நாட்டில் இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ரணில்

முஸ்லிம்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் அலிசப்ரி

0 332

ஜனாதிபதித் தேர்தலுக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வெளிவிவகாரம், நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் யூ.எல்.எம். அலி சப்ரியை நேற்று முன்தினம் திங்களன்று மாலை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேர்காணலுக்காக சந்தித்தோம்.

இதன்போது, இஸ்லாத்தின் பெயரில் அரசியல் வியாபாரம் செய்யக்கூடாது. தூய்மையான முறையில் முன்மாதிரியாக நடந்து பன்மைத்துவ கலாசாரம் பேணப்படுகின்ற இந்த நாட்டில் மாற்று மத மக்களிடையே முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் குறித்ததுமான நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். நான், இலங்கை அரசியலில் பதியுதீன் மஹ்மூதின் வழிமுறைகளை அதிகம் பின்பற்றுகிறேன். ரீ.பீ.ஜயா, ஏ.சி.எஸ்.ஹமீதின் அணுகுமுறைகளிலும் ஈர்க்கப்பட்டிருக்கிறேன் என்ற தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்தார் அமைச்சர் அலி சப்ரி.

அவருடனான முழுமையான நேர்காணலை விடிவெள்ளி வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.

 

நேர்கண்டவர்: எஸ்.என்.எம்.சுஹைல்

 

சுயா­தீன வேட்­பா­ள­ராக Gas Cylinder சின்னத்தில் போட்­டி­யிடும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவை ஏன் ஆத­ரிக்க வேண்டும்?

இன்று எந்த வேட்­பா­ளர்­களும் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் முற்­ப­டுத்தி அர­சியல் செய்­ய­வில்லை. எல்­லோரும் 13 ஐ அமுல்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிற்கு வந்­துள்­ளனர். இன்று இவ்­வா­றா­ன­தொரு நிலைமை ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக இருப்­பவர் இன்­றைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹதான். அவர் இந்த நாட்டை ஆட்சி செய்­த­போது, இன­வாதம், மத­வா­தத்­தை­யெல்லாம் மூட்­டைக்­கட்டி ஓரத்தில் போட்­டுவிட்டு நல்­லாட்­சி­யொன்று புரிந்தார். அதன் விளைவே, இன்­றைய இந்த நல்­லி­ணக்க மற்றும் புதி­ய­வழி அர­சியல் கலா­சா­ர­மாகும். அனைத்து தரப்­பையும் இணைத்­துக்­கொண்டு ஜனா­தி­பதி, ஆட்சி புரிந்தமையால் இது­வொரு பிரச்­சி­னை­யா­கவே இன்று பார்க்­கப்­ப­டு­வ­தில்லை. இது பாரிய வெற்­றி­யாகும்.

அடுத்து, இந்த மூன்று பிர­தான வேட்­பா­ளர்­க­ளையும் எடுத்து நோக்­கினால், யாருக்கு அனு­பவம் இருக்­கி­றது, யார் நாட்டை நிர்­வ­கித்து காட்­டி­யுள்­ளார் என்­பதை பார்க்­க­மு­டியும். உண்­மையில் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க ஏற்­க­னவே விவ­சாய அமைச்­ச­ராக பதவி வகித்­துள்ளார். அப்­ப­தவி ஊடாக என்ன செய்தார் என்­பதை எடுத்துக் காட்­டு­வ­தற்கும் எது­வுமே இல்­லை.

மேலும், சஜித் பிரே­ம­தாஸ வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்­ச­ராக பத­வியில் இருந்­தி­ருக்­கிறார். இந்த காலப்­ப­கு­தியில் அரச பொறி­யியல் கூட்­டுத்­தா­பனம் திவா­லா­னது. கலா­சார நிதி­யத்தின் 8 பில்­லியன் ரூபா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது. நிதிகள் கிடைக்­கும்­போது வீட்டுத் திட்­டங்­களை கொண்­டு­வர முடியும். இவைதான் அவ­ரது சாத­னை­க­ளாக உள்­ளது.

ஆனால், ஜனா­தி­பதி விக்­ர­ம­சிங்ஹ நாடு மிகவும் இக்­கட்­டான நிலை­மையில் மூன்று தட­வைகள் நல்­ல­தொரு தலை­மைத்­து­வத்தை வழங்­கி­யி­ருக்­கின்றார். அவ­ரு­டைய அனு­பவம் எல்­லோ­ருக்கும் தெரியும். வர்த்­தக கைத்­தொழில் மற்றும் முத­லீட்டு அமைச்­ச­ராக பிய­க­மையை வர்த்­தக வல­ய­மாக மாற்­றினார், கல்வி அமைச்­ச­ராக பல கல்விச் சீர்­தி­ருத்­தங்­களை கொண்­டு­வந்தார். நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அவர் கொண்­டு­வந்த வெள்ளை அறிக்கை நடை­மு­றைக்கு வந்­தி­ருந்தால் நாடு நல்ல முன்­னேற்­றத்தை கண்­டி­ருக்கும், எனினும் மக்கள் விடு­தலை முன்­னணி அதற்கு எதி­ராக நின்று அந்த திட்­டத்தை தடுத்­தது.

93 இல் நாட்டின் பல முக்­கிய தலை­வர்கள் கொல்­லப்­பட்டு ஸ்திர­மற்ற அர­சியல் சூழ்­நி­லை­யொன்று உரு­வா­கி­ய­போது, ரணில் விக்­­ர­ம­சிங்ஹ ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தலை­மை­தாங்கி, பிரச்­சி­னை­களை சுமு­க­மாக தீர்த்­து­வைத்தார்.

அத்­தோடு, 1999, 2000 ஆம் ஆண்­டா­கும்­போது பொரு­ளா­தார வீழ்ச்­சி­யொன்று ஏற்­பட்டு நிதி நெருக்­கடி நிலை­மை­யொன்­றுக்கு நாடு முகம்­கொ­டுத்­தது. 2001 ஆம் ஆண்டு ரணில், ஆட்­சியைக் கைப்­பற்­றி­ய­பின்னர், 2004 ஆகும்­போது பெரிய மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்தி பொரு­ளா­தார நிலை­மையை உயர்த்­தினார். 2015 இலும் பல பொரு­ளா­தார கொள்கை மாற்­றங்­களை கொண்­டு­வந்தார்.

