாக்­குதல் கடு­மை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். எங்­க­ளிடம் ஒரு திட்டம் உள்­ளது, திட்­ட­மிட்ட நேரத்தில் மற்றும் இடத்தில் அதை நாங்கள் செயல்­ப­டுத்­துவோம்” என்றார் அவர்.

முன்­ன­தாக அமெ­ரிக்க பாது­காப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ”ஈரான் இஸ்­ரேலை தாக்­கினால், அது ‘கடு­மை­யான விளை­வு­களை’ ஏற்­ப­டுத்தும்” என்று தெரி­வித்தார். இஸ்ரேல் பதி­லடி கொடுத்தால் ஈரானின் எதிர்­வினை “மேலும் பேர­ழிவை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருக்கும்” என்று ஈரானின் இஸ்­லா­மிய புரட்சி பாது­காப்பு படை தனது அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

இந்த புதிய தாக்­கு­தல்­களும் பதி­லடி தொடர்­பான அறிக்­கை­களும் பிராந்­தி­யத்தில் நிரந்த போர் மூளும் அபா­யத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. ஈரான் லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடு­க­ளுக்குப் பய­ணிப்­பதை தவிர்க்­கு­மாறு பல நாடுகள் தமது பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளன.

நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை வழங்கிய ஈரானின் அதி உயர் தலைவரான காமைனி, ஒரு பாதுகாப்பான இடத்தில் தொடர்ந்து இருப்பதாக ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இத­னி­டையே, ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் அன்­டோ­னியோ குட்­டெரெஸ் இஸ்­ரே­லுக்குள் நுழைய தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டின் வெளி­யு­றவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறி­யுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்­திய ஏவு­கணைத் தாக்­கு­தலை குட்­டெரெஸ் “வெளிப்­ப­டை­யாக கண்­டிக்க” தவ­றி­யதால் இந்த தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­யு­றவுத் துறை அமைச்சர் கூறி­யுள்ளார்.

மத்­திய கிழக்கின் மோதல் அதி­க­ரித்து வரு­வதை கண்­டித்த ஐ.நா பொதுச்­செ­ய­லாளர் போர் நிறுத்­தத்­திற்கு அழைப்பு விடுத்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க இராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.