ஆட்சி மாற்றமும் சிறுபான்மையினரும்

சந்தர்ப்பங்கள் மற்றும் சவால்கள் குறித்த ஒரு பார்வை!

0 234

எம்.எல்.எம்.மன்சூர்

பல புள்­ளி­வி­ப­ர­வியல் மற்றும் கணித ‘விற்­பன்­னர்கள்’ ‘நிக­ழவே முடி­யாது’ என சூளு­ரைத்த அந்த மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. அதே­போல, (தென்­னி­லங்கை சிங்­களச் சமூ­கத்­திற்கு மத்­தியில் இடம்­பெற்று வந்த மாற்­றங்­களை துல்­லி­ய­மாக அவ­தா­னித்து வந்­த­வர்­களை தவிர வேறு) எவரும் எதிர்­பா­ராத விதத்தில் அநுர குமார திசா­நா­யக்க ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­யீட்­டி­ருக்­கிறார்.
சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் இலங்கை அர­சி­யலில் நடந்­தி­ருக்கும். இந்த யுக மாற்­றத்தை (Paradigm Shift), அதற்கு பங்­க­ளிப்புச் செய்த மக்கள் ஆக்­ரோ­ஷ­மான கூச்­சல்­க­ளுடன் கூடிய பேர­ணி­களோ அல்­லது பகட்­டான வெற்றி விழா கொண்­டாட்­டங்­களோ இல்­லாமல் மிகுந்த அமை­தி­யு­டனும், சுய கட்­டுப்­பாட்­டுடன் வர­வேற்­றி­ருக்­கி­றார்கள்.

பொது­வாக தேர்­தல்­களில் பிர­தான எதிர்க்­கட்சி, ஏற்­க­னவே ஆட்­சியில் இருக்கும் கட்­சியின் மீதான மக்கள் அதி­ருப்­தியை (Anti – incumbency Factor) தனக்குச் சாத­க­மான விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்­வது வழக்கம். ஆனால், அந்த அணு­கு­மு­றைக்கு பதி­லாக, சுதந்­தி­ரத்தின் பின்னர் ஆட்சி செய்த அனைத்துக் கட்­சி­க­ளையும் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தும் ஒரு பிரச்­சார உத்­தி­யையே இம்­முறை என்­பிபி முன்­னெ­டுத்­தி­ருந்­தது, அந்தப் பிரச்­சார உத்தி பிர­தான எதிர்க் கட்­சி­யான எஸ்­ஜேபி யையும் ஒரு பிர­தி­கூல நிலையில் கொண்டு போய் வைத்­தது.

“எல்­லோரும் திருட்டுப் பயல்கள்” (ஒக்­கம ஹொரு) மற்றும் ‘நாடு அநு­ர­வுக்கு’ (ரட்ட அநு­ரட்ட) என்ற இரண்டு முதன்­மை­யான சுலோ­கங்­க­ளையும் 56 இலட்­சத்­துக்கு மேற்­பட்ட இலங்கை வாக்­கா­ளர்கள் ‘சரி தான்’ என்று ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த விதத்தில், ‘System Change’ என்­பதை இது­வ­ரையில் ஒரு தேர்தல் சுலோ­க­மாக முன்­வைத்­தி­ருக்­காத இந்­தி­யா­வையும் உள்­ளிட்ட பல தென்­னா­சிய நாடு­க­ளுக்கு இலங்கை இந்தத் தேர்­தலின் மூலம் ஒரு முன்­னு­தா­ர­ணத்தை வழங்­கி­யி­ருக்­கி­றது.

கடந்த திங்­கட்­கி­ழமை 23ஆம் தேதி தலை­நகர் கொழும்பில் இடம்­பெற்ற அதி­கார கைமாற்றம் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த ஜனா­தி­பதி ஒரு­வ­ரி­ட­மி­ருந்து, வெற்­றி­யீட்­டிய வேட்­பாளர் வெறு­மனே ஆட்சி அதி­கா­ரத்தை பொறுப்­பேற்றுக் கொண்ட மாற்றம் என்ற விதத்தில் மட்டும் முக்­கி­யத்­துவம் பெற­வில்லை. அதற்கு அப்பால் பல விதங்­களில் குறி­யீட்டு முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு நிகழ்­வாக அது இருந்து வரு­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

