44வது சர்வதேச அல் குர்ஆன் மனன போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய அல் ஹாபிழ் ஷிபாக்

0 122

சவூதி அரே­பியாவின் மக்கா நகரில் நடை­பெ­ற்ற சர்­வ­தேச அல்­குர்ஆன் மனனப் போட்­டியில் இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி கலந்து கொண்ட காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் கலா­பீட ஷரீஆப் பிரிவு மாணவர் அல்­ஹாபிழ் ஏ.ஆர்.எம். ஷிபாக் இறுதிச் சுற்றுவரை முன்னேறி சாதனை படைத்துள்ளார். ஆறு வருடங்களுக்குப் பின்னர் இலங்கை மாணவர் ஒருவர் இப் போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

புனித குர்ஆனை மனனம் செய்தல், ஓதுதல் மற்றும் தப்சீர் விளக்கமளித்தல் என்பவற்றுக்கான மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல் குர்ஆன் போட்டியின் 44வது அமர்வு கடந்த 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சவூதி அரேபியாவில் நடைபெற்றது.

இரண்டு புனித தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், 123 நாடுகளில் இருந்து 174 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் 4 மில்லியன் ரியால் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. சவூதியின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சினால் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்கா ஹரம் ஷரீபில் நடைபெற்ற இப் போட்டியின் நிறைவு விழாவில் இளவரசர்கள், அமைச்சர்கள், அறிஞர்கள், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மக்கா புனித பள்ளிவாசலின் இமாம்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் ஷேக் அப்துல் லதீப் அல்-ஷேக், புனித குர்ஆனை ஓதுதல் மற்றும் மனனம் செய்வதை ஊக்குவிப்பதில் சவூதி அரேபியா கொண்டுள்ள அக்கறையை இந்தப் போட்டி உறுதிப் படுத்துகிறது என்றார்.
இலங்கை சார்பில் பங்குபற்றிய அல்­ஹாபிழ் ஏ.ஆர்.எம். ஷிபாக் சென்ற வருடம் இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூத­ர­கமும் முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளமும் இணைந்து முதன் முறை­யாக தேசிய ரீதியில் நடாத்­திய அல்­குர்ஆன் மனனப் போட்­டியில் வெற்றியீட்­டி­ய­துடன் இவ்­வ­ருடம் நடை­பெற்ற மாகாண ரீதி­யி­லான மற்­று­மொரு போட்­டி­யிலும் முதல் நிலை பெற்றிருந்தார்.

இம்­மா­ணவர் சர்­வ­தேச போட்­டியில் பங்கு பற்­று­வ­தற்­கான வழிகாட்டல்களை முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ள அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்று நாடுதிரும்பிய அல்­ஹாபிழ் ஏ.ஆர்.எம். ஷிபாக் அவர்களை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்திற்கு அழைத்து கெளரவித்தார். மாணவரின் எதிர்கால வெற்றிகளுக்காக பிரார்த்­தித்த தூதுவர் எதிர்­கா­லத்தில் சவூதி அரே­பி­யாவில் உயர் கல்­வியைத் தொடர்­வ­தற்­கான வாய்ப்­புகள் குறித்தும் ஆலோசனை வழங்­கினார். அதே­போன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் இம் மாண­வரை அழைத்து தனது வாழ்த்­துக்­களைப் பரி­மா­றினார். இந் நிகழ்வில் திணைக்­கள அதி­கா­ரி­களும் கலந்து கொண்­டனர்.

அல்­ஹாபிழ் ஏ.ஆர்.எம். ஷிபாக் அவர்­க­ளுக்கு இந்த வாய்ப்பை வழங்­கி­ய­மைக்­காக இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்­தானி அவர்­க­ளுக்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கும் காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அரபுக் கல்­லூரி நிர்வாகம் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.