2022 இல் அர­சியல் ஸ்திர­மின்மை ஏற்பட்டு, நாடு பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகம்­கொ­டுத்­தது. அன்று இருந்த நிலை­மை­யையும் தற்­போது இருக்கும் நிலை­மை­யையும் யாருக்கும் விளங்­கப்­ப­டுத்த வேண்­டிய தேவை இருக்­காது. இன்று ஜனா­தி­பதி ரணில் பாரிய மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். எனவே, அவரின் ஆட்­சியை தொடர்ந்து கொண்­டு­செல்­வதா, அல்­லது நாட்டை இன்னொருவரிடம் கொடுத்து மீண்டும் ஒரு­முறை சோதித்து பார்ப்­பதா என்­ப­துதான் இன்­றுள்ள நிலை­மை­யாகும். இது பரி­சோ­தித்துப் பார்க்கும் தரு­ண­மல்ல. எனவே, இப்­போ­தைக்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹதான் பொருத்தம் என நாம் கரு­து­கிறோம்.

 

கோட்டா அர­சாங்­கத்திலும் ரணில் அர­சாங்­கத்­திலும் நீங்கள் முக்­கிய பத­வியில் இருந்­துள்­ளீர்கள். இரு ஆட்சியாளர்களிடமும் உள்ள வித்தியாசம் என்ன?
நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வழி­ந­டத்­து­வ­தற்கு பூரண பொரு­ளா­தார திட்டம் குறித்­த அறிவு இருக்க வேண்டும். எல்­லோரும், நாம் நாட்டை முன்­னேற்­றுவோம், இல­வ­ச­மாக வழங்­குவோம் என்று கூறு­கின்­றனர். ஆனால், வருவாய் எவ்­வாறு வரும் என்­பதை தெளி­வு­ப­டுத்­த­வில்லை.

ஜனா­தி­பதி கோட்­டா­பய நல்­லெண்ணத்­துடன் வரியை குறைப்­ப­தாக கூறினார். இதனால், அரச வரு­மானம் குறைந்தது. அதனை நிவர்த்தி செய்­வ­தற்­கான வழி­முறை அவ­ரிடம் இருக்­க­வில்லை.

 

ஜனா­தி­பதி கோட்­டா­வுடன் ‘வியத்­மக’ என்ற குழு இருந்­த­த­ல்­லவா? அவர்கள் இது­வி­ட­யத்தில் சரி­யான அறி­வுரை வழங்­க­வில்­லையா?
வியத்­மக கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரத்தில் இருந்­ததே தவிர, அதன் பிறகு அவர் அந்த அணியை அர­சி­யலில் தொடர்­பு­ப­டுத்­திக்­கொள்­ள­வில்லை. அவ­ரது பொரு­ளா­தார குழுவில் முன்னாள் மத்­திய வங்கி ஆளு­நர்­க­ளான பேரா­சி­ரியர் டபிள்யு.டீ.லக்ஸ்மன், நிவாட் கப்ரால், திறைசே­ரியின் செய­லாளர் அட்­டி­கல மற்றும் பீ.பீ.ஜய­சுந்­தர ஆகியோர் இருந்­தனர். இவர்­களே, கோட்­டா­ப­யவை வழி­ந­டத்­தினர்.

 

இந்த நெருக்­க­டி­யான நிலை­யி­லி­ருந்து நாட்டை எவ்­வாறு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீட்­டெ­டுத்தார்?
அரச தலை­மைத்­து­வத்­திற்கு பொரு­ளா­தார மூலக் கூறுகள் குறித்­து தெரிந்­தி­ருக்க வேண்டும். எந்­த­ளவு அரச வரு­மானம் இருக்க வேண்டும் என்­பது பற்­றிய அறிவு இருப்­பது அவ­சி­ய­மாகும். இதை யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடி­யாது. ஜனா­தி­ப­தி­யான பிறகு ஒரு­வ­ருக்கு இது­பற்றி பாடம் எடுக்­க­ மு­டி­யாது.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹவுக்கு பொரு­ளா­தாரம் குறித்­த­தான முழு­மை­யான அறிவு இருந்­தது. இதனால், அவரால் இலங்­கையின் நிலை­மையை புரிந்­து­கொண்டு செயற்­பட முடிந்­தது. அவர், பொரு­ளா­தார கொள்கை திட்­டத்தை வகுத்து நாட்டை மேலும் ஆபத்­தான நிலை­மைக்கு செல்­வதை தடுத்தார்.

இந்த இடத்தில் ஜனா­தி­ப­திக்­குத்தான் பொரு­ளா­தாரம் குறித்த பூரண அறிவு இருக்க வேண்டும். அவ­ரது அணிக்கு அல்ல என்­பதை புரிந்­து­கொள்ள முடிந்­தது.

முன்னாள் ஜனா­தி­பதி கோட்­ட­பா­ய­விடம் நல்ல அணி இருப்­ப­தா­கவே வெளிக்­காட்­ட­பட்­டது. என்­னதான் நல்ல திற­மை­யான அணி பின்னால் இருந்­தாலும் ஜனா­தி­ப­திக்கு பொரு­ளா­தாரம் குறித்த அறிவு இருக்க வேண்டும் என்­பதை நாம் உணர்ந்­துள்ளோம்.

முன்னாள் ஜனா­தி­பதி கோட்­ட­பா­ய­விடம் நல்ல அணி இருப்­ப­தா­கவே வெளிக்­காட்­ட­பட்­டது. என்­னதான் நல்ல திற­மை­யான அணி பின்னால் இருந்­தாலும் ஜனா­தி­ப­திக்கு பொரு­ளா­தாரம் குறித்த அறிவு இருக்க வேண்டும் என்­பதை நாம் உணர்ந்­துள்ளோம்.

