இலங்கையின் புதிய ஜனாதிபதியும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும்

0 320

எம். ரிஷான் ஷெரீப்

ஒரு நாட்டில் அப்­போ­துள்ள அர­சாங்­கத்தின் மீதான மக்­களின் அதி­ருப்­தியின் அடிப்­ப­டை­யில்தான் பொது­வாக ஆட்சி மாற்றம் நிகழும். இலங்­கையில் இந்த வாரம் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் வெற்றி மேலே குறிப்­பிட்ட கருத்­துக்கு மேலும் வலுச் சேர்க்­கி­றது.

இலங்­கையில் 2022 ஆம் ஆண்டு ஏற்­பட்ட புரட்­சி­க­ர­மான ‘மக்கள் போராட்­ட’த்­துக்குப் பிறகு நாட்டைக் கையேற்ற ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்­சிக்கு வெறும் இரண்­டரை வரு­டங்­களே ஆயுள் இருந்­தது. அக் குறு­கிய காலத்­துக்குள் அவர் நாட்டு மக்­களின் நல­னுக்­காக எதையும் செய்யத் தவ­றி­யமை அவரை மீண்டும் ஆட்­சியில் அமர்த்­தாமல் புறந்­தள்ள வைக்க மக்­களை நிர்ப்­பந்­தித்­துள்­ளது என்­பதை இந்தத் தேர்தல் தெளி­வாக எடுத்துக் காட்­டு­கி­றது. உள்­ளாட்சித் தேர்­தலை நடத்­தாமல் விட்­டமை, அரச மருத்­து­வ­ம­னை­களில் பொது­மக்­க­ளுக்கு போலி மருந்­து­களை வழங்கிப் பரி­சீ­லித்­தமை, நீதியைக் கையி­லெ­டுத்து பல மோச­மான குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்து விடு­தலை செய்­தமை போன்ற வன்­மை­யான குற்­றச்­சாட்­டுகள் இந்தக் குறு­கிய காலத்­துக்குள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது உள்­ளன.

மக்கள் போராட்­டத்­திற்குப் பிறகு நாட்டைப் பொறுப்­பேற்று அதைச் சீர­மைக்க வந்த ஜனா­தி­ப­தியே தனது மோச­மான செயற்­பா­டு­களால் சமூகச் சீர்­கே­டு­க­ளுக்கு வழி­வ­குத்த கார­ணத்தால் பொது­மக்கள் ஒரு பெரும் மாற்­றத்தை அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள். இன்று அந்த மாற்­றத்தைச் செய்து காட்­டி­யி­ருக்­கி­றார்கள். பெரு­ம­ளவு வாக்­கு­களால் மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள நிறை­வேற்று அதி­காரம் கொண்ட புதிய ஜனா­தி­பதி அனுர குமார திஸா­நா­யக்­க­விற்கு இப்­போது பெரும் பொறுப்பு இருக்­கி­றது. இலங்­கையில் பொது­மக்கள் எதிர்­கொண்­டி­ருக்கும் அனைத்து நெருக்­க­டி­க­ளையும் முடி­வுக்குக் கொண்டு வருவார் என்ற முழு­மை­யான நம்­பிக்­கையை இன்று அவர் மீது வைத்­தி­ருக்­கி­றார்கள் மக்கள்.

இலங்­கையின் பொரு­ளா­தாரச் சீர்­கேட்டை சரி­யான திசையில் கொண்டு வரு­வது அந்­த­ளவு எளி­தான விட­ய­மல்ல. அதற்­கு­ரிய பொரு­ளா­தார நோக்கும், திற­மையும் அதில் பெரும் பங்­காற்றும். ஆகவே புதிய ஜனா­தி­பதி அதில்தான் கூடிய கவனம் செலுத்த வேண்­டி­யி­ருக்கும்.

