கொழும்பு துறைமுகத்தில் 3 மாதங்களாக தேங்கிக் கிடந்த குர்ஆன் பிரதிகள் விடுவிப்பு

0 37

(றிப்தி அலி)
கொழும்பு துறை­மு­கத்தில் கடந்த மூன்று மாதங்­க­ளாக தேங்கிக் கிடந்த 25 ஆயிரம் அரபு மொழி­யி­லான புனித அல்­குர்­ஆன்கள், சுங்கத் திணைக்­க­ளத்­தினால் நேற்றுமுன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் பைசல் ஆப்தின் பெய­ருக்கு மக்­காவில் வசிக்­கின்ற இலங்­கை­யினைச் சேர்ந்த சாதீக் ஹாஜி­யா­ரினால் இந்த குர்­ஆன்கள் அனுப்­பப்­பட்­டுள்­ளன.

இதனை விடு­விப்­ப­தற்­கான அனு­ம­தி­யினை திணைக்­க­ளத்தின் புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு, கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி வழங்­கி­யி­ருந்­தது. இத­னை­ய­டுத்து பாது­காப்பு அமைச்சும் இக்­குர்­ஆன்­களை விடு­விப்­ப­தற்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யி­ருந்­தது.

எனினும், இக்­குர்­ஆன்­களை வெளியில் எடுப்­ப­தற்­கான எந்த நட­வ­டிக்­கையும் நாட்­டுக்கு அனுப்­பி­ய­வ­ரினால் எடுக்­கப்­ப­டா­மை­யினால், அவை களஞ்­சி­ய­சா­லையில் தேங்கிக் கிடந்­தன. இவ்­வா­றான நிலையில் குறித்த அரபு மொழி­யி­லான புனித அல்­குர்­ஆன்­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன்­னெ­டுத்­தி­ருந்தார்.

சுங்கத் திணைத்­தி­ணைக்­கள அதி­கா­ரி­களின் ஒத்­து­ழைப்­புடன் குறித்த அரபு மொழி­யி­லான புனித அல்­குர்­ஆன்கள் தற்­போது விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு செலுத்த வேண்­டி­யி­ருந்த சுமார் 35 இலட்சம் ரூபாவும் விலக்­க­ளிப்பு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக வரி­யாக செலுத்த வேண்­டிய சுமார் 13 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் வேண்­டு­கோ­ளிற்­க­மைய சில தனந்­த­வர்­க­ளினால் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

அரபு மொழி­யி­லான புனித அல்­குர்­ஆன்­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்த அனைத்து தரப்­பி­னர்­க­ளுக்கும் முஸ்லிம் சமூகம் நன்றி செலுத்­தி­யுள்­ளது.

இதே­வேளை, அரபு மொழி­யி­லான இந்த புனித அல்­குர்­ஆன்­க­ளுடன் அனுப்­பப்­பட்ட 26 ஆயிரம் தமிழ் மற்றும் சிங்­கள மொழி­பெ­யர்ப்­பு­க­ளு­ட­னான புனித அல்­குர்­ஆன்கள் மற்றும் மொழி­பெ­யர்ப்­புக்­க­ளு­ட­னான இஸ்­லா­மிய நூல்கள் இன்னும் களஞ்சியசாலையில் தேங்கிக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனை விடுவிப்பதற்கான அனுமதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழுவினால் இதுவரை வழங்கப்படவில்லை.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.