ஒரே இடத்தில் உறைந்து காணப்­படும் பிரச்­சி­னைகள்

0 154

சிங்­க­ளத்தில் : எம்.எஸ்.எம். ஐயூப் (லங்­கா­தீப)
தமிழில்: எம். எச். எம். நியாஸ்

பொது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன் லட்­சக்­க­ணக்­கான மக்கள் கொழும்பு நகரில் உள்ள வீதி­க­ளுக்கு வந்து அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டனர்.

அந்த பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னைகள் அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­களின் அன்­றாட வாழ்க்­கையை பயங்­க­ர­மாக பாதித்­தது மட்­டு­மன்றி அவர்­க­ளது குடும்ப வாழ்க்­கை­யையும் மோச­மாக பாதித்­தது. தமது கன­வு­களும் தமது பிள்­ளை­களின் எதிர்­கால கன­வு­களும் வெறும் கானல் நீராய் மாறிக் கொண்டு செல்­வதை அவர்கள் அவ­தா­னித்­தனர். அவர்­க­ளிடம் எவ்­வித முன் ஏற்­பா­டு­களும் இருக்­க­வில்லை. பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க முடி­யாத நிலையில் அவர்­க­ளிடம் ஏற்­பட்ட திடீர் விழிப்­பு­ணர்வு இறு­தியில் ‘அர­க­லய’ எனும் பெயரில் அவர்­க­ளது எழுச்­சி­யாக உரு­வெ­டுத்­தது. அத­னால்தான் அந்த ஆர்ப்­பாட்­டங்­களில் கலந்து கொள்­வ­தற்கு அவர்கள் முன்­வந்­தார்கள்.

அந்த மக்கள் எழுச்சி 2022 ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நான்கு மாதங்­க­ளாக நீடித்துச் சென்­றது. அது நாட்­டி­லி­ருந்த சிறுவர் முதல் பெரி­ய­வர்கள் வரை ‘அர­க­லய’ (எழுச்சி அல்­லது போராட்டம்) எனும் பெயரில் பிர­பல்­ய­மா­னது. அது நாட்­டி­லுள்ள மக்­க­ளிடம் அசா­தா­ரன வர­வேற்­பையும் பெற்­றது. அதன் உச்­ச­கட்­டத்தில் அதற்கு முகங்­கொ­டுக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டதால் நாட்டின் முப்­படை தள­ப­தி­யான நிறை­வேற்று ஜனா­தி­பதி வெளி­நா­டொன்­றுக்கு பாய்ந்து சென்று விட்டார்.

அந்த போராட்­டத்தில் உட­னடி இலக்கு ‘(கோட்டா கோ ஹோம்)’ ‘கோட்டா வீட்­டுக்குப் போ’ எனும் சுலோ­கத்தால் கூறப்­பட்­டது. அதன் நீண்ட கால இலக்­கா­க­வி­ருந்­தது ‘சிஸ்டம் சேன்ஜ்’ ஆகும். (அதா­வது சமூக பொரு­ளா­தார மற்றும் அர­சியல் ரீதி­யி­லான மாற்­றங்­க­ளாகும்). நான்டின் ஜனா­தி­பதி வெளி­நா­டொன்­றுக்கு பாய்ந்து சென்­றதன் மூலம் போராட்­டக்­கா­ரர்­களின் உட­னடி இலக்கு நிறை­வே­றி­யது. எனினும் அந்த போராட்டம் ஒரு அமைப்பு ரீதி­யி­லான திட்­ட­மிட்ட போராட்­ட­மாக இருக்­காது திடீ­ரென வெடித்த போராட்­ட­மாக இருந்­தது. அதனால் அதன் முதலாம் இரண்டாம் இலக்­கு­க­ளுக்­கி­டையில் தொட­ரொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு போராட்­டக்­கா­ரர்­க­ளினால் முடி­யாது போயிற்று. எனவே போராட்­டக்­கா­ரர்கள் தமது முத­லா­வது இலக்கு நிறை­வே­றிய பின் தமது மேடை­யி­லி­ருந்து இறங்கிச் சென்று விட்­டனர்.

அந்தப் போராட்­டத்தால் பய­ன­டைந்­தவர் யார்? பாரா­ளு­மன்­றத்தின் தேசியப் பட்­டி­யலில் ஒரே­யொரு ஆச­னத்தை மட்­டுமே பெற்றுக் கொண்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் திரு. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வாகும். அவர் 2022 மே மாதத்தில் நாட்டின் பிர­த­ம­ரா­கவும் யூலை மாதத்தில் நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கவும் பத­வி­யேற்றார்.