மக்கள் விடு­தலை முன்­னணி தலைவர் அனுர குமார திசா­நா­யக்­கவால் 2019 ஆம் ஆண்டில் தொடங்­கப்­பட்­ட­துவும், இலங்கை அர­சி­யலில் இது­வரை மூன்­றா­வது அர­சியல் கட்­சி­யாக இருந்து வந்­த­து­மான தேசிய மக்கள் சக்தி National People’s Power (NPP) என்­பது இலங்­கையின் ஓர் இட­து­சாரி அர­சியல் கூட்­டணி ஆகும். முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவைத் துரத்­தி­ய­டித்த மக்கள் போராட்­டத்­திற்கு ஆரம்­பத்தில் அனுர குமார திஸா­நா­யக்க அந்­த­ளவு ஆத­ரவு அளிக்­க­வில்லை. என்­றாலும் போராட்டம் படிப்­ப­டி­யாக உக்­கி­ர­ம­டைந்­த­போது அவ­ரது கட்­சியின் ஆத­ரவு அதி­க­மாகி போராட்­டத்­துக்கு மேலும் வலு சேர்த்­தது. தொடர்ந்து ‘மக்கள் போராட்டம்’ கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை நாட்­டி­லி­ருந்து துரத்­தி­ய­டித்­த­தோடு அதற்­கான பெரும்­புகழ் அனுர குமார திஸா­நா­யக்­கவின் கட்­சியை வந்­த­டைந்­தது.

‘மக்கள் போராட்டம்’ என்ற ஒன்று மாத்­திரம் அன்று நிகழ்ந்­தி­ருக்­கா­விட்டால் இலங்­கையின் முக்­கிய அர­சியல் சக்­தி­களில் ஒரு­வ­ராக அனுர குமார திஸா­நா­யக்­கவால் மாறி­யி­ருக்க வாய்ப்­பில்லை. காரணம் அது­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் குறைந்­த­ளவு உறுப்­பி­னர்­களைக் கொண்ட கட்­சி­யா­கத்தான் அவ­ரது கட்சி இருந்து வந்­தது. என்­றாலும் மக்கள் போராட்­டத்­துக்குப் பிற­கான கடந்த இரண்­டரை வருட காலத்­துக்குள் இலங்கை அர­சி­யலில் ஒரு பெரும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மக்கள் இன்று அவரை நம்பித் தேர்ந்­தெ­டுத்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பொது­மக்­க­ளுக்கு தமது வாழ்க்­கையைச் சீர­மைத்துக் கொள்ள ஒரு நம்­ப­க­மா­னதும், பொறுப்­பா­னதும், ஊழ­லற்­ற­து­மான கட்­சியும், ஜனா­தி­ப­தியும் தேவை­யாக இருக்­கி­றது. இது, இது­வரை ஆட்­சி­யி­லி­ருந்த எந்தக் கட்­சியின் ஜனா­தி­பதி மீதும் மக்­களால் திணிக்­கப்­ப­டாத மிகப் பெரிய சவால்.
அவ்­வாறே புதிய ஜனா­தி­ப­தி­இன்னும் என்­னென்ன சவால்­களை எதிர்­நோக்­க­வி­ருக்­கிறார் என்று பார்த்­தோ­மானால், முந்­தைய ஜனா­தி­ப­திகள் தாம் பத­விக்கு வர வேண்டும் என்­ப­தற்­காக அளித்த தேர்தல் வாக்­கு­று­தி­களை பின்னர் நிறை­வேற்­று­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை. ஆனால் புதிய ஜனா­தி­ப­தியால் அவ்­வா­றி­ருக்க முடி­யாது. அவ­ரது ஒவ்­வொரு செயற்­பாடும் மக்­களால் அவ­தா­னிக்­கப்­பட்டுக் கொண்­டே­யி­ருக்கும்.

புதிய ஜனா­தி­ப­தியின் தேர்தல் வாக்­கு­று­தி­யாக ஊழல் எதிர்ப்பு என்­பது உள்­ளது. அவ­ரோடு போட்­டி­யிட்­ட­வர்கள் தாம் ஆட்­சி­யி­லி­ருந்த போதே ஊழல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­மையும், ஊழல்­வா­தி­களைத் தமது கட்­சியில் கொண்­டி­ருந்­த­துவும் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர்­க­ளுக்கே கேடாக அமைந்­தது. புதிய ஜனா­தி­ப­தி­யிடம் திட­மான மன உறு­தியும், சங்­கல்­பமும் இருந்தால் ஊழலைத் தடுத்து நிறுத்­து­வதில் உறு­தி­யாக இருப்பார் என்று நம்­பலாம். என்­றாலும் இலங்­கையின் பொரு­ளா­தாரச் சீர்­கேட்டை சரி­யான திசையில் கொண்டு வரு­வது அந்­த­ளவு எளி­தான விட­ய­மல்ல. அதற்­கு­ரிய பொரு­ளா­தார நோக்கும், திற­மையும் அதில் பெரும் பங்­காற்றும். ஆகவே புதிய ஜனா­தி­பதி அதில்தான் கூடிய கவனம் செலுத்த வேண்­டி­யி­ருக்கும்.

