சிரியா, லெபனானுக்கு பயணிக்க வேண்டாம்

இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

0 294

சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடு­க­ளுக்கு மறு அறி­வித்தல் வரை பய­ணிக்க வேண்டாம் என இலங்கை பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து வெளி­வி­வ­கார அமைச்சு இதனை தெரி­வித்­துள்­ளது.

குறித்த பிராந்­தி­யங்­களில் நிலவும் கொந்­த­ளிப்­பான நிலை கார­ண­மாக இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

தற்­போது குறித்த நாடு­களில் வசிக்கும் இலங்­கை­யர்கள் இது தொடர்பில் விழிப்­புடன் இருக்­கு­மாறும் பெய்­ரூட்டில் உள்ள இலங்கை தூத­ரகம் மற்றும் டமாஸ்­கஸில் உள்ள தூத­ர­கத்­துடன் தொடர்புகளை பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.