2022 அற­க­லய மக்கள் எழுச்­சியின் போது இன, மத பேத­மில்­லாமல் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இலங்கைப் பிர­ஜைகள் எழுப்­பிய சுலோ­கங்­க­ளுக்கு செயல் வடிவம் கொடுப்­ப­தற்­காக தேசிய மக்கள் சக்­திக்கு மக்கள் வழங்­கி­யி­ருக்கும் ஒரு பணிப்­பா­ணை­யா­கவே (Mandate) அதனை நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஒட்­டு­மொத்த கட்­ட­மைப்­பையும் முழு­மை­யாக சுத்­தி­க­ரிப்­பதே இன்­றைய இலங்கை சமூகம் எதிர்­கொண்டு வரும் பன்­முக நெருக்­க­டி­க­ளுக்­கான தீர்­வாக இருந்து வரு­கின்­றது என்­பதே பெரும்­பா­லான இலங்­கை­யர்­களின் நம்­பிக்கை. அந்த நம்­பிக்­கையின் பிர­தி­ப­லிப்பே அநுர குமார திசா­நா­யக்­க­வுக்குக் கிடைத்­தி­ருக்கும் 56 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட வாக்­குகள்.

தனக்குக் கிடைத்­தி­ருக்கும் பணிப்­பா­ணையின் போதா­மைகள் (42%) குறித்தும், (ஒவ்­வொரு சமூ­கத்­தி­னதும்) வாக்­கு­களின் பிர­தி­நி­தித்­துவ மட்டம் (Composition) குறித்தும் தான் நன்கு அறிந்து வைத்­தி­ருப்­ப­தாகச் சொன்ன புதிய ஜனா­தி­பதி, அத­னை­ய­டுத்து ‘இந்தத் தடவை என் மீது நம்­பிக்கை வைக்­கா­த­வர்­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுக்கும் விதத்தில் நடந்து கொள்வேன்’ என்று சொன்ன வார்த்­தைகள் முக்­கி­ய­மா­னவை. அதா­வது, அவர் சொன்­ன­வற்­றி­லி­ருந்து சொல்­லாமல் விட்­டதை நாங்கள் ஊகித்துக் கொள்ள வேண்டும்.
(முஸ்லிம் வாக்­கு­களில் என்­பிபி ஐ நோக்­கிய ஒரு சிறு நகர்வு தெளி­வாக அவ­தா­னிக்­கப்­பட்­டி­ருந்த போதிலும்) வடக்கு கிழக்கு தமி­ழர்கள் மற்றும் மலை­யகத் தமி­ழர்கள் ஆகி­யோரின் முதன்­மை­யான தெரிவு அநுர குமா­ர­வாக இருந்து வர­வில்லை. என்­பது நிதர்­சனம். அதா­வது, தென்­னி­லங்கை சிங்­கள வாக்கு வங்­கியில் என்­பிபி யை நோக்கி ஏற்­பட்­டி­ருக்கும் பாரி­ய­ள­வி­லான நகர்­வுக்கு இணை­யான விதத்­தி­லான ஒரு நகர்வு (முஸ்­லிம்­க­ளையும் உள்­ள­டக்­கிய) சிறு­பான்மைச் சமூ­கங்­களின் வாக்கு வங்­கி­களில் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்தப் பின்­ன­ணியில், அச்­ச­மூ­கங்­களை நோக்கி நீட்­டப்­பட்ட ஒரு நேசக் கர­மா­கவே புதிய ஜனா­தி­ப­தியின் உரையை நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. 2019 இல் கோட்­டா­பய ராஜ­பக்ச தனது பத­வி­யேற்பு வைப­வத்தில் நிகழ்த்­திய உரை­யி­லி­ருந்து பல வழி­க­ளிலும் வேறு­பட்­டது இந்த உரை. ‘எல்­லோரும் ஓர­ணியில் இணைந்து ஒரு புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­புவோம்’ என்ற விதத்தில் விடுக்­கப்­பட்­டி­ருக்கும் ஓர் அழைப்பு இது.

