ஜனாதிபதி தேர்தலும் 1.65 மில்லியன் முஸ்லிம் வாக்குகளும்!

0 181

ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.எம். ஸுஹைர்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

எதிர்­வரும் செப்­டம்பர் 21ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல், வங்­கு­ரோத்து நிலை கார­ண­மாக நாடு தனது பொரு­ளா­தார வளத்தை இழந்த பின்னர், இலங்­கையில் நடை­பெறும் தேசிய மட்­டத்­தி­லான முத­லா­வது தேர்­த­லாகும். கடந்த தேர்­தல்­களை விட இந்தத் தேர்தல் நாட்டு மக்கள் மத்­தியில் மிகவும் ஆழ­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மக்கள் தங்கள் வாக்­கு­க­ளின்­பெ­று­மதி குறித்தும் முன்­னரை விட தற்­போது அதிக விழிப்­பு­ணர்­வுடன் இருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. தாங்கள் தவ­றான முடிவை எடுத்தால், குறிப்­பாக இந்த நாட்டில் வாழ்க்கைச் செலவு மற்றும் தமது வாழ்­வா­தார இருப்பை தக்­க­வைத்தல் என்­ப­ன­வற்றில், பெரும் விலையை செலுத்த வேண்­டி­யி­ருக்கும் என்­ப­தையும் வாக்­கா­ளர்கள் நன்கு அறி­வார்கள்.

2022 மார்ச் இல் தொடங்­கிய மாபெரும் மக்கள் போராட்­ட­மான ‘அர­க­லய’ வை ஜனா­தி­பதி என்ற சூடான இருக்­கையில் அமர்ந்­தி­ருக்கும் எவரும் ஒரு­போதும் மறக்க முடி­யாது. இந்தக் கதி­ரையில் அம­ர­வுள்ள வருங்­கால ஜனா­தி­பதி தனது பத­விக்­காலம் முழு­வதும் அன்­றைய தலை­வர்­களின் எதிர்­பார்ப்­பையும் மீறி வெடித்த வெகு­ஜன ஆர்ப்­பாட்­டங்­களின் இரண்டு அம்­சங்­களை நினைவில் கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­பட வேண்டும்.

முத­லா­வ­தாக, பொது மக்கள் ஆர்ப்­பாட்­டங்கள் பொரு­ளா­தார திவால் நிலைக்கு கார­ண­மா­ன­வர்­க­ளுக்கு எதி­ரான தேசிய கூக்­குரல் அல்­லது கோஷம் என்­பதை ஜனா­தி­பதி அறிந்­தி­ருந்­தாலும் மறந்­து­விடக் கூடாது. பெரும் இயற்கை வளங்­களால் ஆசீர்­வ­திக்­கப்­பட்ட ஒரு நாட்டில் பெரும் துன்பம், பசி மற்றும் மக்­களின் கோபத்­துக்கு அந்த திவால் நிலை வழி­வ­குத்­தது.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், இவை அனைத்­துக்கும் முக்­கிய காரணம் தவ­றான நிர்­வாகம் மற்றும் ஊழல் என்று ஒட்­டு­மொத்­த­மாக குற்றம்சாட்­டினர். அன்­றாட அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலையில் பரந்த அள­வி­லான தாங்­க­மு­டி­யாத அதி­க­ரிப்பு, ஏரா­ள­மான இலங்­கை­யர்­களின் குடிப்­பெ­யர்வு என எல்­லா­வற்­றுக்கும் அப்­போ­தைய ஜனா­தி­பதி கோட்­டா­பய ரா­ஜ­பக்ஷ மற்றும் அவ­ரது அர­சாங்­கத்தின் மீது குற்றம் சாட்­டப்­பட்­டன.

