டமஸ்கஸின் இராணுவ தலைமை மையங்கள் மீது அண்மையில் இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து சிரியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.
அத்தகைய தாக்குதல்கள் சிரியாவில் மேலும் நெருக்கடிகள் நீடிப்பதை நோக்காக கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள முக்கிய இராணுவ மையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் கடந்த கிறிஸ்மஸ் தினத்திலும் பல தடவைகள் திடீர் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிரிய வெளிவிவகார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
பொது விடுமுறை தினத்திலும் வான் தாக்குதல்களை மேற்கொண்டதை சிரியா வன்மையாகக் கண்டித்துள்ளது. சிரிய மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் நோக்கிலேயே இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக சிரிய அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-Vidivelli