அரசியல் கலாசார மாற்றத்திற்கு நாமும் பங்களிப்போம்

0 170

நாட்டின் 9 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அநு­ர­கு­மார திசா­நா­யக்க பத­வி­யேற்­றி­ருப்­பது இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மா­ன­தொரு மைல் கல்­லாகும். சுமார் 5 தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக இலங்­கையின் அர­சியல் பரப்பில் இயங்கி வந்த மக்கள் விடு­தலை முன்­னணி / தேசிய மக்கள் சக்­தி­யினால் 2020 ஆம் ஆண்டு வரை நாட்­டி­லுள்ள சுமார் 3 வீத­மான மக்­களின் ஆத­ர­வையே பெற முடிந்­தது. எனினும் இத் தேர்­தலில் 42 வீத­மான மக்­களின் ஆத­ரவைப் பெற்று நாட்டின் உயர்ந்த அதி­கா­ர­மிக்க பத­வியை கைப்­பற்­றி­யி­ருப்­பது அக் கட்­சியின் மிகப் பெரிய அடைவே அன்றி வேறில்லை எனலாம்.
இந்த வர­லாற்று மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதில் நாட்டு மக்கள் பாரிய பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். இந்த வெற்­றி­யா­னது இலங்­கையில் இது­வரை புரை­யோடிப் போயி­ருந்த ஊழலும் மோச­டியும் நிறைந்த அர­சியல் கலா­சா­ரத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தாக அமைந்­துள்­ளது எனலாம்.
இருந்த போதிலும் ஜனா­தி­பதி தேர்­தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்­ற­தோடு மாத்­திரம் இந்த நாட்டில் ஓர் அர­சியல் மாற்­றத்தை கொண்டு வந்­து­விட முடியும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் தேசிய மக்கள் சக்தி தனித்து ஆட்சி அமைக்­கக்­கூ­டிய ஒரு பலத்தைப் பெற்றுக் கொள்ளும் போது மாத்­தி­ரமே தற்­போது அக்­கட்­சி­யினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள வேலைத் திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்கும். அந்த வகையில் தற்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்­தியும் அத­னோடு இணைந்து அதன் கொள்­கை­களை ஏற்றுக் கொண்டு பய­ணிக்க கூடிய புதிய பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­களும் தெரிவு செய்­யப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனவே தான் இந்தப் பணிக்கு ஒத்­து­ழைக்கும் வகையில் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இருந்து மிகவும் தகு­தி­யா­ன­வர்கள் இனங்­கா­ணப்­பட்டு சகல கட்­சி­களின் ஊடா­கவும் தேர்­தலில் களம் இறக்­கப்­பட வேண்டும். இறு­தி­யாக இருந்த பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகித்த 225 பேரில் சுமார் 150 க்கும் மேற்­பட்­ட­வர்கள் பொருத்­த­மற்­ற­வர்கள் என்­பதை நாடே அறியும். 2022 ஆம் ஆண்டு நாட்டில் அர­க­லய போராட்டம் தோற்றம் பெற்­ற­போது “225 பேரையும் வீட்­டுக்கு அனுப்ப வேண்டும்” என்ற கோஷம் வலுப்­பெற்­றதை நாம் அறிவோம். அந்த வகையில் கடந்த பாரா­ளு­மன்­றத்தில் இருந்­த­வாரே ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்ட, அதி­கார துஷ்பிர­யோ­கங்­களில் ஈடு­பட்ட அர­சி­யல்­வா­தி­களை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்கு மக்கள் திட­சங்­கற்பம் பூண வேண்டும். குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தை பொறுத்த வரைக்கும் கடந்த பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகித்த சுமார் 20 பேரில் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனை­வரும் சமூ­கத்­திற்கு நன்மை செய்­வ­தற்குப் பதி­லாக சமூ­கத்தை தலை­கு­னியச் செய்யும் வேலை­க­ளி­லேயே ஈடு­பட்­டார்கள் என்­பதை நாம் அறிந்­துள்ளோம். 20ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தமை, ஜனாஸா எரிப்பின் போது சமூகம் சார்பில் குரல் கொடுக்­காது, தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தாது மௌன­மாக இருந்­தமை, மாறி மாறி வந்த அர­சாங்­கங்­க­ளி­ட­மி­ருந்து சலு­கை­களை பெற்றுக் கொண்­டமை, இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தாம் ஆத­ர­வ­ளிப்­ப­வர்­க­ளுக்­காக உண்­மைக்குப் புறம்­பான பிரச்­சா­ரங்­களை மேற்­கொண்டு முஸ்லிம் சமூ­கத்தை தவ­றாக வழி­ந­டத்­தி­யமை என இவர்கள் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். குறிப்­பாக கடந்த பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகித்த ஒரு உறுப்­பினர் வெளி­நாட்­டி­லி­ருந்து தங்கம் கடத்தி வர முற்­பட்­ட­போது விமான நிலை­யத்தில் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் தலை குனிய வைத்­தி­ருந்­தது. இவ்­வா­றான அர­சியல் வியா­பா­ரிகள் சமூ­கத்தில் இருந்து துரத்தி அடிக்­கப்­ப­டு­வ­தோடு மாத்­தி­ர­மன்றி, நன்கு படித்த ஒழுக்­கமும் சமூக அக்­க­றையும் கொண்ட புத்­தி­ஜீ­வி­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்­டி­யது முஸ்லிம் சமூ­கத்தின் கடப்­பா­டாகும்.
தேசிய மக்கள் சக்தி தற்­பொ­ழுது ஊழ­லுக்கு எதி­ரான ஒரு அர­சியல் புரட்­சியை முன்­னெ­டுத்­துள்­ளது. புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்தை இந்­நாட்­டுக்கு அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தாக வாக்­கு­றுதி அளித்­துள்­ளது. அதனை நிரூ­பிக்கும் வகையில் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின் மிகவும் தகு­தி­யான பலர் அமைச்­சு­களின் செய­லா­ளர்­க­ளா­கவும், ஆளு­நர்­க­ளா­கவும் திணைக்­க­ளங்­களின் தலை­வர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட்டு வரு­வதை நாம் பார்க்­கின்றோம். இந்த மாற்­றத்­திற்கு வலுச் சேர்க்கும் வகையில் முஸ்லிம் சமூகம் தமது தரப்­பி­லி­ருந்து மிகச்­சி­றந்த பிர­தி­நி­தி­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பு­வதின் ஊடாக எதிர்­வ­ரு­கின்ற பாரா­ளு­மன்­றத்தில் மிகவும் திற­மையும் தேச நலனை முன்­னி­றுத்தி செயல்படக் கூடியதுமான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கக் கூடியதாக அமையும். அந்த வகையில் இது தொடர்பில் சகல தரப்பினரும் விரைந்து செயல்படுவதுடன் எஞ்சியுள்ள மிகக் குறுகிய காலத்தினுள் தகுதியான வேட்பாளர்களை முஸ்லிம் சமூகத்தில் இனம் கண்டு தேசிய மக்கள் மத்தியில் மாத்திரமன்றி ஏனைய பிரதான கட்சிகளிலும் வேட்பாளர்களாக களம் இறக்கி, ஒரு மிகச்சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.