தே.ம.சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவிப்பு

0 132

தேசிய மக்கள் சக்தி ஆட்­சிக்கு வந்தால் முஸ்­லிம்­களின் நலன் வெகு­வாகப் பாதிக்­கப்­படும் என திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.

கடந்த திங்­கட்­கி­ழமை கிண்­ணி­யாவில் நடை­பெற்ற தேர்தல் பிரச்­சாரக் கூட்­ட­மொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,தேசிய மக்கள் சக்­தியில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வரக் கூடிய செல்­வாக்­குள்ள முஸ்­லிம்கள் யாரு­மில்லை.

அவர்கள் கூறு­வது போல ஆட்­சி­ய­மைத்­தாலும் அவர்­க­ளது அமைச்­ச­ர­வையில் பொறுப்­புள்ள முஸ்­லிம்கள் யாரு­மி­ருக்க மாட்­டார்கள். இதனால் முஸ்­லிம்கள் நலன் சார்ந்த விட­யங்கள், பண்­பாடு, கலா­சாரம் சார்ந்த விட­யங்­களை பேச அங்கு யாரும் இருக்கமாட்­டார்கள். இது முஸ்லிம் மக்­க­ளுக்கு பாரிய இழப்­பு­களை ஏற்­ப­டுத்தும்.

ஜனா­தி­பதி கோத்­த­பா­யவின் அமைச்­ச­ரவை மூலம் இதனை நாம் தெளி­வாக அறிந்து கொண்டோம். முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்ட போது கோத்­த­பா­யவின் அமைச்­ச­ர­வையில் எடுத்துக் கூறி அதனைத் தடுக்கக் கூடி­ய­வர்கள் யாரும் இருக்­காமை நமக்கு நல்ல உதா­ர­ண­மாகும்.

இது­போன்ற நிலை­மையே தேசிய மக்கள் சக்தி ஆட்­சி­ய­மைத்­தாலும் உரு­வாகும். தேசிய மக்கள் சக்­தியில் உள்­ள­வர்­க­ளுக்கு முஸ்லிம் கலா­சார பண்­பாட்டு விட­யங்கள் தெரி­யாது. அக்­கட்­சியில் உள்ள பலரும் இஸ்லாம் பற்­றிய சரி­யான புரிதல் இல்­லாமல் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

சில­வேளை முஸ்­லிம்­களை தமது கட்­சியில் உள்­வாங்­கி­யுள்ளோம் என்று காட்­டு­வ­தற்­காக முஸ்லிம் பெயர் தாங்­கிய சிலரை தேசியப் பட்­டியல் ஊடாக அவர்கள் உள்­வாங்­கலாம். அதுவும் ஆபத்­தா­னது தான்.

கடந்த காலங்­களில் அவர்கள் உள்­வாங்­கிய முஸம்மில் முஸ்­லிம்கள் தொடர்­பாக வெளி­யிட்ட கருத்­துக்­களை நாம் இன்னும் மறக்­க­வில்லை.
இவ்­வா­றான சூழ்­நி­லையில் தேசிய மக்கள் சக்தி ஆட்­சி­ய­மைத்தால் முஸ்­லிம்கள் பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய சூழ்­நிலை உரு­வாகும். இதனைக் கருத்தில் கொண்டு முஸ்­லிம்கள் தமது வாக்­கு­களை அளிக்க வேண்டும்.

உணர்ச்சி வசப்பட்டு அடுத்தவர் வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடக் கூடாது. நமது கையால் நமது கண்களை குத்திக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கிட விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.