ரணிலின் திட்டங்களை கைவிடின் நாடு மீண்டும் வீழ்ந்துவிடும்

எதிர்காலம் குறித்து முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும் என்று முஸ்லிம் உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்து

0 134

(எம்.வை.எம்.சியாம்)
எவ­ராலும் தீர்க்க முடி­யாமல் போன பொரு­ளா­தார நெருக்­க­டியை தீர்க்க ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் முடிந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சரி­யான பொரு­ளா­தார வேலைத்­திட்­டத்தை இடை­ந­டுவில் கைவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்­சி­ய­டையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்­துடன் முஸ்லிம் மக்கள் எதிர்­காலம் குறித்து சிந்­தித்து எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு வழங்க வேண்டும் என்று கூட்­டாக வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்று உறுப்­பி­னர்­களின் விசேட ஊடக­வி­யலாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது.

இந்த ஊடக சந்­திப்பில் ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்கும் வெளி­வி­வ­காரம் மற்றும் நீதித்­துறை அமைச்சர் அலி சப்ரி, இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எஸ்.எம்.எம்.முஷர்ரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், ஏ.எச்.எம்.பௌசி மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் கலந்­து­கொண்டே இவ்­வாறு தெரி­வித்­தனர்.

அங்கு உரை­யாற்­றிய அமைச்சர் அலி சப்ரி குறிப்­பி­டு­கையில்,
நாம் தீர்க்­க­மான தரு­ணத்­துக்கு வந்­துள்ளோம். அத்­துடன் நாட்டின் அர­சியல் கலா­சா­ரமும் மாற்­ற­ம­டைந்­துள்­ளது. முஸ்லிம் மக்கள் மற்றும் முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தலை­வர்கள் என்ற ரீதியில் எமது தேவை என்ன? எமக்கு எது அவ­சியம் என சிந்­திக்க வேண்டும். அமைதி மற்றும் அனைத்து இனங்­களும் மதங்­களும் புரிந்­து­ணர்­வுடன் ஒற்­று­மை­யாக வாழக்­கூ­டிய நிம்­ம­தி­யான சூழல் என்­ப­னவே அவ­சி­யப்­ப­டு­கி­றது.

கடந்த இரண்டு வரு­டங்­க­ளுடன் ஒப்­பிடும் போது தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ச­ம­சிங்­கவின் வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் மக்கள் மத்­தியில் நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பட்­டுள்­ளது. அத்­துடன் வங்­கு­ரோத்து அடைந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை நிலை­நி­றுத்­திய ஜனா­தி­பதி மீண்டும் இரண்­டா­வது முறை­யாக ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்ய எதிர்­பார்த்­துள்­ளனர்.
எனவே வீழ்ச்­சி­ய­டைந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் பய­ணத்தை இடை­ந­டுவில் நிறுத்தி விட்டு மீண்டும் நாம் ஏன் புதிய ஒரு­வ­ருக்கு அந்த பொறுப்பை ஒப்­ப­டைக்­க­வேண்டும் என்று சிந்­திக்­க­வேண்டும் என்றார்.

இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் குறிப்­பி­டு­கையில்,
எதிர்­வரும் ஜனா­தி­ப­தித்­தேர்தல் ஒத்­திகை பார்க்கும் தேர்தல் அல்ல. சீர்­கு­லைந்த நாட்டின் பொரு­ளா­தாரம் தற்­போது கட்­டி­யெ­ழுப்­பட்டு பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றது.மீண்டும் அனு­ப­வ­மற்ற தலை­வர்­க­ளிடம் நாட்டை ஒப்­ப­டைத்து விட்டு மீண்டும் பழைய நிலை­மைக்கு செல்ல முடி­யாது.எனவே நாட்டு மக்கள் நிம்­ம­தி­யா­கவும் சுபீட்­ச­மா­கவும் வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கக்­கூ­டிய அனு­ப­வமிக்க தலைவர் ஒரு­வ­ரிடம் நாட்டை ஒப்­ப­டைக்­க­வேண்­டிய பொறுப்பு எமக்­குள்­ளது.

