பிரித்தானிய முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைப் பரப்பிய எலன் மஸ்க் ‘ஸ்டார்லிங்’ மூலமாக இலங்கையில் பிரவேசம்

தேர்தல் ஆணைக்குழு விழிப்பாக இருக்க வேண்டுமென முன்னாள் எம்.பி. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் வலியுறுத்து

0 125

‘கருத்துக் கணிப்­புக்­களால் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டக்­கூ­டாது’ என்ற தேர்தல் ஆணைக்­கு­ழுவின் எச்­ச­ரிக்கை தேசிய நலன்­களைப் பாது­காப்­ப­தற்­காக தீவி­ர­மாக கரி­சனை செலுத்­தப்­பட வேண்டும்.

தேர்தல் ஆணைக்­குழு கடந்த வெள்ளியன்று விடுத்த எச்­ச­ரிக்­கையில், சக்தி வாய்ந்த வெளி நிறு­வ­னங்கள் மூலம் செல்­வாக்­கற்ற பல்­வேறு அமைப்­புக்­களால் நடத்­தப்­படும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான கருத்துக் கணிப்­புக்கள் மூலம் இலங்கை வாக்­கா­ளர்கள், ‘பாதிப்­புக்­குள்­ளா­கவோ அல்­லது தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டவோ கூடாது’ என வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

செப்­டம்பர் 21 ஆம் திகதி உண்­மை­யான இலங்­கை­யர்­களின் முடிவை உறு­தி­செய்­வ­தற்­காக அனைத்து இலங்கை மக்­களும் இதனை மிகக் கரி­ச­னை­யோடு கருத்­திற்­கொள்ள வேண்டும்.

உண்­மையில் உள்­நாட்டு தேர்தல் சட்­டங்கள், நாட்டின் பொரு­ளா­தார நலன்கள் மற்றும் தேசிய நலன்­களை நிலை­நி­றுத்­து­வ­தாக வெளி­நாட்டு சமூக ஊடக நிறு­வ­னங்கள், உறு­தி­ய­ளித்­தாலும் கூட பல ஆசிய நாடு­களின் தேர்தல் பெறு­பே­று­களில் தேவை­யற்ற விதத்தில் செல்­வாக்கு செலுத்­தி­யுள்­ள­தோடு இந்த நாடு­களில் சக்­தி­மிக்­க­வை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன.

சர்­வ­தேச சமூக ஊட­கங்கள் பெரும் செல்­வாக்­கு­ட­னான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன. குறித்த ஊட­கங்கள் அவர்­களின் உள்ளூர் முக­வர்­க­ளுடன் இணைந்து தமது சொந்த நல­னுக்­காக, நாட்டின் தேசிய நலன்­க­ளுடன் அடிக்­கடி முரண்­படும் வெளியார் நலன்­களை ஆத­ரிக்கும் வேட்­பா­ளர்­க­ளுக்கு சார்­பாக, மக்­களை தவ­றாக வழி­ந­டத்தும் வகையில் கருத்­துக்­க­ணிப்பு அறிக்­கை­களின் அடிப்­ப­டையில் புத்­தி­சா­லித்­த­ன­மாக மக்­களின் எண்­ணங்­க­ளையும் உண்­மை­யான வாக்­க­ளிப்பு முறை­க­ளையும் மாற்ற முடியும்.

திட்­ட­மிட்ட கருத்துக் கணிப்­பினை மேற்­கொள்­ப­வர்கள் தமக்கு விருப்­ப­மான வேட்­பா­ளரை வெற்­றி­பெ­று­ப­வ­ராக ஏமாற்றும் வகையில் காண்­பிப்­பது எளி­தா­ன­தொரு கரு­வி­யாகக் கூறப்­ப­டு­கின்­றது. வெளி­நாட்டு ஊடகத் நிறு­வ­னங்­களால் தொடர்ச்­சி­யாக இக் கருத்துக் கணிப்­புக்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லையில் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் எச்­ச­ரிக்கை மிகவும் பொருத்­த­மா­னதும் சரி­யா­ன­து­மாகும். இந்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், அமெ­ரிக்­காவின் நிதி­யு­த­வி­யினைப் பெறு­கின்ற உள்ளூர் அமைப்­பொன்று ஞாயிறு செய்­தித்­தாளில் ஒன்றில், நன்கு அறி­யப்­பட்ட வேட்­பா­ளரின் வெற்­றியைக் காட்டும் வகை­யி­லான கருத்துக் கணிப்­பொன்றை வெளி­யிட்­டுள்­ளது. இந்த அமைப்பு பொது­மக்­களின் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­காக பல நீதி­மன்ற வழக்­கு­களை எதிர்த்துப் போரா­டு­வதில் முன்­ன­ணியில் இருந்­துள்­ளது என்­பதை இங்கு சுட்­டிக்­காட்ட வேண்டும், அதே நேரத்தில் இந்த வேட்­பாளர் பல தட­வைகள் நீதித்­து­றை­யுடன் மிகவும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத வகையில் முரண்­ப­டு­வ­தற்கு முயற்­சித்து வரு­கிறார்.

