புத்தர் சிலை சேதம் விளை­விப்­புக்கு ஜம்­இய்­யத்துல் உலமா கண்­டனம்

0 524

புத்தர் சிலைகள் சேதமாக்கப்­பட்­டதை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாகத் தெரிவித்துள்­ளது.

இது­கு­றித்து உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம். அஹ்மத் முபாறக் வெளி­யிட்­டுள்ள அறிக்கையில் மேலும் தெரி­விக்­கப்பட்டுள்ளதாவது,  மாவ­னெல்லை பிர­தே­சத்தில் நிகழ்ந்­துள்ள சமய நிந்­த­னைக்­கான செயற்­பா­டு­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது.

இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யாக வாழும் பௌத்­தர்கள் வழி­ப­டக்­கூ­டிய புத்­தரின் சிலையை சேதம் செய்­தமை இனங்கள் மத்­தி­யி­லுள்ள சௌஜன்­யத்­தையும், புரிந்­து­ணர்­வு­க­ளையும் இல்­லாமல் செய்­து­விடும் செய­லாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா காண்­கி­றது. இவ்­வாறு சிலை­களை சேதம் செய்­வதோ, அல்­லது அவற்றை இழி­வு­ப­டுத்­து­வதோ இஸ்­லா­மிய போத­னை­க­ளல்ல என்­பதைக் கூறி வைக்க விரும்­பு­கின்­றது.

பௌத்­தர்கள் பெரும்­பான்­மை­யாக இருக்கும் இந்­நாட்டில் முஸ்­லிம்கள், இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள் என அனை­வரும் பேத­மின்றி ஐக்­கி­ய­மா­கவும், புரிந்­து­ணர்­வு­டனும் தத்­த­மது சமய போத­னை­களைப் பின்­பற்றி வாழ்ந்து வரும் இத்­த­ரு­ணத்தில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் தேவை­யற்ற குழப்­பங்கள் ஏற்­பட கார­ண­மாக அமைந்­து­விடும்.

எனவே, இவ்­வி­ட­யத்தை யார் மேற்­கொண்­டி­ருந்­தாலும் அவர்­களை சட்­டத்­தின்முன் நிறுத்தி அவர்­க­ளுக்­கு­ரிய தீர்ப்பை உரிய முறையில் வழங்கி இத்­த­கைய செயல்கள் இனி­வரும் காலங்­களில் நடை­பெ­றாத வண்ணம் ஏற்ற நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும், இதனை கார­ண­மாக வைத்து வன்­மு­றையை தூண்­டு­வதை தடுத்து நிறுத்துமாறும்  ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.