இலங்­கையில் இப்­பொ­ழுது நிகழ்ந்­தி­ருக்கும் இந்த மாற்­றத்தை ‘எமக்கு கிடைத்­தி­ருக்கும் மிக அரி­தான ஒரு வர­லாற்றுத் தருணம்’ என்ற கண்­ணோட்­டத்தில் பார்த்து, ஒவ்­வொரு சமூ­கமும் தனது அடுத்த கட்ட அர­சியல் நகர்­வு­களை ஆழ்ந்த சிந்­த­னை­யு­டனும், தூர நோக்­கு­டனும் முன்­னெ­டுக்க வேண்­டிய ஒரு கால கட்டம் இப்­பொ­ழுது உத­ய­மா­கி­யி­ருக்­கின்­றது. அதே வேளையில், தேசிய மக்கள் சக்தி போஷித்து வளர்க்க விரும்பும் புதிய அர­சியல் கலா­சா­ரத்தில் இர­க­சிய ‘டீல்­க­ளுக்கு’ இனிமேல் இட­மில்லை என்­ப­த­னையும் எல்­லோரும் நினைவில் வைத்­தி­ருக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு தமிழ் அர­சி­யலைப் பொருத்­த­வ­ரையில் (போர் முடி­வ­டைந்து கிட்­டத்­தட்ட 15 வரு­டங்­களின் பின்னர்) தமிழ் சமூகம் இன்­றைய நிலையில் முன்­னெ­டுக்க வேண்­டிய அர­சியல் குறித்த கருத்துப் பரி­மாற்­றங்கள் பல்­வேறு தளங்­களில் இடம்­பெற்று வரு­கின்­றன. ‘சிங்­க­ள­வ­னுக்கு வாக்­க­ளிக்க வேண்டாம்’ என கடும் இன­வாத அணு­கு­மு­றை­யுடன் ஒரு சில தமிழ் அர­சி­யல்­வா­திகள் பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு வந்த நிலை­யிலும் கூட, இந்தத் தேர்­தலில் குறிப்­பாக வடக்கில் மூன்று சிங்­கள வேட்­பா­ளர்­களும் கூட்­டாக கணி­ச­மான அளவில் வாக்­கு­களை பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ‘இது எதன் வெளிப்­பாடு’ என்ற கோணத்­திலும் சிந்­தித்துப் பார்ப்­பது அவ­சியம்.
துர­திர்ஷ்­ட­வ­ச­மாக மலை­யக தமிழர் அர­சி­யலும், முஸ்லிம் அர­சி­யலும் இன்­னமும் கொழும்பு அர­சி­யலில் யாருடன் கூட்­ட­ணியில் இணை­வது மற்றும் அதன் மூலம் (சம்­பந்­தப்­பட்ட தலை­வர்கள்) பய­ன­டை­வது எப்­படி என்ற புள்­ளி­யையே சுற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள் எவரும் இத்­தேர்­தலில் அநுர குமார திசா­நா­யக்­க­வுக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை; அத்­துடன் அவ­ரையும், என்­பிபி யையும் கடு­மை­யாக நிரா­க­ரிக்கும் விதத்தில் அவர்கள் பரப்­பு­ரை­களை மேற்­கொண்­டி­ருந்­தார்கள். ஆனால், வர­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் அவர்கள் இதே வித­மான அவ­தூறு பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்தால் கடும் பின்­ன­டை­வு­களை சந்­திப்­பார்கள் என்­பதை மட்டும் இப்­பொ­ழுது கூறி வைக்க வேண்டும்.

இந்தப் பின்­ன­ணியில், இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள இந்தப் புரட்­சி­க­ர­மான மாற்­றத்தை முஸ்லிம் சமூகம் எவ்­வாறு எதிர்­கொள்ள வேண்டும்? அடுத்து வர­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அச்­ச­மூ­கத்தின் முன்னால் இருக்கும் தெரி­வுகள் எவை? தொடர்­பா­ட­லுக்கும், உரை­யா­ட­லுக்கும் கூட்டுச் செயற்­பா­டு­க­ளுக்­கு­மென கொழும்பு அர­சி­யலில் உரு­வா­கி­யி­ருக்கும் புதிய வாய்ப்­புக்­களை பயன்­ப­டுத்திக் கொள்­வது எப்­படி?

மேற்­படி கேள்­வி­க­ளுக்­கான பதில்­களை கண்­ட­றி­வ­தற்­கென சமூக செயற்­பாட்­டா­ல­ளர்­களும், புத்­தி­ஜீ­வி­களும் விரி­வான கலந்­தா­ராய்­வு­களை (Deliberations) ஏற்­பாடு செய்ய வேண்­டிய தருணம் இப்­பொ­ழுது வந்­தி­ருக்­கி­றது.