இத­னி­டையே, தென்­னா­பி­ரிக்­காவில் பிறந்த கனே­டிய மற்றும் அமெ­ரிக்க பிர­ஜை­யான கோடீஸ்­வரர் எலோன் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளம், முன்னர் ‘ட்விட்டர்’ என அழைக்­கப்­பட்ட சமூக வலைத்­த­ள­மாகும். அதனால் எக்ஸ் தளமும் ஸ்டார்­லிங்க்கும் சுயா­தீன தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளாலும் தேர்தல் ஆணைக்­கு­ழு­வி­னாலும் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட வேண்டும்.

2022 ஒக்­டோபரில் 44 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு ‘எக்ஸ்’ தளத்­தினை கொள்­வ­னவு செய்­ததில் இருந்து, தனிப்­பட்ட நபர் என்ற வகையில் அவ­ருக்­கென கருத்துச் சுதந்­திரம் இருந்­தாலும் கூட மஸ்க் தனது சொந்த தளத்தைப் பயன்­ப­டுத்தி கேள்­விக்­குட்­ப­டுத்­தக்­கூ­டிய பல கருத்­துக்­களை வெளி­யிட்டு சர்ச்­சை­களில் சிக்­கி­யு­முள்ளார்.

ஜூலை 12 இல் பிரஸ்­ஸல்ஸில் இருந்து ரொயிடர்ஸ் வெளி­யிட்ட, செய்­தியில் எலோன் மாஸ்கின் சமூக ஊடக நிறு­வ­ன­மான எக்ஸ் தளம், ஐரோப்­பிய ஒன்­றிய நிகழ்­நிலை உள்­ள­டக்க விதி­களை மீறி­யுள்­ள­தோடு அதன் நீல சரி­பார்ப்பு குறி பய­னர்­களை ஏமாற்­று­கி­றது, அது செயல்­படும் விதம் மிகப்­பெ­ரிய அப­ராதம் மற்றும் குறிப்­பி­டத்­தக்க குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் வழி­வ­குக்கும் என ஐரோப்­பிய யூனியன் தொழில்­நுட்ப கட்­டுப்­பாட்­டா­ளர்கள் வெள்­ளிக்­கி­ழமை தீர்ப்­ப­ளித்­தனர். ஐரோப்­பிய ஆணைக்­கு­ழுவின் குற்­றச்­சாட்­டுகள், டிஜிட்டல் சேவைகள் சட்­டத்தின் (DSA) கீழ் முதலில் வெளி­யி­டப்­பட்­டது. ஏழு மாத கால நீண்ட விசா­ர­ணையைத் தொடர்ந்து. சட்­ட­வி­ரோத உள்­ள­டக்கம் மற்றும் பொதுப் பாது­காப்­பிற்­கான அபா­யங்­களைத் தவிர்ப்­ப­தற்­கான புதிய விதி­க­ளுக்கு மிகப் பெரிய நிகழ்­நிலைத் தளங்கள் மற்றும் தேடு­பொ­றிகள் அவ­சி­ய­மாகும்.

ஓகஸ்ட் 12 ஆம் திக­திய TECH & CNBC அறிக்­கையில், ‘வெறுப்புப் பேச்­சு­களை ‘எக்ஸ்’ தளம் தவிர்க்க வேண்டும்’ என ட்ரம்ப்பின் நேர்­கா­ண­லுக்கு முன்­ன­தாக எலோன் மஸ்கை ஐரோப்­பிய ஒன்­றியம் எச்­ச­ரித்­தது. குறித்த அறிக்கை ஐரோப்­பிய ஒன்­றிய ஆணை­ய­ாளரை மேற்கோள் காட்டி ‘இங்­கி­லாந்தில் நடந்த அண்­மைய கல­வ­ரங்கள், ஒரு பாரிய கத்­திக்­குத்து தாக்­குதல் தொடர்­பான தவ­றான தக­வல்­களால் தூண்­டப்­பட்­டது, இத­னி­டையே, மஸ்கின் டொனால்ட் டிரம்­பு­ட­னான உரை­யா­டலும் இடம்­பெற இருக்­கின்­றது.

