கிழக்கு பல்கலை ஆய்வு மாநாட்டில் மெத்திகா உரையாற்றுவது சரியா?

உப வேந்தருக்கு டாக்டர் ருவைஸ் ஹனீபா கடிதம்

0 115

கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் நடாத்­தப்­ப­ட­வுள்ள விஞ்­ஞான ஆய்வு மாநாட்டில் மெத்­திகா விதா­னகே சிறப்­பு­ரை­யாற்ற அழைக்­கப்­பட்­டுள்­ளது தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு சிரேஷ்ட வைத்­தி­யரும் இலங்கை மருத்­து­வர்கள் சங்­கத்தின் முன்னாள் தலை­வ­ரு­மான டாக்டர் ருவைஸ் ஹனீபா வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் கிழக்குப் பல்­க­லைக்­க­ழக வேந்தர் பேரா­சி­ரியர் எம். செல்­வ­ராஜா மற்றும் துணை­வேந்தர் பேரா­சி­ரியர் வீ.கன­க­சிங்கம் ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடிதத்தி­லேயே இக் கோரிக்­கையை முன்­வைத்­துள்ளார்.

அக் கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,
எதிர்­வரும் நவம்பர் 28 ஆம் திகதி தங்­க­ளது பல்­க­லைக்­க­ழ­கத்தில் பிராந்­திய சவால்­களை சமா­ளிப்­பதில் விஞ்­ஞான ரீதி­யான அணு­கு­மு­றைகள்’ எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு ஒன்று நடை­பெ­ற­வுள்­ள­தாக அறி­கிறோம். இதில் சிறப்பு பேச்­சா­ள­ராக ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மெத்­திகா விதா­னகே அழைக்­கப்­பட்­டுள்­ள­தாக நாம் அறி­கிறோம்.

இல­ங்கையில் கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்கள் எரிக்­கப்­பட வேண்டும் என்ற ஆதா­ர­மற்ற விஞ்­ஞான ஆய்­வினை சமர்ப்­பித்­ததன் மூலம் இது தொடர்பில் சர்­வ­தேச ரீதி­யாக முன்­வைக்­கப்­பட்ட வழி­காட்­டல்­களைப் புறந்­தள்­ளு­வ­தற்கு கார­ண­மாக அமைந்தார். தற்­போது இந்த கொள்­கைக்­காக இலங்கை அர­சாங்கம் மன்­னிப்புக் கோர வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­துடன் இத் தீர்மானம் விஞ்­ஞான ரீதி­யாக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­ப­தையும் அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு சங்­க­ட­மான நிலைக்கு அர­சாங்­கத்தைத் தள்­ளு­வ­தற்கு பிர­தான கார­ண­மாக அமைந்­த­வரே இந்த மெத்­திகா விதா­னகே ஆவார். இந்த மெத்­திகா விதா­னகே இது­வரை தனது விஞ்­ஞான ஆய்­வினை வெளிப்­ப­டுத்­த­வில்லை. அவ­ரது ஆய்வு வெளிப்­ப­டைத்­தன்­மை­யற்­ற­தாகும். இவ­ரது இந்த செயற்­பாடு ஆயிரக்கணக்­கான இலங்­கை­யர்­களை பாரிய மன அழுத்­தத்­திற்குள் தள்ள வழி­வ­குத்­துள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணியைக் கொண்ட மெத்­திகா விதா­னகே தங்­க­ளது பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடை­பெ­ற­வுள்ள ஆய்வு மாநாட்டில் உரை நிகழ்த்­த­வுள்­ளமை இலங்­கையின் மதிப்­பு­மிக்க கல்விச் சமூ­கத்­தையும் ஆய்­வா­ளர்­க­ளையும் ஆச்­ச­ரி­யத்­திற்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

எனவே இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மெத்திகா விதானகேயின் தகுதிகள் குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம் என்றும் அக் கடிதத்தில் வைத்தியக் கலாநிதி ருவைஸ் ஹனீபா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.