நான், நிதி அமைச்­ச­ராக இருக்­கும்­போது, தற்­போது பத­வி­யி­லுள்ள மத்­தி­ய­வங்கி ஆளுநர் கலா­நிதி நந்­தலால் மற்றும் திறை­சே­ரியின் செய­லா­ளர் சிறி­வர்­தன ஆகி­யோ­ரையும் நிய­மித்­தி­ருந்தேன். ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க நல்­ல­தொரு அணி­யையும் உரு­வாக்­கிக்­கொண்டார். இருக்­கின்­ற­வர்­களை பயன்­ப­டுத்­திக்­கொள்­வதே ஆளு­மை­யுள்ள தலை­மைத்­து­வ­மாகும்.

 

உங்­களை ஜனா­தி­பதி கோட்டா பயன்­ப­டுத்­திய விதத்­திற்கும் ஜனா­தி­பதி ரணில் பயன்­ப­டுத்­திய விதத்­திற்கும் வித்­தி­யாசம் இருக்­கின்­ற­னவா?
என்னை கோட்டா அமைச்சராக நிய­மித்­தபோது பெரும் எதிர்ப்­பொன்று இருந்­தது. அப்­போது ஒரு முஸ்லிம் விரோதப் போக்­கொன்று இருந்­தது. எல்­லோரும் அவற்றை மறந்­து­விட்­டனர். நான் ஒரு சட்­டத்­த­ரணி என்பதால் சட்­ட மறுசீரமைப்பை மேற்கொள்ளச் சொன்னார்.

ஆனால், ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க எனது திறமையை சரியாக புரிந்­து­ பயன்­ப­டுத்­திக்­கொண்டார். அவ­ருடன், இதுதான் முதற்­த­ட­வை­யாக வேலை செய்­கிறேன். இதுவே, அவ­ரது ஆளு­மை­யாகும்.

 

அர­சியல் ஸ்திர­மற்ற நிலைமை, பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் நிர்­வாக சீரின்­மையால் வீழ்ச்­சி­ய­டைந்த நாட்டை ரணில் அல்­லாத வேறு யார் பொறுப்­பெ­டுத்­தி­ருந்­தாலும் இரண்டு வரு­டங்­களில் நாடு சீரான நிலை­மைக்கு திரும்­பி­யி­ருக்கும் என்று எதிக்­கட்­சி­யினர் கூறு­கின்­ற­னரே, அது சாத்­தி­யமா?
அப்­ப­டி­யென்றால், எதி­ர­ணி­யி­ன­ர் நாட்டை அப்­போது பொறுப்­பெ­டுத்­தி­ருக்­க­லாமே. எதிர்க்­கட்சித் தலைவர் ஏன் நாட்டை பெறுப்­பேற்­க­வில்லை. யார் எடுத்­தி­ருந்­தாலும் செய்­தி­ருக்க முடியும் என்பது பிழையான கருத்து.

தனது எதிர்­கால அர­சி­யலை கருத்­திற்­கொள்ளாமல் கடினமான தீர்மானங்களை அவர் எடுத்தார். ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்ஹ மிகவும் வித்­தி­யா­ச­மா­னவர்.

ஒரு தறு­வாயில் சர்­வ­தேச நாணய நிதி­யத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தைகள் தாம­த­மா­கின, இருந்­தாலும் ஜனா­தி­பதி ரணிலால் சமந்­தா­ ப­வ­ருடன் தொலை­பே­சியில் கதைக்க முடி­யு­மாக இருந்­தது. ஜப்பான், இந்­தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் உத­வி­யுடன் ஒரு குழுவை நிய­மித்து இந்த பிரச்­சி­னையை தீர்த்து நாட்டை முன்­னேற்றிச் செல்ல முடி­யு­மாக இருந்­தது.

இந்த நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள மாற்­றத்­திற்கு ஜனா­தி­ப­தியின் அனு­பவம், தனிப்­பட்ட சர்­வ­தேச தொடர்­புகள் மிகவும் உத­வி­யாக இருந்­தது.

 

94 களுக்கு பின்னர் நாட்டின் கூட்டாட்சி முறையே இருப்பதால், இணக்க அரசியல் நடத்த வேண்டியுள்ளது. சஜித், அனுர வெற்றிபெற்றால் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை மீண்டும் தோன்றுமா?
ஜனா­தி­பதி ரணில் தோற்கடிக்கப்­பட்டால் அப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­படும் வாய்ப்பு இருக்­கி­றது. கூட்­டாட்சி அர­சாங்­க­மொன்றை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு சிறந்த தலை­மைத்­துவம் அவ­சி­ய­மாகும்.

பொது­ஜன பெர­மு­னவின் கட்சித் தலை­மையும், ஸ்தாப­கரும் ஒரு­புறம் இருக்­கும்­போது, அக்­கட்­சியின் 98 பாரா­ளு­மன்ற உறுப்பினர்களும் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­ஹ­வுக்கு ஆத­ர­வ­ளிக்­கி­றார்கள். நாங்கள் கலந்­தா­லோ­சித்து ரணிலை ஆத­ரிக்­க­வில்லை. அவ­ரவர் தனிப்­பட்ட தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே ரணிலை ஆத­ரிக்­கிறோம். இதற்கு காரணம், ரணிலின் நிர்­வாகத் திற­மை­க­ளையும், முகா­மைத்­து­வத்­தையும், கொள்கை வகுப்­பையும் நாம் எல்­லோரும் கடந்த இரண்டு வரு­டங்­களில் கண்­டு­கொண்டோம்.

ஆபத்தான நிலை­மையில் ரணிலை பயன்­ப­டுத்­தி­விட்டு, தேவை முடிந்த பிறகு தூக்கி எறிவது சரி­யா­ன­தா என்ற வினா எங்­க­ளுக்குள் எழுந்­தது.

