பாகிஸ்தானின் பிரதான அரசியல் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சையத் அலி ரஸா அபிடி என்ற 46 வயதான குறித்த அரசியல் கட்சி உறுப்பினர் அவரது வீட்டின் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னர், மதச்சார்பற்ற முஸ்லிம் குவாமி இயக்கம் – பாகிஸ்தான் என்ற அரசியல் கட்சியில் தலைமையேற்று செயற்பட்டு வந்தார். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அதிலிருந்து விலகினார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கராச்சியில் பாக் சர்ஸாமீன் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரஸா அபிடி, காரில் தனது வீட்டிற்கு திரும்பிய போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள் ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் பின்னர் மருத்துவமனை
யில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்பது குறித்து விரிவாக கூறுவது கடினம் என்று கராச்சி பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த கொலைக்கான பின்னணி தனிப்பட்டதா அரசியல் ரீதியானதா அல்லது மதம் சார்ந்ததா என்று அனைத்து கோணத்திலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli