கட்டாரிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளை தரம் 1 இற்கு அனுமதிக்க முடியாத அவல நிலை

0 128

(றிப்தி அலி)
கட்­டாரில் தொழில்­பு­ரியும் நூற்­றுக்கு மேற்­பட்ட இலங்­கை­யர்­களின் பிள்­ளை­க­ளுக்கு அந்­நாட்­டி­லுள்ள இலங்கைப் பாட­சா­லையில் தரம் ஒன்­றிற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

கட்­டாரின் தலை­ந­க­ரான டோஹா­வி­லுள்ள ஸ்டாஃபோர்ட் இலங்கை பாட­சாலை – டோஹா (Stafford Sri Lankan School Doha) எனும் பாட­சா­லை­யி­லேயே முதலாம் தரத்­திற்கு மாணவர் அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக கட்­டாரில் தொழில்­பு­ரியும் இலங்­கை­யர்கள் 140 பேரின் பிள்­ளை­களை எதிர்­வரும் செப்­டம்பர் 1ஆம் திகதி முதலாம் தரத்­திற்கு அனு­ம­திக்க முடி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது.

குறித்த பிள்­ளைகள் அனை­வரும் இப்­பா­ட­சா­லை­யி­லேயே முன்­பள்ளிக் கல்­வி­யி­னையும் கற்­றுள்ள நிலை­யி­லேயே தரம் ஒன்­றிற்­கான அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதனால் இம்­மா­ண­வர்­களை வேறு பாட­சா­லை­களில் அனு­ம­திக்க முடி­யாது கஷ்­டப்­ப­டு­வ­தாக பெயர் குறிப்­பிட விரும்­பாத பெற்­றோ­ரொ­ருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

கட்­டாரில் கல்வி கற்கும் ஒரு மாணவர் கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் கீழ் கட்­டாயம் பதி­வு­செய்­யப்­பட வேண்டும். இப்­பா­ட­சா­லையில் 2023 ஜன­வரி மாதம் 2,299 மாண­வர்கள் கல்வி கற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

“இதில் 1,079 மாணர்கள் மாத்­தி­ரமே கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சில் பதி­வு­செய்­யப்­பட்­டனர். ஏனைய 1,220 பேர் பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை” என குறித்த பெற்றார் தெரி­வித்தார்.

“இதே­வேளை, இந்த வரு­டத்தின் ஜன­வரி மாதம் 1,980 மாண­வர்கள் இப்­பா­ட­சா­லையில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். இதில் 1,595 பேர் மாத்­தி­ரமே கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சில் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். இதற்­க­மைய, 385 மாண­வர்கள் பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை” எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கட்­டாரின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்­சினால் இப்­பா­ட­சா­லைக்கு அனு­ம­திக்­கப்­பட்ட மாண­வர்­களின் எண்­ணிக்­கை­யினை விட அதிக மாண­வர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக குறித்த பெற்றார் குற்­றஞ்­சாட்­டினார்.

இத­னா­லேயே தங்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு தரம் ஒன்­றுக்­கான அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கடந்த 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக செயற்­படும் இப்­பா­ட­சாலை, கடந்த 2001ஆம்­ஆண்டு கட்­டா­ரி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யத்தின் ஒத்­து­ழைப்­புடன் திறக்­கப்­பட்­டது. தரம் – 01 முதல் உயர் தரம் வரை பிரித்­தா­னி­யாவின் எடக்செல் பாடத்­திட்டம் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

இந்தப் பாட­சா­லையின் போஷ­க­ராக கட்­டா­ருக்­கான இலங்கைத் தூதுவர் செயற்­ப­டு­கின்றார். அத்­துடன் இந்தப் பாட­சா­லையின் பணிப்­பாளர் சபை உறுப்­பி­னர்­க­ளாக ஹோடா­வி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யத்தின் இரண்டு இரா­ஜந்­தி­ரிகள் பதவி வழி உறுப்­பி­னர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர்.

இதற்­க­மைய, டோஹா­வி­லுள்ள இலங்கைத் தூதுவர் மபாஸ் முஹை­தீ­னிடம் இந்தப் பிரச்­சினை தொடர்பில் பாதிக்­கப்­பட்ட சுமார் 100 பெற்­றோர்கள் கையெ­ழுத்­திட்டு கடி­த­மொன்­றினை கடந்த மே 6ஆம் திகதி அனுப்­பி­யுள்­ளனர்.
எனினும், குறித்த கடி­தத்­திற்கு இலங்கை தூது­வ­ரி­ட­மி­ருந்தோ, தூது­வ­ரா­ல­யத்­தி­லி­ருந்தோ இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் இப்பாடசாலையின் தவிசாளர் சபையின்உறுப்பினர் சல்மான் ஹப்பாரி முஹம்மத் ஹில்மியினை கடந்த 10 நாட்களாக வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொண்ட போதிலும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.