இந்தத் தேர்­தலில் அவ­தா­னிக்­கப்­பட்ட ஒரு சிறப்­பம்சம் நாடெங்­கிலும் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு திசை­காட்­டிக்கு வாக்­க­ளித்­தி­ருப்­பது. என்­பிபி சார்பு உள்ளூர் சமூகத் தலை­வர்கள் இல்­லாத நிலை­யிலும், சிறு­பான்மை மக்கள் வாழும் பிர­தே­சங்­களில் என்­பிபி யின் கட்சி கட்­ட­மைப்பு ஓர­ள­வுக்கு பல­வீ­ன­மா­ன­தாக இருந்து வந்­தி­ருக்கும் நிலை­யிலும் கூட, இந்த அள­வுக்கு அநுர குமா­ர­வுக்கு வாக்­குகள் அளிக்­கப்­பட்­டி­ருப்­பது வியப்­பூட்டும் ஒரு விடயம்.

பல முஸ்லிம் குடும்­பங்­களில் பெற்றோர் சஜித் / ரணில் எனத் தெரி­வு­களை மேற்­கொண்­டி­ருந்த பொழுது, பிள்­ளைகள் (எவ்­வித வெளித் தூண்­டு­தல்­களும் இல்­லாமல்) அநுர குமா­ர­வுக்கு தமது வாக்­கு­களை அளித்­தி­ருந்­தார்கள். 1980 களில் பிறந்­த­வர்கள், 90’s Kids என்று அழைக்­கப்­ப­டு­ப­வர்கள், 2000 இன் பின்னர் பிறந்து முதல் தட­வை­யாக தமது வாக்­கு­களை பயன்­ப­டுத்­தி­யி­ருப்­ப­வர்கள் ஆகிய அனை­வரும் பெரும் எண்­ணிக்­கையில் திசை­காட்­டியை ஆத­ரித்­தி­ருக்­கி­றார்கள்.

தமது சமூ­கத்தின் நலன்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்­வ­தாக கூறிக் கொள்ளும் அர­சி­யல்­வா­தி­களின் கடந்த கால செயல்­பா­டுகள் மீது ஏற்­பட்­டி­ருக்கும் கடும் அதி­ருப்­தி­யையும், விரக்­தி­யை­யுமே முஸ்லிம் வாக்­கா­ளர்கள் அவ்­விதம் வெளிப்­ப­டுத்திக் காட்­டி­யி­ருக்­கி­றார்கள். பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அந்தப் போக்கு மேலும் தீவி­ர­ம­டைய முடியும்.

இந்த எழுச்சித் தரு­ணத்தை சரி­யாக நெறிப்­ப­டுத்தி, உரிய விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு முஸ்லிம் சமூ­கத்­திற்கு அதிக எண்­ணிக்­கையில் இளம் தலை­வர்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். இலங்­கையின் புதிய அர­சியல் கலா­சா­ரத்தின் மூலம் எதிர்­பார்க்­கப்­படும் உய­ரிய விழு­மி­யங்­களை முன்­னெ­டுக்கக் கூடி­ய­வர்­க­ளா­கவும், நேர்மை மற்றும் நாணயம் போன்ற உயர் பண்­பு­களைக் கொண்­ட­வர்­க­ளா­கவும் அவர்கள் இருந்து வரு­வது அவ­சியம்.

2019 இல் இருந்­த­வாறு இலங்கை சமூகம் இப்­பொ­ழுது சிங்­க­ளவர் எதிர் சிறு­பான்­மை­யினர் என்ற விதத்தில் (Ethnic Polarisation) பிள­வு­பட்­டி­ருக்­க­வில்லை. அதற்கு மாறாக, ‘மாற்­றத்தை விரும்­பு­ப­வர்கள்’ மற்றும் ‘மாற்­றத்தை விரும்­பா­த­வர்கள்’ என்ற விதத்­திலும், இட­து­சா­ரிகள் மற்றும் வல­து­சா­ரிகள் என்ற விதத்­திலும் அது பிள­வு­பட்­டி­ருக்­கின்­றது. அடுத்த ஐந்­தாண்­டு­களில் அந்த இரு பிரி­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான ஒரு மோதல் கள­மா­கவே அநே­க­மாக இலங்கை அர­சியல் இருந்து வர முடியும்.