இரண்­டா­வ­தாக, முன்­னணி வகித்த இளை­ஞர்கள் தலை­மை­யி­லான தேசிய கூக்­குரல், அனைத்து இன-­மதப் பிரி­வு­க­ளையும் தாண்டி நாட்டின் மக்கள் தொகையின் எல்லா பிரி­வு­க­ளையும் ஒன்­றி­ணைத்­தது. தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­காக இனத்­தையும் மதத்­தையும் பயன்­ப­டுத்­தி­ய­தற்­காக அப்­போ­தைய ஜனா­தி­பதி கோட்­டா­பய மீது இளை­ஞர்­களும் சங்­கைக்­கு­ரிய மத­கு­ரு­மாரும் குற்றம் சாட்­டினர். இதன் விளை­வாக அவர் ஜனா­தி­பதி பத­வியை துறக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

கூக்­குரல், செயல் இழக்­கச்­செ­ய்யப்­பட்­டுள்­ளது என்­பதை புரிந்­து­கொள்­ளாமல் அது வெற்­றி­க­ர­மாக கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று யாரா­வது கரு­தினால், அது நாட்­டிற்கு பெரும் செலவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஒரு பெரிய தவ­றாவே இருக்கும். வீதியில் உள்ள மனிதர் இயல்பு நிலைக்கு திரும்­பு­வ­தற்கு முன்பு, நாடு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்­ளது என்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்­வரும் தேர்­தலின் முடி­வுகள் நாடு ஒரு ஆட்சி மாற்­றத்தை விரும்­பு­கி­றது என்­பதைக் காட்டும் என்று நான் தைரி­ய­மாக கணிக்­கிறேன், நாட்டை கூட்­டாக ஆட்சி செய்த அதே அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளையும், அதே நிர்­வாக அதி­கா­ரி­க­ளையும் வெளி­யேற்றும் ஒரு உண்­மை­யான ஜன­நா­யக மாற்­ற­மாக அது அமையும். ஜனா­தி­பதி கோட்­டா­பய ரா­ஜ­ப­க்ஷ­வி­னதும் மற்றும் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வி­னதும் தலை­மையின் கீழ் இலங்­கையை ஆட்சி செய்­தது அதே மொட்டு குழுதான்.

தற்­போது நிலவும் பொரு­ளா­தார கஷ்­டங்கள், நெருக்­க­டிகள் மற்றும் துன்­பங்­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் மற்றும் பொறுப்­பா­ன­வர்கள் என்று கரு­தப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக ஒரு வலு­வான தீர்ப்பை நாடு தழு­விய ரீதியில் அடுத்த தேர்தல் முடி­வுகள் வெளிப்­ப­டுத்தும். ஜனா­தி­பதி விக்­­ர­ம­சிங்­கவும் அந்த ஒற்றை வளை­யத்­திற்குள் தான் இருக்­கிறார். வெளி­யேற்­றப்­பட்ட மொட்டு அணியின் ஒரு பகு­தி­யா­கவே அவரும் பார்க்­கப்­ப­டு­கிறார். எனவே நாட்டின் பேர­ழி­வு­க­ர­மான வீழ்ச்­சிக்கு அவரும் சம­மாக பொறுப்­பேற்க வேண்­டி­யுள்­ளது.

ரணில் மற்றும் நாமல் ஆகிய இரு­வரும் நாட்டில் தத்­த­மக்­கான ஆத­ரவு தளங்­களைக் கொண்­டுள்­ளனர், ஆனால் இரண்டு தனித்­தனி வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யுள்ள­மை­யா­னது அந்த தளங்­களின் சாத­க­மான வாக்கு தளத்தை இரண்­டாகப் பிரித்­துள்­ளது. மொட்டு தரப்பு ஏற்­க­னவே கூறு­க­ளாகப் பிள­வு­பட்­டுள்­ளது.

மேல­தி­க­மாக ரணில் தரப்பு வடக்கு வாக்கு பலத்­தையும் ஓர­ளவு தமிழ் சுயேட்சை வேட்­பாளர் பாக்­கி­ய­செல்வம் அரி­ய­நேத்­தி­ர­னி­டமும், மற்றும் ஒரு பகு­தியை சஜித் பிரே­ம­தா­சாவின் எஸ். ஜே. பி. யிடமும் இழந்­துள்­ளது. மாவை சேனா­தி­ராஜா தலை­மை­யி­லான ஆனால் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம். ஏ. சுமந்­திரன் வழி நடத்தும் தமிழ் அரசுக் கட்சி, எஸ். ஜே. பி ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சா­வுக்கு தமிழ் மக்­களின் ஆத­ரவு கிடைக்கும் என உறு­தி­ய­ளித்­தது. இந்­தியப் பிர­தமர் மோடியின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் அஜித்­தோவல் சமீ­பத்தில் இங்கு விஜயம் செய்­ததைத் தொடர்ந்து இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது.

