முஜிபுரை கைது செய்ய சதியா?

0 89

எப்.அய்னா

கொழும்பு மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்தி சிறை­யி­ல­டைக்க சதி செய்­யப்­ப­டு­வ­தாக குற்றம்சாட்­டப்­பட்­டுள்­ளது. கடந்த இறுதி பாரா­ளு­மன்ற தினத்­தன்று பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய முஜிபுர் ரஹ்மான்,  நீதி­மன்ற தீர்ப்பின் பிர­காரம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை அண்­மையில் இழந்த முன்னாள் அமைச்சர் ஒரு­வரின் பெயரைக் குறிப்­பிட்டு, அவரே அச்­ச­தியின் பின்­ன­ணியில் இருப்­ப­தாக குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

உண்­மையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர், அத­னுடன் தொடர்­பு­பட்ட சில விட­யங்­களை மையப்­ப­டுத்தி முஸ்லிம் சமூ­கத்தின் பல பிரதிநிதிகள், தலை­மைகள் எவ்­வித ஆதா­ரமும் இல்­லாமல் கைது செய்­யப்­பட்ட வர­லாறு உள்ள நிலையில், முஜிபுர் ரஹ்­மானின் குற்­றச்­சாட்டு மிகப் பார­தூ­ர­மா­னது.

இந் நிலையில் தான் ‘விடி­வெள்ளி’ இது தொடர்பில் ஆராய்ந்­தது. இதன்­போது முஜிபுர் ரஹ்­மானை கைது செய்ய சதி இருப்­ப­தாக கூற­ப்படும்  விட­ய­தானம் தற்­போதும் நிலு­வையில் உள்ள ஒரு வழக்­குடன் தொடர்­பு­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தது.

உண்­மையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் போது பயன்­ப­டுத்த  21 குண்­டு­களை தயா­ரித்­தமை தொடர்பில் மொஹம்மட் சிபான் சத்தார், செய்யத் அபூ மொஹம்மட் அஸ்ரப், மொஹம்மட் இஷாக் மொஹம்மட் நிலாப்தீன் அல்­லது அர்ஷாத்,  குன­சீலன் ரவீந்ரன் அல்­லது  மொஹம்மட் இஷாக்,  ஷெய்க் மொஹம்மட் பரீக்  மொஹம்மட் பெளசி,  மொஹம்மட் மொயி­னுத்தீன் மூசா அல்­லது அப்­துல்லாஹ் ஆகிய 6  பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக குற்றப் பகிர்வுப் பத்­திரம் சட்ட மா அதி­பரால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி நவ­ரட்ன மார­சிங்க முன்­னி­லையில்  தொடுக்­கப்­பட்­டுள்ள எச்.சி.3886/22 எனும் இந்த வழக்கில்  6 ஆவது பிர­தி­யான மொஹம்மட் மொயி­னுத்தீன் மூசா அல்­லது அப்­துல்லாஹ் எனும் மட்­டக்­குளி பகு­தியைச் சேர்ந்த 40 வய­தான நபர் கடந்த மார்ச் மாதம் உயி­ரி­ழந்­தி­ருந்தார். இப்­போது இந்த வழக்கில் 5 பிர­தி­வா­திகள் உள்­ளனர்.

கொழும்பு சினமன்  கிராண்ட் ஹோட்­டலின்  தப்­ரபேன் உண­வ­கத்தில்  தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக குண்டை வெடிக்கச் செய்த, மொஹம்மட்  இப்­ராஹீம் இன்ஷாப் அஹ­மட்டின்  ஆலோ­ச­னைக்கு அமைய கடந்த 2018 ஜன­வரி  முதலாம் திக­திக்கும் மார்ச் 30 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட  காலப்­ப­கு­தியில்  குண்டு தயா­ரித்­துள்­ள­தாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால், பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக  பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்டு சட்டமாஅதி­பரால் முன் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே சட்ட மா அதிபர் தரப்பு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வ­ழக்கை பொறுத்­த­வரை குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள ஒரு­வரின் ஒப்­புதல் வாக்குமூலம் ஒன்­றினை மட்டும் மையப்­ப­டுத்தி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.  உண்­மையில் இவ்­வ­ழக்கில் உள்ள விட­யங்­களின் பிர­காரம், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுக்கு முன்னர் நாட்­டுக்குள் பெரு­ம­ள­வான வாள்­களை இறக்­கு­மதி செய்­தமை, குண்­டுகள் தயா­ரித்து அவற்றை களனி கங்­கையில் வீசி­ய­தாக கூறப்­படும் விடயம் போன்­றன உள்­ள­டக்­க­மாக உள்­ளது.

இவ்­வ­ழக்கில் பிர­தி­வா­தி­யாக உள்ள மொஹம்மட் இஷாக் மொஹம்மட் நிலாப்தீன் அல்­லது அர்ஷாத் எனும் நப­ருக்கு  சிறையில் வைத்து, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானின் பெயரை தொடர்­பு­ப­டுத்தி சில விட­யங்­களை பாது­காப்பு தரப்­புக்கு வழங்க, அவரை பார்வை இட வந்த இரு­வரால் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப‌­டு­கின்­றது.

அந்த சம்­ப­வத்தை மையப்­ப­டுத்­தியே, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானை, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்த முயற்­சிப்­ப­தாக சந்­தேகம் எழுந்­துள்­ளது.