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எப்­ப­டி­யா­வது தமக்குக் கிடைக்கும் ஆச­னங்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்து, பாரா­ளு­மன்­றத்தின் சம­நி­லையை குலைத்து, புதிய ஜனா­தி­ப­தியின் திட்­டங்­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போட வேண்டும் என்­பதே எஸ்­ஜேபி யின் இன்­றைய எதிர்­பார்ப்பு. பல தலை­வர்கள் அதனை வெவ்­வேறு வார்த்­தை­களில் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

ஜனா­தி­பதி பத­வி­யேற்பு வைபவம் நிகழ்ந்த ஒரு சில மணித்­தி­யா­லங்­களின் பின்னர் கொழும்பில் ஊட­கங்­க­ளிடம் கருத்துத் தெரி­வித்த சில எஸ்­ஜேபி தலை­வர்­களின் உடல் மொழி­யிலும், சொற்­க­ளிலும் தொனித்த வன்மம் அதிர்ச்­சி­யூட்­டு­வ­தாக இருந்­தது. புதிய ஜனா­தி­ப­திக்கு சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக வாழ்த்துத் தெரி­விக்கும் பொழுதும் கூட ஒரு சிலரால் அந்த வன்­மத்தை மறைத்துக் கொள்ள முடி­யா­தி­ருந்­தது.

தோல்­வியில் விரக்­தி­யுற்­றி­ருக்கும் பிர­தான எதிர்க்­கட்சி ‘System Change’ என்ற கோஷத்தை இப்­பொ­ழுது ஒரு ஏளன வார்த்­தை­யாக பார்க்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. நாங்கள் கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மர­பு­ரி­மை­யாக பெற்றுக் கொண்­டி­ருக்கும் அர­சாங்க கட்சி / எதிர்க் கட்சி அர­சியல் முறை (Adversarial Politics ) மிகவும் நெருக்­க­டி­யான தரு­ணங்­க­ளிலும் கூட எதிர்க் கட்­சியால் அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைப்­புடன் செயல்­பட முடி­யாத ஒரு திரிபு மன­நி­லையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

கிட்­டத்­தட்ட பத்­தாண்­டு­க­ளுக்கு மேலாக இலங்­கையில் பொது­பல சேனா போன்ற இயக்­கங்கள் முன்­வைத்து வந்­தி­ருக்கும் இஸ்­லா­மா­போ­பியோ பிரச்­சாரம் மற்றும் ஈஸ்டர் தாக்­கு­தல்­களின் பின்னர் முஸ்லிம் சமூகம் தேசியப் பெரு­வாழ்­வி­லி­ருந்து அந்­நி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலை என்­பன 2022 அற­க­ல­யவின் பின்னர் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு தணிந்­தி­ருந்த ஒரு சூழ்­நி­லை­யி­லேயே இந்த ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெற்­றது. தேர்தல் மேடை­களில் இன­வாதம் – குறிப்­பாக இஸ்­லா­மோ­போ­பியோ – ஒரு பேசு­பொ­ரு­ளாக இருந்து வர­வில்லை.

சாதா­ரண சிங்­கள மக்­களின் நாடித்­து­டிப்பை துல்­லி­ய­மாக இனங்­கண்டு கொள்ளும் திறனைக் கொண்­டி­ருக்கும் சம்­பிக்க ரண­வக்க, விமல் வீர­வன்ச போன்ற அர­சியல் தலை­வர்­களும், ஞான­சார தேரர், அத்­து­ர­லியே ரத்­தன தேரர் போன்ற சமயத் தலை­வர்­களும் இத்­த­கைய கோஷங்­க­ளுக்கு இன்­றைய இலங்­கையில் எந்த வித­மான சந்தை மதிப்பும் இருந்து வர­வில்லை என்ற யதார்த்­தத்தை புரிந்து கொண்டு, இந்தத் தடவை அடக்கி வாசித்­ததை நாங்கள் பார்த்தோம்.