ஐக்­கிய தேசியக் கட்சி அர­க­ல­யவின் ஆரம்பக் காலத்­தி­லி­ருந்தே போராட்­டத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது. ரணில் பிர­தமர் பத­வியை ஏற்ற பின் ‘கோட்டா கோ கம’ என்று போராட்டக்காரர்­க­ளினால் ஆக்­கி­ர­மி­டப்­பட்ட காலி­மு­கத்­தி­ட­லுக்குத் தேவை­யா­ன­வற்றை பெற்றுக் கொடுத்தார். அவர் தனது கட்­சியின் தலை­வி­யான கொழும்பு மாந­கர மேயர் ரோஸி சேனா­நா­யக்­க­வுக்கும் தமது கட்­சியின் பிரதித் தலை­வ­ரான ருவன் விஜ­ய­வர்­த­ன­வுக்கும் போராட்­டக்­கா­ரர்­க­ளுக்குத் தேவை­யான வச­தி­களைப் பெற்றுக் கொடுக்­கும்­படி அறி­வுரை வழங்­கப்­போ­வ­தாக பகி­ரங்­க­மாக கூறினார்.

கடனை மீளச் செலுத்­து­வதில்
காணப்­படும் சவால்கள்
உண்­மை­யிலே அவர் (ரணில்) அவ்­வாறு அறி­வுரை வழங்­கி­னாரா இல்­லையா என்­பது தெரி­ய­வில்லை. ஆனால் அந்த சந்­தர்ப்பம் வரை, போராட்­டக்­கா­ரர்­க­ளி­னதும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் ‘உட­னடி இலக்கு’ ஒன்­றா­கவே இருந்­தி­ருக்க வேண்டும். அதா­வது ரணிலை பிர­த­ம­ராக பத­வி­யேற்க வைத்து கோடா­ப­யவை பத­வி­நீக்கம் செய்­த­மை­யாகும். அதுவும் இரண்டு மாதங்­க­ளுக்குள் நடந்­தே­றி­யது. அதன்­படி அவர்­க­ளது (போராட்­டக்­கா­ரர்­க­ளது) இரண்­டா­வது இலக்­கான ‘சிஸ்டம் சேன்ஜ்’ செய்­வதை போராட்­டக்­கா­ரர்­களின் ஒரு சாரா­ரேனும் எண்­ணி­யி­ருந்தால் அது நியா­ய­மான முயற்­சி­யாக இருந்­தி­ருக்கும். ஆனால் போராட்­டக்­கா­ரர்­களின் பெரும்­பான்­மை­யினர் அவ்­வாறு எண்­ண­வில்லை.

அவர் (ரணில்) போராட்­டக்­கா­ரர்­களை தாக்கி காலி­மு­கத்­தி­டலில் இருந்தும் வெளி­யேற்­றினார். அதன் பின் கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் ஆரம்­பிக்­கப்­பட்ட சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் துணை­யுடன் நாட்டின் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்துச் சென்றார். அது ஒரு புதிய வேலைத்­திட்­ட­மல்ல. கோட்­டா­பய ராஜாக்ஷ சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் உத­வி­களைக் கோர முன் அந்த நிதி­யத்­தினால் ஸ்ரீலங்­கா­வுக்­காக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வேலைத்­திட்­ட­மாகும். கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மனம் செய்­யப்­பட்ட அமைச்­சர்கள் மற்றும் அதி­கா­ரிகள் குழு­வொன்று அவ­ரா­லேயே தெரிவு செய்­யப்­பட்ட சர்­வ­தேச மட்­டத்தில் ஆலோ­ச­னை­களை வழங்கும் நிறு­வ­னங்­களின் ஆலோ­ச­னை­களின் பேரில் அவ்­வேலைத் திட்­டங்­களை ரணில் முன்­கொண்டு சென்றார்.

அது அடிப்­ப­டையில் வரி மற்றும் வெளி­நாட்­டுக்­க­டனை கொண்டு நிறை­வேற்­றப்­படும் வேலைத்­திட்­ட­மாகும். கடன்­களை மீளக் கொடுக்கும் வேலைத்­திட்­ட­மொன்றை ஸ்ரீலங்கா அர­சாங்­கமே தயா­ரிக்க வேண்டும். ஆனால் இன்று வரை ஸ்ரீ லங்கா அரசு அந்தத் திட்­டத்தைத் தயா­ரித்­த­தாகத் தெரி­ய­வில்லை. எது எவ்­வா­றா­யினும் செப்­டம்பர் 21ம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தெரிவு செய்­யப்­படும் புதிய ஜனா­தி­பதி கட்­டா­ய­மாக முதலில் நிறை­வேற்ற வேண்­டிய பொறுப்­பொன்­றுள்­ளது. கடந்த காலத்­திலும் நிகழ்­கா­லத்­திலும் பெற்­றுக்­கொண்ட மிகப் பெரிய கடனை மீளச் செலுத்­து­வ­தற்­கான திட்­ட­மொன்றை தயா­ரித்து அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதே அது.