உண்­மையில் இதற்கு முன்னர் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ்  ஹிஸ்­புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் போன்றோர் ஆதா­ரங்கள் இன்றி இவ்­வாறு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். குறிப்­பாக அவர்­களைக் கைது செய்யும் போது, கொழும்பு சினமன்  கிராண்ட் ஹோட்­டலின்  தப்­ரபேன் உண­வ­கத்தில்  தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக குண்டை வெடிக்கச் செய்த, மொஹம்மட்  இப்­ரஹீம் இன்ஷாப்  அஹ­மட்டை ஏதோ ஒரு விதத்தில், அவ்­வி­ரு­வ­ரு­டனும் தொடர்­பு­ப­டுத்த  விசா­ர­ணை­யா­ளர்கள் முயன்­றி­ருந்­தனர்.

குறிப்­பாக சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் விவ­கா­ரத்தில், சேவ் த பேர்ள் எனும் அமைப்பின் கட்­ட­மைப்பு ஊடா­கவும், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் விவ­கா­ரத்தில் செப்பு தொடர்­பி­லான கொள்­வ­ன­வினை மைய­ப்­படுத்­தியும் தொடர்­பு­ப­டுத்த முயற்­சிக்­கப்­பட்­டது. எனினும் அவை தோல்­வியில் முடி­வ­டைந்­தன.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சான்­றுகள் இல்லை என சட்டமா அதி­பரே  அவரை விடு­விக்க ஆலோ­ச­னை­ய­ளித்து அவர்  நீதி­மன்றால் விடு­தலை செய்­யப்­பட்டார்,

சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக புத்­தளம் மேல் நீதி­மன்றில் வழக்கு தொடுக்­கப்­பட்டு அது, முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்சி நெறிப்­ப­டுத்­தலின் இறுதிக் கட்­டத்தை எட்டி நிலு­வையில் உள்­ளது. இது­வ­ரையில் அவ்­வ­ழக்கில் நெறிப்­ப­டுத்­தப்­பட்ட சாட்­சி­யங்­களில் பல்­வேறு முன்­னுக்குப் பின் முர­ணான விட­யங்­களை அவ­தா­னிக்க முடி­வ­துடன், சில சாட்­சி­யா­ளர்கள் தாம் பொலிஸ் வாக்குமூலத்தில் குறிப்­பிட்ட விட­யங்கள் உண்மை இல்லை என்­ப­தையும் ஒப்புக் கொண்­டுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், இப்­போது அதே பாணியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் இலக்கு வைக்­கப்­பட முயற்­சிக்­கப்­ப‌­டு­கின்­றாரா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.

குறிப்­பாக 2020 தேர்­தலை மையப்­ப‌­டுத்தி எப்­படி ஹிஜாஸ், ரிஷாத் பதி­யுதீன் போன்றோர் இலக்கு வைக்­கப்­பட்­ட­னரோ அதே பாணியில், 2024 ஜனா­தி­பதித் தேர்­தலை மையப்­ப­டுத்தி முஜிபுர் ரஹ்மான் இலக்கு வைக்­கப்­ப‌­டு­கின்­றாரா என சந்­தேகம் எழு­கின்­றது.

குறிப்­பாக  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விட­யத்தை மைய­ப்ப­டுத்தி, குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் தலை­மை­ய­கத்தில் முறைப்­பா­டொன்­றினை முன் வைத்­துள்ளார். அந்த முறைப்­பாடு மீது விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

குறித்த முறைப்­பாட்டை மையப்­ப­டுத்­தியும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான்  தரப்­பி­னரின் தக­வல்­களை வைத்துப் பார்க்கும் போதும்,  ஜனா­தி­பதி தேர்­தலை நெருங்கும் போது, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் முஜிபுர் ரஹ்மான் தொடர்­பு­பட்­டுள்ளார் எனும் பிர­சாரம் ஒன்­றினை முன்­னெ­டுக்க ஒரு தரப்பு தயா­ராக இருந்­துள்­ள­தா­கவும், அதற்­காக குறித்த விட­யத்தை பயன்­ப­டுத்தி பின்னர் அவரை கைது செய்ய நிர்ப்­பந்திக்க சந்­தர்ப்பம் இருந்­துள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­ற‌து. எது எப்­ப­டியோ இது விட­யத்தில் இரு முறைப்­பா­டுகள்  சி.ஐ.டி.யின­ருக்கு அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இதில் உள்ள உண்­மை­களை அவர்கள் விசா­ரணை ஊடாக வெளிப்­ப­டுத்த வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் அச்­சு­றுத்தல் அல்­லது அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்பட்­டுள்ள, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேகநபர் சார்­பிலும் சி.ஐ.டி. உள்­ளிட்ட உரிய தரப்­பி­ன­ருக்கு முறை­யிட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. அச்­சு­றுத்­திய அல்­லது அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் குறித்த இரு நபர்களின் பெயர்­க­ளையும் விப­ரங்­க­ளையும் கூட  விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் கைய­ளித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இது குறித்து நீதி­மன்றின் அவ­தா­னத்­துக்கு கொண்­டு­வ­ரு­வது தொடர்­பா­கவும்  பாதிக்­கப்பட்ட பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணிகள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் கூற­ப்­படு­கின்­றது.

எது எப்­ப­டியோ,  மீண்டும் ஒரு முறை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை வைத்­துக்­கொண்டு, வாக்கு வேட்­டைக்­காக  போலி கைதுகள், வழக்­கு­களை தாக்கல் செய்து புதி­தாக நாடகம் ஒன்­றினை ஆரம்­பிக்­காமல், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்பட்­ட­வர்­க­ளுக்கு நியா­யத்தை பெற்றுக்கொடுக்கும் நியாயமான விசாரணை ஒன்றினை முன்னெடுத்தல் வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.