ஆனால், புதிய ஜனா­தி­பதி செய்யும் அல்­லது செய்­யாமல் விடும் ஒரு காரி­யத்தை முகாந்­தி­ர­மாக கொண்டு அந்தச் சக்­திகள் பழைய கோஷங்­களை மீண்டும் கையில் எடுக்க முடியும். திடீர் தேசா­பி­மா­னிகள் முளைக்கக் கூடிய வாய்ப்பும் இருந்து வரு­கி­றது. ஏனெனில், இனங்­க­ளுக்­கி­டையில் கடும் பதற்ற நிலை­மை­களை தோற்­று­விக்கக் கூடிய பல பிரச்­சி­னைகள் (Inflammatory Issues) முழு­மை­யாக தீர்த்து வைக்­கப்­ப­டாத நிலை­யி­லயே இலங்­கையில் (வேறு சில அர­சியல், சமூ­க­வியல் கார­ணி­களின் செல்­வாக்­கினால்) சிங்­கள இன­வாத அலை தணிந்­தி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 40 ஆண்­டுகள் இனத்­துவ – அர­சியல் உச்ச கட்­டத்தில் இருந்து வந்­தி­ருக்கும் ஒரு நாட்டில் ஓர் இர­வுக்குள் எல்லாம் முடி­வுக்கு வந்து விடும் என எதிர்­பார்க்க முடி­யாது.

ஆனால், ஒரு இட­து­சாரி அர­சாங்கம் அத்­த­கைய நெருக்­க­டி­களை கையாளும் விதம், முன்­னைய வல­து­சாரி அர­சாங்­கங்கள் கையாண்ட விதத்­திலும் பார்க்க வேறு­பட்­ட­தாக இருந்து வரும். மேலும், தேசிய மக்கள் சக்­தியின் முதன்மை பங்­காளிக் கட்­சி­யான ஜேவிபி தொண்டர் படையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஒரு கட்­சி­யாக (Cadre – based Party) இருந்து வரு­கின்­றது என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்ட வேண்டும். எந்­த­வொரு நெருக்­க­டியின் போதும் குறு­கிய அறி­வித்­தலில் நூற்­றுக்­க­ணக்­கான கட்சித் தொண்­டர்­களை அணி­தி­ரட்டக் கூடிய அதன் ஆற்றல், எஸ்­ஜேபி மற்றும் யுஎன்பி போன்ற வல­து­சாரி கட்­சி­க­ளி­ட­மில்­லாத ஒரு தனித்­து­வ­மான சிறப்­பம்சம்.

எந்த ஒரு பிரச்­சினை தொடர்­பா­கவும் தெளி­வான ஒரு நிலைப்­பாட்டை எடுத்து, அதன் பிர­காரம் எதிர்­வி­னை­யாற்றும் அந்த வகை­யான கொள்கை அர­சியல் (சந்­தர்ப்­ப­வாத அர­சியல் கூட்ட்­ட­ணி­களை மட்­டுமே இது­வ­ரையில் பார்த்து வந்­தி­ருக்கும்) சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு ஓர­ள­வுக்கு பரிச்­ச­ய­மற்­ற­தாக இருந்து வரு­வதும் ஒரு பிரச்­சினை.

இந்தத் தேர்­தலில் என்­பிபி உடன் இணைந்து செயல்­பட்ட முஸ்­லிம்கள் பலர் அக்­கட்சித் தோழர்கள் பின்­பற்­றிய உணர்ச்­சி­வ­சப்­ப­டாத, நிதா­ன­மான அணு­கு­மு­றை­யுடன் அனு­ச­ரித்துச் செல்­வதில் தொடக்­கத்தில் ஒரு சில பிரச்­சி­னைகள் எதிர்­கொண்­டார்கள். கடந்த 30 ஆண்­டு­க­ளாக முஸ்­லிம்கள் இலங்­கையில் ஒரு­வகை பேரம் பேசும் அர­சி­ய­லுக்கு பழக்­கப்­பட்­டி­ருப்­பதே இதற்­கான காரணம். ‘இந்தத் தேர்­தலில் நாங்கள் உங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கிறோம். அதற்குப் பக­ர­மாக நீங்கள் இன்­னின்ன விட­யங்­களை நிறை­வேற்றி வைக்க வேண்டும்’ என்ற பேரத்தின் அடிப்­ப­டையில் என்­பிபி தலை­மையை அணு­கிய – ஒரு சில சிறு­பான்மை குழுக்­க­ளையும் உள்­ளிட்ட – பல தரப்­புக்­க­ளிடம் அவர்கள் ‘அத்­த­கைய ஒரு ஏற்­பாட்­டுக்கு தொடக்­கத்­தி­லேயே உடன்­பட முடி­யாது’ எனக் கூறி, கண்­ணி­ய­மான விதத்தில் தமது மறுப்பைத் தெரி­வித்­தி­ருந்­தார்கள் என்­ப­தையும் அறிய முடி­கி­றது.