தமிழ் தலை­வர்கள் உட்­பட நாட்டின் அர­சியல் தலை­வர்­களை தோவல் சந்­தித்தார். ஏற்­கெ­னவே ரணில், மொட்­டு­ட­னான அவ­ரது ஆத்­தி­ர­மூட்டும் கூட்­ட­ணியைத் தொடர்ந்­துள்­ளதால், கிறிஸ்­தவ வாக்கு வங்­கியை பெரும்­பாலும் எஸ்.ஜே.பி-யிடம் இழந்­துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தடுக்க முடிந்தும் கூட அதை செய்யத் தவ­றிய அப்­போ­தைய அர­சாங்­கத்தில் இருந்­த­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று கிறிஸ்­தவ திருச்­சபை தொடர்ந்து முன­்வைத்த கோரிக்­கை­களை ரணில் புறக்­க­ணித்து வந்­துள்ளார்.

1.65 மில்­லியன் முஸ்லிம் வாக்கு வங்­கியில் 90% க்கும் அதி­க­மா­னவை ரணி­லுடன் எப்­போதும் இருந்­த­தில்லை, ஏனென்றால் ஈஸ்டர் தாக்­கு­தல்கள் தொடர்­பாக கிட்­டத்­தட்ட முழு முஸ்லிம் சமூ­கத்­திற்கும் மொட்டு தரப்­பினால் விதிக்­கப்­பட்ட “கூட்டு தண்­ட­னையை” ரணில் தரப்பும் தொடர்ந்­தது. முஸ்லிம் பெயர்­களைக் கொண்ட கிட்­டத்­தட்ட எட்டு நபர்­களின் குற்­றங்­க­ளுக்­காக முஸ்லிம் சமூ­கத்தின் மீதான இந்த “கூட்டு தண்­ட­னையை” கவ­னிக்­காமல், விட முடி­யாத அள­வுக்கு அது கடு­மை­யா­னது.

“ஈஸ்டர் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியின் கீழ் முஸ்லிம் சமூ­கத்தின் மீது விதிக்­கப்­பட்ட இந்த” “கூட்டு தண்­ட­னையின்” “சில மாதி­ரி­களைப் பார்ப்போம், இது ரணிலின் கீழும் தொடர்ந்­தது. மேலும் தேர்தல் அன்று, முஸ்­லிம்கள் எவ்­வாறு வாக்­க­ளிக்க வாய்ப்­புள்­ளது என்­ப­தையும் கருத்தில் கொள்வோம்.

தௌஹீத் அமைப்­புகள், தப்லிக் இயக்கம் மற்றும் சவுதி அரே­பியாவின் புத்தி ஜீவி­யான மரி­யா­தைக்­கு­ரிய முஹம்­மது இப்னு அப்­துல்-­வ­ஹாபின் ஆத­ர­வா­ளர்கள் என்று கூறப்­ப­டு­ப­வர்கள் மூலம் முஸ்லிம் சமூகம் தீவி­ர­வா­தி­களை உரு­வாக்­கி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்­டது. எந்­த­வொரு ஆதா­ரமும் இல்­லாமல் பல மரி­யா­தைக்­கு­ரிய உல­க­ளா­விய இஸ்­லா­மிய அறி­ஞர்­க­ளுக்கு எதி­ராக தவ­றான குற்­றச்­சாட்­டுகள் கூறப்­பட்­டன. மாறாக, குறிப்­பாக 2012 முதல் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக வெறுப்பு பிரச்­சா­ரங்­களை நடத்­திய சிங்­கள தீவி­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக எந்த குற்­றச்­சாட்டும் நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை,

பின்பு, 2014 மற்றும் 2018 க்கு இடையில், நாட்டில் பல “முஸ்லிம் எதிர்ப்பு கல­வ­ரங்­க­ளுக்கும்” வழி­வ­குக்­கப்­பட்­டன. இவை அனைத்தும் ஈஸ்டர் தாக்­கு­தல்­க­ளுக்கு பங்­க­ளித்­தன என்று, நாடா­ளு­மன்றத் தேர்வுக் குழு மற்றும் ஈஸ்டர் தாக்­கு­தல்கள் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு என்­ப­ன­வற்றின் இரண்டு அதி­கா­ர­பூர்வ அறிக்­கை­க­ளின்­படி தெளி­வா­கின.