ஆபத்தான நிலை­மையில் ரணிலை பயன்­ப­டுத்­தி­விட்டு, தேவை முடிந்த பிறகு தூக்கி எறிவது சரி­யா­ன­தா என்ற வினா எங்­க­ளுக்குள் எழுந்­தது.
இவர் ஐந்து தடவை பிர­த­ம­ராக இருந்­துள்ளார் என பலரும் கூறு­கின்­றனர். இந்த நாட்டில் பிரதமர் ஒரு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் போலவே இருக்க முடியும்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹ­வுக்கும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹ­வுக்­குமிடையில் மாற்­றங்கள் விளங்­கு­கின்­றது. தற்­போது, அவரின் வேலைத்­திட்­டங்­களை அச்­ச­மின்றி முன்­னெ­டுக்க முடி­கி­றது. ஜனா­தி­ப­தி­யிடம் எந்­த­வித குறை­யு­மில்லை என நான் கூற­வில்லை, ஆனாலும், இருக்­கின்ற மூவரில் அவர் தான் இப்­போது ஜனா­தி­பதி பத­விக்கு பொருத்­த­மா­னவர்.

இத­னால்தான், ஐக்­கிய மக்கள் சக்­தியில் சிரேஷ்ட தலை­வர்கள் ஐவர் அதி­லி­ருந்து வெளி­யேறும் நிலை ஏற்­பட்­டது. சரத்­பொன்­சேகா, குமா­ர­வெல்­கம, ராஜித சேனா­ரத்ன, தலதா அத்­துக்­கோ­ரல மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோர் அதி­லிந்து வெளி­யே­றினர். முத­லா­வது, சஜித்தால் வெல்ல முடி­யாது. இரண்­டா­வது, வென்­றாலும் நாட்டை வழி­ந­டத்த முடி­யாமல் போய்­விடும்.

ஜனா­தி­பதி கோத்தா நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று நானும் நம்­பினேன். யுத்­தத்தை வென்­றெ­டுக்க பங்­க­ளிப்பு செய்தார், கொழும்பை மாற்­றி­ய­மைத்தார், ஆனால், ஜனா­தி­ப­திக்­கு­ரிய தகைமை இது­வல்ல என உள்ளே சென்று பார்த்­த­பி­ற­குதான் தெரிந்­தது.

சஜித்தால் செய்ய முடி­யாது என்று 25, 30 வரு­டங்­களாக அர­சியல் செய்­த­வர்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும். அர­சாங்­கத்தை கொண்­டு­செல்­வ­தென்­பது இல­கு­வான காரி­ய­மல்ல, அதற்கு சிறந்த ஆளு­மையும், நிர்­வா­கத்­தி­ற­மையும் வேண்டும்.

 

பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹ­வுக்கும் டீல் இருப்­ப­தா­கவும், இத­ன­டிப்­ப­டை­யி­லேயே நாமல் தனித்து கள­மி­றங்­கி­யுள்­ள­தா­கவும் பொது­ஜன பெர­மு­னவின் ஏனைய உறுப்­பி­னர்கள் ரணிலை ஆத­ரிப்­ப­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே, இப்­ப­டி­யொரு டீல் இருக்­கி­றதா?
நாமல் ராஜ­பக்ச பெறப்­போகும் வாக்­குகள் ரணில் விக்­ர­ம­சிங்ஹ இழக்­கப்­போகும் வாக்­கு­க­ளா­கவே கருத முடியும். ஏனெனில், ஐக்­கிய தேசியக் கட்சி தற்­போது பல­வீ­ன­ம­டைந்­துள்­ளது. அவர்­க­ளிடம் பெரிய வாக்­கு­வங்கி கிடை­யாது. எனவே, பொது­ஜன பெர­மு­னவின் வாக்­கு­க­ளையே ரணில் பெற வேண்­டி­யுள்­ளது. இதனால், நாமல் கள­மி­றங்­கி­யது ரணி­லுக்­குத்தான் பாதிப்பு.

கோத்தா பெற்ற 69 இலட்சம் வாக்­கு­களில் பெரிய தொகை வாக்கு ரணி­லுக்கு வர வேண்டும். ஒரு குறிப்­பிட்ட தொகை அனு­ர­வுக்கும் செல்லும். நாமல் 5 இலட்சம் வாக்­குகள் எடுத்­தாலும் அது ரணி­லுக்கு கிடைக்க வேண்­டிய வாக்­கு­க­ளா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

இதனால், உண்­மை­யி­லேயே டீல் சஜித்­துக்கும் ராஜ­பக்­சாக்­க­ளுக்கும் இடை­யில்தான் இருக்­கி­றது. நாமல் எவ்­வ­ளவு வாக்­குகள் எடுக்­கின்­றாரோ அவ்­வ­ள­வுக்கும் ரணிலின் வெற்­றி­வாய்ப்பு குறையும், சஜித்­துக்கு வாய்ப்­பாக அமையும் என்­பதை நாங்கள் புரிந்­து­கொள்ள முடியும்.

இதனால், உண்­மை­யி­லேயே டீல் சஜித்­துக்கும் ராஜ­பக்­சாக்­க­ளுக்கும் இடை­யில்தான் இருக்­கி­றது. நாமல் எவ்­வ­ளவு வாக்­குகள் எடுக்­கின்­றாரோ அவ்­வ­ள­வுக்கும் ரணிலின் வெற்­றி­வாய்ப்பு குறையும், சஜித்­துக்கு வாய்ப்­பாக அமையும் என்­பதை நாங்கள் புரிந்­து­கொள்ள முடியும்.

 

ரணிலை ஆத­ரிக்கும் தீர்­மா­னத்தை எடுத்த பிறகு நீங்கள் ராஜ­பக்­சாக்­க­ளுடன் டீலில் இருக்­கின்­றீரா?