ஆகவே, புதிய அர­சாங்­கத்­துடன் பேரம் பேச வேண்­டு­மானால் சிறு­பான்மை கட்­சிகள் / குழுக்கள் தாம் இது­வ­ரையில் பரிச்­ச­யப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் அணு­கு­மு­றைகள் குறித்த ஒரு முழு­மை­யான மீளாய்வை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கின்­றது. வாக்கு எண்­ணிக்­கையை அதி­க­ரித்துக் கொள்ளும் ஒரே நோக்­கத்­திற்­காக தமது அர­சியல் நெறி­மு­றை­களை விட்டுக் கொடுப்­ப­தற்கோ அல்­லது சந்­தர்ப்­ப­வாத இயல்­பி­லான சம­ர­சங்­களை மேற்­கொள்­வ­தற்கோ அவர்கள் முன்­வர மாட்­டார்கள் என்­ப­த­னையும் தெரிந்து வைத்­தி­ருப்­பது நல்­லது.

அநுர குமார திசா­நா­யக்­கவின் வெற்­றி­யை­ய­டுத்து இலங்கை அர­சியல் ஒரு புதிய சகாப்­தத்­துக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கி­றது. அநே­க­மாக, அடுத்து வரும் இரண்டு – மூன்று ஆண்­டுகள் நாடு ஒரு புதிய அர­சியல் கலா­சா­ரத்தை நோக்கிப் பய­ணிக்கும் ஒரு நிலை­மாறு கால கட்­ட­மாக இருந்து வரும் என்­பதில் சந்­தே­க­மில்லை. இந்தப் பய­ணத்தில் மாற்­றத்தை விரும்­பு­ப­வர்­க­ளுக்கும், ‘பழைய நிலை அப்­ப­டியே நீடிக்க வேண்டும்’ (Status quo) என்று விரும்­பு­ப­வர்­க­ளுக்­கு­மி­டையில், இட­து­சா­ரி­க­ளுக்கும், வல­து­சா­ரி­க­ளுக்­கு­மி­டையில் தொடர் போராட்­டங்­களும், கடு­மை­யான முரண்­பா­டு­களும் (Confrontations) தோன்ற முடியும்.

அது தவிர, முன்னர் தனது சக பய­ணி­க­ளாக இருந்து வந்த முன்­னிலை சோச­லிச கட்சி (FSP) மற்றும் அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் (அந்­தரே) போன்ற தரப்­புகள் எடுத்து வரும் சவால்­க­ளுக்கும் என்­பிபி முகம் கொடுக்க வேண்­டி­யி­ருக்கும்.

இறு­தி­யாக, இலங்­கையில் முதல் தட­வை­யாக ஒரு இட­து­சாரி தலைவர், ஒரு ஏழை சிங்­கள விவ­சாய குடி­யேற்­ற­வா­சியின் புதல்வர் பல தடை­களை தாண்டி நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி ஏற்­றி­ருக்­கிறார். பாரா­ளு­மன்றத் தேர்­தலில் 50% க்கு மேல் வாக்­கு­களை பெற்றுக் கொள்­வதன் மூலம் அவ­ரு­டைய ஆட்சி மேலும் வலுப்­ப­டுத்­தப்­பட்டால் மட்­டுமே சிறு­பான்மை சமூ­கங்­களும், சமூ­கத்தின் ஏனைய ஒடுக்­கப்­பட்ட பிரி­வி­னர்­களும் தத்­த­மது தனித்­து­வ­மான பிரச்­சி­னை­களை முன்­வைத்து, தோழமை உணர்­வுடன் அவ­ருடன் வாதிட்டு, நியா­ய­மான விதத்தில் அவற்றை தீர்த்துக் கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் கிடைக்க முடியும்.

இலங்கை அர­சி­யலில் 1956 இலும், 1977 இலும் தோன்­றிய புரட்­சி­க­ர­மான மாற்­றங்­க­ளுடன் கூடிய அலைகள் ஒன்­றாக சங்­க­மித்து, 2024 இல் இந்த மூன்­றா­வது அலையை எடுத்து வந்­தி­ருக்­கி­றது. வந்திருக்கிறது.

இந்தப் புதிய அலை கொழும்பு அரசியலின் உயர் பீடங்களில் இதுவரையில் சாதாரண பிரஜைகளுக்கு மூடப்பட்டிருந்த எண்ணற்ற பல வாசல்களை திறந்து வைக்க முடியும்!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.