நல்­ல­டக்கம் செய்தல், தகனஞ் செய்தல் உரிமை சட்­டத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்­தது

0 109

உயி­ரி­ழந்­த­வரின் உட­லத்தை நல்­ல­டக்கம் செய்ய வேண்­டுமா அல்­லது தகனஞ் செய்ய வேண்­டுமா என்­பதைத் தீர்­மா­னிக்­கின்ற உரிமை அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு வழங்­கு­வது தொடர்­பாக நீதி, சிறைச்­சாலை அலு­வல்கள் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் அலி­சப்ரி சமர்­ப்பித்த யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

இது தொடர்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வுகள் அறி­விக்கும் மாநாட்­டின்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது, உயி­ரி­ழந்த பின்னர், ஒவ்­வொரு நபர்­களின் உட­லங்­க­ளையும் அகற்­று­கின்ற விதம் தொடர்­பாகத் தீர்­மா­னிக்­கின்ற உரி­மையை குறித்த நப­ருக்கே வழங்­கு­வ­தற்­கா­கவும், தனது உட­லத்தை அகற்ற வேண்­டிய விதம் பற்­றிய விருப்­பத்தைத் தெரி­விக்­கா­த­வர்கள் உயி­ரி­ழக்­கின்ற போது, உயி­ரி­ழந்­த­வரின் அபி­லா­சைகள் மற்றும் மத ரீதி­யான, கலாச்­சார அல்­லது தனிப்­பட்ட நம்­பிக்­கை­களைக் கருத்தில் கொண்டு உயி­ரி­ழந்­த­வரின் உட­லத்தை நல்­ல­டக்கம் செய்ய வேண்­டுமா அல்­லது தகனஞ் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கின்ற உரிமை அந்நபரின் நெருங்கிய உறவினருக்கு ஒப்படைக்கின்ற வகையில் ஏற்பாடுகளை வகுப்பதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலிசப்ரி சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.