ஜம்இய்யத்துல் உலமாவை சந்தித்தார் அநுரகுமார

0 65

ஜயந்த வீர­சே­கர மாவத்­தையில் அமைந்­துள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைமை அலு­வ­ல­கத்­திற்கு நேற்­றை­ய­தினம் சென்ற தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­ப­தி­வேட்­பாளர் அநுர குமார திஸா­நா­யக்க, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் முஃப்தி ரிஸ்வி, செய­லாளர் அஷ் சேக் அர்கம் நூராமித் மற்றும் கலா­நிதி ஏ.ஏ.அஹமட் அஸ்வர் ஆகி­யோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்­ற­ளவில் நாட்டில் நில­வு­கின்ற அர­சியல் நிலை­மைகள் பற்றி முஃப்­தி­மார்­க­ளு­டனும் நிர்­வாக மௌல­வி­மார்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டி­ய­துடன், எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­கான நல்­லா­சி­யையும் பெற்­றுக்­கொண்டதாக இது குறித்து அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துளள்ளார்.
இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்­தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலரும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.