இராஜதந்திரிகள் அமைப்பின் தலைவராக கட்டார் தூதுவர் தெரிவு

0 115

(றிப்தி அலி)
கொழும்­பினைத் தள­மாகக் கொண்டு செயற்­படும் இரா­ஜாந்­தி­ரிகள் அமைப்பின் தலை­வ­ராக இலங்­கைக்­கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல்-­சொரூர் அண்­மையில் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.
இதன் தலை­வ­ராக செயற்­பட்ட பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் எம்.எச். டார் செயிட், தனது பணி­களை நிறை­வு­செய்­து­விட்டு நாடு திரும்­பவுள்ளார். இத­னை­ய­டுத்து ஏற்­பட்ட வெற்­றி­டத்­திற்கே கட்டார் தூதுவர் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

இரா­ஜதந்­தி­ரிகள் அமைப்பின் தலை­வ­ராக இலங்­கையில் பணி­யாற்றும் சிரேஷ்ட இரா­ஜ­தந்­தி­ரியே தெரி­வு­செய்­யப்­ப­டு­வது வழ­மை­யாகும். அந்த அடிப்­ப­டை­யி­லேயே கட்டார் தூதுவர் இப்­ப­த­விக்கு தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இவர் தனது கட­மை­களை அண்­மையில் இடம்­பெற்ற இரா­ஜதந்­தி­ரிகள் அமைப்பின் நிகழ்­வொன்றில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பொறுப்­பேற்றுக் கொண்டார்.

இலங்­கைக்­கான கட்­டாரின் நான்­கா­வது தூது­வ­ரான இவர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இலங்­கையில் கட­மை­யாற்றி வரு­கின்றார்.

அத்­துடன் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவினை வலுப்படுத்துவதற்காக பல்வேறு செயற்திட்டங்களை இவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.