2014 இல் அளுத்­கமவில் தொடங்கி நாட்டில் பல முஸ்லிம் எதிர்ப்பு கல­வ­ரங்­களை நடத்­தி­ய­வர்கள், இந்த வெறுப்பு பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­ட­வர்கள் மற்றும் சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் என்று கூறப்­படும் எவர் மீதும் எந்த வித­மான வழக்­கு­களும் போடப்­ப­ட­வில்லை, ஆனால் பல இடங்­களில் முஸ்­லிம்கள் சந்­தேகக் கண்­ணோடு பார்க்­கப்­பட்­டனர்.

2019 ஏப்­ரல் 21 ஈஸ்டர் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், 50 க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன, ஆனால் கோத்­தா­பய அல்­லது ரணில் அர­சாங்­கங்­களின் கீழ் எவர் மீதும் இதற்­கெ­தி­ராக வழக்­குகள் தொட­ரப்­ப­ட­வில்லை.
பல முஸ்லிம் சிவில் அமைப்­புகள், எந்த விசா­ர­ணைளும் இன்றி வர்த்­த­மானி மூலம் தடை செய்­யப்­பட்­டன. ஈஸ்டர் தாக்­கு­தல்கள் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட ஏழு சிங்­கள தீவி­ர­வாத அமைப்­பு­களில் ஒன­்றேனும் ஒரு­போதும் தடை செய்­யப்­ப­ட­வில்லை.

புகழ்­பெற்ற இஸ்­லா­மிய அறிஞர் டாக்டர் சாகிர் நாயக்கின் வழி­காட்­டலில் இயங்­கிய, இலங்கை முஸ்­லிம்­க­ளாலும் மற்றும் உலகம் முழு­வதும் முஸ்­லிம்­களால் பர­வ­லாக விரும்பி பார்க்­கப்­பட்ட ‘பீஸ் டிவி’ ஒளி­ப­ரப்­புகள் எந்த விளக்­கமும் இல்­லாமல் தடை­செய்­யப்­பட்­டன. மேலும் இன்­று­வரை அதன் சேவைகள் மீள வழங்­கப்­ப­ட­வில்லை.

பள்­ளி­வா­சல்­களை நிர்­வ­கிப்­பது பற்றி எந்த அறிவும் இல்­லாத முஸ்லிம் அல்­லாத பெண் ஒருவர் முஸ்லிம் விவ­காரத் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக விக்­ர­ம­சிங்க அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்டார்.

அந்­தந்த சம­யங்­களின் விவ­கா­ரங்­களை நிர்­வ­கிக்க ஏற்­க­னவே அமைச்­ச­ர­வையில் இருந்த சம்­பந்­தப்­பட்ட சமூ­கங்­களை சேர்ந்த அமைச்­சர்­களை நிய­மிக்­காமல் ரணில் விக்­ர­ம­சிங்க அர­சிலும் பெளத்த விவ­கார அமைச்சரே பள்­ளி­வாசல் விவ­கா­ரங்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­தினார்.

இஸ்­லா­மிய நூல்கள் மீள் திருத்தம் செய்­யப்­பட வேண்டும் என்று குற்றம் சாட்டி முஸ்லிம் பாட­ச­ாலை­க­ளுக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்ட இஸ்­லா­மிய நூல்கள் விநி­யோ­கிக்­கப்­ப­டுவதை கல்வி அமைச்சும் நிறுத்­தி­யது.