நான் ரணிலை ஆத­ரிக்கும் நிலைப்­பாட்டை எடுப்­ப­தற்கு முன்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவை பாரா­ளு­மன்ற கட்­சியின் குழுத் தலைமை என்ற அடிப்­ப­டையில் சந்­தித்து கதைத்தேன். ‘இப்­போ­தைக்கு ரணிலை ஆத­ரிப்­பதே சிறந்­த தீர்­மா­ன­மாக இருக்கும். ஐந்­தாண்­டுகள் அவருக்கு வாய்ப்­ப­ளிப்போம், பொரு­ளா­தா­ரத்தை ஸ்திர நிலை­மைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு அவ­காசம் கொடுப்போம், ஐந்­தாண்­டுகள் பின்பு கட்சி அடிப்­ப­டையில் செயற்­ப­டுவோம்’ என்றேன். அவரும் அதனை ஏற்­றுக்­கொண்டார். ஆனால், பின்னர் துர­திஸ்­ட­வ­ச­மாக அவர்­க­ளது குழுவின் தீர்­மா­னத்­திற்­க­மைய நாமலை கள­மி­றக்­கினர். பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் ஏற்­றுக்­கொள்­ளாத போதும் ராஜ­பக்­சாக்­களே அந்த தீர்­மா­னத்தை எடுத்­தனர். அதற்கு பிறகு நாங்கள் அர­சியல் ரீதியில் எந்த தொடர்­பையும் கொண்­டி­ருக்­க­வில்லை.

இருந்­த­போ­திலும், கடந்த வாரம் எனது தாயார் இறை­யடி சேர்ந்தார். இதன்­போது, முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான மஹிந்த ராஜ­பக்ச, கோத்­தா­பய ராஜ­பக்ச ஆகியோர் எனது வீட்­டுக்கு வந்து ஆறுதல் கூறிச் சென்­றனர். நாமல் ராஜ­பக்­சவும் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு என்­னுடன் கதைத்தார்.

இது எனது தனிப்­பட்ட தொடர்­பாகும். ஆனால், அர­சியல் ரீதியில் நான் இப்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்கும் தீர்­மா­னத்தை மிகத் தீர்க்­க­மா­கவே எடுத்­தி­ருக்­கின்றேன். அதன்­ப­டியே தற்­போ­தைய அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்றேன்.

 

நாடு இன்னும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து விடு­ப­ட­வில்லை. இதி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் திட்­டங்கள் கைகொ­டுக்­குமா? அவற்றை இன்னும் மேம்­ப­டுத்­த­வேண்­டி­யுள்­ளதா?
இந்த நாடு பாதா­ளத்தை நோக்கிச் சென்­றது. இதை இன்னும் பாதா­ளத்­துக்கு செல்­ல­வி­டாது நிறுத்­துவதே எமது முத­லா­வது வேலை­யாக இருந்­தது.

அடுத்­த­ப­டி­யாக, நாம் டொலர் இருப்பை அதி­க­ரிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. இறக்­கு­ம­தியை குறைத்தோம். ரூபாவின் பெறும­தியை அதி­க­ரிக்கச் செய்தோம். அரச வரு­வாயை அதி­க­ரித்தோம். சுற்­றுலா துறையை மேம்­ப­டுத்­தினோம். தொடர்ந்து இந்த பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

மூன்­றா­வ­தாக, உள்­நாட்டு உற்­பத்­தியை அதி­க­ரிக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­வைத்­துள்ளோம். ஏற்­று­ம­தியை ஊக்­கு­விக்கும் திட்­டங்­களை கொண்­டு­வந்­துள்ளோம். இதற்கு இன்னும் 5 வரு­டங்கள் தேவை. அத்­தோடு, பொரு­ளா­தார பரி­ணாமம் தொடர்­பான சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வந்­துள்ளோம். நாம் இது­வரை மேற்­கொண்­டுள்ள மாற்­றங்­களை மேம்­ப­டுத்தும் விதத்­தி­லேயே இதனை செய்ய வேண்­டி­யுள்­ளது.

சஜித் கூறு­வ­துபோல் எல்­லா­வற்­றையும் இல­வ­ச­மாக கொடுக்க முடி­யாது. இல­வ­ச­மாக கொடுப்­ப­தற்கும் வருவாய் இருக்க வேண்டும். வரி­யையும் குறைப்­ப­தாக கூறு­கிறார். என்ன விளை­யாட்டு இது. இதே, பிழை­யைத்தான் கோட்­டா­பய செய்தார். நாங்கள் மீண்டும் 2022 கோட்­டா­பய யுகத்­துக்கு செல்ல வேண்­டுமா என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

சஜித் கூறு­வ­துபோல் எல்­லா­வற்­றையும் இல­வ­ச­மாக கொடுக்க முடி­யாது. இல­வ­ச­மாக கொடுப்­ப­தற்கும் வருவாய் இருக்க வேண்டும். வரி­யையும் குறைப்­ப­தாக கூறு­கிறார். என்ன விளை­யாட்டு இது. இதே, பிழை­யைத்தான் கோட்­டா­பய செய்தார். நாங்கள் மீண்டும் 2022 கோட்­டா­பய யுகத்­துக்கு செல்ல வேண்­டுமா என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

 

System Change ஐதான் இன்றைய இளை­ஞர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். இது குறித்து ஜனா­தி­ப­தியிடம் தெளி­வான திட்­டங்­களை காண­ மு­டி­ய­வில்­லையே?
நாங்கள் System Changeஐ செய்து காட்­டி­யுள்ளோம். பெற்­றோ­லியம் கூட்­டுத்­தா­பனம், நீர்­வ­ழங்கல் சபை, மின்­சார சபை, போக்­கு­வ­ரத்து சபை என்­ப­னவும் பெரும் நஷ்­டத்தில் இயங்­கின. அதில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­தனால் இன்று வரு­மானம் ஈட்டும் அரச நிறு­வ­னங்­க­ளாக மாற்­றி­யுள்ளோம். விலை சூத்­தி­ரத்தை பயன்­ப­டுத்­தி­யதால் இந்த நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

டிஜிடல் முறை­மையை நாம் கட்டம் கட்­ட­மாக அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்டு செல்­கிறோம். வலு சக்தி மற்றும் புதுப்­பிக்­கப்­பட்ட சக்தி வளங்கள் உற்­பத்தி செய்­வது குறித்து கவ­னத்தை செலுத்­து­கிறோம்.