2022 ஏப்ரல் 12ம் திகதி ஸ்ரீலங்­காவில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக ஸ்ரீலங்கா அரசு வெளி­நாட்டுக் கடன்­களை செலுத்­தாது இடை­நி­றுத்­தி­யது.
சர்­வ­தேச நாணய நிதி­யத்தை மையப்­ப­டுத்­திய வேலைத்­திட்­டத்தின் கீழ் இரட்டைத் தரப்பு கடன் வழங்­கு­னர்­க­ளுடன் யூன் 26ம் திகதி செய்து கொண்ட ஒப்­பந்­தத்­தின்­படி கடன் வழங்­கு­னர்­க­ளிடம் பெற்­றுக்­கொண்ட கடனை 2028 வரை பின்­போட முடிந்­தது. எனினும் அதன் பின்­னரும் அந்தக் கடனை 2027முதல் தமக்குத் தர­வேண்­டு­மென சர்­வ­தேச நாணய நிதியம் கூறி­யுள்­ளது.

‘சிஸ்டம் சேன்ஜ்’ நடந்­தாலும் நடை­பெ­றா­விட்­டாலும் இன்னும் இரண்டு மாதங்­களில் அதி­கா­ரத்­துக்கு வர­வுள்ள ஜனா­தி­ப­தி­யிடம் கடன்­களை மீளச் செலுத்­த­து­வது பற்­றிய திட்­ட­மொன்று இருக்க வேண்டும். அவ்­வாறு திட்­ட­மொன்று இல்­லா­த­வி­டத்து மேலும் மூன்று அல்­லது நான்கு வரு­டங்கள் கழியும் வேளையில் நாட்டில் பொரு­ளா­தாரப் பிரச்­சினை பூதா­கர­மாக உரு­வெ­டுப்­பது நிச்­சயம். நாடு இவ்­வா­றான பரி­தா­ப­மான நிலையில் இருக்கும் கால­கட்­டத்­தில்தான் இந்தத் தடவை ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. நாடு எதிர்­நோக்­கி­யுள்ள இந்த ஆபத்தை இந்த நாட்டு மக்­களும் இந்­நாட்­டி­லுள்ள அர­சியல்வாதி­களும் விளங்­கி­யி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

இதுவரை காலமும் நாட்டின் ஜனா­தி­பதித் தேர்தல் இரு­முனை போராட்­ட­மா­கவே காணப்­பட்­டது. எனினும் இம்­முறை முதல் தட­வை­யாக அது மும்­முனை அல்­லது நால்­முனைப் போராட்­ட­மா­கவே நடை­பெற­வுள்­ளது.

நாட்டின் பொது­மக்கள் 2022 ஏப்ரல் நடை­பெற்ற போராட்­டத்தின் (அர­க­ல­யவின்) பின்னர் தமது பிர­தேச அர­சியல் தலை­வர்கள் மற்றும் கட்­சி­யுடன் முன்­பி­ருந்த நெருங்­கிய தொடர்­பையும் பொருட்­ப­டுத்­தாமல் அர­சியல் ரீதி­யாக சிந்­திக்கத் தலைப்­பட்­டுள்­ளனர்.

கடந்த கால தேர்­தல்­களின் போது 3 வீத வாக்­கு­களை மட்­டுமே பெற்ற மக்கள் விடு­தலை முன்­னணியின் கட்சி இன்று ஏனைய கட்­சி­க­ளுக்கு பீதியை ஏற்­ப­டுத்தும் வகையில் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ள­மைக்­கான காரணம் அதுவே. எனினும் தேசிய சொத்­துக்­களை விற்றல், அதி­காரப் பகிர்வு, மத்­திய வங்­கியின் ஊழல் ஆகி­யன பற்றி மொட்­டுக்கட்சி தமது ஆத­ர­வா­ளர்­க­ளது உள்­ளங்­களில் பதி­ய­வைத்­துள்ள கருத்­துக்கள் பற்­றிய தீர்­மா­னங்­களை அதன் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு அதை­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தாது விட்­டு­வி­டுமா?