இது­வ­ரையில் இலங்­கையில் ஊழ­லற்ற அர­சியல் கலா­சா­ரத்தை உரு­வாக்கி, நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்திப் பாதையில் கொண்டு செல்ல ஆட்­சியில் இருந்த எந்தக் கட்­சி­யாலும் முடி­ய­வில்லை. என­வேதான் இந்தத் தேர்­தலில் இது­வரை ஆட்­சி­ய­மைக்­காத ஒரு புதிய இட­து­சாரிக் கட்­சி­யிடம் தமது நாட்டை ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்கள் இலங்கை மக்கள். ஜன­நா­யக ஆட்­சியில் ஒரு இட­து­சாரிக் கூட்­ட­ணி­யிடம் தமது நாட்டை ஒப்­ப­டைக்க மக்­க­ளுக்கு பூரண உரி­மை­யுள்­ளது.

நாட்டில் ஊழலை முடி­வுக்குக் கொண்டு வரவும், அபி­வி­ருத்திப் பாதையில் நாட்டைக் கொண்டு செல்­லவும் ஒரு புதிய கட்சி, ஒரு புதிய தலைவர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வது நல்­ல­துதான். குறைந்­த­பட்சம் அவர்கள் ஆட்­சி­ய­மைத்­ததும் தமது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முற்­ப­டு­வார்கள். பழை­ய­வர்­க­ளுக்கோ மக்­களை ஏமாற்றத் தெரிந்­தி­ருந்­தது. புதி­யவர் எப்­ப­டிப்­பட்­ட­வ­ராக இருந்­தாலும் பத­வி­யேற்­ற­துமே அந்த ஏமாற்று வித்­தை­களைச் செய்யத் துணியமாட்டார். தான் ஒழுங்­காக ஆட்­சி­ய­மைக்­க­வில்­லை­யென்றால் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளுக்கு நடந்­த­துதான் தனக்கும் நடக்கும் என்­பதை அவர் நன்கு அறிந்­தி­ருப்பார்.

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு அதுதான் நடந்­தது. மக்கள் அவ­ரி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு எதிர்­பார்த்­தார்கள். அவரால் எதுவும் மக்­க­ளுக்­காக நல்­லது செய்ய முடி­யாது என்­பதைப் புரிந்­து­கொண்­ட­துமே மக்கள் ஒன்றிணைந்து அவரைத் துரத்தியடித்தார்கள். இந்த ஆபத்து இலங்கையில் ஜனாதிபதியாக ஆகும் எவருக்கும் இருக்கிறது. என்றாலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் பாதையை சரியாக இனங்கண்டு தனது தலைமைத்துவம் மூலம் நாட்டை அபிவிருத்தியின் பாதையில் சரியாக வழிநடத்துபவரைத்தான் மக்கள் தொடர்ந்து நீடித்து நிலைக்கச் செய்வார்கள்.
வெறும் தேர்தல் வாக்­கு­று­தி­க­ளாலும், மேடைக் கூச்­சல்­க­ளாலும் மக்கள் மனதில் இடம்­பி­டிப்­பது தற்­கா­லத்தில் சாத்­தி­ய­மில்லை என்­பதை அமை­தி­யாகச் சாதித்து நிரூ­பித்­தி­ருக்­கிறார் இலங்­கையின் புதிய ஜனா­தி­பதி அனுர குமார திஸா­நா­யக்க. பத­வியில் அவர் தொடர்ந்து நீடிப்­ப­துவும், விட்டுச் செல்­வதும் அவ­ரது ஆட்சி முறையிலேயே தங்கியிருக்கிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.