இனவாதத்தை தோற்கடிப்பது பிரதான இலக்குகளில் ஒன்று

தி இந்துவுக்கு வழங்கிய செவ்வியில் அநுர தெரிவிப்பு

0 42

பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதும் இன­வா­தத்தை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­துமே தமது பிர­தான இலக்­குகள் என தேசிய மக்கள் சக்­தியின் தலை­வரும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

தி இந்து பத்­தி­ரி­கைக்கு வழங்­கி­யுள்ள நேர்­கா­ண­லி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.

பொரு­ளா­தா­ரத்தை சரி­செய்து அதனை அனை­வ­ருக்கும் பய­னுள்­ள­தாக மாற்­றினால், இன­வாதம் இல்­லாத அல்­லது மத சகிப்­புத்­தன்­மை­கொண்ட நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பினால், சமூ­க­நீ­தியை நிலை­நாட்­டினால் அதுவே எமக்கு கிடைக்கும் வெற்றி என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

தேர்­தலில் வெற்றி பெற்றால் ஊழலை ஒழிப்­பது மாத்­தி­ர­மன்றி சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் மீண்டும் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு அத­னு­ட­னான உடன்­ப­டிக்­கையில் சில திருத்­தங்­களைச் செய்வோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வெளி­நாட்டு முத­லீடு குறித்து கருத்து வெளி­யி்ட்ட அவர், எரி­சக்தி துறையில் “இந்­தி­யா­வுடன் இணைந்து பணி­யாற்ற வேண்­டிய அவ­சியம்” உள்­ளது என்றார். “புதுப்­பிக்­கத்­தக்க, குறிப்­பாக காற்று, எரி­சக்­தியை உற்­பத்தி செய்­வ­தற்­கான மகத்­தான ஆற்­றலை இலங்கை கொண்­டுள்­ளது” என்றும் அவர் கூறினார்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், அதனை விரைவில் மேற்­கொள்ள முடியும் என நினைக்­கிறேன். எனினும் சில­வேளை அதில் தாம­தங்­களும் ஏற்­ப­டலாம் என்றார். இதனை ஒழிப்­ப­தற்கு அனைத்துக் கட்­சி­க­ளி­னதும் ஆத­ரவு அவ­சியம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால் எவ்­வாறு ஆட்­சியை முன்­கொண்டு செல்­வீர்கள் என்ற கேள்­விக்குப் பதி­ல­ளித்த அவர் தான் ஜனா­தி­ப­தி­யானால் பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­படும் வெற்­றி­டத்­திற்கு எமது கட்­சி­யி­லி­ருந்து ஒருவர் நிய­மிக்­கப்­ப­டுவார். இதன் மூலம் நான்கு பேரைக் கொண்ட அமைச்­ச­ர­வையை அமைக்க முடியும். அல்­லது ஜனா­தி­பதி மாத்­தி­ரமே சகல அமைச்சுப் பத­வி­க­ளையும் வைத்­தி­ருக்­கவும் முடியும். இன்றேல் தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் ஏனைய கட்­சி­களின் ஆத­ர­வுடன் காபந்து அர­சாங்­கத்தை அமைக்க முடியும். இவை அனைத்தும் கள நிலை­மைகள் மற்றும் அடுத்­த­வர்கள் எவ்­வாறு பதி­ல­ளிக்­கி­றார்கள் என்­பதைப் பொறுத்தே சாத்­தி­ய­மாகும் என்றார்.

நாட்டின் பல பாகங்­க­ளிலும் அநுர குமார திசா­நா­யக்­க­வுக்­கான ஆத­ரவு அலையைக் காண முடிந்­தாலும் போரினால் பாதிக்­கப்­பட்ட வடக்கில் அவ­ரது கட்சி இன்னும் பெரிய அளவில் ஊடு­ரு­வி­ய­தாகத் தெரி­ய­வில்­லையே என்ற கேள்­விக்க பதி­ல­ளித்த அவர் ‘‘தமி­ழர்கள் விரும்பும் போர்க்­கால பொறுப்­புக்­கூறல், உண்மை மற்றும் நீதி தொடர்­பாக நீண்­ட­கா­ல­மாக நிலு­வையில் உள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­பது தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் “கடமை” என்றார். “உள்­நாட்டுப் பொறி­மு­றை­களை நம்­ப­கத்­தன்­மை­யு­டனும், உறுதியானதாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும், எனவே தமிழ் மக்கள் அவற்றை நம்ப முடியும். கடந்த கால அரசாங்கங்கள் உண்மையை மறைத்து நடைமுறைகளை தாமதப்படுத்துவதில் உறுதியாக இருந்தன’ என்றும் அவர் தி இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.