செயல்­மு­றையை மாற்­று­கின்ற
செய்­முறை
பாரா­ளு­மன்ற, மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்­சி­சபை போன்­ற­வற்றின் அர­சியல்வாதிகள் இது போன்ற கட்­டங்­களில் மக்கள் நலன் பற்­றியோ கொள்கை ரீதி­யி­லான நிலைப்­பாட்­டையோ ஒதுக்­கி­விட்டு தமது எதிர்­கால நலன் பற்றி சிந்­தித்தே முடி­வெ­டுப்­பார்கள். எனவே ஜனா­தி­ப­திக்கு தமது ஆத­ரவை வழங்­கிய பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்கள் இந்த சந்­தர்ப்­பத்தில் மொட்­டுக்­கட்­சியை விடவும் ஐக்­கிய தேசிய கட்­சியில் தமது இருப்­புக்கு பாது­காப்பு கிடைக்கும் என்று நினைத்­தி­ருக்­கலாம். ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு தமது ஆத­ரவை வழங்­கு­வ­தாக அறிவித்த மொட்­டுக்­கட்­சியின் சில முன்னால் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிமல் சிறி­பால டி சில்வா குழு­வி­னரும் அவ்­வாறு தான் நினைத்­தி­ருப்­பார்கள்.

2022 இல் மொட்­டுக்­கட்சி, நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு தகுதி பெற்ற ஒரே­யொரு நபர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க மட்­டுமே என்று கூறிக்­கொண்டே அதை நியா­யப்­ப­டுத்­தி­னார்கள். எனினும் மொட்டுக் கட்­சியின் உறுப்­பி­ன­ரான ஜொன்ஸ்டன் பெர்­னான்டோ வரியைக் குறைத்த ஜனா­தி­ப­தியை (கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவை) பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றி­விட்டு, வரியை அதி­க­ரிக்கச் செய்த ஜனா­தி­ப­தியை (ரணில் விக்­ர­ம­சிங்­கவை) மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக நிய­மனம் செய்­வ­தற்கு தனது கட்­சியில் சிலர் முன்­னின்று உழைப்­ப­தாக குற்­றஞ்­சாட்­டு­கிறார்.

ஆனால் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தால் முன்­வைத்த அனைத்து பிரே­ரணை மற்றும் சட்­ட­திட்­டங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு மொட்டுக் கட்­சியின் வாக்­கு­களே கார­ண­மாக இருந்­தது. அதை அவர் மறந்­தி­ருக்­கலாம். ஆனால் பொது மக்கள் மறக்­க­வில்லை என்­பதை அவர் அறி­வாரா? இறு­தி­யாக போராட்­டக்­கா­ரர்­க­ளுக்கு (அர­க­லையில் கலந்து கொண்டோர்) நடந்­த­வையே மொட்டுக் கட்­சிக்கும் நடந்­தது. அர­க­ல­யவும், மொட்டுக் கட்­சியும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கறி­வேப்­பி­லையாகிவிட்­டது.

மேற்­கு­றிப்­பிட்ட எந்த ஒரு விட­யமும் அர­சியல் ரீதி­யான கொடுக்கல் வாங்­கல்­களும் பொது மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமை­ய­வில்லை. அவை அனைத்தும் நாட்டின் அதி­கா­ரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளே தவிர வேறொன்றுமில்லை. மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே.

ஜே.வி.பி.யும் சஜித்தின் கட்சியும் சர்வதேச நாணய நிதியத்தை மையமாகக் கொண்ட வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாகக் கூறி வருகின்றன. எனினும் அது தற்போதுள்ள வேலைகளை முகாமைத்துவம் செய்து கொள்வதற்காக எடுக்கப்போகும் நடவடிக்கை மட்டுமே. அது கூட 2027 இல் முடிவடையும் நான்காண்டுகால திட்டமாகும். ஆனால் அவர்கள் கீழ் வரும் விடயங்களைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

அந்தத் திட்டம் 2027 இன் பின்னர் கடன்களை செலுத்தக்கூடியதாகவும் கடன் பெற்றுக்கொள்வதை குறைத்துக் கொள்ளக்கூடியதாகவும் அமைய வேண்டும்.
அது வெளிநாட்டு நாணயத்தை அதிகமாகப் பெறக்கூடிய சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஏற்படக்கூடிய எதிர்பாராத பொருளாதார அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்கக் கூடியதாகவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதன் மூலமாக மட்டுமே ‘சிஸ்டம் சேன்ஜ்’ ஏற்படும்.

அவ்­வா­றான திட்­ட­மொன்றைக் கொண்ட அர­சியல் கட்சி எது? தற்­போ­தைக்கு அவ்­வா­றான திட்­ட­மொன்று இல்­லா­தி­ருப்­பினும் எதிர்­கா­லத்­தி­லா­வது அவ்­வா­றான திட்­ட­மொன்றை வகுத்துக் கொள்ளக் கூடிய, அதை முறை­யாக செயல்­ப­டுத்த விரும்பும் உருப்­ப­டி­யான கட்சி எது?

மேற்­படி விட­யங்­களை கருத்திற் கொண்டு நாட்­டுக்குப் பொருத்­த­மான கட்­சி­யொன்­றுக்கு வாக்­க­ளிக்கும் மாபெரும் பொறுப்பு பொது மக்கள் கைகளில் தான் உள்ளது.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.