நிறு­வனம் அதன் சமூக ஊடக தளத்தில் வன்­முறை மற்றும் வெறுப்­பூட்டும் பேச்சு உள்­ளிட்ட சட்­ட­வி­ரோத உள்­ள­டக்­கத்தைப் பரப்­பு­வது தொடர்பில் கவனம் செலுத்­த­வில்லை என்றால் ஐரோப்­பாவில் அப­ராதம் மற்றும் கட்­டுப்­பா­டு­களை எதிர்­கொள்ள நேரிடும் என ஐரோப்­பிய ஆணைக்­குழு எலோன் மஸ்க் மற்றும் அதன் தலைமை நிரு­வாக அதி­காரி ஆகி­யோ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது. ‘தேர்தல் சூழலில் விவா­தங்கள் மற்றும் நேர்­கா­ணல்கள் உட்­பட உல­கெங்­கிலும் உள்ள முக்­கிய அர­சியல் அல்­லது சமூக நிகழ்­வு­க­ளுடன் இணைந்­த­தாக வன்­முறை, வெறுப்பு மற்றும் இன­வெ­றியைத் தூண்டும் உள்­ள­டக்­கத்தை பரப்­பு­வது தொடர்­பான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் நாங்கள் கண்­கா­ணித்து வரு­கிறோம்’ எனவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

‘அண்­மைய வாரங்­களில் இங்­கி­லாந்தில் நடந்த கல­வ­ரங்கள் எக்ஸ் மற்றும் பிற சமூக ஊடக தளங்­களில் பர­விய தவ­றான தக­வல்­களால் தூண்­டப்­பட்டு, தாக்­குதல் நடத்­தி­ய­தாக தவ­றாக ஒரு­வரை அடை­யாளம் காட்­டப்­பட்­டது…’ என அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

‘அப்­போ­தி­ருந்தே, மஸ்க் எக்ஸ் தளத்தில் ஐக்­கிய இராச்­சி­யத்தின் இந்நிலைமை தொடர்பில் எரி­கின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வித­மான கருத்­துக்­களை தொடர்ச்­சி­யாக வெளி­யிட்டார். பிரித்­தா­னிய தெருக்­களில் நடை­பெறும் வன்­முறை ஒரு உள்­நாட்டுப் போரில் முடி­வ­டையும் என அவர் குறிப்­பிட்டார், ‘உள்­நாட்டுப் போர் தவிர்க்க முடி­யா­தது’ என எழு­தினார். நிச்­ச­ய­மாக அது உள்­நாட்டுப் போர் அல்ல!

‘தி டெலி­கிராப்’ நாளி­தழ்­களின் இணை­ய­த­ளத்தில் இருந்து வந்­ததைப் போல தோற்­ற­ம­ளிக்கும் ஒரு போலி­யான பிர­தான தலைப்புச் செய்திப் படத்­தையும் மஸ்க் பகிர்ந்­துள்ளார், கல­கக்­கா­ரர்­க­ளுக்­காக போல்க் தீவில் ‘தடுப்பு முகாம்­களை’ இங்­கி­லாந்து கட்­டு­வ­தாக பொய்­யாகக் கூறினார்.’ இங்­கி­லாந்தில் ஓகஸ்ட் மாத கல­வ­ரங்கள் பெரும்­பாலும் இங்­கி­லாந்தின் பல பகு­தி­களில் தீவிர வல­து­சாரி தீவி­ர­வாத வெள்­ளை­யர்­களால் ஆசிய நாட்­ட­வர்கள் மற்றும் ஆபி­ரிக்­கர்கள் குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு எதிராக மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும். தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்ய பிரித்தானிய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்தது மற்றும் அவர்களில் பெரும்பாலோர் மீது வழக்கும் தொடர்ந்தது.

அண்மையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மஸ்க் சந்தித்த போது இலங்கையில் ஊடகத்தளம் ஒன்றை அமைக்குமாறு அக் கோடீஸ்வரருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இலங்கையில் நாடு முழுவதும் செயற்கைக்கோள் புரோட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக ஓகஸ்ட் 13ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது. ஸ்டார்லிங்க் என்பது எக்ஸ் இன் துணை நிறுவனமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.