பொது நிர்வாக அமைச்சின் அனுமதியின்றி ஹஜ் யாத்திரை சென்ற உத்தியோகத்தர்களுக்கு விசாரணை

முறைப்பாடு கிடைத்ததையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடவடிக்கை

0 172

றிப்தி அலி

புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக பேசா விசாவில் மக்கா சென்ற முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் இரு­வ­ருக்கு எதி­ராக இலஞ்சம் அல்­லது ஊழல் பற்­றிய சார்த்­து­தல்­களை புல­னாய்வு செய்­வ­தற்­கான ஆணைக்­கு­ழு­வினால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

பொது நிர்­வாக, உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூ­ராட்சி அமைச்­சி­ட­மி­ருந்து வெளி­நாடு செல்­வ­தற்கு தேவை­யான அனு­ம­தி­யினைப் பெறாமல் சென்­றமை தொடர்­பி­லேயே குறித்த உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு எதி­ராக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இவர்­க­ளுக்கு எதி­ராக ஆணைக்­கு­ழு­விடம் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பா­டு­களை அடுத்தே இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இவர்­களின் ஹஜ் விஜயம் தொடர்பில் விளக்கம் கோரி ஆணைக்­கு­ழு­வினால் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு கடந்த வாரம் கடி­த­மொன்றும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, மேற்­படி இரண்டு உத்­தி­யோ­கத்­தர்­களில் ஒரு­வ­ருக்கு இது­வரை வெளி­நாடு செல்­வ­தற்­கான அனு­மதி பொது நிர்­வாக, உள்­நாட்­ட­லு­வல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூ­ராட்சி அமைச்­சி­ட­மி­ருந்து கிடைக்­க­வில்லை என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

குறித்த இரண்டு உத்­தி­யோ­கத்­தர்­களும் பேசா விசாவில் கடந்த வரு­டமும் இந்த வரு­டமும் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்ற தொடர்ச்சியாக சென்­றுள்­ளனர்.

கடந்த முறை இவர்கள் ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்றச் சென்ற போது ஒரு­வ­ருக்கு ஹஜ் நிதி­யத்­தி­லி­ருந்து தலா 3000 டொலர் பணம் வழங்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. எனினும் இம்­முறை இவர்­க­ளுக்கு அரச நிதி செல­வி­டப்­ப­ட­வில்லை என திணைக்­கள தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன.

இதே­வேளை, இலங்­கை­யி­லி­ருந்து செல்லும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நட­வ­டிக்­கை­களை கவ­னிப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் மூன்று பேர் இம்முறை நேர்­முகப் பரீட்­சையின் ஊடாக தெரி­வு­செய்­யப்­பட்­டனர். அத்­துடன் நிறை­வேற்றுத் தரத்­தி­லுள்ள உதவிப் பணிப்­பாளர் ஒரு­வரும் சென்றார். இதற்கு மேல­தி­க­மா­கவே ஹஜ் குழுவின் தலை­வ­ரினால் இவர்கள் இவரும் அழைத்துச் செல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­லுள்ள ஏனைய உத்­தி­யோ­கத்­தர்­களின் பல்­வேறு எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே இவர்கள் அழைத்துச் செல்­லப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது தொடர்பில் தக­வ­ல­றியும் கோரிக்­கையின் ஊடாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் தகவல் கோரப்­பட்ட போது, அதன் தகவல் அதி­கா­ரி­யான உதவிப் பணிப்­பாளர் எம்.எஸ். அலா அஹமட் தெரி­விக்­கையில்,
“இலங்­கையில் இருந்து சென்ற 3,500 யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு முழு­மை­யான, திருப்­தி­க­ர­மான சேவை­யினை வழங்க வேண்டும் என்ற நோக்­கி­லேயே மேற்­படி உத்­தி­யோ­கத்­தர்கள் இரு­வரும் அழைத்துச் செல்­லப்­பட்­டனர். இந்த ஏற்­பாட்­டினை ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் இணைந்து மேற்கொண்டிருந்தன.

இந்த இரண்டு உத்­தி­யோ­கத்­தர்­களும் திணைக்­க­ளத்தின் ஹஜ் பிரிவில் இருந்­து­கொண்டு ஹஜ் குழு­வி­னதும் திணைக்­கள பணிப்­பா­ள­ரி­னதும் வழி­காட்­டு­தலில் ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளு­டனும் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்­சு­டனும் ஹஜ் தொடர்­பான அனைத்து விட­யங்­க­ளையும் செய்து வந்­தனர்.
மினா, அரபா, முஸ்­த­லிபா போன்ற இடங்­களில் கடந்த காலங்­களில் இவர்கள் சிறப்­பாக சேவை­யாற்­றி­துடன் மக்கா, மதீனா, மினா மற்றும் அரபா போன்ற இடங்கள் தொடர்­பாக நன்கு பரிச்­ச­ய­மா­ன­வர்­க­ளாவர். திணைக்­க­ளத்­தி­லி­ருந்து தெரி­வு­செய்­யப்­பட்ட மற்­றைய மூன்று உத்­தி­யோ­கத்­தர்­களும் முதன் முறை­யாக இந்த வருடம் ஹஜ் கட­மைக்குச் செல்­வ­துடன் ஹஜ் பிரிவில் சேவை செய்த முன்­ன­னு­பவம் அவர்­க­ளுக்கு இல்லை.

இதனால், அவர்­களை வழி­ந­டத்­தவும் ஹாஜி­க­ளுக்குத் தேவை­யான சேவை­யினை சிறப்­பாக வழங்­கவும், இவர்கள் தொண்­டர்­க­ளாக அழைத்துச் செல்­லப்­பட்­டனர். அவர்­க­ளுக்கு எவ்­வித அரச நிதியோ, ஹஜ் நிதியோ செல­வி­டப்­ப­ட­வில்லை.

அவர்­க­ளது தொண்டு அடிப்­ப­டை­யி­லான கட­மைக்கு புத்­த­சா­சன, மத விவ­கார மற்றும் கலா­சார அமைச்சர் மற்றும் அமைச்சின் செய­லாளர் ஆகி­யோ­ரது முறை­யான அனு­மதி பெறப்­பட்டு சொந்த விடு­மு­றை­யி­லேயே அவர்கள் சென்­றனர்” என்றார்.

 

இதே­வேளை, ஹஜ் குழுவின் மூன்று உறுப்­பி­னர்­களும் திணைக்­க­ளத்தின் நான்கு உத்­தி­யோ­கத்­தர்­களும் இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்றச் சென்­றுள்­ளனர். இவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் Economic Class தரத்திலான இருவழி விமான பயணச் சீட்டு மற்றும் நிதி அமைச்சின் 01/2015/01ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் திருத்தப்பட்ட பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் MF/06/23/50/2023ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் 2023.03.20 ஆம் திகதிய கடிதத்திற்கு ஏற்ப ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுவது போன்ற கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒவ்வொருவருக்கும் சுமார் 3000 டொலர் நிதி ஹஜ் நிதியத்தின் ஊடாக செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.