இஸ்ரேல் பலஸ்­தீ­னர்­களை படு­கொலை செய்யத் தொடங்­கிய நான்­கா­வது மாதத்­திற்குப் பிறகு, பெப்­ர­வரி 2024 இல் கொழும்­புக்கும் இஸ்­ரே­லிய நிர்­வாகத் தலை­ந­க­ரான டெல் அவி­விற்கும் இடை­யி­லான நேரடி விமான சேவையை விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சர் தொடங்கி வைத்தார், ஒரு நாளைக்கு சரா­ச­ரி­யாக 160 பலஸ்­தீன பொது­மக்களை படு­கொலை செய்து பலஸ்­தீ­னத்தை அழிக்கும் இஸ்­ரே­லிய போர் இப்­போது 12வது மாதத்­திற்குள் நுழை­கி­றது.
பலஸ்­தீன பிராந்­தி­யத்தின் மீதான இஸ்ரேல் ஆக்­கி­ர­மிப்பை ஆத­ரிக்கும் வகையில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் இலங்­கை­யர்­களை இஸ்­ரே­லிய யுத்த பிராந்­தி­யத்­துக்கு அனுப்­பினார். இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக பொது­மக்கள் போராட்டம் நடத்­திய போதிலும் அவற்றை திரும்பப் பெற அவர் இன்­றுரை மறுத்­து­விட்டார்.

உச்ச நீதி­மன்றம் இந்த அமைச்­சரை அவ­ரது நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் இருந்து நீக்­கி­ய­போது, ஜனா­தி­பதி விக்­ர­ம­சிங்க அதே நபரை தனது வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு தொடர்­பான ஆலோ­ச­க­ராக நிய­மித்தார்.
கொழும்­புக்­கான அமெ­ரிக்க தூதர் (மகிழ்ச்­சி­யுடன்) பாத்­பைண்டர் நிறு­வ­னத்தின் கூட்­டத்தில் பேசும்­போது இஸ்­ரே­லுடன் போரில் ஈடு­பட்­டுள்ள யெமன் ஹவுத்­தி­களை எதிர்த்துப் போரா­டு­வ­தற்­காக இலங்கை கடற்­ப­டைக்கு அமெ­ரிக்கா ஒரு கப்­பலை பரி­சாக அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அதை இலங்கை கடற்டை பயன்­ப­டுத்­து­வ­தா­கவும் அறி­வித்தார்.

இவ்­வா­றான கப்­பல்­களில் எதை­யா­வது ஹவுத்­திகள் ஒரு வேளை அழித்­தி­ருந்தால் அது இலங்­கையில் மேலும் அதிக முஸ்லிம் எதிர்ப்பு அலை­க­ளுக்கு வழி­ய­மைத்­தி­ருக்கும். தீவி­ர­வாத இஸ்­ரே­லிய அர­சாங்­கத்தின் கைகளில் சிக்கி அழிவை எதிர்­கொள்ளும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ரணில் எந்த அனு­தா­பத்­தையும் காட்­ட­வில்லை.

எஸ். ஜே. பி தலைவர் சஜித் பிரே­ம­தாச தைரி­ய­மாக இஸ்­ரேலை ஒரு “பயங்­க­ர­வாத நாடு” என்று வர்­ணித்தார் , இவ்­வாறு குறிப்­பிட எந்­த­வொரு முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கோ அல்­லது அர­சு­க­ளுக்கோ கூட துணிச்சல் இருக்­க­வில்லை
தேசிய மற்றும் சர்­வ­தேச சட்­டங்­களை மீறும் வகையில், மத்­ர­ஸாக்­களில் சமயக் கல்­வியில் தலை­யிடும் ராஜ­பக்ஷ பிரிவின் முன்­மா­தி­ரியை விக்­­ர­ம­சிங்க அர­சாங்கம் அப்­ப­டியே தொடர்ந்­தது.

மேலும், சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்ட ஏற்­க­னவே இலங்­கையில் இருக்­கின்ற முந்­தைய பதிப்பின் மறு­ப­திப்­பான தமிழ் மொழி­பெ­யர்ப்பு புனித குர்­ஆனின் பிர­திகள், இலங்கை அதி­கா­ரி­களால் ஆறு மாதங்­க­ளுக்கும் மேலாக தடுத்து வைக்­கப்­பட்டுள்­ளன. அந்த புனித குர்ஆன் பிர­திகள் இன்னும் கொழும்பு துறை­மு­கத்தில் உள்­ளன.

