மர்ஹூம் இல்யாஸுக்கு அளிக்கப்படும் வாக்குகள் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும்

0 140

மர்ஹூம் ஐதுரூஸ் முஹம்­மது இல்­யா­ஸுக்கு அளிக்­கப்­படும் வாக்­குகள் இரத்துச் செய்­யப்­பட்ட வாக்­கு­க­ளாக அமையும் என தேர்­தல்கள் ஆணை­யாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் சுயேட்சை வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய ஐதுரூஸ் முஹம்­மது இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி கால­மா­ன­தை­ய­டுத்து வாக்குச் சீட்டில் உள்ள வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் சந்­தேகம் எழுந்­துள்­ளது. இது தொடர்பில் பொது­மக்­க­ளுக்கு தெளிவை ஏற்­ப­டுத்தும் நோக்கில் factseeker இது குறித்து ஆராய்ந்­தது.

மர்ஹூம் முஹம்­மது இல்யாஸ் 1990 ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் மாவட்­டத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வானார்.

அதன் பின்னர் 2010, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் சுயேட்சை வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்டார். அதன்­படி, நான்­கா­வது முறை­யா­கவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட இருந்த முஹம்­மது இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி கால­மானார்.

முஹம்­மது இல்யாஸ் கால­மா­ன­தை­ய­டுத்து அவ­ரு­டைய இடத்­திற்கு ஏற்­பட்ட வெற்­றி­டத்­திற்கு வேறு ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு இலங்கை தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­தி­ருந்­தது. எனினும் அவ­ரு­டைய இடத்­திற்கு இன்­னொரு பெயரை முன்­மொ­ழி­வ­தற்கு வழங்­கப்­பட்ட கால அவ­கா­சமும் கடந்த செப்­டம்பர் 5 ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டைந்­துள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் சுயேட்சை வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டு­வ­தாயின் அந்த வேட்­பாளர், முன்னாள் அல்­லது தற்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க வேண்டும் என்­பது இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்பின் 31 (1) உப பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

31(1) சனா­தி­பதி பத­விக்­கெனத் தேர்ந்­தெ­டுக்­கக்­கூ­டிய தகைமை கொண்ட எந்தப் பிர­ஜையும்
(அ) அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஓர் அர­சியற் கட்­சி­யினால், அல்­லது
(ஆ) அவர், சட்­ட­மன்­றத்தின் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உறுப்­பி­ன­ராக இருப்­ப­வ­ராயின் அல்­லது இருந்­த­வ­ராயின், வேறே­தேனும் அர­சியற் கட்­சி­யினால் அல்­லது ஏதேனும் தேர்தல் இடாப்பில் தமது பெயரைப் பதிந்­துள்­ள­வ­ரான ஒரு தேரு­நரால், அத்­த­கைய பத­விக்­கான வேட்­பா­ள­ராகப் பெயர் குறித்து நிய­மிக்­கப்­ப­டலாம்.

இதன்­படி, முஹம்­மது இல்­யாஸின் வெற்­றி­டத்­திற்கு முன்னாள் அல்­லது தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

இவ்­வி­டயம் தொடர்­பாக மறைந்த முஹம்­மது இல்­யாஸின் மனைவி முக­மது இல்யாஸ் ஜமீ­னா­விடம் factseeker வின­விய போது, ​​உரிய வெற்­றி­டத்­திற்கு தனது பெயரை முன்­மொ­ழிந்­த­தா­கவும், எனினும் தேர்தல் சட்ட விதி­மு­றை­க­ளுக்கு அமைய தனக்கு போட்­டி­யிட முடி­யாத கார­ணத்­தினால் தேர்­தல்கள் ஆணைக்­குழு உரிய கோரிக்­கையை நிரா­க­ரித்­த­தா­கவும் தெரி­வித்தார்.

மேலும், முன்னாள் அல்­லது தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் எமது தரப்பில் இல்­லாத கார­ணத்­தினால் தற்­போது ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்­திற்கு யாரையும் பரிந்­து­ரைக்­க­வில்லை எனத் தெரி­வித்தார்.

இது குறித்து தேர்­தல்கள் ஆணை­யாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்­க­விடம் factseeker வின­விய போது, ​​தற்­போ­துள்ள சட்­டத்தின் பிர­காரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­யொன்றின் வேட்­பா­ளரின் வெற்­றி­டத்­திற்கு எவ­ரையும் முன்­னி­றுத்­து­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­பட்­டாலும், ஒரு சுயேச்சை வேட்­பா­ளரின் வெற்­றி­டத்தை முன்னாள் அல்­லது தற்­போது பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னரால் மட்­டுமே நிரப்ப முடியும் என்றார்.

மேலும், வாக்குச் சீட்­டுகள் ஏற்­க­னவே அச்­சி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், ஐதுரூஸ் முஹம்மட் இல்­யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இருந்து நீக்­கப்­பட மாட்­டாது எனக் குறிப்­பிட்ட அவர், எவ்­வாறு இருப்­பினும் ஐதுரூஸ் முஹம்­மது இல்­யா­ஸுக்கு கிடைக்கும் வாக்­குகள் அல்­லது விருப்பு வாக்­குகள் அனைத்தும் இரத்துச் செய்­யப்­பட்ட வாக்குகளாக அமையும் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் ஊசி சின்னத்துடன் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் என்ற அவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்பதையும் அவருக்கான வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் என்பதையும் factseeker பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகின்றது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.