பிரதான சூத்திரதாரிக்கு கடுமையான தண்டனை

‍பேராயர் மெல்கம் ரஞ்சித்திடம் சஜித் பிரேமதாஸ உறுதியளிப்பு

0 102

(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடைபெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னால் உள்ள அனைத்து உண்­மை­களும் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்டு, அத்­தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரிகள் அனை­வரும் தண்­டிக்­கப்­ப‌­டுவர் என எதிர்க்­கட்சித் தலை­வரும், ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ உறு­தி­ய­ளித்­துள்ளார்.

நேற்று (11) கொழும்பில் வைத்து பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்­சித்தை, எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ சந்­தித்தார்.

இதன்­போது உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய நியா­ய­மான நட்டஈட்­டினை வழங்க தேவை­யான நீதி­மன்ற‌ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும், அதற்­கான உறு­தி­யான நீதி­மன்ற பொறி­மு­றையை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் சஜித் பிரே­ம­தாஸ உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அதன்­ப­டியே, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் மூளை­யாக செயற்­பட்­ட­வர்கள் உள்­ளிட்ட அனைவரையும் தகுதி தராதரம் பாராது தண்டிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.