எனவே தான் நாம் எதிர்­வரும் ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் ரணில் விக்­கி­ம­ர­சிங்­க­வுக்கு ஆத­ரவு வழங்க தீர்­மா­னித்தோம்.இந்த தீர­மா­னத்தை தனித்து நாம் எடுக்­க­வில்லை.மக்­களின் கருத்­துக்­க­ளையும் உள்­ள­டக்கி அவர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே நாட்டின் நன்­மைக்­கா­கவே இந்த தீர்­மா­னத்தை எடுத்தோம்.அவரின் வெற்­றிக்­காக அர்­ப­்பணிப்­புடன் கிரா­ம­ப்பு­றங்­களில் இருந்து எமது பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஷாராப் குறிப்­பி­டு­கையில்,
நாட்டு மக்கள் தற்­போது மிகத்­தெ­ளி­வாக இருக்­கி­றார்கள். தமிழ் மக்­களும் சரி முஸ்லிம் மக்­களும் சரி மிகச்­ச­ரி­யான பாதை­யி­லேயே பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.எனவே இந்த பய­ணத்தை இதே பாதையில் தொடர்ச்­சி­யாக செல்­வதா அல்­லது பாதையை மாற்றி மீண்டும் பின்னால் செல்­வதா என்­பதில் தெளி­வாக இருக்­கின்­றனர்.கட்­சி­களும் சரி கட்சித் தலை­மை­களும் சரி எடுக்கும் தீர்­மா­னங்­க­ளுக்கு கட்­டு­ப்படும் கலா­சாரம் மாறி­யுள்­ளது.
மக்கள் மத்­தியில் இன்­னமும் பய­மி­ருக்­கி­றது.ரணில் தவிர்ந்த எவர் ஆட்­சிக்கு வந்­தாலும் அவர்­களால் நாட்டை ஒரு குறு­கிய காலத்­துக்கு மாத்­தி­ரமே கொண்டு செல்ல முடியும்.புதி­ய­வர்­க­ளிடம் நாட்டை ஒப்­ப­டைப்­பதால் எதிர்­கா­லத்தில் பார­தூ­ர­மான நெருக்­க­டி­களை சந்­திக்க நேரிடும்.எனவே மக்கள் ஜனா­தி­பதி ரணிலை வெற்­றி­ய­டையச் செய்ய மிகத் தெளி­வாக இருக்­கி­றார்கள்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வெற்­றிக்­காக எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தலதா அத்து கோரல தனது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை தியாகம் செய்­வா­ராயின் நாம் கட்­சிக்­கா­கவும் தலை­மை­களின் தீர்­மா­னங்­க­ளுக்­காவும் கட்­டுப்­பட்டு நாட்டை படு­கு­ழிக்குள் தள்­ளக்­கூ­டாது.அவர் மன­சாட்­சிக்கு ஏற்ப செயற்­பட்­டுள்ளார்.

முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வர்கள் எடுத்­துள்ள தீர்­மா­னத்தை நாம் பெரி­தாக எடுத்­துக்­கொள்ள வேண்­டி­ய­தில்லை.சஜித் பிரே­ம­தாச எழு­திக்­கொ­டுப்­பதை வாசிப்­பவர்.அவரை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­வது என்­பது மற்­று­மொரு கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­வதைப் போன்­றது என்றார்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அலி சாஹிர் மௌலானா கருத்து தெரி­விக்­கையில்,
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஒரு­வரை தெரிவு செய்­யப்­போகும் ஒருவர் அந்த பத­விக்கு பொருத்­த­மான ஒரு­வரா என்­பதை சிந்­திக்க வேண்டும். அவர் வீழ்ந்த நாட்­டையும் பொரு­ளா­தா­ரத்­தையும் கட்­டி­யெ­ழுப்பி மீண்டும் முன்­னோக்கி கொண்டு செல்­லக்­கூ­டிய ஒரு­வ­ரா­கவும் சர்­வ­தேச சமூகம் ஏற்றுக் கொண்ட அனு­பவம் மிக்க ஒரு­வ­ரா­கவும் இருக்க வேண்டும்.
இந்த அனைத்து தகை­மை­க­ளையும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு உள்­ளது.நாட்டு மக்கள் அவ­ருக்கு நன்­றிக்­கடன் பட்­டுள்­ளனர். அவ­ருக்கு கைமாறு செய்ய ஒரு சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது.முன்­ன­தாக அவர் பாரா­ளு­மன்­றத்தில் அர­சி­ய­ல­மைப்­புக்கு அமைய ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார்.ஆனால் தற்­போது அவர் மக்­க­ளாணை பெற்று ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்ய தகைமை பெற்­றுள்ளார். சாதித்­துள்ளார்.

பரி­சோ­திக்கும் நேர­மல்ல.வாய்ப்­பேச்சில் அர­சியல் செய்யும் தரப்­பி­ன­ரிடம் நாட்டை ஒப்­ப­டைக்க முடி­யாது.எனவே நாட்டு மக்கள் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்
ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம்.பௌசி கருத்து தெரி­விக்­கையில்,

கடந்த வருடம் ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு 90 வீத­மான முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் கிடைக்­கப்­பெற்­றன. ஆனால் இம்­முறை அவ­ருக்கு 20 வீத­மான வாக்­குகள் கூட கிடைக்­குமா என்­பதும் சந்­தே­கமே.அன்று அளிக்­கப்­பட்ட அனைத்து வாக்­கு­களும் ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குகளாகும்.அத்துடன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன.இம்முறை அப்படி நடக்காது. முஸ்லிம் மக்களின் வாக்குகள் இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கபெறும்.நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்வரும் 5 வருடங்கள் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் குறிப்பிடுகையில்,
நாம் நாட்டை நேசிக்கிறோம். எனவே நாம் பழைய நிலைமைக்கு மீண்டும் செல்லவிரும்பவில்லை.முன்னோக்கி செல்லவே விரும்புகிறோம். போலியான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதை விடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய தலைவரிடம் ஒப்படைப்பது பொருத்தமானது என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.