சஜித் – ரணில் டீல் தொடர்பில் கபீர் வெளிப்படுத்த வேண்டும்

ரிஷாதும் ஆனந்த சாகர தேரரும் ஒரே மேடையில் என சாடுகிறார் அனுர

0 105

(எம்.வை.எம்.சியாம்)
நாம் ஒரு­போதும் டீல் அர­சியல் செய்­ய­வில்லை. ரணிலும் சஜித்­துமே டீல் அர­சியல் செய்­கி­றார்கள். இது தொடர்பில் கபீர் ஹாசீம் உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

அத்­துடன், வில்­பத்து காட்டை அழித்­தவர் எனக்­குற்­றஞ்­சாட்டி ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சி.ஐ.டிக்கு சென்ற ஆனந்த சாகர தேரர் இன்று சஜித்­துக்கு ஆத­ர­வாக செயல்­ப­டு­கிறார். குற்­றஞ்­சாட்­டப்­பட்ட ரிஷாத் பதி­யு­தீனும் ஒரே மேடையில் நிற்­கிறார் எனவும் சுட்­டிக்­காட்­டிய அனுர, இன­வா­தத்­துக்கு இணங்­காத அர­சியல் மேடை எம­தாகும். எனவே நல்­லவர் யார் தீயவர் யார்? என்­பதை மக்கள் சிந்­தித்து தீர்­மானம் எடுக்க வேண்டும் எனவும் தெரி­வித்தார்.

கேகா­லையில் நேற்று முன்­தினம் பிற்­பகல் இடம்­பெற்ற தேர்தல் பிர­சார கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில், கோட்­டா­ப­யவின் ஆட்­சியின் போது அமைச்­ச­ராக இருந்து பங்குச் சந்­தையில் பணத்தை விரயம் செய்­தவர் இன்று சஜித் பிரே­ம­தா­சவுடன் இருக்­கிறார். கீதா குமா­ர­சிங்­க­வுக்கு கடந்த வாரம் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிறந்­தவர், இந்த வாரம் சஜித் சிறந்­தவர். ஆன­ம­டு­வையில் ஆசி­ரியர் ஒரு­வரை அடித்து மண்­டி­யி­டச்­செய்­த­வரும் இன்று சஜித்­துடன் இருக்­கிறார். வில்­பத்து காட்டை அழித்­தவர் எனக்­குற்­றஞ்­சாட்டி ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சி.ஐ.டிக்கு சென்ற ஆனந்த சாகர தேரர் இன்று சஜித்­துக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­கிறார். குற்­றச்­சாட்­டப்­பட்ட ரிஷாத்தும் ஒரே மேடையில் நிற்­கிறார். அர்­ஜு­னவும் திலங்க சுமத்­தி­பா­லயும் அந்த பக்கம் ஒன்­றாக நிற்­கின்­றனர். ஒரு மாதத்­துக்கு முன்னர் சஜித்­துக்கு நையாண்டி செய்த சம்­பிக்க ரண­வக்க இன்று அவ­ருடன் உள்ளார்.

ஆனால் ஒரே கொள்­கையை கொண்­டுள்ள அர­சியல் கட்சி தேசிய மக்கள் சக்­தி­யாகும். நாம் இது­வரை இந்த பாரா­ளு­மன்­றத்தில் எந்­த­வொரு ஊழ­லிலும் மோச­டி­யிலும் ஈடு­ப­ட­வில்லை. மொட்டுக் கட்­சியின் இன­வா­தத்­துக்கு இணங்­காத அர­சியல் மேடை எம­தாகும். யார் நல்­லவர்? யார் தீயவர்? என்­பதை சிந்­தித்து தீர்­மானம் எடுங்கள்.

நாமும் ரணிலும் ஒப்­பந்தம் செய்­து ­கொண்­டுள்­ள­தாக சஜித் பிரே­ம­தாச கூறு­கிறார். உண்­மையில் ரணிலும் சஜித்­துமே டீல் அர­சியல் செய்­கி­றார்கள். இவர்கள் இரு­வரும் பகலில் சந்­தித்து டீல் பேசிக்­கொள்­கி­றார்கள். இது தொடர்பில் கபீர் ஹாசீம் உண்­மையை கூற வேண்டும்.

அண்­மையில் அவர்கள் சந்­தித்து பேச்சு நடத்­தி­னார்கள். தல­தா­வுடன் சந்­தித்­தார்கள். இவர்கள் அனை­வரும் ஒன்­றோடு ஒன்­றாக இருக்­கி­றார்கள்.
எனவே மக்­க­ளுக்கு நல்ல சந்­தர்ப்பம் கிட்­டி­யுள்­ளது. பக­லிலும் இர­விலும் சந்­தித்து டீல் கதைத்­த­வர்­க­ளையும் ஊழல் மோசடி செய்­த­வர்­க­ளையும் மது­பான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்களையும் எரிபொருள நிரப்பு நிலையங்களை பகிர்ந்துகொண்டவர்களையும் ஒன்றாக வீட்டுக்கு அனுப்ப நல்ல சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

எனவே, எதிர்வரும் 21 ஆம் திகதி சிந்தித்து செயல்படுங்கள் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.