தற்­போது மரங்கள், எலிகள், விஷப் பாம்­புகள் மற்றும் முயல்கள் நிறைந்த காடு­களால் மூடப்­பட்­டி­ருக்கும் ‘சுனா­மியால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான வீடுகள்’ என்ற சவூதி அன்­ப­ளிப்பை பற்றி பேசு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை.
அல்­கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பு­க­ளுக்கு நிதி­ய­ளித்­த­தாகக் கூறி எந்­த­வொரு ஆதா­ரமும் இல்­லாமல் குற்­ற­ம்­சாட்டி ஐ. நா. சட்ட­மொன்றின் அடிப்­ப­டையில் ஏரா­ள­மான இலங்கை முஸ்­லிம்கள் அர­சாங்­கத்தால் பெய­ரி­டப்­பட்டு பட்­டியல் இடப்­பட்­டனர். இந்த பயங்­க­ர­வாத நிதி­யு­தவி பட்­டி­யலில் பெய­ரி­டப்­பட்ட அவர்­களில் பலர், ஏற்­கவே இலங்­கையில் உள்ள அதி­கா­ரி­களால் விடு­விக்­கப்­பட்­ட­வர்கள்.

நிலு­வையில் உள்ள விஷ­யங்கள் பல­வற்றில் உட­னடி முடி­வு­களை எடுக்­காமல், அதி­கா­ரி­களால் பலர் துன்­பு­றுத்­தப்­பட்ட பல நிகழ்­வு­க­ளையும் இங்கு மேற்கோள் காட்­டலாம். பல சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் சிறு­பான்­மை­யி­னரை, குறிப்­பாக முஸ்­லிம்­களை அரசு அதி­கா­ரிகள் துன்­பு­றுத்­திய சில நிகழ்­வு­களை கோடிட்டுக் காட்­டியும் உள்­ளன.

கோத்­தா­பய மற்றும் ரணில் அர­சாங்­கங்­களால் சமூ­கத்தின் மீது திணிக்­கப்­பட்ட சில கூட்டு தண்­ட­னைகள் இன்னும் அமுலில் உள்­ளன. இந்த அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் அவை ஏற்­ப­டுத்தி உள்ள அச்­சங்­க­ளுக்கும் மத்­தியில் வாழ முஸ்­லிம்கள் விரும்­ப­வில்லை.

ஒரு சில உள்ளூர் முஸ்லிம் தர­கர்கள் மற்றும் விற்­ப­னை­யா­ளர்கள் முயற்­சித்த போதிலும், 90% மான முஸ்லிம் வாக்காளர்கள் ரணிலுக்கோ அல்லது நாமலுக்கோ வாக்களிக்க மாட்டார்கள். இனவாத கலவரங்கள் தொடர்பான அச்சத்தின் கீழ் அவர்கள் வாழ விரும்பவில்லை.

அடுத்து தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி சிறுபான்மையினரை “பேய்களாக”ப் பார்க்கும் மிகப்பெரிய தவறைச் செய்யக்கூடாது. போரின் போது முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்க பாத்திரத்தை வகித்தனர் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டியது அவசியம், ஆனால் 2012 முதல் நோர்வேயால் மூளைச் சலவை செய்யப்பட்ட பெரும்பான்மை தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டனர், இதுவே பல முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் வழிவகுத்தது.

இன்­றைய நிலையில் மொட்டு ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­ப­க்ஷவை முந்தி, ரணில் தற்­போது மூன்­றா­வது இடத்­துக்கு முன்­னேறும் நிலை இருந்­தாலும், ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு சற்று முன்பு அல்­லது அதற்குப் பிறகும் கூட ரணில் நாம­லுடன் கைகோர்த்துக் கொள்ளும் வாய்ப்­பையும் பலர் முன்­கூட்­டியே எதிர்­பார்க்­கி­றார்கள்.

தன்னுடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு எஸ்.ஜே.பி மற்றும் என்.பி.பி ஆகிய இரு கட்சிகளுக்கும் ரணில் விடுத்த பல வெளிப்படையான வேண்டுகோள்கள், அவர் கடுமையான நெருக்கடியில் இருப்பதை அவர் உணர்ந்துள்ளதையே அம்பலப்படுத்தி உள்ளது.

ரணிலின் இந்தக் கோரிக்கைகளை நிராகரித்துள்ள எஸ்.ஜே.பி மற்றும் என். பி.பி என்பனவற்றுக்கு இடையிலேயே முதலாம் இடத்துக்கான கடும்போட்டி நிலவுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.