கல்வி முறை மாற்றம் என்­பது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தாரக மந்­தி­ர­மாக இருக்­கின்­றது. அதனை முன்­னெ­டுப்­ப­தற்­கான முனைப்­பு­களில் அவர் ஈடு­பட்டு வரு­கிறார். தொழி­நுட்பம், தொழில்­முறைக் கல்வி மற்றும் செயற்கை நுண்­ண­றிவு (AI) கல்­வி­யையும் வலு­வூட்டும் திட்­டங்­களை முன்­வைத்­துள்ளார். மாகாண மட்­டங்­களில் தனியார் பல்­க­லைக்­க­ழக கல்­லூ­ரி­களை நிறு­வு­வ­தற்கும் திட்­ட­மிட்­டி­ருக்­கிறோம்.

நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட விவ­சாய முறை­யையும் அறி­முப்­ப­டுத்­த­வுள்ளோம். 28 வீத விவ­சா­யிகள் நாட்டில் இருந்­தாலும் 8 வீத உற்­பத்­தி­யையே அவர்­களால் வழங்­க­மு­டி­கி­றது. இதனை பன்­ம­டங்கால் அதி­க­ரிப்­ப­தற்கு வேலைத்­திட்­டங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

தொழிற் பேட்­டை­களை உரு­வாக்கி, வர்த்தக வல­யங்­களை மேம்­ப­டுத்­தவும் திட்­ட­மிட்­டுள்ளோம்.

 

ரணில் மேற்­கத்­திய நாடு­களின் முகவர் என்ற குற்­றச்­சாட்டை கடந்த காலங்­களில் பலரும் முன்­வைத்து விமர்­சித்து வந்­தனர். அவர் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளாரா? புவிசார் அரசியல் ஆதிக்க சக்திகளுடனான இராஜதந்திர உறவுகள் எப்படியிருக்கிறது?
ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு புத்­தி­சாலி, நல்ல இரா­ஜ­தந்­திரி. புவிசார் அர­சி­யலை அவர் சிறப்­பாக கையா­ளக்­கூ­டி­யவர். இலங்கை ஒரு சுதந்­திர நாடு என்ற அடிப்­ப­டையில் நாம் எந்த முகா­முக்கும் செல்­வ­தில்லை. எல்லா தரப்­பு­டனும் நாம் இணைந்து செயற்­ப­டு­கின்றோம்.

உலகில் அமெ­ரிக்­காவின் ஆதிக்கம் இருக்கும் நேரத்தில் ஏன் இலங்கை ஈரா­னுடன் நெருக்­க­மாக செயற்­பட்­டது என எம்­மிடம் மேற்­கத்­திய நாடுகள் கேள்வி எழுப்­பின. வேறு யாரு­டைய எதி­ரியும் எமக்கு எதிரி அல்ல என்ற பதிலை நாம் அவர்­க­ளுக்கு தெளி­வாக கூறினோம். ஈரா­னுடன் நல்ல தொடர்­புள்­ளது. இஸ்­லா­மிய நாடு­க­ளு­டனும் சிறந்த வெளி­யு­ற­வு­க­ளுடன் செயற்­ப­டு­கின்றோம். பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்­காக தொடர்ந்தும் குரல்­கொ­டுத்து வரு­கின்றோம்.

இலங்கை விட­யத்தில் சர்­வ­தேச சக்­தி­களின் ஆதிக்கம் இருப்­ப­தாக என்­னிடம் எந்த ஆதா­ரமும் இல்லை. ஆனால், இலங்­கையை அடி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு சில ஆதிக்க சக்­திகள் எத்­த­னிக்கக் கூடும். பொம்மை அர­சியல் தலை­மைகள் உரு­வாக வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்­றனர்.

இலங்கை விட­யத்தில் சர்­வ­தேச சக்­தி­களின் ஆதிக்கம் இருப்­ப­தாக என்­னிடம் எந்த ஆதா­ரமும் இல்லை. ஆனால், இலங்­கையை அடி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு சில ஆதிக்க சக்­திகள் எத்­த­னிக்கக் கூடும். பொம்மை அர­சியல் தலை­மைகள் உரு­வாக வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்­றனர்.

ஜனா­தி­பதி ரணில்­ விக்­கி­ர­ம­சிங்ஹ ஒரு திட­மான ஆளுமை. அவரை ஏமாற்ற இய­லாது, அச்­சு­றுத்­தவும் முடி­யாது, கட்­டுப்­ப­டுத்­தவும் முடி­யாது. எதிர்த்து போராடக் கூடி­ய­வ­ராக ரணில் இருக்­கிறார். அத்­தோடு, இரா­ஜ­தந்­திர ரீதியில் ஏனைய நாடு­களடுன் செயற்­ப­டு­வ­தற்கு அவர் அனு­பவம் பெற்­றுள்ளார்.

இவ­ரு­டைய காலத்தில் சீனா, இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்பான் மட்­டு­மன்றி இஸ்­லா­மிய நாடு­க­ளு­டனும் சீரான உறவை பேண­மு­டிந்­தது. இந்த திறமை இப்­போது இருக்­கின்ற ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு இருக்­கி­றது. எனவே, அவரை தவிர வேறு வேட்­பா­ளர்கள் வெற்­றி­பெற்றால் நாடு ஆதிக்க சக்­தி­களில் நெருக்­க­டி­க­ளுக்கு முகம்­கொடுக்க நேரிடும்.

 

பலஸ்­தீன விவ­கா­ரத்தில் இலங்­கையின் நிலைப்­பாடு தொடர்ந்து நீடிக்­குமா? இஸ்­ரே­லு­­க்கு வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யாட்­களை அனுப்பும் செயற்­பா­டுகள் எவ்­வாறு இருக்கும்?
பலஸ்தீன், இஸ்ரேல் விவ­கா­ரத்தில் இலங்­கையின் நிலைப்­பாடு உறு­தி­யா­கவே இருக்­கி­றது. இலங்­கையின் அனைத்து அர­சாங்­கங்­களும் அதை பின்­பற்றி வந்­துள்­ளன. சுதந்­திர பலஸ்­தீ­னத்­திற்கு நாங்கள் தொடர்ந்து ஆத­ர­வை வெளிப்­ப­டுத்­து­கிறோம்.

அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக ஐக்­கிய நாடுகள் சபை­யிலும் அணி­சேரா மாநாட்­டிலும் ஜனா­தி­பதி உரை­யாற்­றினார். காஸா சிறு­வர்­க­ளுக்­கான நிதியை உரு­வாக்­கி­யுள்ளோம்.

மக்­களை உணர்வு ரீதி­யாக கீழ்­ப­டியச் செய்­வ­தற்கு எதிர்க்­கட்­சிகள் சில பொய் பிர­சா­ரங்களை முன்­னெ­டுக்­கின்­றன. குறிப்­பாக பலஸ்­தீ­னத்தை அங்­கீ­க­ரிப்­பது குறித்து முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் ஒப்­பந்தம் செய்­துள்­ள­தாக கூறு­கின்­றனர். 1987 இல் இலங்கை அர­சாங்கம் பலஸ்­தீ­னத்தை அங்­கீ­க­ரித்­து­விட்­டது. இவ்வாறான பொய் பிர­சா­ரத்தை மேற்­கொள்ளக் கூடாது.

அத்­தோடு, இஸ்­ரேலில் இலங்­கை­யர்­க­ளுக்­கான தொழில் வாய்ப்­புகள் கிடைத்­துள்­ளன. இதில் நாம் பல கட்­டுப்­பா­டு­களை விதித்­தி­ருக்­கிறோம். குறிப்­பாக இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­களில், குறிப்­பாக காஸா மற்றும் மேற்குக் கரை பகு­தி­களில் இஸ்­ரே­ல் இலங்­கை­யர்களை வேலைக்கு அமர்த்­தக்­கூ­டாது என்ற நிபந்­த­னையை விதித்­தி­ருக்­கிறோம்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் மற்றும் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­களை கண்­டு­பி­டிக்கும் நட­வ­டிக்­கைகள் மந்­த­க­தியில் இடம்­பெ­று­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே. ஏன் அவ்­வாறு?
முஸ்லிம் பெயர் தாங்­கிய 19 பேர் தான் இந்த தற்­கொலை தாக்­கு­தலை நடந்­தினர் என்ற கசப்பான உண்­மையை நாம் ஏற்­றுத்தான் ஆக­வேண்டும். இதன்­பி­றகு இப்­ப­டி­யொரு சம்­பவம் இந்த நாட்டில் ஏற்­ப­டா­த­வாறு நாம் பார்த்­துக்­கொள்ள வேண்டும். இன்­னொரு சம்­பவம் இடம்­பெற்றால் எமது இருப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­விடும்.

இந்த சம்­ப­வத்­துடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­து­விட்­டனர். நௌபர் மௌலவி உட்­பட 37 பேருக்கு எதி­ராக நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 23 வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ளன. அது முடி­யும்­வரை எங்­க­ளுக்கு எதுவும் சொல்ல முடி­யாது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்ட தெரி­வுக்­குழுவில் மேலும் இரு­வரை இணைத்து அடுத்த கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு யாரை­யா­வது பிரே­ரிக்­கும்­படி நாம் கர்­தி­னா­லிடம் கோரினோம். அவ்­வாறு அவ­சி­ய­மில்லை. தற்­போ­துள்ள குழுவை ஏற்­கிறோம் என்­றனர்.

இதனை மீள் விசா­ரணை செய்­வ­தற்­காக கடந்த 2 வரு­டங்களுக்கு முன்­ப­தாக அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவின் உத­வியை கோரினோம். ஏற்­க­னவே, முன்­ன­தாக இடம்­பெற்ற விசா­ர­ணை­க­ளின்­போது அவர்கள் உதவி செய்­த­தா­கவும் புதி­தாக விசா­ரிப்­ப­தற்கு எதுவும் இல்­லை­யென்றே எமக்கு பதி­ல­ளித்­தனர்.

 

கோட்டா அர­சாங்கம் கொவிட் தொற்றால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை பல­வந்­த­மாக எரித்­தது. இந்த கட்­டாய ஜனாஸா எரிப்பு தீர்­மா­னத்தை எடுத்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர். இது­வி­ட­ய­மாக நட­வ­டிக்கை ஏதும் எடுக்­கப்­ப­ட­வில்­லையே?

உயி­ரி­ழந்­தவர் ஒரு­வரின் இறுதிக் கிரி­யைகள் எவ்­வாறு நடக்க வேண்டும் என்­பதை தீர்­மா­னிக்கும் உரி­மையை உயி­ரி­ழந்­த­வரின் குடும்­பத்­திற்கு வழங்­கு­வ­தற்­கான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அத்­தோடு, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்டஈடு ­வ­ழங்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது­போக, ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு தீர்­மா­னத்தை எடுத்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கு­வ­தற்­கான விசா­ரணை நடத்­து­வ­தற்­காக பாரா­ளு­மன்ற விசா­ரனை குழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது. இது மிகப் புத்­தி­சா­துர்­ய­மாக மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­ன­மாகும். ஏனென்றால், ஏற்­க­னவே, ஜனாஸா எரிப்பு விவ­கரம் தொடர்பில் மீஉயர் நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்ட மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு ஊடாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டால்தான் நீதியை பெற்­றுக்­கொள்ள முடியும் என ஜனா­தி­பதி நம்­பு­கிறார். அத­ன­டிப்­ப­டையில் விசா­ர­ணைக் ­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­படும் என ஜம்­இய்­யதுல் உல­மா­விடம் வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கிறோம்.

சாதா­ர­ண­மாக நட­வ­டிக்கை எடுக்கச் சென்றால் மீஉயர் நீதி­மன்­றத்தின் தீர்­மா­னத்­தை­காட்டி மீண்டும் நிரா­க­ரிக்­கப்­ப­டக்­கூ­டிய சந்­தர்ப்பம் இருக்­கி­றது. அத­னா­லேயே பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த விட­யத்தை பற்றி பேசும் எதிர்க்­கட்­சிகள் பாரா­ளு­மன்­றத்தில் எந்­த­வொரு பிரே­ர­ணை­யையும் கொண்­டு­வ­ரவும் இல்லை. சட்ட ஏற்­பா­டு­களை முன்­வைக்­கவும் இல்லை. வெறு­மனே அர­சி­ய­லுக்­காக வீதி­களில் போரா­டி­னார்­களே தவிர, சட்­ட­ரீ­தி­யாக தீர்த்­து­வைக்க முன்­வ­ர­வில்லை.

ஜனா­தி­பதி ரணில் விக்கிரமசிங்ஹ, ஜனாஸா எரிப்பு விடயத்தை எதிர்த்தார். அத்தோடு, பேசிப் பேசி இருக்காமல் அதற்கு எதிரான சட்டத்தை கொண்டுவந்தார். நஷ்ட ஈடுவழங்குவதற்கும் அடுத்தகட்ட விசாரணைகளுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஜனா­தி­பதி ரணில் விக்கிரமசிங்ஹ, ஜனாஸா எரிப்பு விடயத்தை எதிர்த்தார். அத்தோடு, பேசிப் பேசி இருக்காமல் அதற்கு எதிரான சட்டத்தை கொண்டுவந்தார். நஷ்ட ஈடுவழங்குவதற்கும் அடுத்தகட்ட விசாரணைகளுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 

முஸ்லிம் கட்சிகள் சஜித்தை ஆதரிக்கத் தீர்மானித்திருக்கின்றன. ஆனால் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய உறுப்பினர்களும் ரணிலை ஆதரிக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில் வாக்காளர்கள் குழம்பிப் போயுள்ளார்கள் அல்லவா?
நடுநிலையான, சுயமாக சிந்திக்கும் முஸ்லிம் மக்கள் ரணிலை ஆதரிக்கத் தீர்மானித்துவிட்டனர். முஸ்லிம்கள் ரணிலை எதிர்த்து நிற்பதற்கு காரணமேதும் இல்லை.

இதே முஸ்லிம் தலைவர்கள்தான், 2001, 2004,2005,2010, 2015 இலும் ரணில்தான் இனவாதமற்ற அரசியல்வாதிகள் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துவந்தனர்.

எங்களுடைய முஸ்லிம் தலைமைகளுக்கு ஒரு சிறிய பிரச்சினை இருக்கிறது. ‘பெரும்பான்மை இனத்தில் பெரும்பான்மையானோர் எந்த தரப்பை ஆதரிக்கின்றனரோ அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்’ என அஸ்ரப் கூறியுள்ளார். 1989 இல் பிரேமதாஸவுக்கும் 1994 மற்றும் 1999 இல் சந்திரிக்காவுக்கும் அவர் ஆதரவை வழங்கினார்.

தலைமை மாற்றத்திற்கு பிறகு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாமல் போயுள்ளது. சிறுபான்மையினர் ஏற்படுத்திய அரசாங்கத்தில் வெற்றிபெற்றாலும் எதனையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதை 2015 இல் நாம் கண்டுகொண்டோம்.

முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடுகளினால் எமக்குரிய கௌரவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் கொள்கையோ, முன்மாதிரியான அரசியல் செயற்பாடுகளையோ காண முடியவில்லை.
முஸ்லிம் சமூகம் இவர்களின் பின்னால் செல்லாமல், உரியமுறையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடுகளினால் எமக்குரிய கௌரவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் கொள்கையோ, முன்மாதிரியான அரசியல் செயற்பாடுகளையோ காண முடியவில்லை.
முஸ்லிம் சமூகம் இவர்களின் பின்னால் செல்லாமல், உரியமுறையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இனம், மதம் என்று பேசப்பட்டு வந்தநிலையில் இம்முறை பொருளாதார விடயமே தேர்தல் மேடைகளில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், ரணில் கடந்த இரண்டுவருட ஆட்சியில் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் இருவரும் இஸ்லாத்தை விற்று அரசியல் செய்கின்றனர். இஸ்லாத்தை வைத்து அரசியல் செய்வதானால், அதற்கேற்ற தரத்தில் அரசியல் செய்ய வேண்டும். பொய் சொல்லக் கூடாது. ரிஷாத் பதியுதீனோ, ரவூப் ஹக்கீமோ அவர்கள் செய்த சேவைகளை முன்னிறுத்தி வாக்கு கேட்டால் பரவாயில்லை. ஆனால், முஸ்லிம் சமுதாயத்துக்காக, அல்லாஹ்வுக்காக, ரசூலுல்லாஹ்வுக்காக என்று சொல்லி வாக்கு கேட்கக் கூடாது. அப்படியாயின், அதற்கேற்ற வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
மலையக கட்சிகள் எப்போதும் இரண்டு தரப்பாக இருந்து அரசாங்கத்திலும் இருப்பர், எதிர்க்கட்சி அரசியலையும் செய்வர். அவர்கள், பிரதானமாக அரசாங்கத்திடம் கல்வி இராஜாங்க அமைச்சையும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சையுமே கோருவர். ஆனால், எமது அரசியல்வாதிகளின் கோரிக்கை பற்றி நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இவர்கள் முஸ்லிம் விவகாரங்களை வைத்து மக்களை திசை திருப்புகின்றனர். குறிப்பாக மக்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் நடத்துகின்றனர். மக்களை புத்திசாலித்தனமாக சிந்திப்பதை தடுக்கின்றனர். மூளையால் சிந்திப்பதைவிடுத்து, இதயத்தால் சிந்திக்க வைப்பதற்கு தள்ளிவிடுகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.